நேற்று என் உறவினர் திடீர் எனக் காலமானார். ஸ்ரீரங்கத்தில் ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழ்ந்தவர். வயது எண்பத்திரெண்டு. அஹோபில மடத்துக்குச் சென்று ஆச்சார்யனை வணங்கிப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து, தானும் சிறிது உண்டு தன் மனைவிக்கு மிச்சத்தைக் கொடுத்து, பின் வீட்டின் பின்புறம் கால்களைக் கழுவப் போன இடத்தில் மயங்கி சரிந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்றும் பயனில்லை, cerebral hemorrhage. அவரைப் பொறுத்த வரையில் நல்ல மரணம். கணவன் மனைவி இருவரும் மிகவும் எளிமையானவர்கள். காவேரியில் நீராடுவதும் ரங்கனையும் தாயாரையும் தரிசிப்பதுமே அவர்களின் தினப்படி ஆனந்தங்கள். வந்தாரை அன்புடன் உபசரித்து வாயார வாழ்த்துவது அவர்களின் வாழ்வின் குறிக்கோள்.
அனால் நான் இங்கு சொல்ல வந்தது வேறு ஒரு கதை. அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவரின் மனைவி அவர்கள் குடும்பத்தில் மூத்த மகள். அவர்கள் வீட்டில் ஆறு பெண்கள், ஒரு பிள்ளை. அவரின் கடைசி தங்கைக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை. மேலும் அந்தத் தங்கை வேறு பல காரணங்களால் இரு குழந்தைகளையும் பராமரிக்க சிரமப்பட்டதால் எந்தக் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டையோ அந்தக் குழந்தையை இவர்கள் எடுத்து வந்து வளர்த்தனர். என் உறவினருக்கு அப்பொழுதே நாற்பத்தியெட்டு வயது இருக்கும். இவர்களிடமும் சொந்தப் பெற்றோரிடமுமாக மாறி மாறி இருந்த சிறுவன், ஒரு கட்டத்தில் இவர்களுடனே இருக்க ஆரம்பித்துவிட்டான். இவர்களும் பலத் திருத்தலங்களுக்குச் சென்று பலவாறு வேண்டி அதன் பலனாகவோ என்னவோ மிகுந்த ஆரோக்கிய வாழ்வையே வாழ்ந்து வந்தான். பதின்ம வயது வரும் சமயத்தில் சட்டப்படி இவர்கள் அவனை தத்து எடுத்துக் கொண்டனர். மிகுந்த பாசத்துடனே வளர்த்தனர்.
நான் வெளியூரில் இருந்ததால் அவனுடன் முதலில் ரொம்பப் பழகியதில்லை என்றாலும் பிறகு பல சந்தர்ப்பங்களில் அவனுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. என்னிடம் மிகவும் அன்பு அவனுக்கு. அவன் வேலைக்குச் சேர்ந்தவுடன் இதய அறுவை சிகிச்சையும் நடந்து நல்ல உடல் நலத்தையும் பெற்றான்.
தெரிந்தே நடந்த தத்து. ஆனாலும் அந்தப் பிள்ளைக்கு இதனால் மன உளைச்சல் உண்டு. பெற்றத் தாயிடமும் வளர்த்தத் தாயிடமும் ஒரே அளவு பாசத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு. பெற்ற தாய்க்கு ஒரு குற்ற உணர்ச்சி, குழந்தையைக் கொடுத்து விட்டோமே என்று. வளர்த்தத் தாய்க்கு பயம், பிள்ளை நம்மிடம் பாசமில்லாமல் சொந்தத் தாயிடம் போய்விடுவானோ என்று. மகனுக்கோ டைட் ரோப் வாக் இருவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சிறு வயது முதலே பெரிய பொறுப்பு. இதன் ஊடே ஒரு சின்ன விசனமும், ஆரோக்கியக் குழந்தையை தத்துக் கொடுக்காமல் தன்னைக் கொடுத்துவிட்டார்களே என்று. வாழ்க்கை தான் எவ்வளவு காம்ப்ளெக்ஸ் பாருங்கள்!
ஆனால் அவன் அனைத்தையும் கடந்து அற்புதமாக உருவாகியுள்ளான். திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்குத் தந்தை. அந்தப் பேரக் குழந்தையைக் காணும் பேறும் என் உறவினருக்குக் கிடைத்தது. இரு பெற்றோர்களையும் சமமாக பாவித்து அன்பு செலுத்தவும் அவன் கற்றுக் கொண்டான்.
ஆனால் அவன் நேற்று என்னையும் என் கணவரையும் பார்த்தவுடன் ஒடி வந்துக் கட்டிக் கொண்டு அவரில்லாமல் இன்று நானில்லை என்று என் உறவினரைக் கைகாட்டி கதறியது அவன் மனத்தில் அவர் மேல் வைத்திருந்த தகப்பன் என்ற பாசத்தைக் காண்பித்தது.
அதையும் விட தன் உயிரைக் காப்பாற்றி, பேணிக் காத்தவர் என்ற நன்றியுணர்ச்சியும் அங்கு நிறைந்திருந்ததைக் கண்டேன். ஆழ் மனத்தில் எத்தனையோ உணர்வுகள், துக்கம் பீறிடும் சமயத்தில் உண்மை வெளிப்படுகிறது.
ஆனால் அவனைப் போல ஒரு மகன் கிடைக்க என் உறவினரும் கொடுத்து வைத்திருந்திருக்க வேண்டும். அவர்களின் நல்ல மனசுக்கேற்ற ஒரு நல்ல மகன், அவர்கள் வயிற்றில் பிறக்கவில்லையேத் தவிர 100% சதவிகிதம் அவர்கள் மகன் அவன்!
Jul 26, 2013 @ 10:46:29
படிக்கவே நெகிழ்ச்சியாய் இருந்தது..
Jul 26, 2013 @ 11:43:30
நன்றி!
Jul 26, 2013 @ 10:52:05
.ஆழ்ந்த இரங்கல்கள். படிச்சதும் என்னவோ தெரியலை ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க மனசைத் தொடுவது போல சொல்லியிருப்பதா, இல்லை அது ஶ்ரீரங்கம் என்பதாலான்னு தெரியலை. ஆனா கஷ்டமாயிருக்கு
Jul 26, 2013 @ 11:43:13
நன்றி!
Jul 26, 2013 @ 11:48:35
“ஆரோக்கியக் குழந்தையை தத்துக் கொடுக்காமல் தன்னைக் கொடுத்துவிட்டார்களே என்று.” எவ்வளவு பெரிய வடு உள்ளத்தில்? ஆண்டவன் கொடுப்பதிலும் ஓர் அர்த்தமுண்டு. ஒருவேளை இருதயத்தில் ஓட்டை உள்ளவருக்கு இத்தனை வருடங்களுக்குள் ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால்..(அ) தத்து எடுத்த உறவினர்களுக்குள் ஏதேனும் நடந்திருந்தால்… காட் இஸ் ஆல்வேஸ் கிரேட். மற்றபடி அருமையாக விவரித்திருந்தீர்கள். (அட ! திருச்சி வந்திருன்தீங்களா!)
Jul 27, 2013 @ 07:30:11
நன்றி.
Jul 26, 2013 @ 12:08:20
அருமை அம்மா! எங்கள் சொந்தத்தில் இதே மாதிரி (நல்ல உடல் நிலையுள்ள ) பையனை தத்து கொடுத்த பின்னர் பெற்ற அப்பா அம்மா தான் கல்யாணம் எல்லாம் முன் நின்று செய்தார்கள் – வசதி குறைவு இருபபினும். ஆனால் பாசம் வளர்த்தவர்கள் மீது தான் அதிகம். கண்ட உண்மை!
Jul 27, 2013 @ 07:46:17
நன்றி.
Jul 26, 2013 @ 13:04:52
Very touching.Tears in my eyes.
Jul 26, 2013 @ 13:13:39
நன்றி 🙂
Jul 26, 2013 @ 13:22:17
Ippadi silar iruppadhaladhan mazhai paikirathu
Jul 26, 2013 @ 14:00:21
ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர…
—-
அரங்கனின் அடியவர்க்கு அஞ்சலி!
அரங்கனோ முருகனோ அல்லாவோ…
அன்பே தெய்வம்!
*உள்ளத்தில், உண்மையான அன்பு, தெய்வம் போல – ஒளிஞ்சித் தான் இருக்கும்;
*உள்ளத்தில், உண்மையான அன்பு, தெய்வம் போல – அதுக்கும் சாவில்லை!
Jul 26, 2013 @ 14:14:13
மிக்க நன்றி!
Jul 26, 2013 @ 15:46:22
காஞ்சிபுரம் நண்பர் ஒருவரின் வீட்டிலும், இதே “தத்துப் பிள்ளை” நிலைமை;
தத்தெடுக்கும் போது, சில சடங்குகளும் put a lot of “emotional” on the givers & takers; That too when the child is grown up, he too sees all those “hard” ritual;
இதை, இன்னும் கொஞ்சம் “மெல்லியலா”ச் செஞ்சா, இத்தனை மனப்பாடுகள் இருக்காதோ என்னவோ?
அம்மா-அப்பா ஆகட்டும், காதலன்-காதலி ஆகட்டும், “steadfast truth in love”, overcomes all this physical presence/ absence
—–
அம்மா, உங்கள் உறவினரைப் போல, நோயுற்ற பிள்ளையைத் தத்தெடுக்கவும் ஒரு “மனசு” வேண்டும்!
இப்பல்லாம், பல “படிச்ச” தம்பதிகளே, அனைத்து medical check, beauty check செய்து தான், நிறுவனங்கள் மூலமாத் தத்தெடுக்கறாங்க:( பாக்குறேனே சில எலும்பு மஜ்ஜை முகாம்களில்;
வைணவ மரபினர் என்பதால், மறைவின் போது சொல்லப்படும், “சூழ் விசும்பு அணி முகில்” பாட்டை மனசுக்குள் சொல்லிக்கறேன்-மா! நல்ல மனசுள்ள அவர் ஆன்மாவுக்கு, நன்மை சூழச் செய்க அரங்கன்!
—-
கங்கையில் புனிதமாய – காவேரி நடுவில் பாட்டு
பொங்கு நீர் புரந்து பாயும் – பூம்பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால், இறைவன் ஈசன் – கிடந்ததோர் கிடைக்கை உன்னை
எங்ஙனம் மறந்து வாழ்வேன்? – ஏழையேன் ஏழையேனே!
கடல் நிறக் கடவுள் “எந்தை”
அரவணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்வேன் உலகத்தீரே!
கங்கா சங்காச காவேரி – ஸ்ரீ ரங்கேச மனோஹரி
கல்யாண காரி கலுசானி – நமஸ்தேஷூ சுகாசரி
(மோக்ஷ இஸ்யாமி, மா சுசஹ!)
Jul 26, 2013 @ 15:06:40
பெற்ற பிள்ளைகளே யாரோ போலச் செல்லும் இக்காலத்தில் எப்பேர்ப்பட்ட சூழலில் தன்னை தத்து எடுத்தார்கள் என்பதையும் உணர்ந்து ,தத்து கொடுத்த பெற்றோரையும் துவம்சிக்காமல் வாழும் அவரை ஆத்மார்த்தமாக வணங்குகிறேன் !
Jul 27, 2013 @ 07:33:35
நன்றி உமா.
Jul 26, 2013 @ 15:10:20
நெகிழ வைக்கும் பதிவு!
வாழ்வின் கரடுமுரடுகளுக்கிடயிலும்
அங்கங்கே ஈரம் இருக்கத்தான் செய்கிறது!
Jul 27, 2013 @ 07:47:03
நன்றி 🙂
Jul 26, 2013 @ 15:13:10
அருமை. பாசம் தரும் நேசம் இவை 🙂 உருக்கமான பதிவு.
Jul 27, 2013 @ 07:47:35
நன்றி!
Jul 26, 2013 @ 15:29:23
ஆழ்ந்த இரங்கல் , உங்கள் வாக்கியங்களில் உங்கள் உணர்ச்சிகளை கொண்டு உங்கள் உள்ளம் தெரிகிறது . எனக்கு என்ன சொல்லவது என்று தெரியவில்லை !கண்ணீருடன் பதிவை படித்து முடித்தேன் …
Jul 27, 2013 @ 07:48:24
நன்றி!
Jul 26, 2013 @ 16:38:20
😦 No words to express.
Jul 27, 2013 @ 07:47:57
உண்மை!
Jul 27, 2013 @ 02:48:49
//// ஆரோக்கியக் குழந்தையை தத்துக் கொடுக்காமல் தன்னைக் கொடுத்துவிட்டார்களே //// இந்த ஒற்றை வரி போதும், நீங்கள் சொல்ல வந்த மொத்த விசயமும் அறிந்துகொள்ள….
Jul 27, 2013 @ 07:49:36
நான் சொல்ல வந்ததை கரெக்டா புரிந்து கொண்டீர்கள். இந்தப் பதிவே அதற்காகத் தான்.
Jul 27, 2013 @ 06:13:01
அவருடைய ஆன்மா பரமபதத்தில் அமைதி அடையட்டும்.
வாழ்க்கையில் எத்தனையெத்தனை விதங்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு கதை போல.
Jul 27, 2013 @ 07:49:54
நன்றி!
Jul 30, 2013 @ 03:21:46
திரு ,ரங்கநாதன் அவர்கள் .மிகவும் அமைதியானவர் ,எனது தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ,அவர் இல்லாமல் எனது தந்தை கோவிலுக்கு சென்றதில்லை ,அவர் இறந்துவிட்டார் என்கிற தகவலை எனது தந்தையிடம் சொல்வதற்கு சற்று தயங்கினேன் ,தகவலறிந்ததும் எனது தந்தை அவரது இல்லத்திற்கு சென்று அவரை பார்த்து வந்ததிலிருந்து ,சற்றே மனம் கலங்கி ,தூக்கம் இல்லாமல் இரண்டு நாட்களாக தவிக்கின்றார் ,
Jul 30, 2013 @ 03:25:53
Very touching. Brilliantly written
Jul 30, 2013 @ 05:46:37
RR Swamin is a nice person and he is very simple . Whenever I saw him , I enquired about him and he will also talk to me and enquired about me. very rare to see that kind of simple and nice swamin.
Jul 30, 2013 @ 09:59:59
Hats off. Really we should appreciate our parents sacrifice. In the same time, we should appreciate that son too have a great respect. No words to express….with my tears….
Aug 01, 2013 @ 14:56:52
வணக்கம்.
முதலில் பொறுத்தருள்க.
இவ்வளவு தாமதமாக இப்பதிவை படித்தமைக்கு.
நெகிழ்ச்சியான பதிவு. உணரப்பட்ட உணர்ச்சிகளை அப்படியே எழுதி, அதைப் படிப்பவருக்கும் அதே அளவு உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறீர்கள்.
மற்றவர்களின் கருத்துக்கள் மூலம் அதை எளிதாக அறிய முடிகிறது.
இத்தனை நாட்களாய் காணாது இருந்துவிட்டோமே என்றொரு வருத்தம் மட்டும் மிச்சமிருக்கிறது.
நன்றி.
Aug 01, 2013 @ 16:37:02
படித்து முடித்தவுடன், மனம் நெகிழ்ந்தது. அவரது ஆத்மா அமைதியாகட்டும்.
இந்த நிகழ்வுகள்தான் பிறருக்கு வாழ்க்கையில் பிடிப்பினை கொடுக்கிறது.
நீங்க, தேர்ந்து எழுத பழக்கபடுத்தி கொண்டுவிட்டீர்கள், தொடரவும்…