…இதை ஒரு சிறுவன் சென்னையில் விமானம் தரை இறங்கும் போது கூவினான். அதிர்ந்து திரும்பி நோக்கினேன். என்னைப் போல் ஒருவனா? 🙂
நான் பிறந்து பாண்டிச்சேரியில். எனக்கு ஐந்து மாதம் இருக்கும்போது சென்னைக்கு வந்தேன், அதிலிருந்து சென்னை வாசம் தான். பாண்டிச்சேரியில் இருந்தபொழுது எப்பொழுதும் அழுது கொண்டே இருந்தேனாம், சென்னை வந்த பிறகு அழுகை நின்று விட்டதாம். ஐந்து மாதம் முதலே நான் சென்னையை நேசிக்க ஆரம்பித்து விட்டேன் 🙂 எததனையோ ஊர்களுக்குச் சென்றுள்ளேன், பல வருடங்கள் அங்கே வசித்தும் உள்ளேன், ஆனால் சென்னை தரும் ஆனந்தம் வேறு எந்த ஊரும் எனக்குத் தந்ததில்லை!
என் முதல் பிறந்த நாள் அன்று மைலாப்பூரில் வசித்து வந்த என் பெற்றோர்கள் என்னை வடபழனி கோவிலுக்குக் கூட்டிச் சென்றதே ஒரு அதிசயம் தான். அங்கே நுழைவாயிலிலேயே ஒரு குருக்கள், என்ன? குழந்தைக்குப் பிறந்தநாளா என்றபடி என் பெயருக்கு அர்ச்சனை செய்து கழுத்தில் மாலையும் போட்டு முருகனை எனக்கு இஷ்ட தெய்வமாக்கி விட்டார். அப்பொழுது எல்லாம் கோடம்பாக்க மேம்பாலம் கிடையாது, ட்ரஸ்டுபுரம் தொடங்கி வடபழனி முதலான இடங்களைச் சுற்றி வயல் வெளியாக இருக்கும் என்று என் அம்மா சொல்லக் கேள்வி.
வெகு விரைவில் முருகன் என் பெற்றோர்களை ராம் தியேட்டர் அருகில் வீடு கட்டிக் கொண்டு வரச் செய்துவிட்டார். சிறுமியாக இருக்கும் பொழுதே நான் தனியாக நடந்து வடபழனி கோவிலுக்குச் செல்வது வழக்கம். சிறிதும் அச்சமில்லாமல் கடைகளுக்கும் கோவிலுக்கும் தனியாகப் போய் வருவேன். என் தெருவில் இருக்கும் அனைவர் வீட்டுக்கும் சென்று விளையாடுவேன்.
எங்கள் தெருவில் இருக்கும் சிறுவர் சிறுமிகள் எல்லாரும் சேர்ந்து கோடை விடுமுறையில் கூட்டாஞ்சோறு செய்து விளையாடுவோம். மூன்று செங்கல் வைத்து சுள்ளிகள் பொறுக்கி தீ வைத்து மண் பானையில் சோறு பொங்கி அந்தக் கஞ்சியோடு மோரும் சேர்த்து ஐந்து பைசா ஊறுகாய் பொட்டலம் வாங்கி சுடச் சுட சாப்பிட்ட அந்த சோற்றின் சுவை எந்த ஐந்து நட்சத்திர உணவகத்தின் மிகப் பெரிய சமையல் கலைஞர் செய்வதற்கு ஈடாகாது 🙂
மேலும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து நாடகங்களும் அரங்கேற்றுவோம். அதில் ஒருமுறை கோவலன் கண்ணகி நாடகம் போட்டோம். அதில் நான் கோப்பெருந்தேவி வேடமிட்டு நடித்தேன். (ஏழு வயது தான் 🙂 ) இயக்குநர் அண்ணாவுக்கு பதினைந்து வயது இருக்கும். நண்டு சிண்டுகளை வைத்து சண்டைகளை விலக்கி வருடா வருடம் ரொம்பத் திறமையாக நாடகம் போடுவார். அவரின் மகன் பின்னாளில் பத்மா சேஷாத்ரி பள்ளியில் என் மகனுக்கு வகுப்புத் தோழனாக இருந்தது எனக்குத் தெரிய வந்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
என் தம்பி என்னைவிட ஐந்து வயது இளையவன். அவன் கோலி, பம்பரம், காத்தாடி, கிரிக்கெட் என்று எந்த விளையாட்டையும் விட்டு வைத்ததில்லை. சீசனுக்குத் தகுந்த விளையாட்டில் ஈடுபட்டிருப்பான். மரம் ஏறி மாங்காய் பறிப்பது, பாணா காத்தாடியை பிடிப்பதற்காகத் தெருவில் கண் மண் தெரியாமல் ஓடுவது, என்று அவனுடைய நண்பர்கள் கூட்டம் ஒன்று எப்பொழுதும் வீட்டில் இருக்கும். இன்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளேன்.
என் பள்ளி கல்லூரி அனைத்தும் கோடம்பாக்கமே. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் நான் நிறையத் திரைப்படங்கள் பார்த்துள்ளேன். அதுவும் சத்தியம் திரை அரங்கம் வந்தப் புதிதில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி அத்தனை இந்திப் படங்களையும் ஒரு முறைக்குப் பலமுறைப் பார்த்து இந்திக் கற்றுக் கொண்டோம் 🙂
எனக்குத் தெய்வ பக்தி மிக அதிகம். குடும்பத்தில் பல கஷ்டங்கள் வந்த போதும் என் தீவிர பக்தி எனக்கு உறுதுணையாக இருந்தது. அதற்கு என் வடபழனி முருகனே காரணம். நடப்பது நடந்தே தீரும். ஆனால் அதைத் தாங்கிக் கொள்ள ஒரு துணிச்சல் கடவுள் நம்பிக்கையால் கிடைக்கிறது. என் பிரார்த்தனைகள் என்றுமே இறைவனிடம் பேசுவது தான். பல வாழ்க்கைப் பாடங்களை நான் இளமையிலேயே கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அதனால் பல நன்மைகளே! இளமையிலேயே பொறுப்புணர்ச்சி அதிகம் ஏற்பட்டு விட்டது. பொறுமையும், பிரச்சனைகளை சீர் தூக்கிப் பார்க்கும் குணமும் படிப்பினையாக வந்தது.
அமெரிக்கா சென்ற புதிதில் என் வடபழனி முருகனை காணாமல் நான் மிகவும் வருந்தினேன். ஆனால் என் முருகன் கருணை உள்ளவன். நாங்கள் வாழ்ந்த பகுதியிலும் ஒரு பழநிஸ்வாமியை காண்பித்துக் கொடுத்தான். நல்ல கோயில். நண்பர்கள் வட்டம் பெரிது. அனைத்து வசதிகளும் உள்ள ஊர். புகுந்த வீட்டினர் தொல்லை இல்லை. ஆயினும் சென்னை வாழ்க்கைக்காக ஏங்கினேன் என்பது தான் உண்மை!.
பின்பு சிங்கப்பூர் வந்தோம். ஆஹா என்ன ஒரு சொர்க்க லோகம் என்று தான் முதலில் தோன்றியது. கிழக்கும் மேற்கும் இணையும் இடம்! அநேகக் கோயில்கள், அனைத்து வசதிகள், வீட்டு வேலைக்கு உதவி செய்ய ஆட்களை நியமித்துக் கொள்ளலாம். ஆனால் சென்னை போல வருமா? 🙂 ஏகச் சட்ட திட்டங்கள். குழந்தைகள் இன்ன எடையில் தான் இருக்க வேண்டும் என்பது வரை அரசாங்கத்தின் அதீத கண்காணிப்பு! ஒரு குப்பையை தெருவில் போட முடியாது. என்ன வாழ்க்கை? சந்தர்ப்பம் கிடைத்த உடன் சென்னைக்கு ஒடி வந்து விட்டோம். அதற்கு பெரும் நன்றியை என் மகளுக்குத் தான் சொல்லியாக வேண்டும். அவள் தான், நீ அமெரிக்காவை விட்டுக் கிளம்பினால் நாம் இன்னொரு ஊரிலும் சிறுபான்மையினராக இருக்கும் இடத்தையா தேர்ந்தேடுப்பாய்? நான் போகிறேன் சென்னைக்கு என்று கிளம்பி விட்டாள். அவளை நாங்கள் பின் தொடர்ந்தோம்.
சென்னை மக்கள் பழகுவதற்கு பலாப்பழம் போன்றவர்கள். பேச்சு கொஞ்சம் மரியாதை இல்லாதது போல இருக்கும் ஆனால் எல்லோரையும் வரவேற்று அரவணைக்கும் பண்பு உண்டு. இங்குள்ள மருத்துவ உதவிப் போல வேறு எங்கும் கிடையாது. நல்ல போக்குவரத்து வசதிகள். அமைதியான சூழல். மற்ற பெரு நகரங்களை விட விலைவாசி சற்றே குறைவு என்று தான் சொல்லவேண்டும்.
சென்னை கடற்கரையின் மேல் எனக்குத் தீராக் காதல். சுனாமி வந்த பிறகு சில வருடங்கள் கடல் கொஞ்சம் சீற்றத்துடன் தான் இருந்தது. இப்பொழுது முன்புப் போல உள்ளது. சென்னையில் வளர்ந்தவர்கள் வாழ்வில் மெரினா கடற்கரை ஒரு அங்கமாக இருக்கும். என்ன மன அழுத்தம் இருந்தாலும் அங்கு சென்று சிறிது இளைப்பாறினால் மனம் லேசாகிவிடும்.
என் நண்பர்கள்! என்னை இளமையாக வைத்திருப்பது என் நண்பர் குழாம் தான். எங்களை அடிக்கடி சந்திக்க வைத்து சிரிக்க வைப்பது இந்த சென்னை தான் 🙂 வேறு வேறு ஊர்களில் இருந்த நாங்கள் இப்பொழுது சென்னைவாசிகள். இப்பொழுது சேர்ந்து நாங்கள் வேறு வேறு ஊர்களுக்குச் சுற்றுலா செல்வதும் சென்னையில் தொடங்கித் தான்.
அவரவர் பிறந்து வளர்ந்த ஊரின் மேல் தனிப் பாசம் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால் பெங்களூருவில் வளர்ந்த என் கணவரும் என்னுடன் சேர்ந்து சென்னையை நேசிப்பது எனக்குப் பெருமையே!
Jul 11, 2012 @ 04:55:03
Very interesting . Even i was in Kodambakkam since 1969 immediately after my father’sdeath at Sivan kovil cross street , near Bharadewarar Temple. Eventhough chennai has many specialities after my return to Chennai from north in 2005, i consider chennai is just a glorified village. But i love it for many reasons
Jul 11, 2012 @ 06:41:17
சிவன் கோவில் அருகில் நாங்களும் சில காலம் வாசித்திருக்கிறோம் 🙂
Jul 11, 2012 @ 04:57:19
Super..சென்னையை எவ்ளோ திட்டினாலும் அங்கு வந்து இறங்கறச்ச தான் ஒரு திருப்தி..
Jul 11, 2012 @ 06:42:30
விமானத்தை விட்டு இறங்கும் பொழுதே உப்புக் காற்று அடிக்குமே, ஒரு சென்னை வாசனையுடன்! 🙂
Jul 11, 2012 @ 05:15:12
பதிவு நன்றாக இருந்தது. என்னுடைய பால்ய நினைவுகளை எழுப்பி விட்டது. நன்றி.
Jul 11, 2012 @ 06:40:08
நன்றி 🙂
Jul 11, 2012 @ 05:16:50
பிரமாதம் என்னைப்போன்ற சென்னையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு உங்களுடைய பதிவு மிகுந்த மனமகிழ்ச்சியை கொடுக்கும், வெளி ஊரிலிருந்து வந்து இங்கு பிழைத்துக்கெண்டே சென்னையை கேவலமாக பேசுபவர்களை தான் அதிகம் கண்டு வெறுப்புற்றிருக்கிறேன் ஆனால் உங்களுடைய பதிவு என்னை மிகவும் ஆனந்தம் கொள்ள செய்துள்ளது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
Jul 11, 2012 @ 05:59:16
Wonderful post Amas. In my opinion, you are the best thing about Chennai. 🙂
Jul 11, 2012 @ 06:12:12
Very nicely written – I have learnt to love Chennai over the last 15 years through you – and I entirely agree with @madplays.
Jul 11, 2012 @ 06:39:02
🙂 😉
Jul 11, 2012 @ 06:29:41
குட்
Jul 11, 2012 @ 06:30:21
>>அதிலிருந்து சென்னை வாசம் தான்.
யூ மீன் சென்னை ஸ்மெல்?
Jul 11, 2012 @ 06:37:49
வார்த்தை ஜாலத்தில் உங்களை வெல்ல முடியுமா? 🙂 நன்றி!
Jul 11, 2012 @ 06:33:01
அருமையாக சொல்லியுள்ளீர்கள். இன்னும் எவ்வளவோ சொல்ல இருக்கிறது சென்னையின் சிறப்பு பற்றி. எழுத வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளர்க
Jul 11, 2012 @ 06:38:28
சின்ன போஸ்ட் படிக்க எளிது 😉 நன்றி 🙂
Jul 11, 2012 @ 07:26:34
நான் சென்னஈக்கு அவ்வளவா வந்ததில்ல! ஆனா, அங்க எனக்கு நிறைய நண்பர்களும் உறவினர்களும் இருக்காங்க. இந்தப் பதிவ படிக்கும் போது சென்னைக்குப் போய் அவங்களையெல்லாம் பாத்துட்டு வந்த மாதிரி இருந்துச்சு. நேர்த்தியான எழுத்து நடை. 🙂
Jul 11, 2012 @ 09:44:33
பாராட்டுக்கு நன்றி 🙂
Jul 11, 2012 @ 12:28:13
I’m jealous of u, ma;) I never had a chance to live in chennai:( but will not ignore when I get chance in the future;)
Jul 11, 2012 @ 16:36:05
Wishing you all the luck to have the opportunity to live in Chennai 🙂
Jul 11, 2012 @ 15:16:01
எதனாலோ சென்னை என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை. குரோம்பேட்டைக்கு உறவினர் வீட்டுக்கு வரும்காலத்தில் சென்னையின் கூட்டத்தைக் கண்டாலே ஒரு வெறுப்பு, மின்சார ரயில், பேருந்து எங்கும் எதிலும். ஒரு முறை எக்குத்தப்பாக மின்சார ரயிலில் மகளிர் பெட்டியின் வாயிலின் அருகே உள்ள கம்பியில் தேய்க்கப்பட்டிருக்கிறேன். அதனால் ஒரு பயம் கலந்த வெறுப்பே இருந்தது. ஆனால் கணவரின் வீடும் குரோம்பேட்டையாகவே இருக்கும் என்று கொஞ்சமும் நினைத்துப்பார்க்கவில்லை அப்போது. 🙂 இதுவரை சென்னையில் ஒரு மாதத்திற்கு மேல் தங்கியிருந்ததில்லை. சென்றமுறை வந்த போது சென்னை லேசாக ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது, திருவான்மியூர் பிடித்த இடமாக ஆகி விட்டிருக்கிறது. உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்தால் ஒருவேளை அங்கேயே வந்து செட்டில் ஆகி விடுவோமோ என்னவோ! 🙂 உங்கள் கையில்தான் இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள்.
Jul 11, 2012 @ 15:36:10
How beautifully put! Thank you so much for your kind words 🙂
Jul 11, 2012 @ 16:15:15
நெஞ்சை தொட்ட விஷயம்..
நாம் பெருமை மிக்க இனத்தை சேர்ந்தாலும் சிறுபான்மை எனக்கருதப்படும் இடத்தில் இருந்தால்….,
நினைக்கவே பதறுகிறது..
அனுபவித்த உங்களுக்கும்,, மகளுக்கும்…குடும்பத்தாருக்கும் நேர்ந்த அந்த வலி…. வார்த்தையினால் வெளிப்பட்டுவிடாது.
அப்புறம் இன்னொன்னு.. உங்க கடைசி வரிய வேணுமின்னா இப்படி என் மனைவி மாற்றலாம்.
…….தமிழ்நாட்டினில் வளர்ந்த என் கணவரும் என்னுடன் சேர்ந்துமும்பையை நேசிப்பது எனக்குப் பெருமையே……..!
மனைவியின் மகிழ்ச்சியே … மனத்திற்கு உகந்தது..!!
Jul 11, 2012 @ 16:23:55
ரொம்ப நெகிழ்வான பின்னூட்டம். மிக்க நன்றி 🙂
Jul 11, 2012 @ 16:53:02
சொர்க்கமே என்றாலும் அது நம்முர போல வருமா???
Jul 11, 2012 @ 16:53:43
சொர்க்கமே என்றாலும் அது நம்முர போல வருமா??
Jul 11, 2012 @ 17:00:36
yes 🙂
Jul 11, 2012 @ 23:05:22
Being in the bay area, I can relate to this post. Especially the life in chennai during the 80s and 90s were the golden times. Irrespective of the life style that we experience in different parts of the world, chennai stands out for the pure fact that it gives a sense of belonging to its residents. Pakkathu aam manusha and nanbargal make it special.
Being an avid outdoor guy in the bay area, I still heavily miss the simple kaaram kaapi life in chennai. Nice post.
Jul 11, 2012 @ 23:09:27
Thanks! Glad, you enjoyed it 😉
Jul 12, 2012 @ 01:48:00
I am in chennai more than a decade, I knew a new info from this write up, nice
Jul 12, 2012 @ 02:07:00
Oh, that was good, thank you 🙂
Jul 12, 2012 @ 02:22:54
சுவாரசியமான பதிவு. உங்களின் சென்னை, அமெரிக்க அனுபவங்களை படிக்கும் போது ‘எனது மதுரை நினைவுகள்’ புத்தகம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த அனுபவங்களை புத்தகமாக எழுதினால் மிக அருமையாக இருக்கும் 🙂
Jul 13, 2012 @ 09:21:04
உங்கள் புத்தகம் எங்கு கிடைக்கும்? 🙂
Jul 12, 2012 @ 03:30:50
//நடப்பது நடந்தே தீரும். ஆனால் அதைத் தாங்கிக் கொள்ள ஒரு துணிச்சல் கடவுள் நம்பிக்கையால் கிடைக்கிறது//
arumai!
Jul 13, 2012 @ 09:20:05
thank you 🙂
Aug 08, 2012 @ 15:37:13
சென்னை ஒரு சிறந்த ஊர்தான். குறை சொல்லனும்னு நெனச்சிட்டோம்னா எந்த ஊரையும் குறை சொல்லலாம். பாரீஸ்ல கார் பார்க்கிங் பிரச்சனை. ஆம்ஸ்டர்டாம்ல குட்டி ரோடுகள். லண்டன் மெட்ரோ கொளறுபடிகள் ஏராளம். இப்பிடி அடுக்கிக்கிட்டேயிருக்கலாம். சென்னையிலும் குறைகள் உண்டு. நிறைய நிறைகளும் உண்டு.
ஒவ்வொருவருடைய அனுபவங்களே அந்தந்த ஊர்களைப் பற்றிய கருத்தைக் கட்டமைக்கின்றன.
ஆனால் அதையெல்லாம் மீறி சென்னை ஒரு அருமையான நகரம் என்று சொல்வதில் மறுகருத்தே கிடையாது.
சென்னை வாழ்க! 🙂
Aug 08, 2012 @ 16:00:32
மிகா நன்றி ஜிரா :-))) So happy you read my post 🙂
Aug 17, 2012 @ 01:29:29
அருமையான பதிவு.மிகவும் ரசித்து படித்தேன்.
Aug 17, 2012 @ 01:33:43
Thank you 🙂
Aug 22, 2013 @ 03:25:46
அருமையான பதிவு !! நான் பிறந்தது, வளர்ந்தது சென்னையில் தான் !!
Aug 22, 2013 @ 05:05:29
மிக்க :-நன்றி )
Aug 22, 2016 @ 07:50:56
எளிதாக அழகாக சென்னையை சுற்றி காட்டினிங்க 🙂
Aug 22, 2016 @ 08:40:06
trichy will always be the first place i love. Chennai is right next to that in my heart. I like chennai too. Agree with all the point you have mentioned about chennai.
Aug 22, 2016 @ 08:42:27
Beautiful.