விழுந்து விழுந்து சிரித்து நல்ல வேளை வயிறு புண்ணாகவில்லை எனக்கு ஆனால் தொண்டை தான் கொஞ்சம் வலிக்கிறது 🙂 ஒரு சின்ன அசம்பாவிதம், பெரிய அதிர்ச்சி! அந்த சம்பவத்தை மட்டுமே வைத்து மூன்று நாட்கள் போராடும் நண்பர்களின் திண்டாட்டத்தை ரசிகர்களாகிய நமக்குக் கொண்டாட்டமாக தந்திருப்பது பாலாஜி தரணீதரனின் இயக்கத்தின் அசாத்திய திறமையைக் காட்டுகிறது.
சின்ன பட்ஜெட் படம். நோ குத்துப்பாட்டு, நோ பைட் சீக்வன்ஸ், நோ வெளிநாட்டு டூயட், நோ பெரிய நடிகர்கள், நோ செட் – ஆனால் அற்புத படைப்பு! டயலாக் கூட நிறைய எழுதும் சிரமம் வைக்கவில்லை. ஒரே டயலாக் பலப் பல முறை ரிப்பீட்டு. படம் பார்த்தவர்களுக்கு புரியும் நான் என்ன சொல்கிறேன் என்று 🙂 இத்தனை நகைச்சுவையாக படம் எடுத்த அந்த குழுவிற்கு ஒரு பெரிய பாராட்டு பொக்கே!
பீட்சா பேம் விஜய் சேதுபதி, அவரின் மூன்று நண்பர்கள் பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஸ்வரன் அனைவரும் மிக இயல்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். நட்பின் ஆழத்தைக் காட்டும் இப்படம் நண்பர்களுடன் சென்று பார்த்து அனுபவிக்க ஒரு சிறந்த கேளிக்கை விருந்து. திரை அரங்கில் சிரிப்பலைகள் கடலலைகள் போல தொடர்ந்து எழும்பி அடங்குகின்றன.
இந்த படத்திற்கு இசை வேத் ஷங்கர் சுகவனம். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை கல்லூரி மாணவர். பின்னணி இசையும் ஆண்ட்ரியா பாடியுள்ள ஒரு பாடலும் நன்றாக உள்ளது.
இது ஒரு உண்மை சம்பவம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் வாழ்க்கையில் நடந்ததை அப்போது அவர் கூட இருந்த பாலாஜி திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார். கடைசியில் உண்மை பாத்திரங்களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள். நிச்சயமாக மிஸ் பண்ணாதீர்கள், இரண்டு காரணங்களுக்காக. ஒன்று, ஒரு இரண்டரை மணி நேரம் நம் கவலைகளை மறந்து சிரிக்கலாம். இரண்டு, இந்த மாதிரி முயற்சிகளை ஊக்குவித்தால் தான் மேலும் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.
Dec 08, 2012 @ 16:07:43
பஹுத் அச்சா :))
Dec 09, 2012 @ 02:04:35
தன்யவாத் 🙂
Dec 08, 2012 @ 16:14:52
சுருக்கமான, ஆனால் அளவு மீறாத விமர்சனம். புதியவர்களின் நல்ல படைப்புகள் கொண்டாடப்படவேண்டும் எனும் கருத்தை வரவேற்கிறேன் !
Dec 09, 2012 @ 13:48:58
புதுப்படங்களைப் பாக்குறதுல என்னவொரு சுறுசுறுப்பு 🙂 கலக்குறீங்க.
இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனம் எல்லாமே நல்லாயிருக்குது. படத்தைப் பாத்துறனும்.
அடுத்த வாரம் கும்கி ரிலீசாம். நான் பர்ஸ்ட்டா நீங்க பர்ஸ்ட்டான்னு பாக்கலாம் 🙂
Dec 09, 2012 @ 13:55:58
:-))))))
Jan 01, 2013 @ 10:58:52
Loved the Movie.. Great post 🙂