மாற்றான் – திரை விமர்சனம் :-)

சூர்யா அற்புதமாக நடித்திருக்கிறார். ஒட்டி பிறந்த இரட்டையார் ஆதாலால் synchronised swimming மாதிரி synchronised dancing and synchronised fight movements 🙂 அற்புதமாகச் செய்திருக்கிறார். அவர் உழைப்பிற்கு ஒரு சபாஷ்! மிக மெல்லிய உணர்வு வேறுபாடுகளையும் துல்லியமாக முகத்தில் பிரதிபலிப்பதில் இருந்து அவர் நடிப்பில் அடுத்து பரிணாமத்திற்கு சென்றுள்ளார் என்று தெரிகிறது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் ஒருவரின் பிரிவின் போதும் தன் தந்தை எப்படிப் பட்டவர் என்று தெரிந்த பின் வரும் உணர்வுகளை மிகையில்லாமலும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். Especially, climaxல் அவர் தந்தையை இன்னும் நன்றாகப் புரிந்து கொண்ட பின் அவர் படும் வேதனை, அவமானம், துக்கம், கோபம் அனைத்தையும் ஒரு சேரக் காட்டுகிறார். சமீபத்தில் வந்த படங்களான, அயன், சிங்கம், ஏழாம் அறிவு இவற்றை விட இந்த படத்தில் அவர் நடிப்பு மெருகு ஏறியிருக்கிறது. இன்னும் நல்ல திரைக் கதைகளையும், இயக்குனர்களையும் தேர்ந்தெடுத்து சரியான பாதையில் செல்ல வேண்டும்!

காஜல் அகர்வால் பதுமை மாதிரி வந்து போகாமல் சிறிது நடித்தும் இருக்கிறார். சின்மயி டப்பிங் perfect! காஜலின் நடிப்பிற்கு மிகப்பெரிய பக்கபலம் சின்மயியின் குரல்.

விறுவிறுப்பாகத் தான் போகிறது கதை. கே.வி.ஆனந்த் திரைக் கதையை இன்னும் சீரமைத்து இருக்கலாம். அவருக்கு exotic locations போய் படம் பிடிக்க வேண்டும் என்று தீராத் தாகம் போலும். அதற்காகவே திரைக் கதையில் ரொம்ப twist எல்லாம் வைத்திருக்கிறார். அதில்லாமல் கதையில் நம்பகத்தன்மையை அதிகப் படுத்தும் படி யோசித்து திரைக் கதை அமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருக்கும் பார்ப்பவர்களுக்கு!

கதைப் படி ஒட்டிப் பிறந்த இரண்டு சூர்யாக்களுக்கும் ஒரே ஒரு இதயம் தான். அப்படி பிறந்தவர்கள் சும்மா இடுப்பு கிட்ட துளியூண்டு ஒட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். படம் பிடிப்பதற்கு சௌகர்யமாக இருப்பதற்காக இந்த கொஞ்சம் ஓட்டல் பார்ப்பவர்களுக்கு எரிச்சலைத் தருகிறது. கனவு டூயட் காட்சியில் இரண்டு சூர்யாக்களும் பிரிந்து நடனம் புரிவது இயக்குனர், ஒளிப்பதிவாளர், computer graphics technicianகளுக்கு நிம்மதியாக இருந்ததோ இல்லையோ எனக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

பாட்டுக்கள் சுத்த மோசம். ஐயோ அடுத்து பாட்டு வந்துவிடப் போகிறதே என்று சிறிது பயமாகக் கூட இருந்தது. பின்னணி இசையும் சுமார் ரகம்.

சற்றே புதுமையான கதைக் களம். அது வரவேற்கத்தக்கது. இணையத்தில் வந்த விமர்சனங்கள் போல படம் மோசம் என்று எனக்குத் தோன்றவில்லை. It is an entertaining film 🙂

10 Comments (+add yours?)

 1. ரசனைக்காரன்
  Oct 13, 2012 @ 15:09:16

  நானும் நேத்திக்கு பார்த்தாச் 🙂
  “கதைப் படி ஒட்டிப் பிறந்த இரண்டு சூர்யாக்களுக்கும் ஒரே ஒரு இதயம் தான். ” என தொடங்கும் பாராவை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன் 🙂

  Reply

 2. GiRa ஜிரா
  Oct 13, 2012 @ 15:55:30

  நான் இன்னும் பாக்கல. டிக்கெட் கெடைக்கல 😦 மெதுவாப் பாத்துக்கலாம்.

  Reply

 3. திண்டுக்கல் தனபாலன்
  Oct 13, 2012 @ 16:23:05

  பரவாயில்லை ரகம்…

  Reply

 4. Anonymous
  Oct 13, 2012 @ 17:44:30

  படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்!எதுக்கும் பாத்துட்டு இன்னொரு பின்னூட்டம் போடுறேன்!

  Reply

 5. Trokul (@rgokul)
  Oct 13, 2012 @ 20:41:37

  எங்கள் தங்கத்தலைவர் Harris Jeyaraj பாடல்/இசை மொக்கை எனச்சொன்ன உம் வீட்டுக்கு, சைக்கிளில் குண்டர்கள் அனுப்பப்படுவார்கள்.

  Reply

  • amas32
   Oct 14, 2012 @ 09:08:51

   உங்க தங்கத் தலைவர் ஹாரிஸ் ஜெயராஜுக்காக ஒரு ஆட்டோக்குக் கூட செலவழிக்க மாட்டீர்களா? சைக்கிளில் குண்டர்களை அனுப்புகிரீர்களே! :-)))))))))))

   Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: