துன்பத்தைத் தரும் உறவுகள்

Abusive-relationship-1_1

 

பொதுவாகவே துன்பகரமான உறவுகள் என்று சொல்லும்போது கணவன் மனைவி உறவு முறை தான் முதலில் நமக்குத் தோன்றும். பெரும்பாலும் கணவனால் துன்புறுத்தப்பட்ட மனைவி தான் அதிகம். ஆனால் காலத்தின் கோலம் இப்போழுது மனைவியினால் துன்புறுத்தப்பட்ட கணவனும் இந்தப் பிரிவில் வந்து அடங்கியிருக்கிறது. மனைவி கணவன் இருவருக்கும் வேலை பளு, தாங்க முடியாத மன அழுத்தத்தினால் ஒருவரை ஒருவர் துன்புறுத்தி வீடே நரகமாகிவிடுகிறது. இந்தப் பிரிவில் இப்போ பெற்றோர்/பிள்ளைகள் உறவும் வந்துவிட்டது தான் கொடுமை! 

ஏன் இந்தக் கொடுமையான உறவில் ஒருவர் நீடிக்கிறார்? முக்கியமான காரணம் பொருளாதாரம். நிதி நிலைமையில் சுதந்திரம் இல்லாததால் கணவனையே சார்ந்திருக்கும் நிலைமை. அடுத்து ஒரு பயம், எப்படி தனித்து வாழ்வது, அப்படி வாழ்ந்தாலும் ஊர் என்ன சொல்லும், என்னை நிம்மதியாக வாழ விடுமா அல்லது வாழாவெட்டி என்று சொல்லுமா போன்ற எண்ணங்கள்/கவலைகள் ஒரு காரணம். தனித்து வாழும் பெண்ணை இன்னும் ஏளனமாகப் பார்க்கும் இந்த சமுதாயம் மாறவில்லை. ஆனால் எல்லாவற்றிர்க்கும் மேலான காரணம் குழந்தைகள். குழந்தைகளுக்காக அனைத்தையும் சகித்துக் கொள்கின்றனர் பெண்கள்.

குடிகார ஆண்களுக்கு இரு முகங்கள் உண்டு. ஒன்று அன்பான அனுசரணையான முகம், மது அருந்தாதபோது. மற்றொன்று அவதூறு பேசி மனைவியை புரட்டி அடிக்கும் குடிகார முகம். இந்த மாதிரி கணவனை கொண்ட மனைவி படும் வேதனை வார்த்தைகளில் அடங்காதது. ஆனால் அவளை நேசிக்கும் உறவினர்களும் நண்பர்களும் கூட அந்த கணவன் குடிக்காதபோது செயல் படும் விதத்தைப் பார்த்து அவனுடனேயே குடித்தனம் நடத்தும்படி அறிவுறுத்துவர். இன்னும் பல கொடூரமான முகங்களும் பல ஆண்களுக்கு உண்டு. அவற்றில் ஒன்று, சித்திரவதை செய்வதில் இன்பம் காணும் முகம், இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் மனைவி வீட்டில் இருந்து சீர் செய்யச் சொல்லும் பேராசை முகம், நல்ல நடத்தையுள்ள மனைவியை சதா சந்தேகிக்கும் மற்றொரு விகார முகம், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்டக் கணவனுக்கு மனைவியான துர்பாக்கியவதி எந்நேரமும் துன்பப்படுகிறாள்.

மனைவிகள் மட்டும் இத்துன்பத்திற்கு ஆளாவதில்லை, கணவன்களும் மனைவிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆண்களும் இந்த மாதிரி உறவில் தொடர்ந்து இருப்பதற்கு மூல காரணம் குழந்தைகள் தான். அவர்கள் மேல் உள்ள அன்பால், அல்லல் படுத்தும் பெண்டாட்டிகளையும் அனுசரித்து செல்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி உறவுகளில் இருந்து எளிதாக வெளிவர ஆணால் முடியும். ஏதோ ஒரு சில சமயங்களில் மனைவி/தோழியின் மேல் உள்ள அதீத மோகத்தால் அவள் சொல்படி ஆடிக்கொண்டு அந்தத் துன்ப சூழ்நிலையில் சிக்கி வாழும் சில ஆண்கள் உண்டு. அவர்களுக்கு விமோசனம் கவுன்சலிங் தான். கருத்துரை வழங்குபவரின் உதவியை நாடி அவர் பேச்சைக் கேட்டு அந்த துன்ப உறவில் இருந்து தப்பிக்கலாம்.

எந்தத் துன்பத்தையும் தாங்குவதற்கு ஓர் எல்லை உண்டு. தாங்க முடியாது உடையும் தருணம் ஒன்று அப்படித் துன்பப்படுபவர்களுக்கு வரும். அப்பொழுது, ஒன்று அந்த உறவில் இருந்து தைரியமாக வெளியே வருவார்கள், அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நண்பர்களும் உறவினர்களும் தான் பெரும் உதவி செய்ய வேண்டும். நொந்த நிலையில் இருப்பவர்களுக்கு தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு மிகவும் குறைவாக இருக்கும். சிந்திக்கும் திறனைக் கூட இழந்து விடுவார்கள். அவர்களைச் சுற்றியுள்ள நண்பர்களும் உறவினர்களும் தான் அவர்கள் ஏதாவது விபரீத முடிவை நோக்கிச் செல்கிறார்களா என்று கவனித்து தக்கத் தருணத்தில் அவர்களுக்கு உதவி செய்து காக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் எல்லாம் தன் கணவனைப் பற்றிப் பெருமையாகவே பேசுவார். ஒரு நாள் தீக்குளித்து இறந்து விட்டார். பின் விசாரித்ததில் அவரின் கணவன் அவரின் மனத்தையும் உடலையும் மிகவும் துன்புறுத்தியதால் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்திருக்கிறார் என்று தெரிய வந்தது. பின் ஏன் அவர் தன் கணவனைப் பற்றி அலுவலகத்தில் புகழ்ந்து பேசியிருக்கிறார்? தன் இழி நிலை பிறருக்குத் தெரியக் கூடாது என்று நினைத்திருப்பார் போலும்.

பல  வருடங்களுக்கு முன் என் குடும்ப நண்பரின் அருமை மகள் இரு சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுவிட்டு ஓடும் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இது நடந்தது கலிபோர்னியா மாகாணத்தில் ப்ரீமான்ட் என்னும் நகரத்தில். திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவள் கணவனின் குணம் தெரிந்து தன் பெற்றோர்களிடம் மகிழ்ச்சியில்லா தன் குடும்ப வாழ்க்கையைப் பற்றித் தெரிவித்திருக்கிறாள். அனால் அதற்குள் அவள் கர்ப்பமாகியிருப்பது தெரியவந்தது. உடனே அவள் பெற்றோர்கள், குழந்தை பிறந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று வழக்கமான பல்லவியை பாடியிருக்கிறார்கள். ஆனால் அது மாதிரி எந்த அதிசய நிகழ்வும் ஏற்படவில்லை. மறுமுறை கர்ப்பம் தறித்த பின் துன்பம் தாங்க முடியாமல் கணவனைப் பிரிந்து பெற்றோர் இல்லம் வந்து சேர்ந்தாள். குழந்தை பிறந்த பின் கணவனுடன்  சேர்ந்து வாழ மறுத்தாள். தான் பட்ட மன உளைச்சல்களையும் உடற் துன்பங்களையும் சொல்லியழுதாள். ஆனால் பிள்ளையின் பெற்றோர்களின் வற்புறுத்தலாலும், தன் பெற்றோர்கள் இவளை புரிந்து கொள்ளாமல் இவளை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததாலும் மிகுந்த வருத்தத்துடன் திரும்பிச் சென்றாள். அவள் தந்தை தான் அவளுடன் அமேரிக்கா சென்று அவளையும் குழந்தைகளையும் அவள் கணவன் இல்லத்தில் சேர்த்துவிட்டுத் திரும்பினார். அவர் விமானம் திரும்ப வந்து தரை இறங்கும் முன் அவர் மகள் இறந்த சேதி அவர் குடும்பத்தார்க்கு வந்து சேர்ந்து விட்டது. அவள் போட்டிருந்த அழகான மூக்குத்தியை வைத்து தான் அவளை அடையாளம் காட்ட முடிந்தது. சின்னாபின்னமாகியிருந்தது உடல். இதை நான் எழுதும்போதே என் கண்கள் குளமாகின்றன, அவ்வளவு நல்ல பெண் அவள். போலிசாரால் கணவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் பிள்ளை பெற்ற பின் வரும் மன அழுத்தத்தில் இருந்தாள் (postpartem depression) இந்த முடிவை தானாகத் தேடிக் கொண்டாள் என்று கூறினான். பெண்ணின் குடும்பத்தினர் வேறு நாட்டில் இருந்தனர், என்ன செய்ய முடியும். நடை பிணமாக என்ற சொல் வழக்கைக் கேளிப்பட்டிருக்கிறேன், அந்தப் பெற்றோர்களை பார்த்த பின் அப்படியிருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்து கொண்டேன். பெற்றோர்கள், மகள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள். 

மண வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பவர்கள் துன்பத்தை விளைவிப்பவர் இல்லாத போதும் ஒரு வித பயத்துடனே வாழ்வர். அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று கௌன்சலிங். ஆனால் அந்த முயற்சியை மேற்கொண்டு, பின் கருத்துரை வழங்குபவரின் அறிவுரையை செயல் படுத்த வேண்டியது அந்தத் துன்பப்படுபவரின் பொறுப்பாகிறது. அவர் அந்த உறவை துறந்து தனியே வாழ முடிவு எடுத்த பின் நண்பர்களும் உறவினர்களும் அவர்களுக்கு உற்றத் துணையாக இருந்து, வேலை வாங்கித் தருவதற்கோ, அல்லது இருக்க இடம் (விடுதி அல்லது வீடு) தேடி தருவதற்கோ, அவர்கள் சொந்தக் கால்களில் நிற்பதற்கு நல்ல முறையில் உதவி புரிய வேண்டும். ஆனால் இதில் மிகவும் கடினமானது பாதிக்கப்பட்டவர், பிரிவது ஒன்று தான் வழி என்று முடிவெடுக்கும் தருணம் தான். ஏனென்றால் புது வாழ்க்கை எப்படி அமையும் என்று தெரியாததால் ஏற்படும் மனக்குழப்பம் அவர்களை பாதிக்கும். இது நாள் வரை அவர்கள் வாழ்வில் அனுபவித்த பல சௌகர்யங்களை இழக்க வேண்டியிருக்கும், சுற்றத்தாரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும், இதுவரை வேலைக்குச் செல்லாதவராக இருந்தால் அதை அனுசரிக்கப் பழகிக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்படி பலப்பல தெரியாத காரணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆதலால் முடிவெடுக்கும் முயற்சியே மிகவும் கடுமையான செயல்பாடு.

இந்த மாதிரி கடுமையான உறவுகளில் இருந்து வெற்றிகரமாக வெளி வந்து வாழ்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதில் நான் அதிசயப்பட்டு தலை வணங்குவது எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்பவரைத் தான். அவர் குடிகாரக் கணவனிடம் பட்டத் துன்பம் சொல்லில் அடங்காதது. ஒரு பிள்ளையையும் பறிகொடுத்திருக்கிறார். ஆனால் தைரியமாக, அழகான இளம் பெண்ணாக இருந்தும், கணவனை விட்டுப் பிரிந்து மூன்று பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். மூவரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தன் மூத்த மகளின்(அவள் இளம் வயதில் கணவனை இழந்துவிட்டதால்) மூன்று பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்த்து அவர்களும் சிறப்போடு வாழ்கிறார்கள். வீடுகளிலும், திருமணங்களிலும் சமையல் செய்து அவர் வாழ்க்கை நடத்தியுள்ளார். இது ஒரு தனி ஒருத்தியின் சாதனை. அவருக்கு அந்த காலத்தில் உறுதுணையாக இருந்தது அவருடைய தாய் தான். 

இப்பொழுது கல்லூரியில் பேராசிரியாராக இருக்கும் என் தோழி ஒருவர் ஒரு காலத்தில் கணவனால் துன்புறுத்தப்பட்டு வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்தவர். தன் மதியுக்தியால் வீட்டில் இருந்து தப்பித்து (திரைப்படங்களில் வருவது போல) பின் தன் ஊர் சென்று மறு வாழ்வை ஆரம்பித்தார். விவாகரத்துப் பெறவே கடுமையாகப்  போராட வேண்டியிருந்தது. மேலும் படித்து பேராசிரியராக உள்ளார். அவருக்கும் உற்றத் துணையாக இருந்தது பெற்றோர்களும் சகோதரரும். இவர்கள் இவ்வளவு துன்பத்திற்குப் பிறகும் இன்முகத்துடன் தங்கள் பணிகளை உற்சாகமாகச் செய்வதை பார்க்கும்போது அவர்களின் மனோ திடத்தை பாராட்டுகிறேன்!

உறவினர்களாலும் நண்பர்களாலும் மட்டுமே தான் இந்த மாதிரி சோதனைக் கதைகளை சாதனைக் கதைகளாக மாற்ற உதவ முடியும். முக்கியமாக பெற்றோர்கள் பெண்ணுக்குத் திருமண வாழ்வு தான் எல்லாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். கௌன்சிலிங்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அந்த அமர்வுகளுக்குச் சென்று பயன் பெற வேண்டும். இதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். ஒரு உறவை முறிப்பது எளிதன்று, மகிழ்ச்சியைத் தரக் கூடியதன்று. ஆனால் வாழ்க்கை என்பது கிடைத்தற்க்கரிய பொக்கிஷம். நம் வாழ்க்கையை இன்னொருவரால் நரகமாக்கிக்கொள்ளக் கூடாது. துன்பக்கடலில் மூழ்கி தொலைத்து விடக் கூடாது. நிச்சயமாக இந்த பாதிப்பில் இருந்து மீண்டு புது வாழ்வு வாழ்பவர்கள் வாழ்க்கையை நோக்கும் விதம் வேறு மாதிரியாகத் தான் இருக்கும். அவர்கள் மறு முறை திருமண பந்தத்தில் ஈடுபட தயங்குவார்கள். ஆனால் நிச்சயமாக சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும், மன நிம்மதியுடன் வாழ முடியும், மகிழ்ச்சியைக் கொண்டாட முடியும்.  

Abusive Relationships

Abusive-relationship-1_1

Normally when you think of an abusive relationship, what comes to mind immediately is the one between husband and wife where the wife is mentally or physically or both mentally and physically abused by the husband. The reverse is also true. Lot of young couples go through emotional upheavals because of stress in their jobs that they vent their anger on their spouses. There are other abusive relationships, unfortunately even parent/children relationships though not common, do sometimes fall under this category now a days.

Why do people put up with so much crap? Primary reason is the financial dependency, though not always the case. Sometimes it is the fear of the taboo attached with walking out of a marriage. It is also the fear to live alone in a society where a single woman is still considered an easy prey by the men folk especially if she had left her husband. Most of the times it is for the sake of the children.

Abusive men have this Jekyll and Hyde personality. They are sweet and caring when they are sober and extremely cruel when they are drunk. So even those close to a person being abused kind of advise her to stay in the relationship because the man does possess some redeeming qualities, not understanding how torturous her life is when he is drunk, which may be most of the time. Then there are those who are sadistic by nature, or greedy and want the wife’s family to keep providing him financially, or be one of those who doubts the character of his wife. Whatever may be the reason, the person being abused goes through hell every day. 

It is not fair to say that men are not abused by their spouses. There are such cases as well. Men too stay in such relationships if they have kids and and want to provide the kids the care of a father. But I think it is easier for a man to walk out of an abusive relationship unless he really wants to be in that relationship because he is besotted with the woman. Then, he needs counselling and with help he can be redeemed.

Everyone has a breaking point. When they reach that point either they courageously walk out of that relationship or commit suicide. Friends and relatives have a huge role to play in helping such people. Normally battered people have low self esteem. Their mind becomes numb that they cannot even think straight. Those around her/him must watch out for any warning signal that tell they are reaching a breaking point. 

I knew of a lady who used to tell her colleagues at work that her husband was a wonderful man but one fine day committed suicide by self-immolation. The colleagues later came to know that she was abused by her husband which drove her to make that decision. Why was she praising him when he was ill treating her? May be she did not want her well placed colleagues to know that she was in a bad situation. 

Several years ago my family friend, a mother of two young children jumped in front of a speeding train and committed suicide. This happened in Fremont, California. Soon after her marriage she had complained to her parents that she was mentally abused by her husband. She was already pregnant and her family told her that things will become better once she had the baby. But no such miracle happened. She conceived again, but left him and came back to her parents home and refused to go back after her second child birth. The parents were ashamed and sad that their daughter was living away from the husband. The boys parents pressurised the girl’s family to send her back and the father went and dropped her in Fremont with her two young kids. Even before his return flight touched down in his home town the family had received the news that their  girl was no more. The police identified the body by the beautiful nose ring she used to wear. There was nothing else to identify her with. Even as I am writing this tears well up in my eyes as I knew her to be such a sweet little thing. The husband escaped, no issues. He told the police she was going through postpartum depression which probably led her to make that decision and the police bought it. Her family was in India, totally shattered, unable to take any action on the husband and regretting having sent her back even though she had begged for their help. Both the parents and the girl were educated.

Those being abused live in fear even when the abuser is not around, thinking of when he/she will return and resume the abuse. Counselling definitely helps. But the initiative has to be taken and the advice given by the counsellor followed through. Friends and family should be supportive enough to help the abused person find accommodation or/and a job required to stand on their own two feet, when they decide to get out of the relationship. But the hardest part is for the person to make the decision to get out of the relationship because of the fear of the unknown. So long they might have been used to a certain standard of life, the security of an extended family, a social status etc. By walking out of that relationship they will have to forgo all of those things, and that is definitely a very tough call.

I have also seen people who have come out of such abusive relationships successfully. One is my cook. She has single-handedly brought up her three children and three grand children as well (since her first daughter lost her husband at a very young age). All are extremely well placed today and the credit entirely goes to her. She had the guts to walk out of her marriage with three young children and not a penny in her pocket. She supported her family by cooking in houses and weddings. But her mother gave her the required moral support though she was also poor. I know of another battered woman who went on to become a college professor. She escaped from a locked house, much like in the movies. She was beaten up and locked in the house by her husband. She escaped with only her wits to the rescue. She later went on to do her PhD and is now a professor. She was also ably supported by her parents and brother. Even after all what they have gone through I really applaud their indomitable spirit and how they show no malice towards society. 

Support and understanding by family and friends is so important. Parents especially should not think that marriage is the be all and end all for women. Yes, it is tough to end a relationship. But life is so precious and one can accomplish so much in one’s life time with out suffering in the hands of an abusive person. Many who come out of such relationships may not want to enter into another such relationship. They may be marred for life. But at least they can enjoy freedom and peace of mind and eventually happiness in their new life.

Eve teasing

Eve_teasing_india

Originally published on Hollaback

Eve teasing is something that is always glorified in movies and accepted as funny even by women folk to watch on screen. From the yesteryear movies where MGR would tease Saroja Devi and she would behave like a damsel in distress unable to deal with it, but eventually fall madly in love with him, to a modern day Bala movie “Avan Ivan” where Arya teases Nivedita crudely and still she falls in love with him, this has been the accepted scenario by every one.

Why talk about today’s talkies, you might say, this was the case even between Murugan and Valli. Drama was added to the love lore of Murugan and Valli when Murugan as an old man teased Valli and eventually became Her consort.

This some how gives the impression to the young and many times the old men that women can be teased and there is nothing wrong with that. Whistling, cat calls and lurid comments made when a girl passes by are a few forms of teasing. Following her and if an opportunity arises touching her anywhere in the body are some other forms of eve teasing. Somehow men fail to realise that this is sexual harassment and very offensive to women folk. Why, until Sarika Shah died of eve teasing even the government was lax in its laws and punishments for eve teasing.

When I was growing up I was teased. I always got angry and every time I retorted. Some times ignoring the teasers also helps. They give up after some time. But I have slapped a guy who touched me inappropriately in a bus and he got down in the next stop without saying a word. I am sure he would not have learnt anything from that incident.

The root cause for this problem lies in upbringing. In households where women are treated with respect children learn that it is wrong to be teased as well as to tease. Parents have a huge responsibility here. The husband and the in-laws have to treat the wife/daughter-in-law with respect. The woman on her part, ifill-treated, should not take it lying down. This is a tight-rope walk for a woman in a household where she is not treated well, as she has to make her marriage work and at the same time be heard. As a mother she can very well create a new generation of well behaved adults. She has the power. Both daughter and son have to be educated on what is appropriate behaviour. Children should not fear to confide in their parents when they have a problem relating to sexual harassment.

Many times the victim becomes the accused in our society. So they would rather put up with the nonsense than bringing it in the open. If there is both a boy and a girl in the family, both have to be treated equally. Of course the needs will differ for both of them but partiality to one gender must be consciously avoided. Parents should not condone what is wrong when done by one person and object when the same act is done by somebody else. Teach the boy to help a lady if she is being eve teased. Teach the girl to object to eve teasing.

Somehow there is this other belief as well that eve teasing happens because of how a woman dresses up. This again is preached in movies by heroes (from Rajini to Vijay) who are fully clothed with even an added scarf and a sweater in a Swiss locale and where the heroine is made to prance around in the snow in a skimpy two piece suit. A woman has the freedom to dress the way she wants. Of course she has to use her discretionary powers wisely like in every other decision that she makes. But men cannot assume that they can tease somebody because in their eye she has not dressed up appropriately.

Unfortunately a lot rests on the woman’s shoulder to eradicate eve teasing. She has to be more assertive and not be bulldozed. The society has to take more responsibility. There’s no use in women’s liberation organisations objecting to movies where women dress up in scant clothes. They should seriously object to the content in movies where eve teasing is glorified. The police stations must be really helpful to women who seek their help. Schools and colleges should take an extra effort to educate their students on the evils of eve teasing. Honestly it is a joint effort, if this has to go away from this society.

ஈவ் டீசிங்/பெண் சீண்டல்

Eve_teasing_india

 

திரைப்படங்களில் கதாநாயகன் நாயகியை கிண்டல் பண்ணுவார், பின் கிண்டல் பண்ணியவரையே அந்த நாயகி காதலிப்பாள்! இது ஒரு எழுதப்படாத விதியாக ஆண்டாண்டு காலமாக இருந்து வந்து கொண்டிருக்கிறது. அன்றைய திரைப்படங்களில், எம்ஜிஆர் சரோஜா தேவிவை பின் தொடர்ந்து போய் கிண்டல் அடிப்பார், சரோஜா தேவியும் ஒரு கொழு கொம்பு இல்லாத கோடி போல கையாலாகாதனத்தைக் காட்டி பின் காதலில் விழுவார். அது இன்றும் தொடர்கிறது. பாலாவின் சமிபத்திய “அவன் இவன்” திரைப் படத்தில் ஆர்யா நிவேதித்தாவை கடுமையாக கேலி பண்ணுவார். ஆனாலும் அந்தப் பெண் அவன் மேல் கோபம் கொள்ளாமல் காதல் கொள்வாள். இதை ஆண் பெண் இரு பாலாரும் ஒத்துக் கொண்டு ரசிப்பது தான் வேதனை.

திரைப்படங்களில் மட்டும் அல்ல, புராணங்களிலும் அப்படியே. முருகன் வள்ளியை அடைய முதியவர் போல வந்து கொஞ்சம் அவளை சீண்டி, விநாயகரையும் துணைக்கு அழைத்துப் பின் அவள் கரம் பிடித்தார்.

இது போன்ற முன் உதாரணங்களால், பெண்ணை சீண்டுவது, கேலிப் பேசுவது, மட்டம் தட்டுவது, கொச்சைப் படுத்துவது போன்ற செயல்களில் தவறில்லை என்ற எண்ணத்தை சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது. முக்கியமாக பெரும்பாலான இளைஞர்களும் (பல முதியவர்களும்) இந்த நடத்தையில் எந்த தவறும் இருப்பதாகக் கருதுவதில்லை. உண்மையில் இந்த மாதிரி நடத்தை ஒரு வகை பாலியல் துன்புறுத்தலே. ஒரு பெண்ணை பின் தொடர்வது, சீட்டியடிப்பது, அவள் காதுபட அவளை வர்ணிப்பது, ஆபாசமாகப் பேசுவது, சமய சந்தர்ப்பம் கிடைக்கும் பொது அவளை உடலில் எந்த பாகத்திலாவது தொடுவது, இவை அனைத்தும் ஈவ் டீசிங்/பாலியல் துன்புறுத்தல் என்ற வகையைத் தான் சாரும். இது மிகவும் கண்டிக்க தக்கது. ஆனால் அனைவருமே இதை மிகவுல் லேசாக எடுத்துக் கொள்கின்றனர். ஏன், நமது அரசாங்கமே சரிகா ஷாவின் மரணத்துக்குப் பின்னே தான் அதன் கொடுமையை உணர்ந்து சட்டத் திருத்த மசோதாக்களைக் கொண்டு வந்தந்து.  

என பதின் வயதுகளில் நானும் சீண்டப்பட்டிருக்கிறேன். பல முறை கோபத்துடன் கேலி செய்தவர்களை பொது இடத்திலேயே திட்டியிருக்கிறேன். சில சமயம் அவர்களை உதாசீனப் படுத்துவதும் ஒருவகையில் அவர்களுக்குப் பாடமாக அமைகிறது. கேலிப் பேசி அலுத்துப் போவார்கள். என்னை ஒருவன் ஒரு முறை பேரூந்தில் தகாத முறையில் தொட்டதற்கு அங்கேயே அறைந்திருக்கிறேன். அவன் மறு பேச்சுப் பேசாமல் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விட்டான். இதனால் அவன்  ஏதாவது கற்றுக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது.

இதெற்கெல்லாம் ஆதி காரணம் வளர்ப்பு! பெரும் பொறுப்பு இங்கே பெற்றோர்களுக்கே! எந்த இல்லங்களில் எல்லாம் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுகிறதோ அந்த இல்லங்களில் வளரும் குழந்தைகள் பெண்களை எந்த வகையிலும் கீழ்மை படுத்துவதோ, அவமானப் படுத்துவதோ கூடாது என்று தானாகவே கற்றுக் கொள்கின்றனர். கணவனும், அவர் இல்லத்தாரும் மனைவியை/மருமகளை மரியாதையுடன் நடத்த வேண்டும். பெண்ணுக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது. அவளும், அவளை அவமானப்படுத்துபவர்களை கண்டிக்காமல் மிதியடி போல கிடந்தால் மற்றவர்கள் மேலும் ஏறித்தான் செல்வார்கள். அனால் இது குடும்பப் பெண்ணுக்கு எளிதானது அல்ல. தன் திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராதபடி, அதே சமயம் உறுதியான மனப்பக்குவத்துடன் தன இல்லத்தாரை சமாளிப்பது கழக்கூத்தாடி விழாமல் கயிற்றில் நடப்பதற்கு ஒப்பாகும். ஆனால் ஒரு தாயாக இந்த விஷயத்தில் அவள் பங்களிப்பு மிகப் பெரியது. அவளால் நல்ல நடத்தையுள்ள புதிய தலைமுறையை உருவாக்க முடியும். அவளுக்கு அந்த சக்தி இருக்கிறது. எது நல்ல நடத்தை என்பதை தாய் தன் மகளுக்கும் மகனுக்கும் கற்றுத் தருவதே அவள் வரும் தலைமுறையினருக்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும். பிள்ளைகளும் பெற்றோரிடத்தில் எந்த பாலியல் பிரச்சினை ஆனாலும் மறைக்காமலும் பயப்படாமலும்  பகிர்ந்துகொள்ள தகுந்த சூழ்நிலையை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும். 

நமது சமுதாயம் பல சமயங்களில் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகக் கருதும். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை வாய் திறக்காமல் மௌனியாக தனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியில் சொல்லாமல் இருந்து விடுகின்றனர். மகளும் மகனும் சேர்ந்து வளரும் ஒரு இல்லத்தில், இருவரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். நிச்சயமாக இரு பாலாருக்கும் தேவைகள் வேறு வேறாகத் தான் இருக்கும். ஆனால் நடத்தும் முறையில் பாரபட்சம் இருக்கக் கூடது. ஒருவர் செயலை குற்றம் என்றும் அதையே மற்றவர் செய்யும் பொது சரி என்றும் வேற்றுமை பாராட்டக் கூடாது. ஒரு பெண்ணை மற்றவர்கள் கிண்டல் செய்யும் போது அவளுக்கு உதவி செய்யும்படி மகனுக்கு அறிவுறுத்தி வளர்க்க வேண்டும். அதுவே மகளிடம் யார் அவளை சீண்டினாலும் அதை தடுத்து எதிர்கொள்ளக் கற்றுத் தர வேண்டும்.

இன்னொரு வினோதமான நம்பிக்கை நமது சமுதாயத்தில் நிலவுகிறது. அது என்னவென்றால் பெண் உடுத்தும் உடையினால் தான் அவள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள் என்பதே ஆகும். இந்த எண்ணத்தைப் பிரபலப்படுத்துவது யார் தெரியுமா? நமது திரைப்பட நாயகர்கள் (ரஜினி முதல் விஜய் வரை). இவர்கள் பனிப் படர்ந்த மலை பரப்பில் கம்பிளி சட்டையும் கழுத்து குட்டையும் போட்டுக்கொண்டு ஆடுவார்கள் ஆனால் கூட நடனமாடும் நாயகியின் உடை/உடையின்மை பற்றி நான் சொல்லவும் வேண்டுமா!  பெண் உடுத்திக் கொள்ளும் உடை அவளின் தனிப்பட்ட விருப்பம். எல்லா முடிவுகளிலும் அவள் காட்டும் உரிய அறிவுபூர்வமான பாகுபாட்டை அவள் உடை விஷயத்திலும் காட்ட வேண்டியது அவசியம். ஆனால் அவள் உடுத்திய உடையினால் தான் அவளை சீண்டினோம், அல்லது அவள் பாலியல் துன்புறுத்தலுக்கு அதுவே காரணம் என்று எந்த ஆண் மகனும் கூறக் கூடாது. 

துரத்ரிஷ்டவசமாக இந்த ஈவ் டீசிங்கை முடிவுக்குக் கொண்டுவருவதில் பெரும் பங்கும் பெண்களிடமே உள்ளது! பெண் உறுதியானவளாக இருக்க வேண்டும். சமுதாயமும் இன்னும் கண் மூடிக்கொண்டு இருக்கக் கூடாது. வெளிப்படையாக தவறை தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டும். பெண்கள் சுதந்திரத்துக்காக போராடும் குழுவினர்கள் பெண்கள் குறைந்த உடையில் வரும் படங்களை தடை செய்ய மட்டும் போராடாமல், அவர்களை இழிவாகக் காட்டும் படங்களையும் பெண் சீண்டலை/பாலியல் துன்புறுத்தலை பெருமை படுத்தும் படங்களையும் தடை செய்ய போராட வேண்டும். அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்குத் தன்னம்பிக்கை தரும் முயற்சியிலும் அவர்கள் ஆக்கப் பூர்வமாக ஈடுபடவேண்டும். காவல் நிலையங்கள் கண்டிப்பாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும். பள்ளிகளும் கல்லூரிகளும் அங்கு பயில்பவர்களுக்கு ஈவ் டீசிங்கின் தீமையை பற்றி எடுத்துரைக்க பயிலகங்கள் நடத்த வேண்டும். இது நம் சமுதாயத்தில் இருந்து போக வேண்டும் என்றால் ஒரு கூட்டு முயற்சியால் தான் இதை சாதிக்க முடியும்!

Modern Family

Akafd4qceaesrc7

There is a beautiful Saiva Adheenam in Kauai, Hawaii whose previous pontiff was Sivaya Subramuniya Swamy. We called him Gurudeva. He was an embodiment of love. Once, while talking to us, he asked us if we knew why the North Indians fared very well in business. He then continued to say that N.Indians always spoke about business matters with their children around them. After school, the children also helped the father in the business. So they grew up watching their father in action and when they inherited the business did better, with the knowledge acquired from their father all along. You can see this culture in the N.Indian households even now.

The S.Indian kids grow up in a more sheltered environment. (I am talking about the middle class and the upper class and not the poor here) The parents strive hard to get the kids what they want. They also make sure that they realize that studies should always be their  #1 priority, even going to the extent of making them give up their passionate pursuit in sports or arts if they did not do well in their studies. The sad part here is, parents even hide a bad marriage from the kids and the kids are oblivious to such facts until suddenly one day they realise the problems the family is facing and then it comes as rude shock to them. True, parents should strive to preserve the innocence of child hood but not at the expense of the child not learning from life’s experiences at the appropriate time. The child is a part of the family and he/she must be aware of what is going on around him/her.

Children of Indian origin growing up abroad lead an even more secluded and exalted life. They have their own room, iPad,  iPod, iPhone X-box and what not to keep them happily in their room fully occupied. This is the same situation in the rich people’s household in India as well. These kids spend less time interacting with real friends at school and more time on Gchat and Facebook trying to forge a relationship with unknown people. They spend hours together in front of a computer and with electronic gadgets that they lose touch with human contact and pretty soon begin to think of them as unnecessary. They don’t have any thing to speak for even two minutes when a visitor visits their family. In fact they are now more comfortable wishing people through SMS and other social network sites rather than even picking up a phone to verbally communicate this. This is more convenient since it is a one way communication and they do not have to make an effort to respond to what the other has to say. If this trend continues it will have a huge impact on the future society as communication skills between humans may have to be retaught!

To avoid all this children should be made to realise that they are not the centre of the universe. They should be brought up in such a way that they can empathise with what is going on around them. Both parents have to work for financial stability these days but it is also their responsibility to make sure that televisions and computers do not take their place!

கூடி விளையாடு பாப்பா

Akafd4qceaesrc7

ஹவாயில் Kauai யில் ஒரு பெரிய சைவ ஆதீனம் உள்ளது. அதன் முந்தைய மடாதிபதி சிவாய சுப்ரமுனிய சுவாமி. நாங்கள் அவரை அன்புடன் குருதேவா என்று அழைப்போம். அவர் ஒரு முறை எங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏன் வட இந்தியர்கள் தொழிலில் சிறந்து விளங்குகின்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். பின் அவரே சொன்னார், அவர்கள் தங்கள் குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டே தான் வியாபாரம் பற்றிப் பேசுவர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும் மீதிப் பொழுதில் தந்தையின் தொழிலில் உதவிப் புரிவதை பழக்கமாக்கிக் கொள்ள வைப்பர். தொழில் பிரச்சனைகளை எப்படி தந்தை சமாளிக்கிறார் என்று பக்கத்தில் இருந்து பார்த்தே வளர்ந்த பிள்ளைகள் பின்னாளில் தந்தையின் தொழிலை எடுத்துக் கொண்ட பின் இன்னும் சாமர்த்தியத்துடன் தொழிலை நடத்தி முன்னுக்கு கொண்டு வருகின்றனர்! இன்றும் தமிழ் நாட்டில் வாழும் வட இந்தியர்கள் வீட்டில் இந்த கலாச்சாரத்தைக் காணலாம்.

 

அதே தென் இந்தியர்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கின்றனர். (நான் இங்கே குறிப்பிடுவது நடுத்தர மற்றும் மேல் வர்க்கக் குடியினரைப் பற்றித்தான். ஒரே அறையில் வாழும் ஏழைக் குடும்பங்கள் பற்றியல்ல) எந்தப் பிரச்சினையும் குழந்தைகள் காதுக்கு எட்டிவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர். படிப்பில் மட்டுமே முழு கவனம் இருக்க வேண்டும். விளையாட்டில் அல்லது கலையில் ஆர்வம் இருந்தால் கூட படிப்பிற்கு பங்கம் வந்து விட்டால், அதை துறந்து விட வேண்டும். பெற்றோர்கள் மன வேற்றுமையோடு வாழ்ந்து கொண்டு இருப்பதைக் கூட உணராமல் பல குடும்பங்களில் பிள்ளைகள் வளருகிறார்கள். திடீரென்று முகத்தில் அறைந்தார் போல் உண்மை வெளி வரும்போது கதி கலங்கி போய் விடுகிறார்கள். குழந்தைகளின் சிறு வயது அப்பாவித்தனத்தை நாம் சிதைக்கக் கூடாது தான். அதே சமயம் குடும்ப சூழ்நிலை, பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும்.

 

இதை விட மோசம் வெளி நாடுகளில் வளரும் இந்தய வம்சாவளிக் குழந்தைகள். ஆளுக்கு ஒரு அறை. அறைக்குள் போய் அடைந்து கொண்டு ஐ பாட், ஐ போன், x பாக்ஸ், கணினி ஆகிய தொழில் நுட்ப உபகரனங்களுடனே தான் அவர்கள் வாழ்வு பின்னிப் பிணைகிறது. இந்தியாவிலும் பல செல்வந்தர் வீடுகளில் இது போல ஒரு சூழல் தான் பரவலாக உள்ளது. குழந்தைகள் பள்ளியில் தோழர்களோடு நேரடியாக உரையாடி விளையாட்டுக்களில் பங்கு பெறுவதை விட Gchatலும் Facebookலும் முகம் தெரியாதவர்களுடன் இனைய தளத்தில் தொடர்பு கொண்டு உறவை வளர்த்துக் கொள்ள மணிக்கணக்காக கணினியின் முன் அமர்ந்திருக்கின்றனர். அதுவே வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுடன் இரண்டு நிமிடம் உட்கார்ந்து பேச அவர்களுக்கு விஷயம் இருப்பதில்லை. இதுவே தொடர்ந்தால், வருங்கால இளைஞர்களுக்கு நேரடி மானிட தொடர்புகளை சமாளிக்கும் திறன் குறைந்து சமூகத்தில் ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும். இப்பொழுதே தொலைபேசியில் பேசுவதை விட மின் அஞ்சலில் செய்தியையோ வாழ்த்தையோ சொல்லவே இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் இது ஒரு வழிப் பாதையாக உள்ளது. நாம் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டால் போதும். பரஸ்பர பேச்சுப் பரிமாற்றம் கூட தேவை இல்லை 🙂

 

குழந்தை பருவத்தில் இருந்தே தன் நலம் மட்டுமே கருதுகிற மனப்பான்மை ஒழிய வேண்டும். அவர்கள் சிறு வயது முதலே தன்னை சுற்றி நடக்கின்ற அனைத்தையும் கவனித்து புரிந்து கொள்கின்ற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள பெற்றோர்கள் உதவ வேண்டும். பெற்றோர் இருவரும் பொருளாதார மேம்பாட்டுக்காக வேலைக்குச் செல்லும் கட்டாயம் இருந்தாலும் தொலைக்காட்சி பெட்டியோ கணினியோ அவர்கள் இடத்தை எடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டால் நல்லது!

 

 

Mother-in-law Daughter-in-law!

41733-abhishek-bachchan-with-w

Mother-in-law and daughter-in-law are both women. Only a daughter-in-law goes on to become a mother in law. Yet something happens in the transformation that changes the same woman into a totally different person!

The beginning point of this special relationship is the son/husband. Hence if there are issues in this relationship the sufferer also happens to be him!

When the daughter-in-law enters her husband’s home all she expects is mother’s love from her mother-in-law. If she gets it then it is home sweet home! There are lots of mothers-in-law who welcome their daughter-in-law into their household and shower her with love and affection as they would to their daughter. If the future mother-in-law started off on the best foot by behaving nicely towards the girls family even before the wedding, this will really elicit a favourable response from the girl and will lead to mutual respect between the two. This cultured behaviour does not come through education or social status but purely out of love. By understanding that the son’s happiness totally depends on his wife’s happiness, every mother will only try her best to keep the wife happy.

The problem starts when the mother-in-law thinks of her daughter-in-law as her competition. There is always a special bond between the mother and son and that is why when a new person enters the household to rule her son she flips! More over if she happens to begin the relationship by saying that she is the boss and her daughter-in-law is her subordinate then undoubtedly the relationship will go south! On the other hand if she treats her as a colleague and shares the responsibility and authority then the bonding begins. There is the same kind of special relationship between a father and a daughter as well. But there are not many  live in sons-in-law for the father-in-law/ son-in law relationship problems to take a front seat:)

If the daughter in law also starts loving her mother in law as she would her mother, then everything is hunky dory. Otherwise even a small problem magnifies itself. She must also make an effort to learn about the new family’s internal workings, show love and affection to her new relatives. This requires a considerable amount of time and patience. Generally when the daughter in law is more educated than the mother in law and holds a good job as well, this may lead to the mother in law feeling a little threatened and may express her inadequacy in some form of petty anger. But if the daughter in law is smart she will respect her mother in law’s worldly wisdom right from day one and by giving her the due respect put her at ease.

The responsibility lies with the son/husband to make this relationship work. But many of them lack the maturity to handle both the wife and mother. The mother complains that he is henpecked and the wife says he is a mama’s boy and he is caught between the two without satisfying either of them and wondering why in the first place did he ever decide to get married!

I am treating my daughter-in-law the same way my mother-in-law treated me, so nothing is amiss thinks the mother-in-law. This is how I lived in my parents’ home and this is the same way I will continue to live in my new home, decides the daughter in law. We do not sit as a family and discuss the cause of the family problems. It is not in our culture to do so. The sons are brought up to obey the parents and it is very difficult for them to suddenly realize that they have to correct their parents’ behaviour. They do not have the courage to do so. At the same time they do satisfy their wife’s wishes but with a sense of guilt. Both attitudes are wrong.

When parents enjoy financial independence and good health they should let the newly marrieds to start a home of their own. Familiarity breeds contempt. So it would be wise for the parents of young couple to let them live on their own and enjoy their freedom. This will actually lead to closeness between them and when help is needed eventually, say when the daughter-in-law requires somebody responsible and loving to take care of her children, and when the mother-in-law requires assistance due to some ailment relating to age, then at that point, help will be exchanged with mutual respect and dignity.

மாமியார் மருமகள்

41733-abhishek-bachchan-with-w

மாமியார் மருமகள் இருவரும் பெண்களே. மருமகளாக இருந்தவர் மட்டுமே மாமியாராக ஆக முடியும். ஆனால் மருமகளாக இருந்தவர் மாமியாராக மாறும்போது ஏன் ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுகிறது? 

இந்த உறவின் தொடக்கம் மகன்/கணவன். அதனால் இந்த உறவில் பிரச்சினை என்றால் பாதிக்கப் படுவதும் அவனே.

மருமகள் கணவன் வீட்டுக்கு வந்தவுடன் அவள் எதிர்பார்ப்பது தாயன்பு. அது மாமியாரிடம் கிடைத்து விட்டால் பிறகு அது மிட்டாய் வீடு தான்! பல தாய்மார்கள் அன்பாய் அரவணைத்து மருமகளை மகளாய் நேசித்து இல்லத்தில் ஒருத்தியாய் அவளை ஏற்றுக் கொள்கின்றனர். திருமணத்தின் முன்பே பிள்ளையின் தாய் பெண் வீட்டாரை மதித்து நடந்தாலே வரப்போகிற மருமகளுக்கு மாமியாரின் மேல் ஒரு மரியாதை பிறக்கும். இந்த பண்பாடு படிப்பினாலோ, சமுக அந்தஸ்தினாலோ வருவது அல்ல. உண்மையான அன்பு இருக்க வேண்டும். மகனின் மனைவி மகிழ்ச்சியோடு இருந்தால் தான், மகன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற புரிதல் மூலம் மட்டுமே இது முடியும். 

மருமகளை தனக்கு போட்டியாளராகப் பார்க்கும் தாய்மார்களால் தான் பிரச்சினை ஆரம்பம் ஆகிறது. எப்பொழுதுமே மகனுக்கும் தாய்க்கும் ஒரு விசேஷ பந்தம் உள்ளது. அதனால் தான் அவனை ஆள வேறு ஒரு பெண்  வெளியில் இருந்து வந்தவுடன் தாய்க்கு ஒரு பயம் வந்து விடுகிறது. மேலும் நான் ஒரு உயரதிகாரி, நீ என் கீழே வேலை பார்ப்பவள் என்ற நோக்கோடு மாமியார் உறவை ஆரம்பித்தாலும் அது மருமகளின் வெறுப்பில் தான் போய் முடியும். சக தோழியாக பாவித்து பொறுப்புகளையும் அதற்கேற்ற அதிகாரத்தையும் பகிர்ந்தளித்தால் உறவு வலுப்படும். அதேபோல தான் தந்தைக்கும் மகளுக்கும் ஒரு உன்னத உறவு உள்ளது. ஆனால் வீட்டோடு மாப்பிள்ளை என்று அதிகம் பேர் இல்லாததால் மாமனார் மருமகன் பிரச்சினை நாம் அதிகம் காண்பதில்லை 🙂 

வீட்டுக்கு வந்த மருமகளும் மாமியாரை தாயை போல நேசிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சுமுகமாகப் போகும். இல்லை என்றால் சிறு பிரச்சினை கூட பூதாகாரமாக வெடிக்கும். மருமகளும் புதிய இல்லத்தின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். வீட்டுக்கு வந்த விருந்தாளி போல பட்டும் படாமலும் இருக்கக் கூடது. அனைத்திலும் பங்கெடுத்துக் கொண்டு, அனைவரிடத்திலும் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை. பொறுமை வேண்டும். பெரும்பாலும் மருமகள் மாமியாரை விட அதிகம் படித்து வேலைக்குச் செல்பவளாக இருந்தால் மாமியாருக்குத் தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பு இருக்கிறது. அது வேறு விதத்தில் கோபமாய் வெளிவரும். ஆனால் மாமியாரின் அனுபவ முதிர்ச்சிக்கு மதிப்பளித்து மருமகள் முதலில் இருந்தே தக்க மரியாதை கொடுத்து வந்தால் இந்த சூழ்நிலையை அறவே தவிர்த்துவிடலாம்.

இதற்கெல்லாம் பாலமாய் அமைய வேண்டியவன் மகன்/கணவன். பல ஆண் மகன்களுக்கு தாயையும் மனைவியையும் தக்க முறையில் கையாள்வதற்கான முதிர்ச்சி இருப்பதில்லை. புதுப் பெண்டாட்டி சொல் பேச்சுக் கேட்டு அலையறான் என்று தாயிடமும், சரியான அம்மா பிள்ளையாய் இருக்கிறாயே என்று மனைவியடமும் திட்டு வாங்கிக்கொண்டு, திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஏண்டா கல்யாணம் பண்ணிக்கொண்டோம் என்று நொந்து போகிறவர்கள் அநேகம் பேர்.

என் மாமியார் என்னை இப்படித் தான் நடத்தினார், நானும் அதுபோல நடந்து கொள்வதில் தவறில்லை என்று புதிய மாமியார்கள் நினைக்கவும் செய்கிறார்கள். நான் என் வீட்டில் இப்படித் தான் இருந்தேன், இங்கேயும் இப்படித் தான் இருப்பேன் என்று புது மருமகள்களும் நினைக்கிற காலம் இது. நம்முடைய கலாச்சாரத்தில் குடும்பத்தில் அனைவரும் உட்கார்ந்து, கலந்து பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுதல் என்பது வழக்கத்தில் இல்லை. பெரும்பாலும் பிள்ளைகள், பெற்றோர் சொல் கேட்டு வளர்ந்ததால் திருப்பி அவர்களிடம், நீ செய்வது தவறு, வேறு மாதிரி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லத் துணிவு வருவதில்லை. அதே சமயம் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் போது ஒரு குற்ற உணர்வோடே செய்கிறார்கள். இரண்டுமே தேவையில்லை.

இன்றைய  கால கட்டத்தில் பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தோடும், நிதி நிலைமையில் மகனை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாது இருந்தாலும், மகனுக்குத் திருமணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் வைப்பதே அறிவுள்ள செயலாகும். தூரத்தில் இருக்கும் போது குற்றங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. பிரிவினால் அன்பும் பெருகுகிறது. உறவும் மேம்படுகிறது. பின்னொரு நாளில் இரு சாரார்க்கும் உதவித் தேவை படும் பொழுதில், அதாவது மருமகளுக்குக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பொறுப்பான அன்புடையவர்களின் தேவை ஏற்படும் போதோ, அல்லது மாமியாருக்கு மூட்டு வலி வந்து மருமகளின் உதவி தேவை படும் போதோ அன்புடனும் கௌரவத்துடனும் உதவி பரிமாற்றம் இயல்பாக  நடக்கும்.