சமர் – திரை விமர்சனம்!

Samar-Tamil-Movie-Stills-07102012362636f

விஷால், த்ரிஷா, சுனைனா மற்றும் சம்பத், ஜெயப்ரகாஷ், மனோஜ் பாஜ்பாய், ஜே.டி.சக்கரவர்த்தி நடித்துப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் திரு! விஷால், த்ரிஷா இருவரிடமும் நல்ல நடிப்பை வரவழைத்திருப்பதற்கு அவருக்கு பாராட்டுக்கள்!

ஆரம்பம் படு ஜோர். ஊட்டிக் காடுகளில் விஷால் மரத்தை வெட்ட வரும் வில்லன்களைப் பறந்து பறந்து பந்தாடுகிறார். உடம்பு நன்றாக ஜிம் பாடியாக உள்ளதால் வில்லன்களை அடித்துத் துவைப்பதை நம்ப முடிகிறது. நன்றாகவும் நடனம் ஆடுகிறார். தமிழ்நாட்டு ரித்திக் ரோஷன் என்று இவரைச் சொல்லலாம். அல்லது ரித்திக் ரோஷனை வட நாட்டு விஷால் என்றும் கூப்பிடலாம்.

சண்டைப் போடாத பெண்ணும் சரக்கடிக்காத ஆணும் கிடைக்கவே மாட்டான், நீ எல்லாத்தையும் கணக்கு வெச்சிருக்க, நான் காதலையே கணக்கில்லாம வெச்சிருக்கேன் போன்ற மணியான வசனங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. ட்விட்டரில் #NewBreakUpLine You don’t remember the colour of my dress. So I am breaking up with you, என்று தைரியமாக எழுதலாம். ஏனென்றால் இந்தப் படத்தில் உண்மையாகவே அது தான் காதலியும் காதலனும் பிரியும் காரணம்.

தீடீரென்று கதைக் களம் பாங்காக்கிற்கு மாறுகிறது. அங்கே தான் ட்விஸ்ட்! எந்திரனில் ரோபோ ரஜினியை விஞ்ஞானி ரஜினி பின்னாடி பாத்து ஒட்டு என்றதும் தலையைத் 360 degree திருப்பிப் பார்த்து ஓட்டுவார். அதைப் பார்த்து ஐஸ்வர்யா ராய் மயங்கி விழுவார். அந்த மாதிரி தான் நாமும் பாங்காக்கில் நடக்கும் கதையைப் பார்க்கும் பொழுது ஒரு மார்க்கமாக ஆகிவிடுவோம். அது தான் படத்தின் பலம் + பலவீனம்.

புதிய வியூகம். அதில் சந்தேகமே இல்லை. சைகோ பெஹேவியர் எனக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் என்னால் ரசிக்க முடியவில்லை. அதனால் படம் நன்றாக இல்லை என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை. பலருக்கு அந்த மாதிரி கதைகள் நிச்சயமாகப் பிடிக்கும். அந்த விதத்தில் பார்த்தால் படம் நன்றாகக் கையாளப் படப் பட்டிருக்கிறது.

த்ரிஷாவும் மிகவும் நன்றாக நடித்துள்ளார். நல்ல மெச்சூரிட்டி நடிப்பில். இன்னும் இளமையாகத் தெரிகிறார். நடுவில் வரும் பாடல்கள் நம்முடைய பொறுமையை மிகவும் சோதிக்கின்றன. தேவையே இல்லை. படத்தின் ஓட்டத்தில் தொய்வை ஏற்படுத்துகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அழகோ அழகு பாடல் நன்றாக உள்ளது. அஷ்டே!

பொங்கல் ரிலீஸில் இது முதல் இடம் பெரும். (மற்றவை அவ்வளவு மொக்கை என்று கேள்விப்பட்டேன்)

ஹரிணி கோவிலுக்குச் செல்கிறாள்!

sweetgirl

குழந்தைகளுக்கான புத்தகம் எழுதுவது இதுவே முதல் முறை. இதை நான்  வெளியிடுவது iBook for iPad என்ற நோக்கோடு தான். கதையை கீழே தந்துள்ளேன். Bulletin points ல் உள்ள கதைக்கு ஏற்றவாறு  வண்ணப் படம் வரைபவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  பதினைந்து பக்கப் புத்தகமாக இது வெளிவரும் என்று நம்புகிறேன்.  இது ஒரு சுய வெளியீடு ஆதலால் முன் பணமாக என்னால் எதுவும் தர இயலாது. ஆனால் லாபத்தைப் பங்குப் போட்டுக் கொள்ளலாம் 🙂 அன்பும் ஆர்வமுமே இந்த முயற்சிக்குக் காரணம். அதே எண்ணம் உடைய எவரேனும் என்னுடன் கூட்டு சேர்ந்தால் நன்றாக இருக்கும். உங்களுக்குத் தெரிந்த எவரேனும் இதில் ஆர்வமுடயவராய் இருந்தால் தெரியப் படுத்துங்கள் 🙂 என் email id is sushima18@gmail.com.

ஹரிணி கோவிலுக்குச் செல்கிறாள்!

 1. மூன்று வயதே நிரம்பிய ஹரிணி தினமும் தன் தாத்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்கிறாள். அவள் விடி காலையில் குளித்து முடித்து பளிச்சென்ற உடையில் எப்பொழுதும் அழகாகக் கோவிலுக்கு செல்கிறாள்.
 2. அவள் வீட்டிலிருந்து நாலு வீடு தள்ளி தான் கோவில் உள்ளது. பக்தர்கள் அருகில் இருந்தும் தொலைவில் இருந்தும் அந்த கோவிலுக்கு வருவார்கள்.
 3. ஹரிணியும் அவள் தாத்தாவும் கோவில் வாசலில் உள்ள பூக்கடையில் வாசனை மல்லிகையும் அர்ச்சனை தட்டும் வாங்குகிறார்கள். அர்ச்சனை தட்டில் உள்ள பொருட்கள் என்ன என்ன என்று சுட்டிக் காட்ட முடியுமா?
 4. கோவில் வாசலில் செருப்புக்களை அவிழ்த்துவிட்டு கோவில் உள்ளே நுழைத்து அங்கே உள்ள குழாயில் காலைக் கழுவிக் கொள்கின்றனர். சில்லென்று காலில் நீர் படவும் ஹரிணிக்கு அது ரொம்பப் பிடித்திருக்கிறது!
 5. அவள் முதலில் விநாயகர் சந்நிதிக்கு ஓடிப் போகிறாள். விநாயகர் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் பிறந்த மகன். அவர் வாழ்க்கையில் வரும் இடர்களைப் போக்கும் முழுமுதற்கடவுள்.
 6. அவள் தாத்தா சொல்லிக் கொடுத்தப்படி கை விரல்களை மடக்கிக்கொண்டு நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்கிறாள். பிறகு உட்கார்ந்து எழுந்து சில முறை தோப்புக்கரணம் போடுகிறாள். இந்த இரண்டு செயல்களுமே மூளையின் செயல் திறனை அதிகப் படுத்தும் காரணிகள்.
 7. கோவிலில் உள்ள அர்ச்சகர் பிள்ளையாருக்கு மலர்கள் தூவி அவரின் நூத்திஎட்டு பெயர்களைச் சொல்லி அர்ச்சனை செய்கிறார். பிறகு தேங்காயை உடைத்து வாழைப் பழங்களையும் தேங்காயையும் இறைவனுக்குப் படைக்கிறார். தொடுத்த மலர்களை இறைவன் மேல் சாத்தி கற்பூர தீபம் ஏற்றி ஆரத்தி காட்டுகிறார்.
  archakar
 8. அதற்கு பின் அர்ச்சகர் தேங்காய் பழப் பிராசதத்தை ஹரிணியின் தாத்தாவிடம் தருகிறார். பின்னர் அங்கே வழிபடக் கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் விபூதி பிரசாதம் அளிக்கிறார்.
 9. பிறகு ஹரிணியும் அவள் தாத்தாவும் கோவிலில் உள்ள மற்ற தெய்வங்களை வரிசையாகச் சென்று வணங்குகின்றனர்.
 10. அங்கு வீற்றிருக்கும் கடவுள்கள் யார் யாரென்று உங்களால் சொல்ல முடியுமா?
  1. பார்வதியுடன் சிவபெருமான்
  2. விநாயகரின் தம்பி முருகப் பெருமான்
  3. சிவபெருமானுக்கும் மோகினி அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த சுவாமி ஐயப்பன்
  4. துர்கை அம்மன்
  5. தட்சிணாமூர்த்தி
 11. ஒவ்வொரு தெய்வத்தையும் வணங்கிய பின் அந்த சந்நிதியை தாத்தாவும் பேத்தியும் பக்தியுடன் வலம் வருகின்றனர்
 12. அரசமரத்தடியில் இருக்கும் நாகருக்கு ஒரு பெண் தானே பூஜை செய்கிறாள். அவளே முதலில் தண்ணீராலும் பின் பாலாலும் நாகரை நீராட்டுகிறாள். பின் மஞ்சள் குங்குமம் இட்டு பழங்களை சமர்ப்பித்து கற்பூர ஆரத்தி காட்டுகிறாள்.
 13. அடுத்து ஹரிணியும் அவள் தாத்தாவும் நவக்கிரகங்களை வழிபடுகின்றனர். நவக்கிரகங்கள் நவகோள்களைக் குறிக்கின்றன. தாங்கள் எடுக்கும் முயற்சி திருவினையாக வேண்டும் என்று இருவரும் வழிபட்டு ஒன்பது முறை வலம் வருகின்றனர்.
 14. பிறகு இருவரும் அங்கு கட்டப்பட்டிருக்கும் திண்ணையில் சிறிது நேரம் அமைதியாக அமருகின்றனர். கோவிலை விட்டு கிளம்பும் முன் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்வது முக்கியம்.
 15. அப்பொழுது கோவிலில் ஒரு சேவகர் சுண்டல் பிரசாதம் கொடுப்பதைப் பார்த்து ஹரிணி ஓடிப் போய் தன் பங்கைப் பெற்றுக் கொள்கிறாள். அவளுக்கு சுண்டல் என்றால் அலாதிப் பிரியம்.
 16. கோவிலில் அனைவருக்கும் ஹரிணியை ரொம்பப் பிடிக்கும். அவள் ஒரு சிரிக்கும் மத்தாப்பு. ஹரிணியும் அவள் தாத்தாவும் கோவிலை விட்டுக் கிளம்பும் பொழுது பூ விற்கும் பெண்மணி அவள் கையில் அழகிய சிவப்பு ரோஜாவை கொடுக்கிறார். ஹரிணியும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறாள்.

girltemple

Harini goes to the temple!

sweetgirl

This is my first attempt at writing an illustrated children’s book, which I am planning to publish as an iBook for the iPad. The story is below. I am looking for an illustrator to collaborate with, who can create a colourful drawing for each of the bulletin points. The final version will probably be 15 pages. I will also be doing the same text in Tamil so the same illustrations can be used for the Tamil version as well. Since this will be self-published I cannot make any upfront payment to the illustrator but I’m hoping to share the profits 🙂 It’s more of a labour of love, so I am looking for some one with the same approach.

Thanks and please share this post with any illustrator who may be interested. My email id is sushima18@gmail.com.

~~~

Harini goes to the temple.

 1. Three year old Harini walks to the temple every day morning holding her grandfather’s hand.  She always looks pretty in her dress, fresh after her early morning bath.
 2. The temple is just a few houses away at the end of the street. Devotees come from from other neighbourhoods to pray at this temple.
 3. Harini and her grandfather buy sweet smelling jasmine flowers and an archana basket from the flower vendor. Can you identify all the items in the archana basket?
 4. They leave the slippers at the entrance of the temple and go wash their feet in the tap water. Harini likes the feeling of the cool water on her feet.
 5. She runs to the first altar, that of Lord Ganesha. He is the son of Lord Shiva and Goddess Parvathi. He is the remover of all obstacles in life.
 6. She knocks on her temples with her knuckles as taught by her grandfather.She then does a few sit-ups (thoppukaranam). Both these actions make the brain cells active and increase the power of the brain.
 7. The priest does archana to Lord Ganesha by chanting the hundred and eight names of the Lord. He then breaks the coconut and offers it to God along with the bananas. He decorates the idol with flowers and moves the lamp in a circular motion around the idol.
  archakar
 8. The priest then hands over the “prasadham,” that is the coconut and bananas offered to God, to Harini’s grandfather. He gives “Vibhuti” or holy ash to all those standing there and praying.
 9. Harini and her grandfather then visit all the other altars in the temple, and pray to all the different Gods. Can you identify these Gods?
  1. Lord Shiva and Goddess Parvathi
  2. Lord Subramanya, the brother of Lord Ganesha
  3. Swami Iyyappa, who was born to Lord Shiva and Lord Vishnu in Mohini Avatar.
  4. Goddess Durga
  5. Lord Dakshinamurthy.
 10. After praying to each deity, Harini and her grandfather do ‘Pradakshanam’, which is walking around the deity with reverence.
 11. Under a peepul tree, a devotee is doing puja to Nagar by herself without the help of the priest.  She is doing “abhishekam” to Nagar by bathing him with milk and water. She applies turmeric and then vermilion on Nagar, offers fruits and then does “Harathi” with lighted camphor.
 12. Harini and her grandfather then move on to worship the Navagrahas or the nine Gods denoting the nine planets. She prays to them asking for success in all her endeavours, and then does nine pradakshanam around the nine Gods.
 13. Now Harini and her grandfather sit for a few minutes in silence on the stone seats in the temple. It is important to always sit in silence for a few minutes before leaving the temple.
 14. Harini loves to visit the temple everyday with her grandfather. When walking to the temple and back home she always asks questions about everything she sees around and her grandfather always gave her a proper reply.
 15. Harini notices a temple volunteer distributing “prasadham”, which is “sundal” (cooked beans) that day. Harini loves to eat “prasadham” and gets her share.
 16. Everyone in the temple loves Harini as she is very cheerful like a ray of sunlight. As they walk out of the temple the flower vendor gives her a red rose which she accepts with a smile and carries it home.

girltemple

Photo credits:

http://blogs.nationalgeographic.com/blogs/intelligenttravel/2008/03/global-eye-batu-caves-malaysia.html
http://blogs.nationalgeographic.com/blogs/intelligenttravel/2008/03/global-eye-batu-caves-malaysia.html
http://wodumedia.com/diwali-the-festival-of-lights/a-girl-lights-earthen-lamps-in-a-formation-to-form-the-shape-of-hindu-god-ganesh-the-deity-of-prosperity-on-the-eve-of

ஜாலியா தமிழ் இலக்கணம் by Freemason! :-) (இலவசக் கொத்தனார்)

elavasam

இரண்டு வார்த்தைகளில் @elavasam அவர்களின் “ஜாலியா தமிழ் இலக்கணம்” புத்தகத்தைப் பற்றி  விவரிக்க வேண்டும் என்றால், இப்படித்தான் சொல்லவேண்டும் “User friendly” 🙂

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்து மற்றப்படி இலக்கண இலக்கியங்கள் அறிந்திராதவர்களுக்கு ஒரு ready reckoner இந்தப் புத்தகம். முக்கியமாக எழுத்துப் பிழை வராமல் எழுத இப்புத்தகம் பெரிதும் உதவும். எளிமையாக ஆரம்பித்து சினிமாப் பாடல்களையும் பேச்சு வழக்கில் உள்ள உரையாடல்கள் மூலமாகவும் தமிழ் இலக்கணத்தை அல்வா சாப்பிடுவது போல சுவையாகச் சொல்லித் தருகிறார்.

புணர்ச்சி, குற்றியலுகரம், வலி மிகும் இடங்கள், மிகா இடங்கள், இரட்டைக் கிளவி, தொகை, எழுவாய், செயப்படு பொருள், பயனிலை, உருபு, போலி, இவையெல்லாம் முன்பு எனக்கு Greek and Latin தான். இப்பொழுது புத்தகத்தை ஒரு முறை படித்து ஓரளவு தெளிவு பெற்றிருக்கிறேன். இன்னும் சில முறை இந்தப் புத்தகத்தைப் படித்தால் நானே தமிழ் ஆசிரயராகவும் மாறிவிடுவேன் 🙂

Mother saw father wear the turban suddenly என்பது ராகு காலத்தை நினைவு வைத்துக் கொள்ள உதவும் ஒரு வரி. 7.30 to 9, 9 to 10.30 என்று ஆரம்பித்து 4.30 to 6 என்று ஒண்ணரை மணி நேரக் கணக்கை திங்கள், சனி, வெள்ளி, புதன், வியாழன், செவ்வாய், ஞாயிறு என்று அந்த ஆங்கில வரியின் முதல் சில எழுத்துகள் கொண்டு ஞாபகம் வைத்துக் கொள்வது போல இலவசக் கொத்தனாரும் நிறைய இலக்கண விதிகளை நினைவில் வைத்துக் கொள்ளும்படி சுலபமான வழிமுறைகள் சொல்லிக் கொடுத்திருப்பது இனிமை, சிறப்பு! 🙂 அட்டவணைகள் வேறு!

மேலும் ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் bulletin points ஆக அந்த அத்தியாயத்தின் சாராம்சத்தைக் குறிப்புகளாக நினைவில் வைத்துக் கொள்ளும்படி தந்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

விலை எழுபத்தைந்து ரூபாய் தான். கிழக்குப் பதிப்பகத்தார் வெளியிட்டு உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்துப் பயன்பெறலாம்.