சினிமா சொல்லித் தந்த பாடம்

பட்டமளிப்பு விழாவில்

பட்டமளிப்பு விழாவில்

நான் திருமணமாகி அமெரிக்கா சென்ற போது என் கணவர் M.S. படிப்பின் கடைசி செமஸ்டரில் இருந்தார். அவர் இரவு லாபுக்கு சென்று வெகு நேரம் வேலை செய்யும் போது நான் வீட்டில் தனியாக இருக்காமல் அவருடன் சென்று GMAT படிப்புக்காக என்னை தயார் செய்துகொண்டு அடுத்த இரண்டு மாதத்தில் வந்த தேர்வையும் எடுத்துக் கொண்டேன். ஆனால் மேற்படிப்பு சேருவதற்கோ அதன் பின் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் GMAT மதிப்பெண் காலாவதியாகிவிடும் தருணம் வந்ததால் தான் அவசரமாக நான் கல்லூரியில் சேர்ந்தேன்.

என் கணவர் படித்தது டெக்சாஸ் மாகாணத்தில். அங்கு வேலை வாய்ப்பு இல்லாததால் கலிபோர்னியா மாகாணம் சென்றோம். அங்கு வேலை கிடைத்து சான் ஹோசேயில் குடியமர்ந்தோம். அப்பொழுது உடனே நான் கல்லூரியில் சேர எங்கள் நிதி நிலைமை இடம் கொடுக்கவில்லை. அவர் படிப்புக்கான கடனை அடைக்க வேண்டியிருந்தது. மேலும் நிரந்தரக் குடியுரிமியாயைத் தரும் பச்சை அட்டை (Green card) இல்லை என்றால் கல்லூரிக் கட்டணமும் அதிகம். அதற்காகப் பொறுமை காத்தோம். எங்கள் நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன். ஆனால் என் விசாப்படி நான் வேலைக்கு செல்ல முடியாது. அதனால் அவர் கணக்கில் வராமல் ஆனால் நான் செய்யும் வேலைக்குச் சற்றேக் குறைந்த சம்பளமாகக் கொடுத்து வந்தார்.

அடுத்த முடிவு பிள்ளைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி! பிள்ளைப் பெறுவதைத் தள்ளிப் போட வேண்டாம் என்று முடிவு செய்தோம். முதலில் மகள், பிறகு இரண்டு வருடங்கள் கழித்து மகன் பிறந்தான். அதற்குள் எங்களுக்கு பச்சை அட்டையும் வந்து விட்டது. இதற்கு நடுவில் நான் பகுதி நேர வேலைக்குப் போய் கொண்டு இருந்தேன்.

நாங்கள் வசித்த சான்ஹோசேயிலேயே படிப்பது என்று முடிவு செய்து  San Jose State Universityயில்  MBA பட்டப் படிப்பில் சேர்ந்தேன். அப்பொழுது என் மகனுக்கு இரண்டு வயது. ரொம்ப குறும்பு செய்யும் வயது. நான் படிப்பது அவனுக்கு சிறிதும் பிடிக்காது. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் எப்படித் தான் படித்தேன் என்று எனக்கே ஆச்சர்யமாக உள்ளது 🙂

என் GMAT மதிப்பெண் காலாவதியாவதற்குள் முதலில் ஒரு ப்ரீ ரெக்விசிட் வகுப்பு எடுத்திருந்ததால் ஒரே வருடத்தில் என் படிப்பை முடித்தேன், அதாவது மூன்று செம்ஸ்டர்களில். என்னுடைய மதிப்பெண்கள் 4.0 GPA. இதில் ஒரு சந்தோஷ நிகழ்வு என்னவென்றால் என் கணவரும் அதே கல்லூரியில் MBA (Executive programme) பண்ணிக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி வெளி நாடுகள் செல்ல வேண்டியிருந்ததால் நடுவில் அவர் படிப்பு தடைப் பட்டுக் கொண்டே வந்தது. ஆனால் படிப்பை நான் முடிக்கும் போதே அவரும் முடித்து இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பட்டம் பெற்றோம்.

நான் கடைசி செமஸ்டரில் இருந்த போதே என் வகுப்புத் தோழர்கள் அனைவரும் வெகு முனைப்போடு வேலை தேடிக் கொண்டிருந்தனர். நானும் என் ரெசியுமேவை என் நண்பர்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் அவர்கள் மூலம் கொடுத்து வந்தேன். ஆனால் உண்மையில் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு முழு நேர வேலை செய்ய நான் விரும்பவே இல்லை. வேலை வேட்டையில் தீவிரமாக இறங்குகிற நேரம் அது. ஆனால் நானோ மிகவும் குழம்பித் தவித்துக் கொண்டு இருந்தேன். என் படிப்புக்கு உதவியாக என் மாமியார் மாமனார் அங்கு வந்து தங்கி இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு என்ன செய்வது என்று மிகவும் கவலைப் பட்டேன்.

பட்டம் பெற்ற கையோடு வேலையில் சேர்ந்துவிடவேண்டும். சிறிது தாமதித்தாலும் சூடு ஆறிப் போய் வேலைக் கிடைக்காமல் போக அதிக வாய்ப்புண்டு. என் மதிப்பெண்களைப் பார்த்து என்னைச் சுற்றியுள்ள அனைவரும் உனக்கு உடனே நல்ல வேலைக் கிடைக்கும், அதனால் வேலைத் தேட சிறந்த முயற்சி எடுத்துக் கொள்ளும்படித் தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர்.

ஹவாயில் சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி என்ற சைவ சித்தாந்த மடாதிபதி இருந்தார். (http://en.wikipedia.org/wiki/Sivaya_Subramuniyaswami )அவர் கான்கார்டில் உள்ள அவர்களின் பழநி சுவாமி கோவிலுக்கு விஜயம் செய்யும் பொழுது நாங்கள் அவரை தரிசிக்க செல்வோம். வெள்ளை அமெரிக்கர், எல்லா ஆன்மிக மற்றும் வாழ்வியல் கேள்விகளுக்கும் சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் அளிப்பார். அவரிடம் நான் வேலைக்குப் போவது பற்றிக் கேட்டேன். ஒரு தாயின் இடம் வீடு என்றார். ஒரு தாயே குடும்பத்துக்கு ஆணிவேர். இந்தக் காலத்துக்கு நான் சொல்வது ஏற்புடையதாகத் தெரியாவிட்டாலும் உன் கேள்விக்கு இது தான் பதில் என்றார்.

சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி

சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி

எங்கள் பொருளாதார நிலை நான் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை எனக்கு உணர்த்தினாலும், என்னை சுற்றியுள்ள அனைத்து இந்திய பெண்மணிகள் குழந்தைகளையும் பராமரித்து பாங்குடன் வேலைக்குச் செல்வதை பார்த்தும் என்னால் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு செலவழித்துப் படித்துவிட்டேன். படித்தால் முழு நேர வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சமுதாய அழுத்தும் என்னை அலைக்கழித்தது.

அப்பொழுது ஒரு நாள் தொலைக் காட்சியில் (City Slickers http://en.wikipedia.org/wiki/City_Slickers) என்ற ஆங்கில படத்தை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அது என் வாழ்க்கையை ஒரு நொடியில் மாற்றியமைத்தது. மூன்று நண்பர்கள் தம் தம் வாழ்க்கையில் ஒரு நிம்மதியின்றி இருக்கும் தருவாயில் அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு adventure sportஐ மேற்கொள்கின்றனர்.  மாடுகளை ஒர் இடத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு ஓட்டிச் செல்ல வேண்டும். அதற்காக அவர்கள் வசிக்கும் நியுயார்க்கில் இருந்து நியுமெக்சிகோ செல்கின்றனர். அங்கிருந்து கொலராடோ என்ற மாநிலத்துக்கு மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டும். நியுயார்க்கில் நகர வாழ்க்கை வாழ்ந்து, நடு வயதைத் தொட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு இது பெரும் சவாலாக அமைகிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரம் கர்ளி என்பவருடையது. அவர் தான் அந்த மாட்டு மந்தைகளை சரியாக இவர்கள் எல்லாரும் கொண்டு சேர்க்கின்றார்களா என்பதை மேற்பார்வை பார்க்கும் பாஸ்! அவரின் பாத்திரப் படைப்பு அருமை. இந்த மூவரைத் தவிர இன்னும் சிலரும் இந்த மாடுகளை ஒட்டிக் கொண்டு சேர்க்க முயற்சி செய்யும் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். இது ஒரு Cow Boy கதை என்றும் வைத்துக் கொள்ளலாம்.

City Slickers Poster

City Slickers Poster

பலப் பல இடையூறுகளைக் கடந்து எப்படி கொலராடோ போய் சேருகிறார்கள் என்பது மீதிக் கதை. நகைச்சுவைப் படம். இருப்பினும் கடைசியில் கர்லி வாயிலாக அந்த மூன்று நண்பர்களும் ஒரு உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். நம்முடைய வாழ்வில் நாம் ஏதோ ஒன்றை மட்டுமே மிகவும் நேசிக்கிறோம். அதை மட்டுமே முக்கியம் என்று உணர்ந்து  தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதன் மேல் மட்டுமே நம் முழு கவனம் இருக்கவேண்டும். வாழ்க்கையில் நிம்மதி தானே வந்து நம்மை அடையும்!

I then realized that my “one thing” is my family. நான் என் முடிவை என் கணவரிடம் தெரிவித்தேன். பகுதி நேர வேலைக்கு மட்டுமே செல்வேன், அதுவும் என் குழந்தைகளையும் கணவரையும் பராமரிப்பதில் பாதிப்பு வராத வரையில் என்று முடிவெடுத்து அவரிடம் சொன்னேன். நான் அங்கே மாலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். சனி ஞாயிறுகளிலும் வகுப்புகள் எடுப்பேன். அந்த சமயத்தில் என் கணவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார். இந்தியா திரும்பிய பின் நான் வேலைக்குச் செல்லவில்லை. என் பெற்றோர்கள் மற்றும் என் கணவரின் பெற்றோர்களையும் பராமரிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.

Hats off to those women who manage their families and careers efficiently! அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று உணர்ந்ததினால் நான் எடுத்த முடிவு இது 🙂 இன்று வரை இதற்கு நான் வருந்தியதில்லை. மகிழ்ச்சியே அடைந்திருக்கிறேன். அதற்குத் துணையாக இருந்த என் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் என் நன்றி.

52 Comments (+add yours?)

 1. karthi
  Feb 19, 2013 @ 08:02:14

  நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கு பிடித்தமானவையே.அதைப்பற்றி நாம் எப்போதும் வருத்தப்படக்கூடாது. ஒரு செயல் நம்மை திருப்திப்படுத்தும்போது அதன் முடிவைப்பற்றி நாம் பெரிதாய் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.நல்ல பதிவு 🙂

  Reply

 2. karki (@iamkarki)
  Feb 19, 2013 @ 08:04:40

  Lovely family. அருகில் இருந்த பார்க்கும் வாய்ப்பு சில முறைகள் கிடைச்சதால இன்னும் மகிழ்ச்சியா இருக்கு.. சேகர் சாருக்கும் my regards..

  Reply

 3. yathirigan
  Feb 19, 2013 @ 08:08:32

  is there a english version of this blog ?

  Reply

 4. Vijayashankar
  Feb 19, 2013 @ 08:23:30

  வாழ்க்கை தத்துவத்தை உங்கள் சொந்த வாழ்க்கை மூலம் அழகாக சொல்லியுள்ளீர்கள்!

  Reply

 5. @anuatma
  Feb 19, 2013 @ 08:39:35

  என் அம்மா வேலைக்குப் போன ஊரில் பள்ளி இல்லாததால் நான் என் மாமா வீட்டில் வளர்ந்தேன். கஷ்டம் என்ற எதுவும் இல்லை. ஆனாலும் பெற்றோரைப் பிரிந்திருந்த ஏக்கம் இருந்தது. அதனாலேயோ என்னமோ வேலைக்கு போகும் எண்ணமே இருக்கவில்லை. பொறியியல் கல்லூரி முடிக்கும் சமயம் எல்லாரும் வேலை தேடும்போதும் என்னால் தேட முடியவில்லை. இப்பொழுதும் என்னால் வீட்டில் 100% பிஸியாக இருக்க முடிகிறது. May be some are designed like that. 🙂

  Reply

 6. மழை!!
  Feb 19, 2013 @ 09:03:31

  ஹாய் மா..

  முதல்ல நன்றி சொல்லிக்கறேன். நாளை எனக்கும் இதே போன்ற குழப்பங்கள் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம். எப்படி முடிவெடுப்பது என்று உணர வைத்ததற்கு நன்றிம்மா. நான் வேலைக்குப் போவதை முதன்மையாகக் கருதலாம். ஆனால் உங்கள் பதிவு எனக்கு உபயோகமாக உள்ளது.
  :-))))))))

  Reply

 7. Prasannaa S (@tcsprasan)
  Feb 19, 2013 @ 09:21:47

  Nicely written. Its very important that we do what we love to do. 🙂

  Reply

 8. Sudharsan (@vSudhar)
  Feb 19, 2013 @ 10:19:14

  நீங்களும் ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ் தான் ! மனதுக்கு பிடித்ததை செய்வது ! அந்த கொடுப்பினை எல்லாருக்கும் கிடைக்காது அல்லது அதை முடிவெடுக்கும் திறன் அந்த சமயத்தில் இருக்காது.

  வாழ்க்கை அனுபவங்களை நீங்கள் எழுதும்போது நன்றாக எழுதுறீங்க.

  Reply

 9. @thachimammu
  Feb 19, 2013 @ 10:46:38

  சுஷிமா மா, நீங்கள் அமைத்துக் கொண்ட பாதை எவ்வளவு சரியானது என்பதற்கு உங்கள் அழகான, ஆனந்தமான குடும்பமே சாட்சி. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

  Reply

 10. PVR (@to_pvr)
  Feb 19, 2013 @ 10:48:35

  Excellent. You have described the critical moment very well. I loved it. 🙂

  Reply

 11. Rex Arul
  Feb 19, 2013 @ 12:02:54

  அருமையான பதிவு. சுவாமிஜி சொன்ன கருத்துகளும், அவை இன்றைய காலக்கட்டத்தில் தவறாக பாவிக்கப்படும் அபாயம் உள்ளதை, அவரே உண்ர்ந்திருந்ததை, உங்களிடம் அழகாக உணர்த்தியதாக இருக்கட்டும், சினிமா என்றாலே வெறும் கேளிக்கை தான், அதனால் ஒரு உபயோகமும் இல்லை என்ற mythஐ போக்கும் வகையில் எப்படி ஒரு சினிமா,உங்களை ஒரு தீர்க்கமான முடிவின் பால் இழுத்துச் சென்றது என்று காட்டியதும், “சில” பெண்கள் எப்படித் தான் குடும்பத்தையும் வேலையையும் “efficient” ஆக செய்கிறார்கள் என்று வியந்ததும், ஆக மொத்தத்தில், அருமையான பதிவு. பகர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  முடிவுகளை சரியாக எடுத்த்தாலும், உங்களின் prioritiesஐ உங்களுக்கே நீங்கள் உணர்த்தியதாலும், காலபோக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஜீவராசியாக இல்லாமல், பயணத்தின் பாதையையும் செதுக்கிட உங்களால் முடிந்ததை வியக்காமல் இருக்கமுடியவில்லை.

  வாழ்த்துகள் 🙂

  Reply

 12. A Balasubramanian
  Feb 19, 2013 @ 14:27:36

  At times in our life, we forced to take some decisions but over a period u will always cherish the moment of that decision making. I am sure u had a great decision making power & u stood by your conscience. Great sharing for this present day youths….

  Reply

 13. Anonymous
  Feb 19, 2013 @ 14:41:57

  வாழ்க்கை ரொம்ப அழகானது… நமக்கு சரியான முடிவெடுக்க எது உதவுதுன்னே தெரியாது.. ரொம்ப நல்ல உங்க அனுபவத்தை பகிர்ந்ததுக்கு நன்றி.. @sakthivel_twitt

  Reply

 14. vivaji (@vivaji)
  Feb 19, 2013 @ 15:03:27

  சில முடிவுகளை தைரியமாக எடுத்திருக்கிறீர்கள். சபாஷ்!

  Reply

 15. balaraman
  Feb 19, 2013 @ 15:07:19

  சரியான முடிவு எடுத்தீர்கள். நிம்மதி பெருகட்டும். அதே நேரத்தில் என் அம்மாவை எண்ணி வியக்கிறேன்! 🙂

  Reply

  • amas32 (@amas32)
   Feb 19, 2013 @ 16:54:19

   She must have been a working mom, right? 🙂

   Reply

   • balaraman
    Feb 20, 2013 @ 17:06:06

    ஆமாம்மா! எங்க மூணு பேரையும் வளத்து படிக்க வச்சு, வீட்டு வேலைகளையும் பார்த்து(வேலைக்காரி கிடையாது), எங்க அப்பா முனைவர் பட்டப்படிப்பு ஆராய்ச்சிகளுக்கு உதவியா இருந்து, பள்ளி ஆசிரியையாவும் பணி புரிஞ்சாங்க (திருமணத்துக்கு பின் தான் MA முடிச்சாங்க). இப்பவும் பள்ளி ஆசிரியையா வேலை பாத்திட்டிருக்காங்கன்றது குறிப்பிடத்தக்க ஒன்று. 🙂

   • amas32
    Feb 21, 2013 @ 03:07:08

    என்னுடைய நமஸ்காரத்தைக் கண்டிப்பாக அவரிடம் சொல்லுங்கள்.

 16. Natarajan
  Feb 19, 2013 @ 15:29:58

  Brutally Honest

  Reply

 17. rajinirams
  Feb 19, 2013 @ 17:19:12

  அருமை.மிகவும் நெகிழ்ச்சியான தொகுப்பு.”நாம் தேவையான ஒன்றின் மேல் கவனமாக இருந்தால் நிம்மதி தானே தேடி வரும்”-மிகவும் அர்த்தமுள்ள வரிகள். வாழ்த்துக்கள்.

  Reply

 18. Lakshmi
  Feb 19, 2013 @ 19:06:44

  Happy to see this post. Now I’m in your position, trying to do GRE(with my 2 kids, son 2 years). I wonder how did you take this decision after your GMAT & MBA :). I hope I can manage my family & carrier efficiently. – Lakshmi(@lsrsm)

  Reply

 19. GiRa ஜிரா
  Feb 20, 2013 @ 02:40:05

  மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு தாயின் மனதின் ஓட்டங்கள் அல்லவா. நீங்கள் எடுத்தது மிக நல்ல முடிவு. குழந்தைகளை யாரும் வளர்க்கலாம். அன்பைக் கொடுக்கலாம். ஆனால் பெற்றோர் இருந்து வளர்ப்பதுக்கு ஈடாகாது. உங்கள் குரு சொன்னது உண்மைதான் என்பது என் கருத்து. தானும் வேலைக்குச் சென்று பிள்ளைகளையும் வளர்த்து எல்லாருக்கும் சமைத்தும் போட்ட பெண்களையும் நான் அறிவேன். அவர்கள் மனவலிமையை வணங்குகிறேன்.

  Reply

 20. Ram (@cbe_rocks)
  Feb 20, 2013 @ 03:46:58

  Nice.. உங்களுக்கு CitySlickers உதவின மாதிரி, உங்களுடைய இந்த போஸ்டிங் பல பேருக்கு கண்டிப்பா உதவி பண்ணும்..
  Please do your next posting about, how you made the decision to move to India and how the kids coped with your decision to move. This will help a lot of people, including me (wink wink 👀), who are in a similar situation not able to make that decision to move.

  Reply

 21. amas32 (@amas32)
  Feb 20, 2013 @ 15:58:08

  Reply

 22. LKG (@chinnapiyan)
  Feb 21, 2013 @ 07:39:08

  முதலில் உங்கள் கணவருக்கு பாராட்டு அப்புறம் உங்களுக்கு.எவ்வளவு மன உளைச்சல்,உழைப்பு தியாகங்கள். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு நீங்களே உதாரணம். கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் அதை சிதைத்துவிடாமல் கொண்டுவந்து இளம்தலைமுறைக்கு கொடுத்துள்ளீர்கள். நீர் வாழ்க நின் குலம் வாழ்க.நின் சுற்றமும் வாழ்க. நன்றி

  Reply

  • amas32
   Feb 21, 2013 @ 08:11:25

   உங்கள் நல்ல வார்த்தைகள் என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்கிறது. மிக்க
   நன்றி!

   Reply

 23. Gowtham
  Feb 21, 2013 @ 15:41:11

  Super amma.. @HarryGowtham

  Reply

 24. kamala chandramani
  Feb 22, 2013 @ 03:56:48

  பொருளாதார நிலை காரணமாக என் மகளுக்கு ஒரு வயது, மகனுக்கு நான்கு வயது இருக்கும்போது வேலைக்கு போகும்படி ஆயிற்று. என் குழந்தைகளின் குழந்தைப்பருவ விளையாட்டுகளையும், மழலைச் சொற்களின் இனிமையையும் ரசிக்க முடியாமல் போனதற்கான வருத்தம் இன்றும் எனக்கு உண்டு.எல்லாம் இறைவன் செயல்!

  Reply

  • amas32
   Feb 22, 2013 @ 04:01:56

   ஆமாம் எல்லாம் இறைவன் செயல். அதற்கு தான் என் நன்றி அந்த பரம்பொருளுக்கே.

   Reply

 25. Rajarajeswari jaghamani
  Feb 23, 2013 @ 02:07:14

  Hats off to those women who manage their families and careers efficiently! அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று உணர்ந்ததினால் நான் எடுத்த முடிவு இது இன்று வரை இதற்கு நான் வருந்தியதில்லை.

  முடிவு எடுத்தபின் வருந்துவதாவ்து ..!வாழ்த்துகள்..

  Reply

  • amas32
   Feb 23, 2013 @ 02:33:04

   இல்லை மாற்றி எடுத்திருக்கலாம் என்று சில சமயம் தோன்றுமே! Hind sight is
   always 20/20 கடவுள் அருளால் அப்படி இல்லை.

   Reply

 26. Gowri
  Mar 22, 2013 @ 19:41:48

  அம்மா வேலைக்கு போவது குறித்து மிகுந்த மன குழப்பத்தில் இருந்த பொழுது உங்கள் பதிவு நிறைய தெளிவுபடுத்துகிறது. நான் கலிபோர்னியவில் வசிக்கிறேன். ஒரு குழந்தை 8 வயது, எனினும் அவளை ஆஃப்டர் ஸ்கூல் ப்ரோக்ர்யாம் இல் விட மனது வரவில்லை அம்மா. என் அம்மாவே எனக்கு சொல்வது போல் இருந்தது உங்கள் எழுத்து. ஏதோ ஒரு குற்ற்அ மனநிலைஇல் இருந்து விடுபட்டது போல் இருக்கிறது . நான் தொடர்ந்து உங்கள் வலைப்பூ வாசித்து வருகிறேன். உண்மைஇல் மிகுந்த ஆறுதலாய் இருக்கின்ருது

  Reply

  • amas32
   Mar 23, 2013 @ 02:02:28

   உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. பணம்
   வாழ்க்கைக்குத் தேவை. ஆனால் பணம் எதற்கு சம்பாதிக்கிறோம் என்று ஒரு நிமிடம்
   சிந்தித்தால் குழந்தைகளுக்காக என்று உடனே புரியும். அப் கோர்ஸ் வேறு பல
   காரணங்களுக்காகவும் தான். அனால் ஒரு குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதும் ஒரு
   செயற்கரிய செயலே. பதினெட்டு வயது ஆனதும் குழந்தை படிக்க வேறு இடம்
   சென்றுவிடுவாள். உங்கள் முடிவுக்கு என் பாராட்டுகள் 🙂

   Reply

   • Gowri
    Apr 22, 2013 @ 01:54:49

    Amma ,I am Gowri. I ve commented in some of our posts. I am a silent reader of your blog and listening all your podcast too.From your tweets I understand u r in Seattle now, I am in Irvine,CA If you are planning to visit LA,Let me know if I can meet you in some place, pl come to our home too. I dont know your email id/phone no ., sorry for inviting you here.

   • amas32
    Apr 22, 2013 @ 14:00:38

    I will be glad to visit you or meet you some place. I am in LA from the 17 of May to 17th of June. My email id is sushima18@gmail.com. Please write to me so that we can discuss further 🙂

 27. Gowri
  Mar 22, 2013 @ 19:43:14

  Sorry for typo errors. I dont know which software to use to type tamil .. I just copy pasted everything.

  Reply

 28. Siva
  Apr 17, 2013 @ 03:01:48

  It is not easy to balance family and work. Something have to give to make it work. This challenge my family face as well as my wife started working last year or so. Enjoyed reading Tamil blog .

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: