நான் @rexarul ஐ ட்விட்டரில் பாலோ செய்து அவர் நட்பைப் பெற்றிருந்தேன். அவர் இந்தப் போட்டியை ஆரம்பித்தப் பொழுது நட்பிற்காக தினம் அவரின் புதிர் வலைத்தளத்திற்குச் செல்வேன். க்விசிற்கு உண்டான பாட்டைப் பற்றி எழுதும் அழகான குறிப்புக்களைப் படிக்கவும் இசை துணுக்கைக் கேட்டு, லைப் லைன் க்ளுவையும் பார்த்து முயற்சி செய்யவும் தவற மாட்டேன். ஒன்றுமே புரியாது. இதில் சில ட்வீப்ஸ் புதிர் போட்ட ஐந்து நிமிடத்தில் டி எம் செக் பண்ணவும், அல்லது பதில் போட்டாச்சு என்று ரெக்சுக்குப் ட்வீட்டுவர்! இதைப்பார்க்கும் பொழுது என் ஆச்சர்யத்துக்கு அளவே இருக்காது! இவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஜீனியசாக இருக்கவேண்டும் என்று அசந்து நிற்பேன்.
பிறகு ஒரு நாள் BGM புதிர். அந்தப் படத்தை நான் பார்த்திருந்ததால், கொடுத்தக் க்ளூவை வைத்துக் கண்டுபிடித்துவிட்டேன். பிதாமகன்! என்னாலேயே நம்பமுடியவில்லை. மகிழ்ச்சியான ஒரு தருணம். நானும் முயற்சி செய்தால் ஒன்றிரெண்டாவது சரியாக விடையளிக்கலாம் என்று அது கொடுத்தது ஒரு நம்பிக்கை. எனக்கு ராஜா இசை புதுசு. நான் அவர் பாடல்களைக் கூர்ந்து கேட்டதில்லை. நான் வளரும் பொழுது ரேடியோவில் எல்லாம் அவர் பாடல்களைக் கேட்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அப்படிக் கேட்காததானால் நான் பின்பு வெளிநாட்டில் இருந்த பொழுது அவரின் golden period ஆன 80’s and early 90’s பாடல்களைக் கேட்க தவறிவிட்டேன். ராஜா fans ஆக இருந்திருந்தால் எங்கிருந்தாலும் அவர்கள் அவரின் பாடல்களைத் தேடிக் கண்டுப்பிடித்துக் கேட்டு ரசித்திருப்பார்கள். நான் அந்த category இல்லை. அதையும் தவிர இசை ஞானமும் கிடையாது. கேட்க இனிமையாக இருக்கும் பாடல்களை விரும்பிக் கேட்கும் ஒரு சாதாரண பெண்.
அதனால் நான் இசையை வைத்துப் பாடலைப் பிடிக்க மாட்டேன். அவர் கொடுக்கும் க்ளூக்கள் தான் துணை! So it was a laborious process. I have spent nearly 8 hours on certain clues. நடிகை ராதிகா அல்லது நடிகர் சத்யராஜ் பாடல் என்று க்ளூ மூலம் தெரிந்தால் அந்த நடிகருடைய wiki page க்குப் போய் அவரின் எல்லாப் படங்களையும் எடுத்து அதில் எதெல்லாம் ராஜா இசை என்று பார்த்து ஒரு புத்தகத்தில் நோட் பண்ணி வைத்துக் கொள்வேன். பிறகு அவர் text இல் கொடுக்கும் சில க்ளூக்களை வைத்து அதையும் narrow down பண்ண முயற்சி செய்வேன். அதாவது டூயட் என்று சொல்லியிருந்தால் தனியாக ஒருவர் மட்டும் பாடும் பாடல்களை eliminate செய்து விட்டு ஒவ்வொருப் பாடலையும் கேட்பேன். சில சமயம் அவர் கொடுத்த இசைத் துணுக்கு முடிவில் கூட வரும். ரொம்பப் பொறுமை வேண்டும். என் கணவருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். இரவு டிபனை அவசரமாகக் கையில் கொடுத்து மோரை ஒரு டம்ப்ளரில் ஊற்றி பக்கத்தில் வைத்துவிடுவேன். சில சமயம் புதிரைக் கண்டுபிடிக்க இரவு பன்னிரெண்டு மணியாகும். திரு @vrsaran ஐத் தான் பதில் சரியா என்றுக் கேட்பேன். அவர் என் ஆர்வத்தைப் பார்த்து எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தார். விட்டுவிடலாம் என்று நினைக்கும் தருவாயில் என்னை ஊக்குவித்து இரண்டாம் சீசனில் 100 மார்க் வாங்கும்படி செய்தார். என்னைப் பொறுத்த வரை இது ஒரு இமாலயச் சாதனை. என் குழந்தைகள் தொலைபேசியில் கூப்பிடும் பொழுது, இரு இதை சால்வ் பண்ணிட்டு உன்னிடம் பேசுகிறேன் என்று கூறியுள்ளேன். இரவு கண்டுப்பிடிக்க முடியாவிட்டால் அடுத்த நாளும் தொடரும்.
சில சமயம் கண்டுப் பிடிக்க வேண்டும் என்ற வெறி, க்ளூவில் உள்ள அந்த பாடலாசிரியரையோ பாடகரையோ நேரிலோ தொலைபேசியிலோ தொடர்புக் கொண்டு கேட்டுவிடலாமோ என்று தோன்றும் அளவுக்கு இருந்திருக்கு. ஒரு முறை படத்தின் பெயரைக் கண்டுப்பிடித்துவிட்டேன், ஆனால் வீட்டில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. அதனால் பாடலை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே பக்கத்தில் இருக்கும் CD கடைக்குச் சென்று 80’s ராஜா பாடல்கள் வேண்டும் என்று கேட்டேன், படத்தின் பெயரையும் சொன்னேன். அவர் கைக்காட்டிய இடத்தில் குப்பையாக CDக்கள் கிடந்தன. அதில் அந்தப் படத்தைத் தேடிக் கண்டுப்பிடித்து காரில் உள்ள சிஸ்டத்தில் போட்டுப் பாடலைக் கண்டுகொண்டேன் 🙂 இதை @vrsaran இடம் சொன்னபோது நான் மாஃபியா கும்பலின் உறுப்பினர் ஆயாச்சு என்று கூறினார் 🙂
நான் பல சமயங்களில் வயிற்று வலியினால் அவதிப்படுவேன். (Irritable Bowel Syndrome) அந்த சமயங்களில் என்னால் பாடல் தேடுவது முடியாத காரியம். ஆனால் என் கணவர் நான் இந்த புதிர் போட்டியில் பங்கேற்கத் துவங்கியபின் என் வலி வரும் நேரம் குறைந்துள்ளதாக நினைக்கிறார். அது உண்மை என்றால் அந்தப் புகழ் ராஜாவுக்கும் ரெக்சுக்குமே உரியது!
தேடித் தேடிக் கண்டுபிடித்ததால் இதுவரை நான் கேட்காத பலப் பலப் பாடல்களை கேட்கும் பாக்கியம் கிட்டியது. மேலும் நான் தேடும் பாடல் அதுவல்ல என்று தெரிந்தும் அந்தப் பாடலை முழுமையாகக் கேட்டு முடிப்பேன், அவ்வளவு அருமையாக இருக்கும் பாடல்கள். இதனால் நேரம் அதிகமானாலும் இசையை அறிந்துக் கொண்டேன். ஒன்றுமே தெரியாமல் புதிருக்குள் நுழைந்த நான், இசையைக் கேட்டவுடன் இது 80’s பாடல், இது 90’s பாடல் என்று differentiate பண்ணும் அளவுக்கு வளர்ந்தேன். முடிவை நெருங்கும் வேளையில் சீக்கிரம் identify பண்ணக் கற்றுக் கொண்டேன். இதில் சிகரம் 359/365! Rex won his Oscars that day! Just listened to the music bit he had uploaded and I identified the song. Did not read the text, did not look at the LL clue! This is what I wrote in the comment section.
“எனக்கு இன்று இருக்கும் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை )))))
இசை துணுக்கைக் கேட்டவுடன் பாடலைக் கண்டுபிடித்துவிட்டேன். இங்கு க்விசில் பங்குபெறும் அனைவருக்கும் இது தினப்படி நிகழ்ச்சியாக இருக்கலாம். எனக்கு இது மாபெரும் மகிழ்ச்சித் தருணம். நன்றி ரெக்ஸ்!
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா படத்தில் இருந்து ”
இதைவிட எனக்கு வேறு பரிசு வேண்டாம் 🙂
நான் இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்டவைகளை bulletin points ஆக பின்னூட்டத்தில் போட்டதை இங்கேயும் பதிவு செய்கிறேன் 🙂
Thank you @rexarul @irexarul The impact this #365RajaQuiz has created in me is tremendous.
1.Awareness of music in general and in particular of the nuances and intricate variations created by each musical instrument.
2.The fact that music can increase the emotional expression within me.
3.The urge to learn more in a systematic manner. I have probably memorized the Raja Films in an alphabetical order like Alabama, Alaska, Arizona, Arkansas… .
4.Self fulfillment is more important than a material prize.
5.There is a place for everyone in this society if you will to establish yourself.
6. There are lots of good people. You just have to look for them.
7.Inspiration is contagious.
8.Perseverance pays.
9.Tolerance.
If Isai gnyaani can tolerate the gross scenes in the innumerable movies where he was the music director and give such great back ground scores, why can’t we develop patience towards each other?
10. God lives in music.
Thank you very much Rex.
Sushima
(amas32)
நிகழ்ச்சி நிறைவு விழா பற்றிச் சொல்லாமல் இப் பதிவு நிறைவு பெறாது. 28.7.2013 அன்று ஒரு மினி கல்யாணம் தான். அன்று முஹூர்த்த நாளா என்று பார்க்க வேண்டும் 🙂 கோவை, பெங்களூர், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் க்விசில் பங்கேற்றவர்களும் ஆர்வமுள்ளவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். Technology is improved so much I say என்ற கிரேசி மோகனின் டயலாக் படி மாஸ்டர் ரெக்சும் இன்னும் பலரும் இணையத்தின் மூலம் (அவர்களுக்கு இரவு நேரம்) கலந்து கொண்டனர். அந்த இரவு, துளி தூக்கம் இல்லை அவர்களுக்கு. சிவராத்திரி தூக்கம் ஏது என்று மெட்டமைத்தவருக்கு நன்றி சொல்லும் வகையில் ராஜ ராத்திரியாக அவர்கள் இரவுப் பொழுது கழிந்தது. வந்தவர்களில் பலர் குடும்பத்துடன் வந்து குழந்தைகள் குறுக்கும் நெடுக்கும் ஓடியது தனி மகிழ்ச்சி. முதலில் ஜனனி ஜனனி என்ற பாடலுடன் நிகழ்ச்சித் தொடங்கியது. பெங்களூரில் இருந்து திரு ஸ்ரீதர் இந்த நிகழ்ச்சிக்கு வயலின் வாசிக்கவே ஸ்பெஷலாக வந்திருந்து அனைத்துப் பாடல்களுக்கும் வாசித்து சிறப்பூட்டினார். அடுத்து ரெக்ஸ் பேசினார். அவர் எப்படி ஒரு வருடம் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார், அதன் சவால்கள், ஒரு 30 வினாடி இசைத் துணுக்கை துல்யமான ஒலியாக நமக்குக் கொண்டுச் சேர்க்க அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். #thachimammu alias Srivatsan, @tcsprassan alias Prasanna ஆகியவர்கள் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள். ஸ்ரீவத்சன் க்விசில் வந்த அனைத்துப் பாடல்களையும் ஒரு தனி CD யில் போட்டு அனைவருக்கும் பரிசாக வழங்கினார். அதை தயார் செய்து கோவையில் இருந்து ஹக்கீம் பாய் எடுத்து வந்தார். அவர் அங்கு இசை CD கடை வைத்து நடத்துபவர். திரு @nchokkan திருவாசகமும் ராஜாவும் என்ற தலைப்பில் அருமையாகப் பேசினார். அதன் தொகுப்பை இங்கே படிக்கலாம். http://nchokkan.wordpress.com/2013/07/28/tvskmrja/ வந்திருந்த பலரும் ராஜாவின் இசை பற்றியும் இந்த புதிர் போட்டியின் தாக்கம் பற்றியும் பகிர்ந்துக் கொண்டனர்.
இசை வெள்ளத்தை அனுபவிக்க உணவும் தேவையாயிற்றே! உணவு வகைகளும் நிறைய இருந்தன. மதிய உணவிற்கு சப்பாத்தி, சன்னா, சாம்பார் சாதம், சிறு உருளைக்கிழங்கு கரி, வறுவல், அக்காரவடிசல், தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய். கோக், பெப்சி, மிரிண்டா, செவன்அப், ஜூஸ், தண்ணீர் இவையெல்லாம் தாகத்திற்கு. பின் 3மணிக்குக் காபி, டி. 4 மணிக்கு போண்டா சட்னி, காராசேவு, முறுக்கு, மைசூர்பா, குட்டி லட்டு. TCS Prasanna & R.Prasaanna sang most of the songs. ஆனால் பலரும் அவர்களோடு சேர்ந்து பாடினர். நிகழ்ச்சி நிறைவு பெற மாலை 6 மணி ஆகியது. நிறைவுப் பாடல்கள் ராஜா கைய வெச்சா, போட்டு வைத்த காதல் திட்டம்… திரு ரெக்ஸ் நடுவில் rapid fire quiz ம் வைத்தார். அதில் 6/6 வாங்கினவர் ஹக்கீம் பாய். சிலர் இந்த நிகழ்ச்சி நடப்பதுத் தெரிந்து அவர்களே ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.
Three cheers to Rex and all the participants who made this year long event a grand success!
Here is the link of the collage of photos taken on #365RQFinale http://www.youtube.com/watch?v=NKBToLz36eA&feature=youtu.be thanks @seevin alias Vinodh 🙂