The Super Ten

Dsc00992

 

எனக்குக் கிடைத்திருப்பது போல் அருமையான தோழிகள் வேறு யாருக்காவது கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. ஆரம்பப் பள்ளி முதல் எனக்கு நெருங்கிய தோழிகளாக இருவர் உள்ளனர். எத்தனை வருடத்துப் பந்தம்! பலப் பள்ளிப்பருவத் தோழிகளுடன் இன்றும் நான் நல்ல தொடர்பில் உள்ளேன்.

ஆனால் நான் இப்போழுது எழுதப் போவது என் கல்லூரித் தோழிகளைப் பற்றி. நாங்கள் பத்து பேர் முப்பத்தி நாலு வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். ஒருவர் இருவருடன் இப்படி இவ்வளவு வருடங்கள் நெருக்கமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் பத்து பேரும் இவ்வாறு இருப்பது மாபெரும் வரம். கல்லூரியில் கடைசி இரண்டு பெஞ்சுகள் எங்களுடையது. ரொம்ப தொல்லைக் கொடுப்போம் ஆனால் மார்க் வாங்கி விடுவோம். அதனால் ஆசிரியர்களால் ஒன்றும் செய்ய முடியாது. வேறு வேறு குடும்ப சூழ்நிலை, வேறு வேறு ஜாதி, வேறு வேறு தாய் மொழி, குண்டு, ஒல்லி, வெள்ளை, கருப்பு, இதன் கலவை தான் நாங்கள்.

இதில் மூவருக்குக் காதல் திருமணம். இருவருக்குப் பெற்றோர் சம்மதத்தோடு அவர்களே முன் நின்று நடத்தி வைத்தது. மற்றொன்று, குடும்ப எதிர்பபோடு எங்கள் துணையோடு நடந்த கலப்புத் திருமணம். சினிமா கதைகளில் வருவது போல் எங்கள் தோழி காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் வேலைக்குச் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு வீட்டில் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தாள். இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று எதிர் பார்த்து முன்பே செய்யப்பட ஏற்பாட்டின் படி ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் வாசலில் தினசரியை எடுப்பது போல வெளி வந்து காலில் செருப்புக் கூட அணியாமல் தெரு முனையில் நின்றிருந்த வருங்கால கணவரின் தோழனோடு வடபழனி கோவில் சென்று எங்கள் ஆதரவோடு திருமணம் புரிந்தாள்.

வரிசையாக எங்கள் அனைவருக்கும் திருமணம் நடந்தது. அதில் எங்கள் கடைசி தோழியின் திருமணத்திற்கு முன்பே இன்னொரு தோழியின் திருமண வாழ்வு முடிந்து விட்டது. அவள் கணவன் இந்திய இராணுவத்தில் கேப்டன். இந்திய இராணுவத்தின் அமைதிப் படை இலங்கைக்கு எண்பத்தி ஏழாம் வருடம் அனுப்பப்பட்டது. அதில் சென்ற அவர் கண்ணி வெடியில் கால் வைத்து பொட்டலமாக வீடு திரும்பினார். என் தோழிக்குத் திருமணம் ஆகி இரண்டரை வருடங்கள், ஒரு வயதில் கைக் குழந்தை. மறு மணத்தைத் தவிர்த்து மகனை சிறப்பாக வளர்த்து அவனுக்குத் திருமணமும் புரிந்து விட்டாள். கணவன் இல்லாததால் சமுதாயத்தில் அவளுக்கு நேர்ந்த அவமானங்கள், இராணுவ விதவைக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய ஓர் அரசாங்க வேலை கிடைக்க இளம் வயதில் அவள் பட்ட பாடு, இன்னும் எத்தனையோ. தனியாக புத்தகம் எழுதும் அளவு செய்திகள் உண்டு.

எங்கள் தோழிகளில் இருவருக்குக் குழந்தைகள் இல்லை. அதில் ஒருவருக்குப் பிறக்கவேயில்லை. இன்னொருவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன. மருத்துவர்களுக்குக் காரணம் தெரியவில்லை. நாங்கள் அனைவருமே வேலைக்குச் சென்றவர்கள் தான். ஆனால் குடும்ப சூழ்நிலை நிமித்தமாக சிலர் வேலையை விட்டு விட்டு வேறு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களில் ஒருவர் இறை சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு உள்ளார். எங்கள் பொருளாதாரச் சூழலில் ஏற்றத் தாழ்வு உண்டு. எல்லோருக்கும் இருப்பது போல் குடும்ப வாழ்க்கையில் பல இன்னல்களைப் பார்த்திருக்கிறோம் உடல் ஆரோக்கியத்தில் தொல்லைகள் உண்டு. ரொம்ப சிரமமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தால் நாங்கள் அவருக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பது எளிதன்று. வளர்ந்த பிள்ளைகளினால் வரும் பிரச்சனைகளையும் சமாளிக்கிறோம். குழந்தையில்லாத் தோழி ஒருமுறை எங்களிடம், நல்ல காலம் எனக்குக் குழந்தைகள் இல்லை என்று கூறும் அளவுக்கு சிலருக்குத தொல்லைகள் இருந்திருக்கின்றன 🙂

வேறு வேறு ஊர்களில் இருந்த நாங்கள் இப்பொழுது சென்னையிலேயே இருக்கிறோம். வெளி ஊர்களில் இருந்த போதும் கண்டிப்பாக சந்தித்துக் கொள்வோம். இப்பொழுது சந்திப்பது இன்னும் எளிதாகி விட்டது.  நாங்கள் ஒன்று கூடிவிட்டால் எங்கள் வயது பதினெட்டு 🙂

எங்களை எல்லாம் இத்தனை வருடங்களாக இணைத்திருப்பது என்ன? நிபந்தனையற்ற எல்லையில்லா அன்பு ஒருவர் மேல் மற்றவருக்கு! மற்றவர் துன்பத்தைத் தன் துன்பமாக நினைக்கும் மனப் பாங்கு. துளியும் அசூயை இல்லா நட்பு. அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல உள்ளம். குடும்பத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் நட்புக்கும் கொடுப்பது!

இறைவா, இந்த நட்பு எங்கள் வாழ் நாள் முழுவதும் இனிதே தொடர அருள் செய்வாயாக!

{எங்கள் குடும்பங்களிலும் ஏனைய நட்பு வட்டாரங்களிலும் இந்தக் கட்டுரையின் தலைப்பின் பேரில் தான் எங்களை அழைப்பார்கள் 🙂 }

 

34 Comments (+add yours?)

 1. Blogeswari
  Jan 21, 2012 @ 17:28:19

  Lovely I say! Friends amaivadellam iraivan kodutha varam ! you are blessed!

  Reply

 2. amas32
  Jan 21, 2012 @ 18:28:15

  Yes! Thanks 🙂

  Reply

 3. Blahkumaran
  Jan 22, 2012 @ 05:04:27

  Super post abt super 10 🙂

  Reply

 4. uma
  Jan 22, 2012 @ 14:45:31

  ஆச்சர்யம்.மொத்தமா இத்தனை பேரோட நெருக்கம் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மிகப் பெரும் விஷயம் நட்பு தொடரட்டும் வாழ்த்துகள்:)

  Reply

 5. amas32
  Jan 22, 2012 @ 17:48:42

  nandri, Blahkumaran, Uma 🙂

  Reply

 6. iamkarki
  Jan 22, 2012 @ 17:58:28

  timing … en frienda pola yaru machan :))

  Reply

 7. amas32
  Jan 23, 2012 @ 19:55:40

  nandri Karki 🙂

  Reply

 8. Raj
  Jan 24, 2012 @ 16:36:48

  இரண்டு தினங்களுக்கு முன்பே படித்தேன் (through mobile phone), பின்னூட்டும் இட இன்று தான் வாய்ப்பு கிடைத்தது……. ரொம்ப நெகிழ்வான பதிவு…..எனுக்கும் இது போன்ற ஒரு நண்பர் வட்டாரம் இருக்கு. பொதுவாக பெண்கள் தொடர்ந்து தன் பால்ய தோழிகளிடத்தில் தொடர்பில் இருப்பதில்லை, அதற்க்கு அவர்கள் சூழல் அனுமதிப்பதில்லை என்றே நினைகின்றேன், அனால் தங்கள் நட்பு வட்டாரம் இன்றும் தொடர்பில் இருப்பதில் பெரு மகிழ்ச்சி…வாழ்த்துக்கள்………Hats off to சூப்பர் Ten…….இன்னும் நிறைய எழுதுங்கள்.

  Reply

 9. amas32
  Jan 24, 2012 @ 17:11:19

  நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. எங்கள் கணவன்மார்கள், குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நட்பு தொடர்ந்திருக்க முடியாது. நன்றி 🙂 amas32

  Reply

 10. hsemar
  Jan 25, 2012 @ 04:57:15

  You (All) are blessed !

  Reply

 11. Panju
  Jan 25, 2012 @ 08:01:23

  What’s the occasion (the photo) ? Thx

  Reply

 12. amas32
  Jan 25, 2012 @ 13:22:09

  Thank you :)amas32

  Reply

 13. amas32
  Jan 25, 2012 @ 14:03:46

  My friend's son's engagement party :)amas32

  Reply

 14. Viju
  Feb 09, 2012 @ 20:23:43

  Really really nice! It’s indeed amazing that you all kept in touch through these many years, and all of you continue to meet even to this day.

  Reply

 15. amas32
  Feb 09, 2012 @ 20:37:38

  Thanks 🙂

  Reply

 16. Trackback: “Chennai is the greatest country in the world!” « amas32
 17. Rajan
  Jul 11, 2012 @ 06:41:27

  You are gifted to have such friends and ability to live with them.

  Reply

 18. Trackback: “Chennai is the greatest country ever!” « amas32
 19. யமுனா
  Oct 18, 2012 @ 02:26:47

  அம்மா.. இந்த பதிவோட சிறப்பம்சமே நம் நண்பர்களை விட்டு விட கூடாது.. அல்லது உடனே தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனத்தூண்டும் ஆவல் தான். சூப்பர் மா

  Reply

 20. யாத்ரீகன்
  Oct 18, 2012 @ 02:42:45

  10 பேராஆ… கலக்குறீங்க எல்லோரும், 1 fantasy கதைபோல இல்லாமல், நிதர்சனத்தையும் சேர்த்து சொல்லியிருக்கீங்க 🙂 , எங்க 7 stars எங்க போனாங்கன்னே தெரியல, ஆனா நீங்க 10 பேர் இப்படி இருப்பதை பார்ப்பதிலேயே மகிழ்ச்சி 🙂

  Reply

 21. VenkateswaranGanesan (@_Drunkenmunk)
  Oct 18, 2012 @ 03:30:49

  Most lovely!

  Reply

 22. திண்டுக்கல் தனபாலன்
  Oct 18, 2012 @ 08:37:35

  நட்பு தொடர வாழ்த்துக்கள்…

  Reply

 23. @thachimammu
  Aug 04, 2013 @ 02:55:57

  Super 10 குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ஸ்ரீவத்ஸன்

  Reply

 24. ஆ ன ந் த ம் (@anandhame)
  Apr 22, 2014 @ 16:59:15

  அருமை… பொறாமை கொள்ள வைக்கும் நட்பு 😀

  Reply

 25. amas32
  Apr 23, 2014 @ 03:27:03

  Thank you Prem 🙂

  Reply

 26. Trackback: சூப்பர் டென்னின் சிங்கை செல்லம் சாஷா :-) | amas32
 27. சுரேஷ்குமார்
  Oct 17, 2014 @ 07:05:03

  வரம் பெற்றவர்கள்…
  யாவருக்கும் கிடைக்கணும் இந்த வரம்..

  Reply

 28. GiRa ஜிரா
  Oct 17, 2014 @ 09:40:21

  நல்ல நட்பு அமைவது கடவுளின் கொடை. இப்படிப் பட்ட தோழிகள் கிடைத்தது பெருமகிழ்ச்சி. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு புதினம் என்பார்கள். இங்கே பத்து புதினங்கள் ஒரு புதினமாய் இணைந்துள்ளன. அனைவருக்கும் என் வாழ்த்துகள். வணக்கங்கள்.

  Reply

 29. GiRa ஜிரா
  Oct 17, 2014 @ 09:40:39

  https://amas32.wordpress.com/2012/01/21/the-super-ten/#comment-2007

  நல்ல நட்பு அமைவது கடவுளின் கொடை. இப்படிப் பட்ட தோழிகள் கிடைத்தது பெருமகிழ்ச்சி. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு புதினம் என்பார்கள். இங்கே பத்து புதினங்கள் ஒரு புதினமாய் இணைந்துள்ளன. அனைவருக்கும் என் வாழ்த்துகள். வணக்கங்கள்.

  Reply

 30. amas32
  Oct 18, 2014 @ 03:36:45

  நன்றி சுரேஷ் குமார், ஜிரா 🙂

  Reply

 31. Naveen kumar
  Aug 07, 2016 @ 03:12:48

  நட்பு சிறந்தது என்பதற்கு Super Ten, மணதை வருடிய நல்ல பதிவு. இதை படிக்கும் எல்லோர்கும் நட்பு வட்டம் உங்களை போல் தொடர ஆசை வரும்! மகிழ்ச்சி…

  Reply

 32. Venmanikumar
  Aug 04, 2019 @ 19:20:40

  அற்புதம், ஆச்சரியம், அதிசயமான அந்யோந்யம் ஆனாலும் உண்மை, வாழ்க வாழ்க வாழ்க !

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: