வந்தே மாதரம் புகழ் பரத் பாலா இயக்கத்தில், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்திருக்கும் புதிய திரைப்படம் மரியான்! இசை AR ரஹ்மான், கேமரா மார்க் கொனின்க்ச், எடிட்டிங் விவேக் ஹர்ஷன். நாயகன் நாயகி தனுஷ், பார்வதி மேனன். தமிழ் நாட்டில் இருந்து எண்ணெய் கிணற்றில் வேலை செய்ய சுடான் நாட்டிற்குச் சென்ற மூவர், பணத்திற்காகப் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுப் பின் தப்பி வந்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் மரியான்.
படத்தின் உயிர் நாடி ரஹ்மானின் பின்னணி இசை. திரைக்கதை சொல்லவேண்டியதை இசையே சொல்லிவிடுகிறது. பாடல்கள் அனைத்தும் முன்பே ரிலீசாகி FM வானொலியிலும் CD விற்பனையிலும் சக்கை போடு போட்டுள்ளது, அதனால் அதைப் பற்றி தனியாக சொல்லத் தேவையில்லை. ரொம்ப நன்றாகவே உள்ளது. நெஞ்சே எழு என்ற பாடல் ரஹ்மான் இசையமைத்த வேறு ஒரு பாடலின் சாயல் போல தோன்றினாலும் சிச்சுவேஷனுக்குப் பொருத்தமாக இருக்கிறது. ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன’ மிக அருமையான மெலடி!
தனுஷ் நன்றாக நடித்துள்ளார் என்று சொல்வது ட்விட்டர் மொழியில் மீள்! அவர் சிறந்த நடிகர் என்று ஆடுகளத்திலேயே நிருபித்து விட்டார். மீனவ இளைஞனாக நடித்திருப்பது நல்ல ஒரு மாறுதல். கொடுத்தப் பாத்திரத்தை அனாயாசமாக செய்கிறார். பார்வதி மேனனுக்கு இவ்வளவு விசிறிகள் இருப்பதில் வியப்பேதுமில்லை. அழகானக் கண்கள்! மேலும் அவர் கண்கள் உணர்ச்சிகளை அழகாகக் காட்டுகின்றன. காதலியாக வாழ்ந்திருக்கிறார்.
பனிமலர் தந்தையாக வருபவர் பாத்திரத்தில் சோபிக்கவில்லை. என்ன குறை என்று புரியவில்லை ஆனால் வேறு ஒருவரைப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாகப் பொருந்தியிருப்பாரோ? வில்லன் நடிகர் விநாயகம் ஒகே. அப்புக்குட்டி நண்பன் பாத்திரத்தில் வந்து செவ்வனே செய்திருக்கிறார். ஜகன், இம்மான் அண்ணாச்சி நல்ல துணை பாத்திரப் படைப்பு/நடிப்பு! என்னைப் பொறுத்த வரையில் உமா ரியாஸ் ஏமாற்றிவிட்டார். மரியானைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டும், அவன் முன்னுக்கு வரவேண்டும் என்று அவனை விரட்டிக் கொண்டே இருக்கும் பாத்திரம் தான் உமா ரியாசினுடையது. மரியான் காதலுக்கும் காதலிக்கும் அவரே எதிரி. அவர் மிகச் சிறந்த நடிகை. இந்த மாதிரி ஒரு முக்கிய பாத்திரத்தில் உமா ரியாஸ் இன்னும் வலுவாக நடித்திருக்கலாம். {இந்தப் படத்தில் உமா ரியாசுக்கு அவரின் அம்மா கமலா காமேஷ் சாயல் நிறைய தெரிகிறது}
சூடான் நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் ரொம்ப அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல கன்யாகுமரியைச் சேர்ந்த கடலும் கடலைச் சார்ந்த இடங்களும் ஒளி ஒவியம்! வெளிநாட்டுப் படப்பிடிப்புக்கு நிகராக உள்ளது ஒளிப்பதிவு.
எடிட்டிங்கில் குறை சொல்ல முடியாது. ஆனால் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். முதல் பாதியில் தனுஷ் காதலிக்க ஆரம்பிப்பதற்கு வெகு நேரம் ஆகிறது. காதலை முதலில் மறுப்பதற்கும், பின்பு காதல் வசப்படுவதற்கும் வலுவான சம்பவங்கள் இல்லை. டைட்டானிக்கும் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் தான். ஆனால் ஜாக்கிற்கும் ரோசிற்கும் மலரும் காதல் தான் அந்த படத்தைத் தூக்கி நிறுத்தி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆக்கியது.
இங்கும் பரத்பாலா ஒரு கடத்தல்/பிணைக்கைதி உண்மை சம்பவத்தைப் பின்னணியாக வைத்து காதல் கதை சொல்லியிருக்கிறார். ஆனால் பின் பாதியில் தனுஷ் அத்தனை சோதனைகளையும், இடர்களையும் தாண்டி தப்பித்து வர எடுக்கும் முயற்சிகள் காதலின் சக்தியினால் தான் என்பதை நம்ப மறுக்கிறது மனம்.
நல்ல முயற்சி! வாழ்த்துகள் 😀
Jul 21, 2013 @ 15:52:19
Heroine’s dad is Saleem Kumar.. He recieved national award for Malayalam movie Adamindey Magan Abu.. 🙂
Jul 21, 2013 @ 17:17:36
தேசிய அவார்ட் வாங்கியிருக்கலாம், ஆனால் இந்த ரோலில் செட் ஆகவில்லை என்று தோன்றியது.
Jul 21, 2013 @ 16:04:38
sorry,,, waste (incl… y…………rs)
Jul 21, 2013 @ 17:15:35
:-)) அவ்வளவு பிடிக்கவில்லையா?
Jul 21, 2013 @ 16:43:27
நான் பார்த்த திரையரங்கின் பிரச்சனையா எனத் தெரியவில்லை…பின்னணியிசை கேவலமாக இருந்தது.முக்கியமாக பாடல்களின் placements அதை விட கேவலமாக இருந்தது, நேற்று கீச்சியது போல் அரங்கில் “எங்க போன ராசா” & “கடல் ராசா” பாடல் தொடங்குகையில் மக்கள் சிரித்தார்கள்…கடைசியில் தனுஷ் பாலையில் வீழ்ந்து எழுகையில் “ நெஞ்சே எழு…”ஒலிக்கும் போதும் அரங்கு முழுக்க வடிவேலு/சந்தானம் நகைச்சுவை காட்சி கண்டது போல் சிரிப்பொலிகள்…உணர்ச்சிகரமான கதையின் வலியை ரசிகனுக்கு கடத்தி விட பரத்பாலாவும் ARRம் (முக்கியமான 2 காட்சிகளைத் தவிர – அதுதான் எனக்கு பிடித்த காட்சிகள் முழுப் படத்திலும்) தவறி விட்டார்கள் 😦
Jul 21, 2013 @ 17:14:53
அப்படியா? placement of songs were not great I agree with you, but rerecording was good.
Jul 22, 2013 @ 09:12:16
//நல்லவேளை ஸ்கூல் பையனாகவோ மெண்டலாகவொ இல்லாமல் மீனவ இளைஞனாக நடித்திருப்பது ஒரு மாறுதல்//ஹாஹாஹா அவர் எப்போவும் சைக்கோவாத் தாம்மா நடிப்பாரு!மெண்டல் இல்ல!
Jul 22, 2013 @ 09:43:45
:-)) நன்றி :-))
Jul 22, 2013 @ 11:36:56
படம் பார்த்தேன்.இரண்டாம் பாதி சற்று அதிகமாகவே நீளம்..அவர் அந்த ஆதி காலத்து போனில் பார்வதிக்குத் தான் கால் செய்கிறார் என்பது முன்பே தெரிந்தது தான்.ஏதோ சிவாஜி கணேசன் வசனம் மாதிரி இருந்தத.பிறகு,சிறுத்தை எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை.முன்பாதியில் காதல் வரும் நேரம்,பின்பாதி முழுவதும் மிக நீளம்.பாடல் இன்னும் மெலடிஆகி ஏனோ ஒரு சோர்வு தான் இருந்தது .படம் முடியற வரைக்கும் எப்படியோ உக்காந்து இருந்து,லைட்ஸ் ஆன் பண்ணின உடனே எந்திரிச்சு கெளம்பலாம்னு யோசிச்சா, எழுத்து போடறப்ப “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன ” அப்படீன்னு பாட்டு. #நல்லா கடுப்ப கிளப்புராய்ங்க
Jul 22, 2013 @ 11:39:28
:-)))))
Jul 22, 2013 @ 13:50:17
நடுநிலையான விமர்சனம்
Jul 22, 2013 @ 15:50:42
thank you 🙂
Jul 25, 2013 @ 02:27:27
படம் பாக்கலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டிருந்தேன். ஒங்க விமர்சனத்தைப் படிச்ச பிறகுதான் ஒரிஜினல் டிவிடி வர்ர வரைக்கும் காத்திருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். 🙂
Jul 25, 2013 @ 15:45:07
:-)))))))))
Jul 29, 2013 @ 05:18:18
படம் பாக்கலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டிருந்தேன். ஒங்க விமர்சனத்தைப் படிச்ச பிறகுதான் ஒரிஜினல் டிவிடி வர்ர வரைக்கும் காத்திருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். 🙂
Jul 31, 2013 @ 06:39:24
நடுநிலையான விமர்சனம்
Jul 31, 2013 @ 09:38:03
நன்றி 🙂
Aug 27, 2013 @ 05:16:04
(பனிமலர் தந்தையாக வருபவர் wrong choice for the role. சுத்த சொதப்பல். )
###அவர் பெயர் சலீம் குமார் , மலையாள நடிகர் , மிக சிறப்பாக நடிக்க கூடியவர். அவரின் ” ஆடமிண்ட மகன் அபு” படம் பார்க்கவும். கிளாஸ் மரியானில் இவரை சரியாக உபயோக படுத்தவில்லை.
Aug 27, 2013 @ 11:15:18
ஆமாம், அவர் அவார்ட் வாங்கின நடிகர் என்றும் கேள்விப்பட்டேன். படத்தில்
சரியாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லை தான்.