என் திருமணத்தின் சில இனிய நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எனது ஆசையே இந்தப் பதிவு 🙂 என் கணவர் என்னை பெண் பார்க்க வந்தது மே இருபதாம் தேதி.(1984) அவர்கள் சம்மதம் சொன்னது மே இருபத்தி ஒண்ணு இரவு ஒன்பது மணி. அடுத்த நாள் செவ்வாய் கிழமை ஆதலால் திங்கள் இரவே திருப்பதி பெருமாளுக்கு பணம் முடிந்து வைத்து, அன்றே திருமண வேலைகள் ஆரம்பித்து விட்டதாக கணக்கு காண்பித்து விட்டார் என் சாமர்த்திய அம்மா 🙂
திருமணம் நிச்சயம் ஆனவுடன் என் மாமாக்களிடம் முதலில் தகவல் சொல்லப் பட்டது. அதில் சென்னையில் இருந்த இரண்டு மாமாக்கள் உடனே என் கணவரை நேர்காணல் செய்ய அவர்கள் வீட்டுக்கே போய்விட்டனர். அப்பொழுது என் கணவர் முதுகலை பட்டப் படிப்பு மாணவர்.( University of Texas at Arlington, USA) இரண்டு மாமாக்களுமே வெளிநாட்டில் இருந்தவர்கள். நல்ல வேளை அவர்கள் வைத்த தேர்வில் என் கணவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று பாஸ் செய்து விட்டார். நான் மீனாக்ஷி கல்லூரியில் அப்பொழுது விரிவுரையாளராக இருந்தேன். என்னை பெண் பார்க்க வருவதற்கு முன் அவர்களிடம் கொடுக்கப்பட்ட புகைப்படம் ஒரு க்ரூப் போட்டோ. அது நான் என் சக ஆசிரியர்களுடன் நின்றுகொண்டிருக்கும் ஒரு புகைப்படம். அதில் உள்ள ஒரு தோழியின் அண்ணன் என் கணவரின் BHEL colleague. இதை என் கணவர் என்னை பெண் பார்க்க வந்தபொழுது எங்களிடம் சொன்னார். அதை வைத்து தான் நாங்களும் அவரைப் பற்றி விசாரித்தோம். பின் வேறு ஒரு உறவினருக்கு நன்கு தெரிந்த குடும்பம் என்று அறிந்து மகிழ்ந்தோம். எல்லாம் ஒரு குருட்டு தைரியத்தில் நடந்த திருமணம் தான் எங்களுடையது. ஏனென்றால் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டே தான் விசாரிப்புகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
அவர்கள் வீட்டு வேண்டுகோள் வெகு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்பதே. அடுத்த நாளே ஜோசியரிடம் சென்று ஜூன் ஒன்று முஹூர்த்தம் என்று நாள் குறிக்கப் பட்டது. அடுத்து சத்திரம் தேடுதல் வேட்டை. நிச்சயம் ஒரு வாரத்திற்குள் சத்திரம் கிடைக்காது என்று உடனேயே தெரிந்து விட்டதால் ஹோட்டலில் திருமணம் நடத்த முடிவு செய்தோம். அது அப்பொழுது ஒரு பெரிய விஷயம். ஏனென்றால் எங்கள் சமூகத்தில் பலர் அந்த காலத்தில் ஹோட்டலில் உணவருந்தாமல் தான் இருந்தார்கள். காஞ்சி ஹோட்டலில் அப்பொழுது ஒரே ஒரு திருமண மண்டபம் தான் இருந்தது. என் மாமியார் மற்றும் என் மாமியாரின் தாயார் இன்னும் பலர் வெளியில் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்காக தனி சமையல் என்று ஏற்பாடாயிற்று. அது வீட்டில் இருந்து (இனிப்பு வகைகளுடன்) ஹோட்டலுக்கு அனைத்து வேளைகளுக்கும் எடுத்து வரப்பட்டது. என் மாமனாரிடம் டியுஷன் கற்றுக் கொண்டவர் காஞ்சி ஹோட்டல் உரிமையாளர் என்பதால் எங்கள் மாமனார் வீட்டில் ஹோட்டலில் திருமணம் நடத்த அவ்வளவு எதிர்ப்பு இல்லை. வாழ்க அந்த படிப்பில் சிறிது வீக்காக இருந்த காஞ்சி ஹோட்டல் உரிமையாளர்.
இதில் என்ன வேடிக்கை என்றால் முந்தின நாள் நிச்சயதார்த்தத்துக்கு மட்டும் ஹால் கிடைத்தது. ஆனால் திருமணமும் ரிசெப்ஷனும் ஷாமியானா பந்தல் போட்டு அதில் நடைபெற்றது. திருமணத்திற்கு கிரேசி மோகன், பாலாஜி மற்றும் குடும்பத்தினர் ஆஜர். எங்கள் நண்பர்களும் உறவினர்களும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் எங்களைப் பார்த்து எப்படி இவர்கள் உங்கள் வீட்டு திருமணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று கேட்ட போது தான் தெரிகிறது அவர்கள் என் கணவரின் சொந்த அத்தை பையன்கள் என்று. அவ்வளவு அவசரக் கல்யாணம். யார் யார் உறவினர்கள் என்று கூட கேட்க நேரமில்லை.
இன்விடேஷன் அடித்து போஸ்ட் செய்து அனைத்து நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் எங்கள் திருமணத்திற்கு வந்தது உண்மையாகவே ஒரு medical miracle தான் 🙂 என் திருமணப் புடவைகள் அனைத்தும் நல்லி. இரண்டு மணி நேரத்தில் அனைத்துப் புடவைகளும் வாங்கப்பட்டன. பட்டப்பா தான் பக்ஷணங்களை வீட்டிற்கு வந்து செய்து கொடுத்தார் என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் மாலை ரிசெப்ஷனுக்கு சுதா ரகுநாதன் அவர்களின் பாடல் கச்சேரி! அவர் என் உறவினருக்கு நெருங்கிய நண்பர். அவர் மூலம் ஏற்பாடாயிற்று. சுதாவுக்கு முதல் குழந்தை பிறந்து முதல் கச்சேரி எங்கள் திருமணத்தில் தான். அவரும் என் கணவரின் உறவினர் என்று திருமணத்தன்று தெரிய வந்தது.
குறுகிய காலத்தில் பணம் ஏற்பாடு செய்து அசாத்திய துணிச்சலுடன் என் திருமணத்தை நடத்திய என் தாய் தந்தைக்கும் உதவிய என் தம்பிக்கும் என்றென்றம் நான் கடமை பட்டிருக்கேன்.
Like this:
Like Loading...
Related
Jun 01, 2012 @ 17:34:11
திறந்த கதவுகளை மீண்டும் திறந்து பார்ப்பது போல…இனிமையான நினைவுகள்! :))
Jun 01, 2012 @ 17:36:30
செம கலக்கல் பதிவு..எழுதின உங்கள் சந்தோஷம் படித்த எங்களுக்கும் தொற்றிக்கொள்கிறது :)பை தி வே, சார் செம ஸ்மார்ட் 🙂
Jun 01, 2012 @ 17:42:59
நன்றி, நன்றி NattAnu! அவரிடம் சொல்கிறேன் 🙂
Jun 01, 2012 @ 17:43:34
நன்றி திருநாவு :-))
Jun 01, 2012 @ 17:53:42
படிப்பதற்கு மனதிற்கு இதமா இருந்தது. வாழ்க பல்லாண்டு
Jun 01, 2012 @ 17:56:05
Thank you sir, for your blessings 🙂
Jun 01, 2012 @ 18:07:48
சொல்ல மறந்துட்டேன். இந்த போட்டோல உங்க வீட்டுக்காரர் ராஜீவ்மேனன் மாதிரி இருக்கார் ;-)))
Jun 01, 2012 @ 18:11:39
Nice post; kalakkal Akka! My wife read it n told to convey her wishes too.you look like sudhachandran ,she told @DrTRM n @suchihere
Jun 01, 2012 @ 18:13:41
Nice Pic.. happy moments!!
Jun 01, 2012 @ 18:19:24
🙂 சூப்பர் வெட்கப்பட்டுக்கிட்டே எழுதின போஸ்ட் மாதிரி இருக்குறப்பவே இந்த @kryes திரும்ப போட்டோவுல இருக்குற மாதிரி வெக்கப்படுங்கன்னு சொல்றாரு பாருங்களேன் :))) போட்டோவுல யாரு அதிகம் வெட்கப்பட்டாங்கன்னு ஒரு போட்டியே வைக்கலாம் அம்புட்டு வெக்கம்ஸ் :)))))))))
Jun 02, 2012 @ 01:23:50
நன்றி 🙂 DrTRM and Suchi 🙂
Jun 02, 2012 @ 01:24:49
ha ha I will let him know, thank you Pradeesh 🙂
Jun 02, 2012 @ 01:26:02
அது அந்தக் காலம் :-))) thank you Aayilyan 🙂
Jun 02, 2012 @ 01:39:02
அருமையாய் பழைய இனிய நினைவுகளை அட்சரம் பிசகாமல் அள்ளித்தெளித்து எங்களையும் உங்கள் திருமண வைபவத்தில் கலந்துகொள்ளச்செய்து விட்டீர்கள்..! கிரேசி உங்க கசின்’னா..! குறும்புக்குடும்பம் தான்..! அலப்பறை பண்ணுங்க..!!
Jun 02, 2012 @ 02:00:04
நன்றி மகிழ்வரசு :-))
Jun 02, 2012 @ 04:55:42
OMG, loved this post, Manni and toally awesome picture!!! And I did spot my husband peeking thru in the background..You look sooo pretty, and Anna of course, as smart as ever.
Feb 16, 2013 @ 08:18:30
ஆனந்தம் என்பது என்னவென்று அற்புதமாக எழுதப்பட்ட ஒரு அருமையான பதிவு. இன்மேல் உங்களையோ, உங்கள் கணவரைப்பற்றியோ பற்றி நினைக்கும்போதெல்லாம், இதுவும் நினைவுக்குவரும்! Brilliant 🙂
Feb 16, 2013 @ 10:48:59
Thank you 🙂 Coming from you, it is a beautiful blessing to us 🙂
Jun 01, 2013 @ 04:50:59
பெண்களால் மட்டும் தான் இவ்வளவு ஞாபகமா எல்லா தகவல்களையும் சொல்லமுடியும், நான் எங்க அம்மாகிட்ட அடிக்கடி அவங்க கல்யாண கதைய கேப்பேன் அழகா சொல்லுவாங்க, எங்க அப்பாவுக்கு ஒண்ணுமே ஞாபகம் இருக்காது, உங்க வீட்டுலயும் அப்பிடியா? 🙂 படிக்கிறதுக்கு ரொம்ப சந்தோசமா இருந்திச்சு, ஃபோட்டோவும் அருமை. மணநாள் வாழ்த்துகள் 🙂
Jun 01, 2013 @ 07:02:58
மிக்க நன்றி. என் கணவருக்குத் திருமணம் ஆனது மட்டும் இன்னும் நினைவில் உள்ளது
;-))
Jun 01, 2013 @ 06:05:38
Arumaiyaana pathivu! Being a newly married couple, we enjoyed reading this! Lakshman and Priyanka!
Jun 01, 2015 @ 16:26:12
thank you 🙂
Jun 01, 2015 @ 14:10:22
என் கணவருக்கு திருமணம் ஆனது மட்டும் நினைவில் உள்ளது lol 😂😂👏👏
Jun 01, 2015 @ 16:26:55
ha ha ha
Jun 02, 2015 @ 10:04:24
ஆகா. அருமையான கல்யாணப் பதிவு. உங்கள் இருவரையும் மிகவும் இளமையாகப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கு இறைவன் எல்லா நலமும் வளமும் வழங்க வணங்குகிறேன். 🙂