ஆரம்பமே நிலா அது வானத்து மேலே மாதிரி கடலில் ஓடும் படகில் அஜால் குஜால் பாட்டோடு படம் ஆரம்பிக்கிறது. குயிலி ரோலில் அஞ்சலி, ஜனகராஜ் ரோலில் சூர்யா!
சிங்கம் 2வுக்கு, சிங்கம் படத்தோடு நல்ல continuity உள்ளது. பழைய கதாப்பாத்திரங்களுக்கு அதே நடிகர்கள். புதுசா சந்தானம். முதல் சில சீன்களில் அவர் நகைச்சுவை என்ற எண்ணத்தோடு சொல்லும் டயலாகுகளும் செய்யும் சேட்டைகளும் சிரிப்பை வரவழைக்க மறுக்கின்றன. அப்புறம் நாமே வலுக்கட்டாயமாக சிரிக்கப் பழகிக் கொள்கிறோம். ஹன்சிகா இன்னொரு புது வரவு. கொடுத்த ரோலை நன்றாகச் செய்திருக்கிறார். அனுஷ்கா ரொம்ப நேரம் வரவேயில்லை. வந்த பிறகும் ஒரு விசனப் பார்வையுடனும் ஓரிரு டூயட் பாடல்களுடன் தன் பங்கை முடித்துக் கொண்டு விடுகிறார். சூர்யா “சிங்கம் டான்சில்” விஜய் நடனத்தில் செய்யும் ஸ்டெப்சுகளை செய்யப் பார்த்திருக்கிறார். நன்றாக நடனம் ஆடியுள்ளார் ஆனால் விஜயின் ஸ்டைல் and ease வரவில்லை.
சூர்யா படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நல்ல உழைப்பு. போலிஸ் ரோலுக்குத் தேவையான மிடுக்கும் கம்பீரமும் உடல் மொழியும் நன்கு உள்ளது. James Bond மாதிரி துரைசிங்கம் பாத்திரத்தை iconic ஆக செய்து விடலாம். 60 கிலோ எடையுள்ள அவர் 120 கிலோவில் உள்ள 10 வில்லன்களை ஒரே சமயத்தில் சரமாரியாகப் பந்தாடுவதில் இருந்து, எதிராளி வீசும் அரிவாளின் நுணி கூட தன் மேல் படாமல் சண்டையிடும் லாவகத்திலேயும், வில்லன் துப்பாக்கியில் இருந்து வரும் ஒரு குண்டு கூட தன்னை உரசிச் செல்லாத அளவு பறந்து பறந்து சண்டையிடுவதிலும், போலிஸ் அதிகாரியாக முழுப் பவருடன் வேற்று நாட்டுக்குச் சென்று வில்லனை வீழ்த்திப் பிடித்துக் கொண்டு வருவதிலும் ஆகட்டும் நமக்கு தமிழ் James Bondஐ ஹரி உருவாக்கிக் கொடுத்திருக்கார்.
சிங்கத்தின் கதைக் கரு ஆள் கடத்தல் செய்யும் வில்லனை அழிப்பது. சிங்கம் 2 கதையின் கரு போதைப் பொருள் கடத்தல் செய்யும் சர்வதேச தாதாவையும் அவனின் கூட்டாளிகளான உள்ளூர் தாதாக்களையும் பிடித்து வெற்றி காண்பது. யப்பா, என்னா சண்டை! இதில் DSP யின் பின்னணி இசை வேறு. காது ஜவ்வு கிழிந்து விட்டது. சிங்கம் படத்தின் தொடர்ச்சி என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு அதிகம் மெனக்கடவில்லை. பழைய படத்தின் டியூனே போதும் என்று நினைத்துவிட்டார். ஆதலால் அதுவே தொடர்ந்து வருகிறது.
இந்தப் படத்தில் ரகுமான் ஒரு வில்லன், மலையாளத் தமிழ் பேச்சு அங்கங்கு எட்டிப் பார்க்கிறது. முகேஷ் ஹரி இன்னொரு வில்லன். டேனி சபானி சர்வதேச வில்லன். விவேக் இருக்கிறார். முதல் பாராவில் சொன்னா மாதிரி போன படத்தில் இருந்த அனைவரும் இருக்கின்றனர். சுமித்ரா விக்கும்(wig) ராதா ரவி விக்கும் கண்ணை உறுத்துகின்றன.
100% மசாலா படம். ஹரி படமானதால் விறுவிறுவென்று நகருகிறதுத் திரைக்கதை. ஒளிப்பதிவு – பிரியன், ரொம்ப அருமை. ஆனால் படம் பார்த்தப் பின் ஆயாசமாக உள்ளது.
Jul 06, 2013 @ 09:33:54
// சூர்யா “சிங்கம் டான்சில்” விஜய் நடனத்தில் செய்யும் ஸ்டெப்சுகளை செய்யப் பார்த்திருக்கிறார். நன்றாக நடனம் ஆடியுள்ளார் ஆனால் விஜயின் ஸ்டைல் and ease வரவில்லை.// its not necessary 🙂
//சூர்யா படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நல்ல உழைப்பு. போலிஸ் ரோலுக்குத் தேவையான மிடுக்கும் கம்பீரமும் உடல் மொழியும் நன்கு உள்ளது// விஜய் நடித்திருந்தால் எடுபடாது போயிருக்கும்ன்னு கூட சொல்லிருக்கலாம் 🙂
மத்தபடி விமர்சனம் Short and Sweet அட்டகாசம் !
Jul 06, 2013 @ 11:07:14
நன்றி 🙂
Jul 06, 2013 @ 13:09:10
சூர்யாவிற்காக பார்க்கலாம்… நல்ல விமர்சனம்… நன்றி…
Jul 06, 2013 @ 16:07:07
நடனத்தில் விஜய் உடன் ஒப்பீட்டு பார்த்து விட்டு ….
அதிரடியில் ஜேம்ஸ்பாண்ட் உடன் இணைத்து “துரை சிங்கம்’ படைத்த ஹரியை பாராட்டி விட்டு….
படம் பார்த்த ஆயாசத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள்..
பின்னணி இசையின் இரைச்சல் இப்போது “மஸ்ட்” ..!
பாடல்கள் பற்றியும்,
காட்சியமைப்பை பற்றியும்,
உசுரக் கொடுத்து திறமை காண்பித்த சண்டை காட்சிகளைப் பற்றியும்,
ஒளியமைப்பு தந்த கேமிராமென் பற்றியும்,
நாசுக்காக திரைக்கதையில் கத்திரி வைத்த எடிட்டர் பற்றியும்
ஒன்றுமே சொல்லவிலையே ..!!
சாதாரண ஒரு ரசிகனின் மனோ நிலையில் உங்களது விமர்ச்சனம் இருக்கிறது.
Jul 06, 2013 @ 16:13:21
ஒளிப்பதிவைப் பாராட்டியுள்ளேன். மற்றவை கவனத்தில் வைத்துக் கொள்கிறேன், அடுத்த
விமர்சனத்துக்கு 🙂
Jul 07, 2013 @ 01:46:51
சரியான விமர்சணம்.. நானும் இதையே தான் சொல்லியிருப்பேன்.. படம் முடியாதா என்று ஏங்கத் தொடங்கிவிட்டேன்.. அவ்வளவு சலிப்பு..
Jul 17, 2013 @ 15:56:17
படத்தை பார்த்துவிட்டுதான் உங்கள் விமர்சனத்தைப் படிப்பது என்று முடிவோடு இருந்தேன். படத்தை பாத்தாச்சு. கமெண்ட்டும் போட்டாச்சு. 🙂
எனக்கு படம் பிடிச்சிருந்தது. ரசிச்சேன். படத்தின் நீளம் தெரியாத திரைக்கதை. சூர்யா தவிர வேறு யார் நடிச்சிருந்தாலும் எடுபட்டிருக்காது.
பாட்டுகள் சரியில்லை. நல்ல பாட்டா இருந்திருந்தா படம் இன்னும் நல்லாவே ஓடியிருக்கும்.
விஸ்வரூபம் போல அதிகப்படியான இரத்தத் தெறிப்பு காட்சிகள் இல்லாததால் குழந்தைகளோடும் குடும்பத்தோடும் ரசிக்கும்படியாக இருந்தது.
Jul 18, 2013 @ 02:54:30
உண்மை தான் 🙂 படம் மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று ஐம்பது கோடி
கலெக்ஷன் ஆகியுள்ளதே 🙂