TNMegaTweetUp2012

Img_2630_1

மே பதிமூன்றாம் தேதி தமிழகத்தின் மெகா ட்வீட் அப் என்ற அறிவிப்பு வந்த நாளில் இருந்து ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சி நேற்று இனிதே நடந்தேறியது! சுமார் மூன்றரை மணிக்கு விழா ஆரம்பித்தது. சொன்ன நேரத்திற்கு முன்பே நிறைய பேர் வந்திருந்தனர். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியை அப்பட்டமாகக் காண முடிந்தது. குடும்பம் இல்லாத ஓரு குடும்ப நிகழ்ச்சியாக இருந்தது. நுழை வாயிலில் பெயர், தொலைபேசி எண், மற்றும் நம் ட்விட்டர் ஹேண்டிலைப் பதிவு செய்ய புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. அன்புடன் அனைவரும் வரவேற்கப் பட்டது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. ஒருவரை ஒருவர் அநேகமாக நேரே பார்த்திராத சூழ்நிலையிலும் தானாகவே ஒரு நட்பு சூழல் அங்கே நிலவியது.

நல்ல பெரிய காற்றோட்டமான அரங்கம், மேடையில் கணினியுடன் இணைக்கப்பட்ட வெள்ளைத் திரையில் குறும்படம் வெளியிடவும், பவர் பாய்ன்ட் பிரசெண்டேஷன் செய்வதற்கு ஏதுவாக அனைத்தும் செட் அப் செய்யப் பட்டிருந்தது. பலர் அரங்கத்தில் அறிமுகம் செய்துகொண்டு அரட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். திரு பரிசல் தான் காம்பீர் ஆக திறம்பட செயலாற்றினார். அனைவரையும் வரவேற்ற பின் கை ஒலிபெருக்கியை வந்திருந்தவர்களிடம் கொடுத்து வரிசையாக நம்மை அறிமுகப் படுத்திக் கொள்ள சொன்னார். பலரின் ட்விட்டர் ஹேண்டிலை சொல்லும்போதே சிரிப்பலை ஆரம்பித்து விட்டது. ஒவ்வொருவரும் அவர்களை அறிமுகம் செய்து கொள்ளும் போது அவர்களின் ட்வீட்டுகளின் பெருமையை பொறுத்துக் கரகோஷமும் கூடவோ குறையவோ இருந்தது. கேலியும் கிண்டலும் இருந்தாலும் எதுவும் மிகைப்படாமல் அளவோடு இருந்தது நம் ட்விட்டர்களின் கண்ணியத்தைப் பறை சாற்றியது. நன்றாக நிகழ்ச்சியைக் கொண்டு சென்ற பெருமை பரிசலைச் சாரும்.
முதலில் திரு செல்வுவின் ட்வீட் புத்தக வெளியீடு நடைபெற்றது. அவர் வெளியிட ravanan181,senthilchp,and amas32 பெற்றுக் கொண்டனர். அவர் புத்தகம் அருமையாக இருந்தது. அவருக்கு வாழ்த்துகள்! பின் balaramanL அவர்களின் குறும்படத்தின் ட்ரைலர் திரையிடப்பட்டது. படம் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் டீசர் மட்டுமே! அதற்கே நல்ல வரவேற்பு 😉
அடுத்து @aidselva அவர்கள் அவர் சார்ந்திருக்கும் தொண்டு நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவர்கள் கிராமங்களுக்குச் சென்று பள்ளி மாணவர்களிடம் வகுப்பிற்கேற்ற திறன் உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர். பின் பெற்றோர்களுக்கு குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்து ஆசிரியர்களிடம் ஆவன செய்வதற்கு அறிவுருத்தப் படுகிறார்கள். அவர் சொன்னதில் இருந்து ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இரண்டாம் வகுப்பு மாணவனின் படிக்கும் திறன் கூட இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. இதிலிருந்து நம் தமிழ்நாட்டின் கல்வி கற்பிக்கப் படும் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்று புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் அற்புதமாக விளக்கினார். இருவரை வேலைக்கு அமர்த்தும் வாய்ப்பும் இருப்பதாகவும், விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்ற அரிய தகவலையும் தந்துள்ளார்.
அடுத்து RJ crazy gopal அவர்களின் நகைச்சுவை விருந்து நடைபெற்றது. அவர் DR.RajMohanஐ ஒரு நோயாளியின் தந்தையை போல தொலைபேசியில் பேசி கோபப் படுத்தி அதை பதிவு செய்து எங்களுக்கு அதனை ஒலிபரப்பினார். பிறகு surekha and cableshankar “கேட்டால் கிடைக்கும்” என்ற அவர்களின் இயக்கத்தைப் பற்றிக் கூறினார்கள். எப்படி நம்முடைய சகிப்புத் தன்மையினால் கடைக்காரர்களும் மற்றவர்களும் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை மிகவும் சுவாரசியமாக எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் சிறு விஷயத்தையும் அலட்சியம் செய்யாமால் போராடி வெற்றிப் பெறுவதைக் குறிக்கோளாக வைத்துக் கொண்டிருகின்றனர். இதை நம்மிடம் பகிர்ந்து கொண்டது நிச்சயம் பலரை அவ்வாறு செய்யத் தூண்ட ஒரு ஆரம்பமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
பிறகு JesuThangadurai stand up comedy செய்து அசத்தினார். மேலும் அவர் மெகா ட்வீட் அப் ஞாபகார்த்தமாக அனைவருக்கும் engrave செய்யப் பட்ட பேனா ஒன்றை பரிசளித்தார். போற்றத் தகுந்த ஒரு செயல். அதன்பின் வாழை என்ற இன்னொரு தொண்டு நிறுவனம் அவர்களின் செயல்பாட்டை விளக்க மேடைக்கு வந்தனர். இவர்களின் குறிக்கோள் குடும்பத்தில் முதல் தலைமுறையினராக பட்டப் படிப்பு பெற கிராமத்துப் பிள்ளைகளுக்கு ஆவன செய்ய வேண்டும் என்பதே! ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மெண்டார் கொடுக்கிறார்கள். அவர் அந்தக் குழந்தையின் படிப்பு மட்டுமல்லாமல் அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் கொள்வார். சியை அதிகரிக்க அவர்களுக்கு வாலண்டியர்கள் தேவையாம். பாராட்டப் பட வேண்டிய சேவை. ஆறு வருடங்களாக செய்து வருகிறார்களாம். இதைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள you can visit their website vazhai.org – பிறகு M.G.Ravikumar அவர்கள் அட்டகாசமாக மிமிக்கிரி செய்தார். அவருடன் RJ crazy gopalம் இணைந்து ஒரு இரட்டையர் ஷோ நடத்திவிட்டார்கள். அவர்கள் திறனை பார்த்து வியந்து திரு ராவணன் அங்கேயே ஐநூறு ரூபாயை பரிசாக அளித்து அவர்களை மகிழ்வித்தார்!
@IKaruppiah அவர்கள் நகைச்சுவையோடு ஒரு கவிதையை அரங்கேற்றினார். அவருக்கும் நன்றி. அதற்கு பின் @rsGiri அவர்கள் இன்னிசை பாடல் கச்சேரி செய்து தன் பங்கிற்கு கூடத்தை உற்சாகப் படுத்தினார். அவருக்குப் பின் @pattasu அவர்களும் ஒரு மலையாளப் பாடலைப் பாடினார். முக்கியமாக பரிசலுக்கு நேற்று பிறந்த நாள். அந்தக் கொண்டாட்டத்தை எப்படி விடுவது? கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது. பிறகு ஒரு சிறிய ப்ரேக். அனைவரும் சிற்றுண்டி குளிர் பானம் பெற்றுக் கொண்டு மற்றவர்களுடன் அறிமுகப் படுத்திப் பேசிக் கொள்ள அந்த நேரம் செலவிடப் பட்டது.
பெண் ட்வீட்டர்கள் மொத்தம் ஐந்து பேர் தான் வந்தனர் என்று நினைக்கிறேன். மொத்தம் நூற்றியைம்பது ட்வீட்டர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருப்பார்கள். ப்ரேக்குக்குப் பிறகு நமக்குப் பிடித்த ட்வீட்கள் பற்றியும் நாம் பகிர்ந்து கொள்ள கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் அதைச் சொல்லவும் கை ஒலிபெருக்கி ட்வீட்டர்களுக்குக் கொடுக்கப் பட்டது. அனைவரும் அதை நன்கு பயன் படுத்திக் கொண்டனர்.
திரு கரையான் அவர்கள் புதிதாக ட்விட்டருக்கு வருபவர்களுக்கு உதவியாக ஒரு கையேடு தயாரித்து அனைவருக்கும் வழங்கினார். மிகவும் தேவையான மற்றும் சிறப்பான செயல்! அவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். சென்னையில் இருப்பவர்கள் இன்னும் நிறைய பேர்கள் கலந்து கொண்டு இருக்கலாம்.

வெளியூரில் இருந்து வந்த ட்வீடர்களின் ஆர்வத்தைப் பார்க்கும் போது சென்னையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு சென்னையில் இருப்பவர்கள் இன்னும் நிறைய பேர் வந்திருக்கலாம். அடுத்த முறை கோவை என்று சொல்லப் படுகிறது. இன்னும் சிறப்பாக அப்பொழுது செய்து விடலாம். ஆனந்த விகடனில் இருந்தும் Z TV யில் இருந்தும் நிகழ்ச்சியை கவர் செய்தது ஒரு நல்ல வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தும்.

நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரவு உணவுக்குப் பின் விழா இனிதே நிறைவடைந்தது. யாரெல்லாம் இதற்கு உழைத்தார்கள் என்ற சரியான பெயர் பட்டியல் என்னிடம் இல்லாததால் நான் யார் பெயரையும் மென்ஷன் செய்யவில்லை. ஆனால் ஒருங்கிணைப்பார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙂
இந்த சிறிய ஆரம்பம் (TNMegaTweetUp’12)நாளை பெரும் ஆல மரமாக வளரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ட்விட்டர் என்ற சமூக வலைத்தளம் கருத்துப் பரிமாற்றத்துக்கும், நட்பை வளர்ப்பதற்கும், சகிப்புத் தன்மையை மேம்படுத்துவதற்கும், எழுத்துத் திறனை வளர்ப்பதற்கும், இன்ன பிற நல்ல பயன்களுக்கு உதவும் மேடையாக அமைய வேண்டும் என்பதே வந்திருந்தோர் அனைவரின் விருப்பமும் 🙂
பின் குறிப்பு: இவ்விழா சிறப்பாக நடக்க நல்ல முறையில் ஒருங்கினைத்த @senthilchn @karaiyaan @expertsathya @Balu_SV, @Parisal மற்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

RTI (Return To India)

Nri-children

My marriage took place in June of 1984. My husband was a student at the University of Texas at Arlington doing his Masters in mechanical engineering. As it was easier for the spouse to join the husband when he was still in a student visa he came to India to get married in his last semester. Ours was an arranged marriage. Already a week of his vacation had elapsed when their family came to see me . We met and spoke for an hour. We spoke about just the important issues. The one thing that we both strongly agreed on was, our wish to return to India after living there for some years. We decided to get married on May 22nd and got married on June1st! I don’t know if marriages do happen like this any more 🙂

We lived in a studio apartment with a very meagre income. It was very difficult for my husband to get an opening in Texas and so we decided to move to San Jose, California, in search of better opportunities. We travelled in a very old car for two days non-stop and reached San Jose with just $400 in our pocket. A distant relative had agreed to put us up and we stayed with them. My husband landed a job when our savings on hand was down to $20. We stayed with them for one more month, waited for his first pay check, to pay the advance for a rented apartment and then moved out. We are ever so grateful to that relative for the timely help they provided us. When we lived with them, their friends became our friends too. They were all older to us by at least fifteen years. So we could see how their kids were behaving. More over I started teaching those kids spoken Tamil and also to read and write. So I got to move with them closely. One thing I observed was that they were all coconuts, brown on the outside and white on the inside! They may look like Indians but certainly behaved like Americans. Our resolve to go back to India only deepened after seeing those kids. We knew that if we decided to stay in the US we had to change our line of thinking . The children born there will not.

I was a lecturer in a college for a year before I got married. In the US I was on a dependent visa and hence could not work. I could not pursue higher studies immediately as the non-resident fees was quite high. So I was able to go back to school only after both my kids were born. My husband and myself graduated from the same university with the same degree (MBA) and on the same convocation was a very happy coincidence 🙂 

USA teaches us a lot of things. It makes one independent. It is definitely a land of opportunities and once you land a job it is heaven, and of course only until you lose it. My college days in the US were one of my best. The curriculum and the method of instruction were so much different from that of India. It gave importance to practical knowledge and team work.

Some have quite a few relatives in the town they live in or in the neighbouring city. In that case they do not miss India. For some even if they do not have any relatives, the comforts that the country offers is more than enough to compensate their home sickness.The greatest plus point about living in the US is the abundance of freedom one gets while living there. No one interferes in the day today life. No parental control/advice! Pollution free atmosphere, importance given to cleanliness, respect given to knowledge at the work place, corruption free lifestyle, idyllic locations, the ability to own a nice car and a house within a short time of moving to that country – a combination of all these wonderful things makes one wonder about the logic behind moving back to India!

In most families both husband and wife go to work. Hence their kids are left in day care. The children soak in the atmosphere in which they grow. They are comfortable with the American food and their methods of disciplining. They eat a little of the Indian food and listen to a little of their mother tongue at home. The parents are also influenced by the culture they live in due to their proximity to their colleagues at work and soon adopt their methods of raising kids. This is because conforming to an existing pattern is easier to follow and allows you to become part of the mainstream. After all being a Roman in Rome makes it much easier!

Every thing is hunky dory as long as you are healthy! Once you fall really sick all hell breaks lose. For being such an advanced nation and everything, their method of dealing with the sick is not so great. Yes, they do follow a system here as well. First of all to get an appointment with the doctor it takes a week and then he will ask you to do all the required and not so required tests as every thing there is ruled by the fear of lawsuits. Then patiently wait for your test results. If they find something a little alarming, they go into extraordinary detail to fill you in about the worst case scenario of that disease. Then they would tell you about how it can be fixed, give you a prescription, again narrating the full side effects of the drugs that you would be taking. Yes, you will miss your home then 🙂

In India doctors with their vast experience, diagnose the disease with the symptoms and medicate you to bring the problem under control. Simultaneously they order a battery of the required tests to be done on you. Ninety percent of the doctors here say encouraging words to the patient and make you feel better just by their demeanour!

Even a cup of coffee or just hot water would not make by itself and requires your effort. That is when one misses the family very dearly. But friends are a real substitute for family in a foreign land. But again it all depends on one’s luck to get good friends.

I had taken full time employment before I had my kids and again worked full time when either my parents or in-laws were with us. But other times I have worked only part-time since I did not want to leave the kids with a baby sitter or in a day care. That was of course my personal decision. I worked as a lecturer in an evening college and taught classes in week ends as well. My children did no know to speak in English until they started pre-school. We only spoke Tamil at home. When they started going to school both had difficulty adjusting due to the language problem. But both picked up English within a week. To prevent the children from being stamped as different most parents send American food only as lunches to school. Macaroni and cheese, sandwiches and burgers are the most favoured type of foods by the Indian kids who grow there. So our food like idli, thosai and tomato rice become alien to them, as a result of which they do not relish them even after they grow up.

Some times Indian kids get to have Indian kids as their friends in school. But this is not common. Most of the time Indian kids tend to make friends with American kids. When they go on a play date to their houses they observe the behaviour of the family there and consider it as de facto family behaviour. The customs and behavioural pattern in Indian households are certainly different. For example we do not wear shoes inside the house, light a lamp in a Puja room and follow certain other rituals. All this seems unnecessary or unacceptable to them. The kids born to Indian parents ask a lot of questions. If we do not give them satisfactory answers they begin to think that we are not conforming to their standards. Then during the teenage years they have huge arguments with the parents regarding dating. You may ask if parents in India do not face such problems. No, parents here do not face problems created by cultural differences, of course they do face problems which arise due to generation gap which has to be faced by them in any country.

My husband worked in various good organizations in the US. But there was this glass ceiling which prevented my husband to go higher than a certain level. There was always a subtle racial discrimination at work. May be it has changed now. Though he was very good at what he did his inability to climb the ladder was causing him mental agony. He also lost his job in a reorganisation at his work place. The fact that he lost his job though he was a high performer, came as big shock to us. We had bought a big house with a big mortgage payment. We had two cars and two car payments as well. For nearly five months he was without a job. That was when we seriously thought about going back to India. It was 1993. At that time there were not many openings in his field of work for him in India. So we decided to move to Singapore. As luck would have it he got a very good job offer in Sun Soft, Singapore. But as if to test our resolve about leaving the US, he also got another offer from a very good company in Mountain View in the Bay Area. But we decided to take up the Sun Soft offer and move to Singapore. The main reason behind that decision was our children’s ages. Our daughter was six and son four. If we waited for another opportunity to move out of the US, the children would have grown that much older and established their roots that much stronger. It would have been harder for us to uproot them.

But our decision was not welcomed with cheer in our friends’ circle. Anyone would give their right hand to move to the US and you guys are going back was their snide comment. A few even said that it was foolish of us to do what we were doing and made of list of the negatives in going back to India.

After my husband left for Singapore I stayed back in the US for nearly five months for my children’s and my school year to end. We had also put up our house on the market for sale but we could not sell because of the economic down turn in the US then. We decided to rent the house and were able to sell it only after two years.

On the day when we were leaving the country, my friend had arrived to give us a ride to the airport and I was about to lock the house. My daughter relinquishing my hold on her ran to kitchen and hugging the oven started crying loudly,”This is my home, my country. Don’t take me away from here.” Even at that age the bonding to that land was so much. Just imagine how hard it would have been for us to make the move if we had decided to do it after a few more years.

We lived in Singapore for three years and then moved to India. Our stay in Singapore also has quite a lot of stuff to be retold but in another post and for another day 🙂 One of the main reasons which hastened our move to India from Singapore was our daughter’s bold decision to move to India on her own, as she was unhappy with the discrimination showed to Indians by the Chinese. At the age of eight she decided to live with her grandparents and go to school in Chennai.

I stayed with the kids in Chennai and my husband in Mumbai for about three years, only after which he was able to find a good job for himself in Chennai. Our children adjusted very well in India. Every day, after returning from school my son will go out to play in the streets only to be back after it was dark. That joy alone was enough for us to validate our decision about moving to India. Our in-laws stayed with us. In the US Indian kids attended Bala VIhar or Bala Vikas on Sundays and what they absorbed there was only a mere introduction to the Indian culture. But in India no effort on our part is required to imbibe the cultural values to the kids. It just grows on them. Normally in the US we buy so many toys and other stuff that the children ask for. But in India even losing a cricket ball is made a big deal and children learn responsibility, ownership and the quality of sharing at a very early age. They also realise how fortunate they are by looking around and seeing the less fortunate kids here. These thing cannot be taught in a class but only be learnt through observation. Festivals like Deepavali, Pongal, Vinayaka Chathurthi and Navarathiri are still celebrated with pomp and religious fervour in India. It is also a time to rejoice. In the US it is just another day. If any of these festivals falls on a week day friends get together on the week end and have a grand meal. The significance of the festival is totally lost there.

My children now live in the US. I do not know if they will come back to settle down in India. There are many reasons to come back as there are many reasons to stay in the US itself. It all depends on our priorities. Surely we can say that we have brought up our kids well in the Indian soil. They are close to their aunts, uncles and especially the cousins. Soon after we came back to India, many of our friends who were visiting here for their vacation would ask us,”Tell us, honestly are you guys happy here? With all these mosquitoes, horrible roads, water clogged roads during monsoons, how can you really be happy here?” Yes, whatever they said was true about India. When we came back it was so difficult to get a telephone connection, a ration card and a cooking gas connection. Another hardship that we faced was trying to get admission in a good school. You cannot expect America in India. Only if you are mentally prepared to accept life here as it is can you make your return here a success. Our country lacks nothing now. Everything is available in the retail market. When we returned to India in the mid nineties even Kellogg’s corn flakes was not available and my husband would buy them for our kids and bring them back when ever he travelled to US officially 🙂

When children come from there for their vacation it is like visiting a foreign land for them. There is no attachment to this country. Sometimes a lot of enticing gifts and other forms of bribery by the parents only make them come to India and tolerate their stay here. Once they become much older, that is in their late twenties or thirties they see no reason to come to India at all. They get married to somebody living in the US and the first generation parents are only too elated to get a son-in-law or a daughter-in-law of Indian origin. Even otherwise they learn to accept a person from another race into their family. Once the older generation are mentally prepared for such a life then they are happy in that lifestyle, no issues.

After going there we begin to appreciate the work culture that prevails there, the wonderful opportunities, the generous nature and the welcoming attitude of the Americans. We will then wonder why those things are lacking in our country. All I can say is that those who have lived there and returned can try and share that experience with our brethren here. That is a start! 

R2I (Return to India) இந்தியா திரும்பலாமா?

Nri-children

என்னுடைய திருமணம் எண்பத்தி நான்காம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. ன் கணவர் அப்பொழுது அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆர்லிங்க்டனில் உள்ள கல்லூரியில் பொறியியலில் முதுகலை பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். மாணவ விசாவில் வந்து திருமணம் செய்து கொண்டால் மனைவியை உடன் அழைத்துச் செல்வது எளிது என்பதினால் ஒரு ஆறு மாதப் படிப்பு இன்னும் இருக்கையில் சென்னை வந்து திருமணம் செய்ய முடிவு செய்தார். எங்களுடையது பெரியவர்கள் பார்த்து நிச்சயித்தத் திருமணம். அவர் வந்த முதல் வாரத்தில் பார்த்த எதுவும் அவர்களுக்குத் தகையவில்லை. இன்னும் ஊருக்குக் கிளம்ப இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் தருவாயில் என்னை பெண் பார்க்க வந்தனர். நாங்கள் ஒரு மணி நேரம் தனிமையில் பேசினோம். எனக்கு எதெது முக்கியம் என்று அவரிடம் சொன்னேன். அறவே பிடிக்காத விஷயங்களை சொன்னேன். முக்கியமாக எனக்கும் அவருக்கும் ஒத்துப் போன கருத்து அமெரிக்காவில் இருந்து சில வருடங்களில் இந்தியா திரும்ப வேண்டும் என்பதே. மே இருபத்தியிரண்டாம் தேதி முடிவு செய்து ஜூன் ஒன்றாம் தேதி எங்கள் திருமணம் நடைபெற்றது! 😉 இப்பொழுது எல்லாம் இது மாதிரி சாத்தியமா என்று தெரியாது.

ஒரே அறை கொண்ட குடியிருப்பு. மிக மிக சொற்பத் தொகையில் குடும்பம் நடத்தினோம். டெக்ஸாசில் எவ்வளவு முயன்றும் வேலை கிடைக்காததால் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சேன் ஹோசே என்ற நகரத்துக்குச் செல்ல தீர்மானித்தோம். கையில் வெறும் நானூறு டாலர்களுடன் மிகப் பழைய காரில் இரண்டு நாள் இடைவிடாது பயணித்து சேன் ஹோசே அடைந்தோம். ஒரு தூரத்து உறவினர் வீட்டில் தங்கி அவர் வேலை தேட ஆரம்பித்தார். கையிருப்பு இருபது டாலர்கள் இருக்கும்போது அவருக்கு வேலை கிடைத்தது. மேலும் ஒரு மாதம் அவர்கள் வீட்டிலேயே தங்கி, முதல் மாதச் சம்பளம் வந்தவுடன் வாடகை வீட்டிற்கு முன்பணம் கொடுத்துக் குடியேறினோம். எங்களுக்கு உதவிய அந்த உறவினரை எக்காலத்திலும் மறக்க முடியாது. அவர்கள் வீட்டில் இருந்த போது அவர்களின் நண்பர்கள் எங்களுக்கும் நண்பர்கள் ஆனார்கள். அனால் வயதில் எங்களை விட பதினைந்து வயது போல மூத்தவர்கள். அவர்களின் பிள்ளைகள் அங்கேயே வளர்ந்ததால் அவர்களின் பழகும் முறையும் அவர்களின் எண்ணப் போக்கும் எங்களால் நன்குணர முடிந்தது. மேலும் அந்தக் குழந்தைகளுக்குத் தமிழில் எழுதப் படிக்க மற்றும் பேச நான் கற்றுக் கொடுத்ததால் அவர்களிடம் நெருங்கிப் பழகும் அனுபவமும் எனக்குக் கிடைத்தது. தேங்காய் வெளியே ப்ரௌன் நிறம், உள்ளே வெள்ளை. இந்தக் குழந்தைகளும் அவ்வாறே. தோலின் நிறம் இந்திய நிறம், எண்ணங்கள் அனைத்தும் வெள்ளையர்கள் போலே. அப்பொழுதே மனத்தில் ஒரு தெளிவு வந்தது, அங்கேயே தங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தால் நாங்கள் தான் மாற வேண்டும். அங்கு பிறந்து வளரும் குழந்தைகள் கண்டிப்பாக மாறாது.
என் திருமணத்திற்கு முன்பு ஒரு கல்லூரியில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளேன்.அமெரிக்காவில் என் கணவரை சார்ந்த விசாவில் இருந்ததால் என்னால் உடனே பணி புரிய முடியவில்லை. மேலே படிக்கலாம் என்றால் கல்லூரிக் கட்டணம் அதிகமாக இருந்தது. ஒரு வருடம் அந்த ஊரில் குடி இருந்த பிறகு கட்டணம் குறையும். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தான் என்னால் மேல் படிப்புப் படிக்க முடிந்தது. அதில் ஒரு சந்தோஷ நிகழ்வு என்னவென்றால் நானும் என் கணவரும் ஒரே பட்டமளிப்பு விழாவில் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றோம்.
அமெரிக்கா நிச்சயமாக நம்மை சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொடுக்கிறது. நல்ல வேலை கிடைத்த பிறகு அது ஒரு சொர்க்க பூமி தான், திரும்ப வேலை பறிபோகாத வரையில்! நான் அங்குக் கல்லூரியில் படித்த நாட்கள் மறக்க முடியாதவை. பாடத் திட்டமும் பயில்விக்கும் முறையும் இந்திய முறையில் இருந்து மாறுபட்டது. நாம் என்ன பயில்கிறோம் என்பது வகுப்பில் பாடம் கற்பிக்கும் போதே புரிந்தது. ஒரு குழுவின் அங்கத்தினராக இருந்து எப்படி பங்களிப்பது, நடைமுறைக்குத் தேவையான பயிற்சி ஆகியவற்றை இந்த படிப்பு கற்பித்தது.
பலருக்கு நிறைய நெருங்கிய உறவினர்கள் அவர்கள் வசிக்கும் ஊரிலோ அல்லது அருகிலுள்ள  உள்ள ஊரிலோ இருந்தால் அவ்வளவாக தாய் மண்ணை விட்டு நெடுந்தூரம் வந்துவிட்டதை நினைத்து வருத்தம் கொள்ள மாட்டார்கள். சிலருக்கு உறவினர்கள் யாரும் இல்லாவிட்டாலும் அமெரிக்காவில் கிடைக்கும் சௌகர்யங்கள் அதை ஈடு செய்து விடும். எல்லாவற்றையும் விட ஒரு மிகப் பெரிய அனுகூலம் என்னவென்றால் அங்குக் கிடைக்கும் அளவற்ற சுதந்திரம். யாரும் யாருடைய விஷயத்திலும் தலையிடுவதில்லை. பெற்றோர், நெருங்கிய உறவினர்களின் தலியீடு இல்லை. மாசு இல்லாத சூழல். சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்குக் கொடுக்கப் படும் முக்கியத்துவம், அறிவுக்கு முக்கியத்துவம் தரும் அலுவலகச் சூழல், லஞ்சமும் ஊழலும் இல்லாத தினப்படி வாழ்வு, இயற்கை அழகுக் கொஞ்சும் ஊர்கள், சிறிது பணம் சேர்ந்தவுடனே வாகனமும் வீடும் வாங்க முடிகின்ற வாய்ப்பு, இவை அனைத்தும், அங்கு சென்ற பின் ஒருவரை திரும்ப இந்தியா வந்து வாழ வேண்டுமா என்று நினைக்க வைக்கிறது.
முக்கால்வாசி குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்வதால் குழந்தை பருவம் முதலே பிள்ளைகள் குழந்தைகள் காப்பகத்தில் வளர்கின்றன. அதனால் அமெரிக்க உணவு மற்றும் அவர்களின் வளர்ப்பு முறையை பின் பற்றி விடுகின்றன. வீட்டுக்கு வந்தால் இந்திய வகை உணவு மற்றும் அவர்களின் தாய் மொழி சிறிது காதில் விழும். பெற்றோர்களும் அவர்களின் கூட வேலை செய்யும் சக அமெரிக்கர்களின் தாக்கத்தினால் அவர்களின் வளர்ப்பு முறையையே பின்பற்றத் துவங்குகின்றனர். Be  a Roman in Rome என்பது போல அந்த ஊர் பழக்க வழக்கங்கள் அத்துப்படியாகி அவையே அங்கு வாழும் நம்மவர் பண்பாடாக மாறிவிடுகிறது. அங்கு அனைத்தும் ஒரு ஒழுங்கு/அமைப்பு முறையை கொண்டுள்ளதால் வாழ்க்கை மிக எளிதாக உள்ளது.
ஆனால் உடல் நலம் கெட்டுவிடக் கூடாது. விஞ்ஞான வளர்ச்சியில் முதல் இடம் பெற்ற நாடு. சந்தேகமே இல்லை. ஆனால் அவர்கள் ஒழுங்கு/அமைப்பை எங்கும் கடைபிடிப்பதால் வியாதி கண்டறியும் முறையும் விஸ்த்தாரமானது. மருத்துவரை சந்திக்க நேரம் கிடைக்கவே ஒரு வாரம் ஆகும். பிறகு அவர்கள் சொல்லும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பொறுமையாக முடிவுகள் வரக் காத்திருக்க வேண்டும். பின் ஏதும் கோளாறு இருந்தால் அதன் மோசமான தாக்கங்களை மருத்துவர் முதலில் நம்மிடம் சொல்லிக் கூடியவரை நம்மை நன்றாக பயமுறுத்திப் பின் தாக்கம் கம்மியாக இருப்பின் எப்படி உடல் நலம் சீரடையும் என்றும் சொல்லுவார். அதன்பின் கொடுக்கப் போகும் மருந்தின் பக்க விளைவுகள் அனைத்தையும் சொல்லி நம்மை ஒரு வழிப் பண்ணி பின் மருந்துகளை பரிந்துரைப்பார்.
அப்பொழுது தான் நம் நாட்டின் அருமை நமக்குத் தெரியும். இங்கு மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளைப் பார்த்தவுடன் அது என்ன வியாதி என்று கண்டுப் பிடித்து மருந்துகளைக் கொடுத்து உடனே கட்டுக்குக் கொண்டு வருவர்.
அதே சமயம் மற்ற பரிசோதனைகளையும் மேற்கொள்ளச் செய்வர். தொண்ணூறு சதவிகித மருத்துவர்கள் இங்கே நோயாளிகளுக்கு நல்ல வார்த்தைச் சொல்லி உடல் நலம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை ஊட்டி அனுப்புவர். 
அங்கே முடியாமல் இருக்கும் போது ஒரு சுடு தண்ணீரோ காபியோ நாமே தான் போட்டுக் கொள்ள வேண்டும். உற்றார் உறவினரின் பெருமை அப்பொழுது தான் உரைக்கும். ஆனால் நண்பர்கள் உதவி அங்கு அதிகம். குடும்பத்தினர் இல்லாத குறையை அவர்கள் தான் தீர்த்து வைப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட நண்பர்கள் அமைவதும் நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே!
நான் குழந்தைகள் பிறப்பதற்கு முன் முழு நேர வேலைக்குச் சென்றுள்ளேன், மற்றும் தாயாரோ மாமியாரோ எங்களுடன் தங்கிய போது முழு நேர வேலை மேற்கொண்டுள்ளேன். அவர்கள் இல்லாத போது பகுதி நேர வேலைக்குத் தான் போயிருக்கிறேன். அது என் சொந்த விருப்பம். குழந்தைகளை குழந்தைகள் காப்பகத்தில் விட எனக்கு விருப்பமில்லை. அதனால் நான் மாலை நேரக் கல்லூரியில் வேலைப் பார்த்தேன். சனி ஞாயிறுகளிலும் வேலைக்குச் செல்வேன். என் கணவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார். என் குழந்தைகள் பள்ளிச் செல்லும் வரை ஆங்கிலம் தெரியாமல் தான் வளர்ந்தார்கள். வீட்டில் பேசும் மொழி தமிழ் மட்டுமே. பள்ளிக்கூடத்தில் சேர்ந்தவுடன் ஆங்கிலம் தெரியாமல் சிறிது சிரமப் பட்டார்கள். ஆனால் ஒரு வாரத்தில் ஆங்கிலம் புரிந்து பேச ஆரம்பித்து விட்டனர். பள்ளியில் குழந்தைகள் மற்ற குழந்தைகளிடம் இருந்து மாறுபடாமல் இருக்க பெற்றோர்கள் அமெரிக்கக் குழந்தைகள் உண்ணும் மதிய உணவு வகைகளையே டப்பாவில் அடைத்து அனுப்புவர். ஆதலால் இட்லி தோசை போன்ற உணவுகளை குழந்தைகள் பழகாததால் பிற்காலத்திலேயும் அவைகளை விரும்பி உண்ணுவதில்லை. மேகரோனியும் பாலாடைக் கட்டியும், ரொட்டி வெண்ணெய், பர்கர் போன்றவை தான் மதிய உணவாகக்க் கொடுத்தனுப்பப் படும்.
ஒரு சில சமயங்களில் இந்தியக் குழந்தைகள் நம் குழந்தைகளுக்கு நண்பர்களாக அமையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலும் பள்ளித் தோழர்கள் அமெரிக்கக் குழந்தைகளாகத் தான் அமையும். ப்ளே டேட் என்று சொல்லப் படும் விளையாடுவதற்காக இன்னொரு நண்பர் வீட்டுக்குக் குழந்தையை அனுப்பும் போதும் அவர்களின் வீட்டுப் பழக்கங்கள் நம் குழந்தைகளுக்கு பரிச்சியமாகி அது தான் சராசரி வாழ்க்கை நிலை என்று நினைத்துக் கொள்கின்றனர். நம் வீட்டிலோ வேறு சட்ட திட்டங்கள். உதாரணத்திற்கு வீட்டிற்குள் செருப்பு அணிவதில்லை, சுவாமிக்கு விளக்கேற்றி தினம் வழிபடுவோம், சில சம்பிரதாயங்களை கடைபிடிப்போம். இவை அனைத்தும் அங்கு வளரும் நம் குழந்தைகளுக்கு ஏற்புடையதாய் இருப்பதில்லை. ஏன் ஏன் என்று நிறைய கேள்வி கேட்பார்கள், அவர்களை திருப்தி படுத்தும் வகையில் பதில் சொல்லத் தெரிந்தால் நன்று. இல்லையென்றால் நாம் பத்தாம் பசலிகள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் வேர் விட ஆரம்பித்துவிடும். பின் பதின் பருவத்தில் நாம் சொல்வதற்கெல்லாம் எதிர் வாதம் செய்வது மிக சகஜமாகிவிடும், முக்கியமாக டேட்டிங் விஷயத்தில் அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் விவாதம் நடைபெறும். இங்கு இந்த பிரச்சினைகள் இல்லையா என்று கேட்கலாம். கலாச்சார மாறுதலால் வரும் பிரச்சினைகள் இங்கு இல்லை. எங்கும் உள்ள தலைமுறை இடைவெளியினால் வரும் பிரச்சனைகளை நாம் எங்கிருந்தாலும் சந்திக்கத் தான் வேண்டும்.
என் கணவர் பல நல்ல நிறுவனங்களில் வேலை பார்த்தார். ஆனால் அந்த காலக் கட்டத்தில் ஒரு நிலைக்கு மேல் வெளிநாட்டவருக்குப் பதவி உயர்வு கிடைப்பது அரிதாக இருந்தது. இப்பொழுது நிலைமை மாறியிருக்கலாம். திறமை மிகுந்த அவருக்கு அவர் தகுதிக்கு ஏற்ற  உத்தியோக உயர்வு கிடைக்காதது மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. இச்சமயத்தில் அவர் வேலை செய்த நிறுவனத்தில் வேலையில் மறுசீரமைப்பு நடைபெற்றதில் அவர் தன் வேலையை இழந்தார். இவர் மிகச் சிறந்த நிர்வாகியாக இருந்தும் இவரை வேலையில் இருந்து எடுத்தது எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி தான். நாலு படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடு, இரண்டு கார்கள் என்று சௌகர்யமான வாழ்க்கை. அனால் எந்தச் சொத்தும் முழுச் சொந்தம் கிடையாது. மாதா மாதம் வீட்டுக்கும், வாகனங்களுக்கும் வாங்கிய வங்கிக் கடனைத் தவறாமல் கட்ட வேண்டும். கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் அவருக்கு வேறு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்பொழுது மிகவும் தீவிரமாக இந்தியா திரும்பிப் போவதைப் பற்றி நாங்கள் யோசித்தோம் . அது தொண்ணூற்றி மூன்றாம் வருடம். அந்த காலக் கட்டத்தில் இந்தியாவில் அவருடைய துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லை. அதனால் சிங்கப்பூர் போவதென்று தீர்மானித்தோம். சன் சாப்ட் என்ற நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. அதே சமயத்தில் பே ஏரியாவிலேயே மிக நல்ல நிறுவனத்தில் அதிக சம்பளத்துடம் ஒரு வாய்ப்பும் சேர்ந்தே வந்தது. ஆனால் நாங்கள் தீர்மானமாக சிங்கப்பூர் வாய்ப்பை எடுத்துக் கொள்ள முடிவு செய்தோம். அதற்கு முக்கிய காரணம் எங்கள் குழந்தைகளின் வயது. பெண்ணுக்கு ஆறு, பிள்ளைக்கு நாலு. வேறு ஒரு வாய்ப்பு வரும் போது கிளம்பலாம் என்று முடிவு செய்தால் அவர்கள் இன்னும் வளர்ந்து விடுவார்கள். அங்கு வேரூன்றிவிடுவார்கள். பெயர்த்தெடுத்து வருவது கடினம்.
னால் எங்கள் முடிவு எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த ஊருக்கு வருவதற்கு எல்லோரும் தங்கள் வலது கையைக் கூடக் கொடுப்பார்கள், உங்களுக்கு என்ன பைத்தியமா திரும்பிச் செல்வதற்கு என்று தான் பலர் கேட்டனர். இந்தியாவின் குறைகளை பட்டியலிட்டனர். திரும்பிச் செல்வது முட்டாள் தனம் என்று முகத்துக்கு நேராகச் சொன்னார்கள்.
அவர் சிங்கப்பூர் சென்ற பிறகு குழந்தைகளுடன் தனியாக நாலைந்து மாதங்கள் அங்கு இருந்தேன் ஏனென்றால் என் கல்லூரி வேலையும் என் குழந்தைகளின் பள்ளியாண்டும் முடிய வேண்டி இருந்தது. வீட்டை விற்க முயற்சி செய்து முடியாமல் போய் வாடகைக்கு விட்டு விட்டு தான் கிளம்பினோம். வீடு விற்பனைச் சந்தை ரொம்ப கீழிறங்கி இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து தான் விற்க முடிந்தது.
விமான நிலையத்திற்குக் கிளம்பும் தருணம், எங்கள் நண்பர் வண்டியுடன் வந்துவிட்டார், என் மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டச் செல்லும் போது என் மகள் ஓடிப்போய் அடுப்பு இருக்கும் இடத்தைக் கட்டிக் கொண்டு, இது என் வீடு , என் நாடு, என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லாதே என்று உரக்க அழ ஆரம்பித்து விட்டாள். அந்த வயதிலேயே அந்த மண்ணோடு அவ்வளவு இணைப்பு! இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் அழைத்து வருவது இன்னும் கடினமாகியிருக்கும். 
சிங்கப்பூரில் மூன்று வருடம் இருந்து பின் இந்தியா வந்து சேர்ந்தோம். அதை ஒரு தனிப் பதிவாய் போடும் அளவு அதிலும் கதை உள்ளது 🙂 சிங்கப்பூரில் இருந்து விரைவில் வேலைத் தேடி இந்தியா வரப் பெரும் உந்துதல் என் மகள் தான். ஏனென்றால் அங்கு இருக்கும் இந்தியர்களை வேறுபடுத்தி பார்க்கும் மற்ற இனத்தவரின் பார்வை அவளுக்குப் பிடிக்கவில்லை. எட்டு வயதில் சென்னையில் ஒரு பள்ளியில் சேர்ந்து தாத்தா பாட்டியுடன் தங்கி படிப்பது என்ற முடிவை அவளாக எடுத்து விட்டாள்.
நானும் குழந்தைகளும் சென்னையிலும், என் கணவர் மும்பையிலும் என்று மூன்று வருடங்கள் வாழ்ந்தோம். அதன் பின் தான் அவருக்குச் சென்னையில் வேலைக் கிடைத்தது. சென்னையில் குழந்தைகள் மிக நன்றாக இந்த சூழ்நிலைக்கு ஏற்பஅனுசரித்து வாழப் பழகிக் கொண்டார்கள். பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும் தெருவுக்கு விளையாடச் சென்றால் என் மகன் விளக்கு வைத்த பின் தான் திரும்பி வருவான். அந்த ஒரு மகிழ்ச்சியே போதும் நாங்கள் இந்தியா திரும்பி வந்ததற்கு. என் மாமியார் மாமனார் எங்களுடன் தான் இருந்தார்கள். அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமைகளில் பால விஹார் அல்லது பால விகாஸ் வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்து விடுவது மூலம் நம் கலாச்சாரத்தின் அறிமுகம் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது. இங்கு நம் முயற்சி எதுவும் தேவை இல்லாமல் அது தானாக வருகிறது. அங்கு குழந்தைகளுக்குப் பொதுவாகக் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்துவிடுவோம். இங்கு ஒரு பந்தைத் தொலைத்தால் கூட அதற்கு அவர்கள் பொறுப்பாகிறார்கள். மேலும் அவர்கள் எவ்வளவு நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பதை சுற்றி இருக்கும் பல இல்லாதவர்களைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். இதெல்லாம் பார்த்துத் தெரிந்து கொள்வது, எந்த வகுப்பும் கற்றுத்தர இயலாது. தீபாவளி, பொங்கல், விநாயகச் சதுர்த்தி, நவராத்திரி போன்ற பண்டிகைகள் இன்னும் இங்கே கோலாகலமாகத் தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவையெல்லாம் அங்கு இன்னும் ஒரு சாதா நாளே. பண்டிகை வார நாளில் வந்தால், வார இறுதியில் நண்பர்கள் சேர்ந்து பலவிதமான உணவை உண்டு மகிழும் ஒரு நாளாக, வேறு எந்த கோலாகலமும் இல்லாமலும் பண்டிகையின் முக்கியத்துவமும் உணரப்படாமல் சென்று மறையும் ஒரு நாளாக ஆகிவிடுகிறது.
என்னுடைய குழந்தைகள் இப்பொழுது அங்கே தான் இருக்கிறார்கள். திரும்பி வருவார்களா என்று தெரியாது. மகன் வேலை பார்க்கிறான். மகள் படித்துக் கொண்டு இருக்கிறாள். திரும்பி வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் திரும்பி வருவதற்கும் நிறைய காரணங்கள் உள்ளன. அவை நாம் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நிச்சயமாக நாங்கள் எங்கள் பிள்ளைகளை இங்கே நல்ல முறையில் வளர்க்க முடிந்தது. அவர்களின் உறவினர்களோடு நெருக்கம் ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது. திரும்பி வந்த புதிதில் எங்களுடைய நண்பர்கள் பலர் விடுமுறைக்கு வரும்போது எங்களை சந்தித்து, உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் இங்கே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்ற கேட்பார்கள். எவ்வளவு கொசுத் தொல்லை, தெருவெல்லாம் குண்டும் குழியுமாக இருக்கிறது, மழைக் காலத்தில் சாக்கடைத் தண்ணீரும் மழை நீரும் கலந்து தெருவில் கால வைக்க முடிவதில்லை, இந்த சூழ்நிலையில் எப்படி சிரமம் பார்க்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். நாங்கள் திரும்பி வந்த புதிதில் தொலைபேசி தொடர்புக்கும், எரிவாயு தொடர்புக்கும், ரேஷன் கார்டுக்கும், நல்ல பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கும் அலையா அலைந்துள்ளேன். அமெரிக்க வாழ்க்கையை இங்கே எதிர்ப்பார்க்க முடியாது. இந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொள்ள நினைப்பவர்கள் மட்டுமே திரும்பி வந்து வெற்றி பெற முடியும். இப்பொழுது நம் நாட்டில் கிடைக்காத பொருட்களே இல்லை. நாங்கள் திரும்பி வந்த போது காலையில் குழந்தைகள் விரும்பி உண்ணும் கெல்லாக்ஸ் சீரியல் கூட கிடைக்காது. என் கணவர் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும்போது குழந்தைகளுக்கு அதை வாங்கி வருவார் 🙂
விடுமுறைக்கு அங்கிருந்து வரும் NRI பிள்ளைகள் இங்கே வரும்போது ஒரு வெளிநாட்டுக்கு வருவது போல தான் வந்துவிட்டுப் போகிறார்கள். இந்த மண்ணோடு ஒட்டுதல் கிடையாது. நிறைய பிள்ளைகள் பலவித வாக்குறுதிகள் அளிக்கப்பட்டப் பின்னே (லஞ்சம்) இங்கே வந்து, பின் எப்பொழுது திரும்பிப் போவோம் என்று செல்பவர்களைப் பார்த்திருக்கிறேன். இன்னும் பெரியவர்கள் ஆன பின்னே அதாவது இருபது முப்பது வயதுக்குப் பின் இங்கே வரவேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது. அங்கேயே திருமணம் செய்துகொண்டு விடுகின்றனர். இந்திய வம்சாவளியினராக மருமகனோ மருமகளோ அமைந்தாலே முதல் தலைமுறை பெற்றோர்கள் ஆனந்தம் அடைந்து விடுகின்றனர். வேறு இனத்தவரை மணந்தாலும் அதையும் ஒத்துக்கொண்டுப் போக வேண்டிய சூழ்நிலை தான். இந்த மாதிரி மாறுதலான வாழ்க்கை சம்மதம் என்றால் தொடர்ந்து அங்கு இருப்பதும் மகிழ்ச்சியை தரும்.
ஆனால் அங்கே இருக்கும் work culture, திறமையை ஊக்குவிக்கும் வாய்ப்புகள், தாராள மனப்பான்மை, மக்களிடயே இருக்கும் எதையும் ஒத்துக் கொள்ளும் ஒரு பறந்த மனோபாவம், இத்தகைய குணங்களை நாம் அங்கே போன பின் புரிந்து பாராட்ட ஆரம்பிப்போம். ஏன் நம் நாட்டிலும் அது போல இல்லை என்று நினைக்க வைக்கும். அங்கு சென்று திரும்பியவர்கள் அந்த அனுபவத்தை தங்களால் முடிந்த அளவு இங்கே கொண்டுவர பாடுபட வேண்டும். தாய் நாட்டுக்குத் திரும்பியும் வரவேண்டும் என்பது என் அவா 🙂