இன்றைய திருமணங்கள்!

Weddinf

இன்றைய கால கட்டத்தில், திருமணம் பற்றிய எதிர்பார்ப்புகளும், அதன் அவசியம் பற்றிய எண்ணங்களும், மெத்தப் படித்த இளைஞர்களிடம் மாறி விட்டது. 

பெண்கள் சுயமாக சம்பாதிக்கிறார்கள். வெளி ஊர்களிலும், வெளி நாடுகளிலும் வேலை நிமித்தம் தனியாகச் சென்று வாழ்கிறார்கள். இதெல்லாம் மிகச் சாதரணமாகிவிட்டது. திருமணத்தால் சுதந்திரம் பறிபோவதாகப் பெண்கள் எண்ணத் தொடங்கி விட்டார்கள். ஒருவனைப் பிடித்தால் மட்டுமே திருமண பந்தத்துக்குத் தயார் ஆகிறார்கள். அப்படித் தானே இருக்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. ஆனால் ஒருவனை பிடிப்பதற்கு அவர்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் அநேகம். படிப்பு, பண்பு, தவிர சோஷியல் வலைதளத்தில் பிரபலமானவனாக இருக்க வேண்டும். அவன் பெயரை கூகிள் பண்ணினால் அவனைப் பற்றிய தகவல்கள் முதல் பக்கத்திலேயே வரும்படி சாதனைகள் புரிந்திருக்க வேண்டும். தன்னுடைய வேலைக்கு/செய்யும் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கவும் எதிர்பார்ப்பு உள்ளது. தன்னுடைய சுதந்தரத்தில் தலையிடாதவனாகவும் இருக்க வேண்டும்.

பெரும்பாலான ஆண்களின் எதிர்பார்ப்பும் மாறியுள்ளது. படித்த நல்ல வேலைக்குச் செல்லும் பெண் வேண்டும். ஆனால் குடும்பத்தையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். தன்னைச் சாராமல் எல்லா வேலையையும் தானே செய்துக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும், அதே சமயம் தன்னை மிஞ்சாத அளவு அடங்கியும் போக வேண்டும். தன்னுடைய வேலைக்குத் தான் எப்பொழுதும் முதலிடம், மனைவி தான் செல்லுமிடம் தொடர்ந்து வரவேண்டும், இன்னும் பலப் பல எதிர்பார்ப்புகள்!

இரு பாலாரிடமும் திருமணத்திற்குப் பிறகு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் மனப்பான்மை மாறி விட்டது. இதற்கு முக்கியக் காரணம் திருமண வயது தள்ளிப் போனது தான். ஒருவரின் பின் இருபதுகளில் அல்லது முப்பதுகளின் முதல் பாதியில் தான் இப்பொழுது திருமணங்கள் நடக்கின்றன. அதற்குள் அவர்களுடைய கொள்கைகள், வாழ்க்கைப் பாதை பற்றிய முடிவுகள் முற்றுமாக இறுகி விடுகின்றன. 

இதில் அடுத்த பிரச்சனை ஆண் இருக்கும் ஊருக்கு பெண் மாற்றல் வாங்கிக் கொள்வதா, இல்லை பெண் இருக்கும் ஊருக்கு ஆண் மாற்றல் வாங்கிக் கொள்வதா என்பது தான். ஏனென்றால் திருமணத் தருவாயில் இருவரும் தங்கள் தங்கள் துறையில் நல்ல இடத்தில் இருக்கிறார்கள். மாற்றிக் கொள்ள முடியாத வேலையாக இருந்தால், இருக்கும் நல்ல வேலையை விட்டு வேறு வேலை தேடிக் கொள்ள இரு பாலாரும் விரும்புவதில்லை. திருமணத்துக்கு முன்பே இது தீர்த்துக் கொள்ளப் படவில்லை என்றால், நிச்சயம் ஆண் அவன் இருக்கும் இடத்திலேயே இருக்கிறான், பெண்ணும் அவ்வாறே. விடுமுறை நாட்களில் சந்தித்துக் கொள்கிறார்கள். இதுவும் சர்வ சாதரணமாகிவிட்டது. 

இதில் பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள். அவர்கள் சொல்லி பிள்ளைகள் மணம் முடிக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொண்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கலப்பு மணத்தை இன்முகத்தோடு எதிர் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். திருமண ஜோடியின் வயது வித்தியாசம் பற்றிக் கவலைப் படக் கூடாது 🙂 மருமகளோ மருமகனோ எந்த மொழி பேசுகிறாரோ அதை முறைப்படி ஆசிரியர் வைத்துப் பேசக் கற்றுக் கொண்டால் சாலச் சிறந்தது. அவர்கள் அணியும்/அணியாத உடை/தாலி விஷயத்தில் மௌன விரதம் அனுஷ்டிப்பது நல்ல பெயரை ஈட்டித் தரும்!
பிள்ளைகளால் பத்தாம் பசலி, எங்கள் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியாமல் இருக்கிறீர்கள் என்று கெட்ட பெயர் வராமல் இருக்க இவை அவசியம்.

இப்பொழுது பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது 🙂

Photo courtesy: cleiph

22 Comments (+add yours?)

 1. arivukkarasu
  Jan 27, 2012 @ 13:46:46

  மிகவும் யதார்த்தமான கட்டுரை. பெண் என்ன எதிர்பார்க்கிறாள் ? ஆண் என்ன எதிர் பார்க்கிறான் << அதே சமயம் தன்னை மிஞ்சாத அளவு அடங்கியும் போக வேண்டும். >> நீங்கள் எழுதிய எல்லாமே சரி எனப் படுகிறது. கடைசி வரிகளான << இப்பொழுது பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது >> சரியான முத்தாய்ப்பு ! மிக்க நன்றி 🙂

  Reply

 2. amas32
  Jan 27, 2012 @ 14:48:44

  Thank you Arivukkarasu for your lovely comment :-)amas32

  Reply

 3. RagavanG
  Jan 27, 2012 @ 15:44:08

  எதிர்பார்ப்புகள் மாறிக்கிட்டேயிருக்குல்ல.நீங்க சிவசங்கரி எழுதிய பாலங்கள் நாவல் படிச்சுப் பாருங்க. ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையாக பெண்களின் திருமணம் எப்படி நடக்கிறது என்பதைச் சொல்லியிருப்பார். அந்தத் திருமணமே கேள்விக்குறியாகும் போது ஒவ்வொரு தலைமுறையும் எப்படிச் சமாளித்தது என்று போகும். பாட்டி-மகள்-பேத்தி என்று மூன்று தலைமுறைக் கதை.

  Reply

 4. amas32
  Jan 27, 2012 @ 16:11:11

  நான் படிச்சிருக்கேன், ஆமாம் தலைமுறை இடைவெளி தலைமுறைக்குத் தலைமுறை பெருகிகொண்டுப் போகிறது :)nandri Ragavan 🙂 amas32

  Reply

 5. Parisalkaaran
  Jan 28, 2012 @ 02:50:27

  வார்த்தைக்கு வார்த்தை நிதர்சனத்தை எழுதியுள்ளீர்கள். பெற்றோர்களுக்கு இந்தப் புரிதல் இருந்தால், உறவுச் சிக்கல்களை / மனத்தாங்கல்களை எளிதில் கடந்து போக இயலும்.உங்கள் எழுத்தில் நேர்த்தி கூடிக் கொண்டே வருகிறது. அச்சு இதழ்களுக்கு எழுத முயற்சிக்கலாம். நண்பன் கேயாரெஸின் பின்னூட்டத்தை வெகுவாக ரசித்தேன். 🙂

  Reply

 6. arivukkarasu
  Jan 28, 2012 @ 03:35:22

  மற்றவர்களின் பின்னூட்டங்களை உங்கள் பிளாகில் படிக்க முடியவில்லையே !அவர்களின் பின்னூட்டங்களுக்கு நீங்கள் அளித்த பதில்தான் பிளாகில் தெரிகிறது. ஆனால் அவை அனைத்தும் எனக்கு மின்னஞ்சலில் வந்ததால் ரசிக்க முடிந்தது……குறிப்பாக @kryes. சமீபத்தில் அவர் சென்னை வந்தபோது சந்திக்கவில்லை என்றாலும் தொலைபேசியில் உரையாடியது இப்பொழுதும்,எப்பொழுதும் பசுமையாக.. 🙂

  Reply

 7. dagalti
  Jan 28, 2012 @ 04:14:21

  சரளமா எழுதறீங்க. Keep going!என் ரெண்டு பைசாக்கள்:தனிநபர் focus அதிகம் ஆயிடுச்சு. முன்னாடி குடும்பம் முதன்மையாவும், அதுக்குத் தோதா தனிநபர்கள் மாறிக்கிறதாகவும் இருந்தது. இன்னைக்கு தனிநபர் கனவுகள் அதிகரிச்சிருக்கு. கல்யாண வயசு தள்ளிப்போறதால ரெண்டு பேரோட personalities-உம் நிறைய வளர்ந்ததா சொல்லலாம். ஆனா அது ஒரு காரணம் தான். குடும்பம் ‘ங்கறதே ஒரு atomic unitஆ பாக்குறதா ஆனதும் ஒரு காரணம்.’இது எங்கள் முறை, நாங்கள் வாழ்ந்து கொள்கிறோம்’ ங்கறதை ரொம்ப overdo பண்றதா தான் எனக்குத் தோணுது.இந்த இடுகையிலேயே, இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பது, அவர்கள் வேலைகள், career சார்ந்த முடிவுகள், தனிநபர் எதிர்பார்ப்புகளே முன்நிற்கின்றன. இரு குடும்பங்கள் ஒத்துப்போவது ங்கறது ‘சமாளிக்கக் கூடிய/வேண்டிய’ ஒரு ரெண்டாம்பட்சம்-னு ஆயிடுச்சு.இதை நான் ruing- ஆ சொல்லலை. நாம இந்த விஷயத்தைப் பத்தி பேசுற சட்டகமே எப்படி மாறிடுச்சு பாருங்க’ன்னு சொல்றேன்.வுட்ஹௌஸ் தன்னோட மணவாழ்வைப் பத்தி சொல்லும்போது: it’s about being paly with a gal. That’s all it takes ‘ அப்படின்னார்.ஒரு சௌகர்யமான சமுதாய ஏற்பாடு’ன்னு விடாம அதிபயங்கரமா ரொமாண்டிசைஸ் பண்ணிட்டதா தோணுது.

  Reply

 8. US_Vaseegaran
  Jan 28, 2012 @ 07:33:29

  Nicely started…

  Reply

 9. amas32
  Jan 28, 2012 @ 16:01:13

  Thank you dagalti for commenting. I consider it a real honour 🙂 இப்போ கணவனும் மனைவியும் சேர்ந்து வாழறதே கூட்டுக் குடும்பம்னு ஆயிடிச்சுன்னு crazy மோகன் ஒரு முறை சொன்னார். அது தான் நிதர்சனமும் 🙂  amasa32

  Reply

 10. amas32
  Jan 28, 2012 @ 16:02:05

  Thank you sir :)amas32

  Reply

 11. amas32
  Jan 28, 2012 @ 16:06:55

  Thank you Vaseegaran 🙂 You have a lovely name :)amas32

  Reply

 12. amas32
  Jan 28, 2012 @ 16:13:18

  ரொம்ப நன்றி parisalkaaran  🙂 உங்கள் கருத்துக்களை ரொம்ப உயர்வா மதிக்கிறேன். நீங்கள் வந்து பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி 🙂 amas32

  Reply

 13. vedhaLam
  Jan 28, 2012 @ 16:49:00

  ஆஹா! என்ன ஒரு அருமையா சிந்தனை. வயசுப் பசங்க வயிற்றில் பாலை வார்க்கும் கட்டுரை. இதை அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து மொட்டைக் கடிதாசி போல எங்க வீட்டுக்கு அனுப்பிடலாம் ன்னு இருக்கேன். பரிசல், KRS கமெண்டுகள் செம்ம அருமை.<மேலே>

  Reply

 14. amas32
  Jan 28, 2012 @ 17:17:56

  ரொம்ப நன்றி அர்ஜுன் உங்கள் பின்னூட்டத்திற்கு  :)amas32

  Reply

 15. Anandraaj04
  Jan 28, 2012 @ 17:50:34

  அடடா.. நான் தான் கடைசியா…, நம்ம கூட்டத்திலே..??? சரிதான்.. ! உங்க கட்டுரை வருவதற்கு முன்னே இதை அமல்படுத்தியாச்சி..! எங்க.. என்னோட வீட்டிலே இதே கதை தான். ராகவன் சார் சொன்ன மாதிரி ஒரு மினி பாரதவிலாஸ் ..! எங்க கால கட்டத்திற்கு நிச்சயமாய் இந்த அறிவுரை தேவைப்படும் “ஜூனியர்கள்” நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள். அப்புறம் இன்னொண்ணு “ஈகோ” இல்லாமல் வாழக்கத்துகிட்டாலே போதும். ….அவர்களுடைய கொள்கைகள், வாழ்க்கைப் பாதை பற்றிய முடிவுகள்….. நீங்க சொன்னது போல அவரவர்களுடைய கொள்கைகளை மதித்தாலே போதும். எல்லாம் சுபம் நேரத்திற்கேற்ற தேவையான பதிவு..! அதும் நம் அன்பர்களுக்கு..!

  Reply

 16. Yaaro
  Jan 28, 2012 @ 18:12:00

  மிகவும் துல்லியமான அவதானிப்பு – இந்த தலைமுறையின் மனப்பாங்கை நீங்களே அனுபவித்தது போல எழுதி இருக்கிறீர்கள். ஒரு நல்ல மகனாகவும் ஒரு நல்ல கணவனாகவும் இருக்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இத்தகைய எதிர்பார்ப்புகள் நிறைய புது நிர்பந்தங்களை உருவாக்கி உள்ளன. இதையும் தாண்டிப் புனிதமானவனாக இருப்பவன்தான் கில்லி போலிருக்கிறது. you definitely struck a chord there – சிறந்த முயற்சி, வாழ்த்துக்கள் 🙂

  Reply

 17. amas32
  Jan 28, 2012 @ 19:32:02

  ரொம்ப நன்றி மகிழ்வரசு 🙂 ஈகோ பற்றி தனியா குறிப்பிடலை ஆனா அது தான் குடும்பத்தில் குழப்படி பண்ணுகிற மிக்கிய காரணி :)amas32

  Reply

 18. amas32
  Jan 28, 2012 @ 19:35:34

  Yaaro, உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி 🙂 எதிர்பார்ப்புகளினால் பொறுப்புகளும் அதிகமாகின்றன :)amas32

  Reply

 19. kanapraba
  Jan 29, 2012 @ 03:20:37

  நல்ல ஆய்வு புலம்பெயர் சமூகத்தில் பிள்ளைகளே தமது எதிர்காலத்துணையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். பெற்றோரின் முக்கியத்துவம் வெகு குறைவு

  Reply

 20. amas32
  Jan 29, 2012 @ 15:29:07

  நேரம் எடுத்துக் கொண்டு படித்து பதிலிட்டமைக்கு நன்றி 🙂 அவர்கள் உடனேயும் முடிவு எடுத்து விடுவதில்லை. பழகவும் வேண்டும் என்கிறார்கள்! amas32

  Reply

 21. ranjani135
  Sep 29, 2012 @ 07:42:15

  கேஆர்எஸ் – தளத்திலிருந்து உங்கள் தளத்திற்கு வந்தேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கும், அவர் வைக்கும் போட்டிகளிலும் முழு மதிப்பெண்கள் வாங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  முழுக்கத் தமிழிலேயே எழுதுங்களேன்!

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: