Review of English Vinglish

Sridevias Shashi in English Vinglish

இங்க்லீஷ் விங்க்ளிஷ் படத்தைப் பார்த்து விட்டு வந்து உடனே இந்தப் பதிவை எழுதுகிறேன். ஸ்ரீதேவி – ஆஹா, எங்கிருந்தீர்கள் இவ்வளவு வருடங்களாக? மூன்றாம் பிறையின் மகோன்னத நடிப்பை இந்தப் படத்தில் மீண்டும் காணலாம். இது முழுக்க முழுக்கக் கதாநாயகிக்கான படம். வெளுத்து வாங்கியிருக்கிறார் ஸ்ரீதேவி. இந்த மாதிரி ஒரு பாத்திரமும், வலுவான கதையும், திரைக்கதையும் அமைந்தது ஸ்ரீதேவியின் அதிர்ஷ்டமே! I applaud Gauri shinde for her directorial achievement in her debut film! அவர் தாயின் கதையைத் தழுவி எடுத்ததனால் நம்பகத்தன்மை அதிகம் உள்ளது. What a sensitive portrayal by Sridevi and a sensitive handling of the subject by the director. Hats off to both of them!

எனக்கு கதை தெரிந்தால் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்து விடும். அதனால் நான் கதையை இங்கே கோடிட்டு தான் காட்டப் போகிறேன். ஸ்ரீதேவி இல்லத்தரசி, திறமையான பெண்மணி. ஆனால் ஆங்கிலம் தெரியாததால் குடும்பத்தினரால் ஏளனப் படித்தப் படுகிறார். அவருக்கு தனியாக அமேரிக்கா செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகிறது. அங்கு சென்று அங்கு உள்ள வாய்ப்புகளைப் பயன் படுத்தி எப்படி தன்னை மேம்படுத்திக் கொள்கிறார் என்பதே கதை. ஒரு இல்லத்தரசிக்குக் கணவனிடம் உள்ள எதிர்பார்ப்புகள், அவனின் உதாசீனம் தரும் மனக் கசப்பு, அதனால் வரும் தாழ்வு மனப்பான்மை, அதை சீர்படுத்த அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், தன்னம்பிக்கை மீண்டும் வர மிகத் தேவையானது என்ன, இவை அனைத்தையும் கோர்வையாக குறையொன்றும் இல்லாமல் தந்திருப்பது இயக்குனரின் திறமையையும் ஸ்ரீதேவியின் பங்களிப்பையும் காட்டுகிறது. திரையில் ஸ்ரீதேவி இல்லை, சஷிதான் உள்ளார்.

அஜித் கெஸ்ட் ரோலில் வருகிறார். என்ட்ரி ஆகும்போதே திரை அரங்கில் விசிலும் கைதட்டலும். சிறிய ரோலாக இருந்தாலும் அற்புதமாகப் பண்ணியுள்ளார்.  அவர் இமேஜுக்கு ஏத்த ரோல், ஆதலால் நல்ல fit 🙂

எதுவுமே மிகை இல்லாமல் இருக்கிறது. No melodrama. அமெரிக்க வாழ்க்கை முறை, அங்கு ஸ்ரீதேவி செல்லும் வகுப்புகள், அனைத்தும் இயல்பாக உள்ளது. ஸ்ரீதேவி பல இடங்களில் பிற மொழியாளர்களிடம் தமிழிலும், அவர்களும் பிற மொழியில் ஸ்ரீதேவியிடம் உரையாடியும் எண்ணங்களை உணர்ந்து கொள்வது போல காட்டியிருப்பது,only shows that  language is no barrier to emotions which is common to all.

இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் இயக்குனர் ஒரு பெண்ணாக இருப்பது தான். பெண்ணின் கோணத்தில் இருந்து சிறப்பாக எடுத்துள்ளார். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருப்பதற்குக் காரணம் நானும் ஒரு பெண்.

ரசூல் பூக்குட்டி sound mixing. ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது. உடை அலங்காரம் அருமை. ஸ்ரீதேவியின் புடவை செலக்ஷன் அவருக்கு அவ்வளவு அம்சமாக உள்ளது.

குறைகள் என்று பார்த்தால் இந்தி டப்பிங் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. இந்தித் திருமணம், இந்தி நடிகர்கள். பாடல்கள் சுமார் ரகம், ஆயினும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

அனால் படம் ஒரு கவிதை. It makes a big impact on you when you leave the theatre.

28 Comments (+add yours?)

 1. PVR
  Oct 06, 2012 @ 13:42:27

  Super. Good flow and command over language, I was saying ‘will see’; now ‘shall see & must see’. 🙂 Regards, pvr

  Reply

 2. ganeshputtu
  Oct 06, 2012 @ 16:02:10

  havent seen the movie yet….release agi rendu naal thaney agudhu? but will definitely catch up on it….

  Reply

 3. ரைட்டர் நட்டு (@NattAnu)
  Oct 06, 2012 @ 16:25:44

  நல்ல ரிவ்யு..Looks like the movie has heart in it (Like your review :)) Glad that there is no melodrama..

  Reply

 4. GiRa ஜிரா
  Oct 06, 2012 @ 16:33:21

  இன்னைக்கு இந்தப் படம் பாத்திருக்க வேண்டியது. ஆனா பாக்க முடியல. எப்படியாச்சும் பாத்துரனும்.

  நீங்க போட்டிருக்கும் படத்தில் ஸ்ரீதேவி கட்டியிருக்கும் சேலை மிக அழகு. அந்த அக்வா புளூவில் (அக்வா புளூதானே?) பூப்பூவாக. அழகோ அழகு.

  Reply

  • amas32 (@amas32)
   Oct 07, 2012 @ 04:04:24

   :-)) கலர்ஸ் நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கீங்க, படம் மிஸ் பண்ணாதீங்க 🙂

   Reply

 5. LKG (@chinnapiyan)
  Oct 07, 2012 @ 05:03:30

  நன்றி அம்மணி. படம் பார்க்க தூண்டி விட்டுட்டீர்கள். திருச்சியில் பல வருடங்களாகிவிட்டது தியேட்டருக்கு போய். இன்றே முயற்சி செய்து போய் பார்த்திட்டு வந்தவுடன் தெரிவிக்கிறேன் என் கருத்தை. வாழ்க வளர்க.

  Reply

 6. Sharmmi Jeganmogan
  Oct 07, 2012 @ 09:20:57

  Same feelings in both our reviews. I like your flow of writing.
  And of course… The sarees were good. Must find out where they bought them. Haa… Haa..

  Reply

 7. Anonymous
  Oct 08, 2012 @ 18:09:41

  சகோதரிக்கு நன்றி! உடனே படம் பார்க்க வேண்டும் என்ற உணர்வு வந்து விட்டது; பார்த்துவிட்டு என் கருத்தைப் பதிவு செய்கிறேன்!

  Reply

 8. டாக்டர் ஆர்.தேன்மொழியான்,சென்னை.
  Oct 08, 2012 @ 18:15:00

  சகோதரிக்கு நன்றி! உடனே படம் பார்க்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டது; பார்த்துவிட்டு என் கருத்தைப் பதிவு செய்கிறேன்!

  Reply

 9. M A PAULRAJ
  Oct 09, 2012 @ 03:16:37

  WELL SAID

  Reply

 10. Anonymous
  Oct 09, 2012 @ 06:02:30

  thanks for a genuine review

  Reply

 11. ramkumar
  Oct 09, 2012 @ 06:03:45

  thanks for a genuine review

  Reply

 12. naveena
  Oct 09, 2012 @ 06:12:29

  dont lie only some parts are good not full movie

  Reply

 13. monalisa
  Oct 09, 2012 @ 07:32:38

  review excellent,thanks got to see it soon.

  Reply

 14. subbu
  Oct 09, 2012 @ 09:51:16

  super akka

  Reply

 15. Anonymous
  Oct 09, 2012 @ 14:58:09

  doog review…..

  Reply

 16. Anonymous
  Oct 09, 2012 @ 14:59:47

  doog review…..

  Reply

 17. மஞ்சுபாஷிணி
  Oct 12, 2012 @ 15:26:29

  அருமையான ரிவ்யூ….. கண்டிப்பாக இந்த படம் பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் மேலிடுகிறது…. அன்பு நன்றிகள் தோழி….

  Reply

 18. Cheena ( சீனா )
  Oct 12, 2012 @ 20:25:36

  தோசா வில் மறுமொழிகள் பார்த்து வியந்திருக்கிறேன் – இங்கும் கண்டு மகிழ்கிறேன் – நல்லதொரு பட விம்ர்சனம் – நன்று நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Reply

  • amas32
   Oct 13, 2012 @ 02:42:57

   நீங்கள் ட்விட்டரில் இருக்கிறீர்களா? இருந்தால் உங்களை தொடர்வேன் 🙂 நீங்கள் இங்கே வந்து பின்னூட்டம் இட்டதற்கு ரொம்ப நன்றி பெருமையாக உள்ளது. 🙂

   Reply

 19. saravanan
  Oct 17, 2012 @ 02:02:43

  Good

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: