விக்ரம் கோவிலுக்குப் போகிறான்
- மூன்று வயது விக்ரம் தினமும் தன் தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு கோவிலுக்குப் போகிறான். அவன் காலையில் குளித்துவிட்டு பளிச்சென்ற உடையில் அழகாகக் கோவிலுக்குப் போகிறான்.
- அவன் வீட்டிலிருந்து நாலு வீடு தள்ளி தான் கோவில் உள்ளது. பக்தர்கள் அருகில் இருந்தும் தொலைவில் இருந்தும் அந்த கோவிலுக்கு வருவார்கள்.
- விக்ரமமும் அவன் தாத்தாவும் கோவில் வாசலில் உள்ள பூக்கடையில் வாசனை மல்லிகைப் பூக்களும் அர்ச்சனை தட்டும் வாங்குகிறார்கள். அர்ச்சனை தட்டில் உள்ள பொருட்கள் என்ன என்ன என்று சுட்டிக் காட்ட முடியுமா?
- கோவில் வாசலில் செருப்புக்களை அவிழ்த்துவிட்டு கோவில் உள்ளே நுழைந்து அங்கே உள்ள குழாயில் காலைக் கழுவிக் கொள்கின்றனர். சில்லென்று தண்ணீர் காலில் விழுவது விக்ரமிற்கு ரொம்பப் பிடித்திருக்கிறது!
- அவன் முதலில் விநாயகர் சன்னதிக்கு ஓடிப் போகிறான். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் பிறந்த மகன் விநாயகர்/பிள்ளையார். அவர் வாழ்க்கையில் வரும் இடர்களைப் போக்கும் முழுமுதற் கடவுள்.
- அவன் தாத்தா சொல்லிக் கொடுத்தப்படி கை விரல்களை மடக்கிக்கொண்டு நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்கிறான். பிறகு உட்கார்ந்து எழுந்து சில முறை தோப்புக்கரணம் போடுகிறான். இந்த இரண்டு செயல்களுமே மூளையின் செயல் திறனை அதிகப் படுத்தும்.
- கோவிலில் உள்ள அர்ச்சகர் பிள்ளையாருக்கு மலர்கள் தூவி அவரின் நூத்தியெட்டு பெயர்களைச் சொல்லி அர்ச்சனை செய்கிறார். பிறகு தேங்காயை உடைத்து, வாழைப் பழங்களையும் தேங்காயையும் பிள்ளையாருக்கு நிவேதனம் செய்கிறார். தொடுத்த மலர்களை விநாயகர் மேல் சாத்தி கற்பூர தீபம் ஏற்றி ஆரத்தி காட்டுகிறார்.
- அதற்கு பின் அர்ச்சகர் தேங்காய் பழ பிராசதத்தை விக்ரமின் தாத்தாவிடம் தருகிறார். பின்னர் சுவாமியை தரிசிக்க வந்திருந்த எல்லா பக்தர்களுக்கும் விபூதி பிரசாதம் கொடுக்கிறார்.
- பிறகு விக்ரமும் அவன் தாத்தாவும் கோவிலில் உள்ள மற்ற சுவாமிகளை வரிசையாகச் சென்று வணங்குகிறார்கள்.
- அங்கு வீற்றிருக்கும் கடவுள்கள் யார் யாரென்று உங்களால் சொல்ல முடியுமா?
- பார்வதியுடன் சிவபெருமான்
- விநாயகரின் தம்பி முருகப் பெருமான்
- ஆஞ்சநேயர்
- மகா விஷ்ணு ரங்கநாதராக
- லக்ஷ்மி தேவி
- ஒவ்வொரு சுவாமியையும் வணங்கிய பின் அந்த சன்னதியை தாத்தாவும் பேரனும் பக்தியுடன் வலம் வருகின்றனர்.
- பிறகு இருவரும் அங்கு இருக்கும் திண்ணையில் சிறிது நேரம் அமைதியாக உட்காருகின்றனர். கோவிலை விட்டு கிளம்பும் முன் அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு செல்வது முக்கியம்.
- கோவிலில் ஒரு சேவகர் சுண்டல் பிரசாதம் கொடுப்பதைப் பார்த்து விக்ரம் ஓடிப் போய் பிரசாதம் வாங்கிக் கொள்கிறான். அவனுக்கு சுண்டல் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
- கோவிலில் எல்லாருக்கும் விக்ரம் மேல் அலாதி பிரியம். அவன் ஒரு சிரிக்கும் மத்தாப்பு. விக்ரமும் அவன் தாத்தாவும் கோவிலை விட்டுக் கிளம்பும்போது பூ விற்கும் பெண்மணி அவன் கையில் அழகிய சிவப்பு ரோஜாவை கொடுக்கிறார். விக்ரமும் அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போகிறான்.
Jan 10, 2013 @ 15:45:39
This is simply superb! குழந்தைகளுக்கான ஒரு கோயில் சம்பிரதாய கையேடு-வழிகாட்டி. Must publish! All the best!
Jan 10, 2013 @ 16:17:55
Thank you 🙂
Jan 11, 2013 @ 05:37:37
Cute..Would come out great when illustrated with a cute girl in pavadai sattai 🙂
Jan 11, 2013 @ 06:05:25
நன்றி 🙂
Jan 14, 2013 @ 13:54:05
மிகவும் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு கோயில்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.
Feb 28, 2013 @ 12:40:46
Very nice. I need to preserve this for my grandchildren.
Feb 28, 2013 @ 13:20:45
I am writing for them only 🙂