ரொம்ப லோ எக்ஸ்பெக்டேஷனோடு தான் சென்றேன். ஆனாலும் டிசப்பாயின்ட்மென்ட் என்றால் என்னத்த சொல்ல! இளையராஜாவிடம் அழகான பாடல்களை எப்படியோ கறந்து விட்டார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்புறம் அந்தப் பாடல்களை பயன்படுத்த ஏதோ கதை பண்ணியுள்ளார். பாவம் இளையராஜா. ரீ ரிகார்டிங் போது நொந்து போய் பல இடங்களில் அமைதி காக்கிறார்.
கதை & திரைக்கதை, இயக்குனரைத் தவிர வேறொருவர் செய்ய வேண்டிய கட்டாயத்தைப் புரிய வைத்திருக்கிறது நீ தா எ பொ வ. கௌதமுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது. அரைத்த மாவையே அரைப்பதால் என்ன பயன்? விண்ணை தாண்டி வருவாயாவில் தோன்றிய சில மீந்துபோன எண்ணங்களை இந்தப் படத்தின் முழுக் கதையாக மாற்ற முயற்சி செய்து பெரும் தோல்வியை தழுவியிருக்கிறார் இயக்குனர்.
சமந்தா ரொம்ப நன்றாக நடித்துள்ளார். மிகவும் அழகாகவும் உள்ளார். பதின் பருவத்தில் இருந்து நடு இருபதுவயது வரை கனகச்சிதமாக அவர் முகமும் உடல் அமைப்பும் பொருந்துகிறது. அவரே பேசி நடித்திருப்பது அவர் பாத்திரத்துக்கு மேலும் உயிர் கொடுக்கிறது. ஜீவா நடிப்பிலும் குறை இல்லை. குறை எல்லாம் கௌதம் மேல் தான் (இதில் ஒரு பாடல் வேறு பாடியுள்ளார்) ஒரே டயலாக் திரும்ப திரும்ப. என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. பெண்களைக் சித்தரித்திருக்கும் விதமும் வரவேற்கும்படியாக இல்லை. காதலைச் சொல்வதில் இவர் ஒரு அதாரிட்டி மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வதில் அவர் ஈகோ தான் முன் நிற்கிறது.
சந்தானத்தை வைத்து செண்டிமெண்டுக்காக வி தா வ வீட்டையும் கனேஷையும் வேற கதையின் நடிவில் புகுத்தியுள்ளார். எந்த செண்டிமென்ட்டினாலும் இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது. நடிகர் மோகன் ராமின் மகள் வித்யுலேகா ராமன் நன்றாக நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு விமர்சனம் என்று சொல்லி மேலும் எழுதி என் நேரத்தை விரயமாக எனக்கு விருப்பம் இல்லை.
Dec 16, 2012 @ 09:48:33
Thought you will have this to say somewhere in the end “ippadi ellam ezhutha vendi varumo nnu ninaichen” padam pramadham. now confused ‘coz have read only good reviews labour this film.
Dec 16, 2012 @ 11:03:41
Really? 🙂
Dec 16, 2012 @ 15:15:50
Ok, Will wait for Kumki review 🙂
Dec 16, 2012 @ 15:26:40
After this gruelling experience thinking twice about going to Kumki 🙂
Dec 16, 2012 @ 15:55:26
போட்டுத் தாக்கீட்டிங்க. ஆனா நீங்க சொன்னது முழுக்க உண்மையாதான் இருக்கனும். கௌதம் போன்ற டைரக்டர்கள் இன்னொருவர் கதை/திரைக்கதையை ஈகோ இல்லாமல் பயன்படுத்திக் கொள்வார்களா என்பது ஐயமே.
Dec 16, 2012 @ 16:15:24
:-)))
Dec 17, 2012 @ 16:39:33
விண்ணை தாண்டி வருவாயா படம் பார்க்க போய் பாதியிலேயே திரும்பி ஓடி வந்தவன் நான். நீங்கள் விமர்சித்த பிறகு அதற்கு மேல் அப்பீலே இல்லை. மிக்க நன்றி என் பணம் மிச்சம்:-)
Dec 17, 2012 @ 17:34:03
:-))))
Dec 29, 2012 @ 19:45:33
Wasted time by reading this review 🙂