விஷால், த்ரிஷா, சுனைனா மற்றும் சம்பத், ஜெயப்ரகாஷ், மனோஜ் பாஜ்பாய், ஜே.டி.சக்கரவர்த்தி நடித்துப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் திரு! விஷால், த்ரிஷா இருவரிடமும் நல்ல நடிப்பை வரவழைத்திருப்பதற்கு அவருக்கு பாராட்டுக்கள்!
ஆரம்பம் படு ஜோர். ஊட்டிக் காடுகளில் விஷால் மரத்தை வெட்ட வரும் வில்லன்களைப் பறந்து பறந்து பந்தாடுகிறார். உடம்பு நன்றாக ஜிம் பாடியாக உள்ளதால் வில்லன்களை அடித்துத் துவைப்பதை நம்ப முடிகிறது. நன்றாகவும் நடனம் ஆடுகிறார். தமிழ்நாட்டு ரித்திக் ரோஷன் என்று இவரைச் சொல்லலாம். அல்லது ரித்திக் ரோஷனை வட நாட்டு விஷால் என்றும் கூப்பிடலாம்.
சண்டைப் போடாத பெண்ணும் சரக்கடிக்காத ஆணும் கிடைக்கவே மாட்டான், நீ எல்லாத்தையும் கணக்கு வெச்சிருக்க, நான் காதலையே கணக்கில்லாம வெச்சிருக்கேன் போன்ற மணியான வசனங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. ட்விட்டரில் #NewBreakUpLine You don’t remember the colour of my dress. So I am breaking up with you, என்று தைரியமாக எழுதலாம். ஏனென்றால் இந்தப் படத்தில் உண்மையாகவே அது தான் காதலியும் காதலனும் பிரியும் காரணம்.
தீடீரென்று கதைக் களம் பாங்காக்கிற்கு மாறுகிறது. அங்கே தான் ட்விஸ்ட்! எந்திரனில் ரோபோ ரஜினியை விஞ்ஞானி ரஜினி பின்னாடி பாத்து ஒட்டு என்றதும் தலையைத் 360 degree திருப்பிப் பார்த்து ஓட்டுவார். அதைப் பார்த்து ஐஸ்வர்யா ராய் மயங்கி விழுவார். அந்த மாதிரி தான் நாமும் பாங்காக்கில் நடக்கும் கதையைப் பார்க்கும் பொழுது ஒரு மார்க்கமாக ஆகிவிடுவோம். அது தான் படத்தின் பலம் + பலவீனம்.
புதிய வியூகம். அதில் சந்தேகமே இல்லை. சைகோ பெஹேவியர் எனக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் என்னால் ரசிக்க முடியவில்லை. அதனால் படம் நன்றாக இல்லை என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை. பலருக்கு அந்த மாதிரி கதைகள் நிச்சயமாகப் பிடிக்கும். அந்த விதத்தில் பார்த்தால் படம் நன்றாகக் கையாளப் படப் பட்டிருக்கிறது.
த்ரிஷாவும் மிகவும் நன்றாக நடித்துள்ளார். நல்ல மெச்சூரிட்டி நடிப்பில். இன்னும் இளமையாகத் தெரிகிறார். நடுவில் வரும் பாடல்கள் நம்முடைய பொறுமையை மிகவும் சோதிக்கின்றன. தேவையே இல்லை. படத்தின் ஓட்டத்தில் தொய்வை ஏற்படுத்துகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அழகோ அழகு பாடல் நன்றாக உள்ளது. அஷ்டே!
பொங்கல் ரிலீஸில் இது முதல் இடம் பெரும். (மற்றவை அவ்வளவு மொக்கை என்று கேள்விப்பட்டேன்)
Jan 14, 2013 @ 15:00:43
அமஸ் ரிவ்யூ இது சமர் ரிவ்யூ படிச்சாச்சு..:)) இது எப்பவும் இருக்குறதை விட கொஞ்சம் வித்தியாச நடையா இருக்கே..இந்த ரித்திக்ரோஷன், மணிமணியான வசனங்கள் பாரா எல்லாம் பகடி தானே :))
Jan 14, 2013 @ 15:18:50
எனக்கு படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கணவருக்குப் பிடித்திருந்தது. பாரபட்சம் இன்றி விமர்சனம் செய்யும் முயற்சி இது 🙂 கண்டுப் பிடித்துவிட்டீர்கள் 🙂
Jan 14, 2013 @ 15:02:26
இப்பிடியொரு விமர்சனமா? உங்கள் விமர்சன முறை சிறப்பாகிக் கொண்டே போகிறது.
படம் பார்த்த நண்பர்கள் படம் சுமார் என்று சொன்னார்கள். உங்களுடைய விமர்சனத்தில் பார்க்கலாம் என்றளவில் இருக்கிறது. இருந்தாலும் விஷால் படத்தை அவசரப்பட்டு பார்க்க வேண்டியதில்லை.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைப் பார்க்க வேண்டும்.
Jan 14, 2013 @ 15:20:23
அதை விட இது நிச்சயமாக பெட்டர் 🙂 விஷால் ரொம்ப நன்றாக நடித்துள்ளார்!
Jan 22, 2013 @ 14:30:50
தேவையானத மட்டும் எழுதி இருக்கீங்க, சொன்ன மாதிரி பாட்டு இந்த படத்துக்கு தேவையே இல்ல short and sweet :)))
Jan 22, 2013 @ 14:59:45
நன்றி :-))