ஒரு நல்ல திரைக்கதை எப்படிப்பட்ட சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சூதுகவ்வும் ஒரு நல்ல உதாரணம். நலன் குமாராசமி எழுதி இயக்கி இருக்கிறார். இது அவரின் முதல் படம் என்று நம்ப முடியவில்லை. சமீபத்தில் நகைச்சுவை என்ற பெயரில் நிறைய படங்கள் வந்து விட்டன. ஒன்றுமே சொல்லிக் கொள்ளும் படி இல்லை. இந்தப் படம் நிச்சயமாக விதிவிலக்கு. கிரேசி மோகன் படம் போல வரிக்கு வரி சிரிப்பு அலை. சில சமயம் ஒரு சிரிப்பலை முடிவதற்குள் அடுத்த ஜோக் வந்து, காதில் விழாமல் கூடப் போய் விடுகிறது.
சட்ட விரோதச் செயலைப் பற்றிய கதை என்றாலும் அதில் கேவலமாக எதையும் புகுத்தாமல் கையாண்டிருப்பதற்கு இயக்குனருக்கு ஒரு பாராட்டு! அதனாலேயே இந்தப் படத்தைக் குடும்பத்துடன் பார்க்கலாம். கதை முழுக்க சிறு சிறு எதிர்பாராத ட்விச்டுகள் சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது. விஜய் சேதுபதிக்கு நடுத்தர வயது பாத்திரம், மிகவும் நன்றாக செய்திருக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, இரண்டு படத்தில் இருந்தும் வேறுபட்ட கதாபாத்திரம். அவர் கூட நடிக்கும் மற்ற மூவரும் ரொம்ப இயல்பாக நடித்துள்ளனர். பெண் கதாப்பாத்திரம் (சஞ்சிதா ஷெட்டி) புது மாதிரியாகப் புகுத்தப் பட்டிருப்பது கதாசிரியரின் கற்பனை வளத்தைக் காட்டுகிறது. ராதா ரவியும், M.S.பாஸ்கரும் தான் பழைய முகங்கள். கனகச்சிதமாகப் பொருந்துகிறது அவர்களுடைய ரோல்ஸ்! பின்பாதியில் வரும் யோக் ஜப்பியும் பாத்திரத் தன்மையைஉணர்ந்து நன்றாக நடித்துள்ளார். அதே போல் இதர பாத்திரங்களும், ஒன்றுமே சோடை போகவில்லை.
இடைவேளைக்குப் பிறகு முக்கால்வாசித் திரைப்படங்களில் தொய்வு ஏற்பட்டுவிடும். இதில் கடைசி சீன் வரை விறுவிறுப்புக் குறையவில்லை. பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். காசு பணம் துட்டு மணி மணி என்று ஒரு தமிழ் கவிதையாக ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது 😉 லோ பட்ஜெட் படம், அதனால் சிம்பிளாக உள்ளது. காதலில் சொதப்புவது எப்படி மாதிரி கேப்மாரித்தனத்தில் சொதப்புவது எப்படி என்பது தான் இந்தப் படம்!
எப்பவுமே இயக்குனர்களின் முதல் படம் சூப்பராக இருக்கும். அடுத்து அவர் எடுக்கும் படங்களைப் பொருத்தே அவரின் அசல் திறமை தெரியும். ஆனால் முதல் படத்திற்கு இயக்குனர் எந்த இடத்திலும் சொதப்பாமல், லூஸ் என்ட்ஸ் இல்லாமல் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் முழு கவனம் செலுத்தி பூர்த்தி செய்திருக்கிறார். என்ன, சீனுக்கு சீன் குடி, சிகரெட்டு, அது தான் நெருடுகிறது. ஆனால் கயவன் வெள்ளை வேட்டிக் கட்டி திருநீறு பூசிக் கொண்டு கங்கா ஜலமா அருந்துவான் என்று இயக்குனர் கேட்கலாம். கொஞ்சம் சமூக அக்கறையோடும் நல்ல படங்கள் எடுத்தால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும் 🙂
May 13, 2013 @ 02:50:40
சூப்பர்மா 🙂
May 13, 2013 @ 02:54:15
இதுவரை படம் பார்க்குமுன்னே விமர்சனம் படிக்கும் வாய்ப்பு.முதல் முறையா பார்த்தபின்.என்மனதில் உள்ளதை அப்படியே பிரதிபளித்துள்ளீர்கள். படத்தை ரசித்தேனேயன்றி அதையும் தாண்டி சமூக அக்கரை பற்றி நிம்போல் என்க்கு தோன்றவில்லை. உங்கள் வார்த்தை பிரயோகம் அருமை. நன்றி வாழ்க
May 13, 2013 @ 03:05:07
//சீனுக்கு சீன் குடி, சிகரெட்டு, அது தான் நெருடுகிறது.// I see this in.lot of recent movies. Was wondering is that the actual reflection of the younger generation today? 😦
//காசு பணம் துட்டு மணி மணி என்று ஒரு தமிழ் கவிதையாக ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது// There is one more டவுசர் கிழிஞ்சுபோச்சு song 🙂
BTW why you haven’t watched udyam nh4 yet
May 13, 2013 @ 03:46:53
ஒளிவு மறைவு இல்லாமல் கனகச்சிதமாக விமர்சனம் எழுதுவது நன்றாக இருக்கிறது. நான் படங்கள் பார்ப்பதில்லை. ஆனால் உங்கள் விமர்சனங்களைப் படிக்கிறேன். வாழ்க!
May 13, 2013 @ 03:47:56
Thank you 🙂
May 18, 2013 @ 03:57:32
THANKS FOR A GOOD FILM REVIEW! GREETINGS FROM NORWAY!
May 18, 2013 @ 04:55:32
Thank you :-))