An ode to #365RajaQuiz

IR

நான் @rexarul ஐ ட்விட்டரில் பாலோ செய்து அவர் நட்பைப் பெற்றிருந்தேன். அவர் இந்தப் போட்டியை ஆரம்பித்தப் பொழுது நட்பிற்காக தினம் அவரின் புதிர் வலைத்தளத்திற்குச் செல்வேன். க்விசிற்கு உண்டான பாட்டைப் பற்றி எழுதும் அழகான குறிப்புக்களைப் படிக்கவும் இசை துணுக்கைக் கேட்டு, லைப் லைன் க்ளுவையும் பார்த்து முயற்சி செய்யவும் தவற மாட்டேன். ஒன்றுமே புரியாது. இதில் சில ட்வீப்ஸ் புதிர் போட்ட ஐந்து நிமிடத்தில் டி எம் செக் பண்ணவும், அல்லது பதில் போட்டாச்சு என்று ரெக்சுக்குப்  ட்வீட்டுவர்! இதைப்பார்க்கும் பொழுது என் ஆச்சர்யத்துக்கு அளவே இருக்காது! இவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஜீனியசாக இருக்கவேண்டும் என்று அசந்து நிற்பேன்.

பிறகு ஒரு நாள் BGM புதிர். அந்தப் படத்தை நான் பார்த்திருந்ததால், கொடுத்தக் க்ளூவை வைத்துக் கண்டுபிடித்துவிட்டேன். பிதாமகன்! என்னாலேயே நம்பமுடியவில்லை. மகிழ்ச்சியான ஒரு தருணம். நானும் முயற்சி செய்தால் ஒன்றிரெண்டாவது சரியாக விடையளிக்கலாம் என்று அது கொடுத்தது ஒரு நம்பிக்கை. எனக்கு ராஜா இசை புதுசு. நான் அவர் பாடல்களைக் கூர்ந்து கேட்டதில்லை. நான் வளரும் பொழுது ரேடியோவில் எல்லாம் அவர் பாடல்களைக் கேட்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அப்படிக் கேட்காததானால் நான் பின்பு வெளிநாட்டில் இருந்த பொழுது அவரின் golden period ஆன 80’s and early 90’s பாடல்களைக் கேட்க தவறிவிட்டேன். ராஜா fans ஆக இருந்திருந்தால் எங்கிருந்தாலும் அவர்கள் அவரின் பாடல்களைத் தேடிக் கண்டுப்பிடித்துக் கேட்டு ரசித்திருப்பார்கள். நான் அந்த category இல்லை. அதையும் தவிர இசை ஞானமும் கிடையாது. கேட்க இனிமையாக இருக்கும் பாடல்களை விரும்பிக் கேட்கும் ஒரு சாதாரண பெண்.

அதனால் நான் இசையை வைத்துப் பாடலைப் பிடிக்க மாட்டேன். அவர் கொடுக்கும் க்ளூக்கள் தான் துணை! So it was a laborious process. I have spent nearly 8 hours on certain clues. நடிகை ராதிகா அல்லது நடிகர் சத்யராஜ் பாடல் என்று க்ளூ மூலம் தெரிந்தால் அந்த நடிகருடைய wiki page க்குப் போய் அவரின் எல்லாப் படங்களையும் எடுத்து அதில் எதெல்லாம் ராஜா இசை என்று பார்த்து ஒரு புத்தகத்தில் நோட் பண்ணி வைத்துக் கொள்வேன். பிறகு அவர் text இல் கொடுக்கும் சில க்ளூக்களை வைத்து அதையும் narrow down பண்ண முயற்சி செய்வேன். அதாவது டூயட் என்று சொல்லியிருந்தால் தனியாக ஒருவர் மட்டும் பாடும் பாடல்களை eliminate செய்து விட்டு ஒவ்வொருப் பாடலையும் கேட்பேன். சில சமயம் அவர் கொடுத்த இசைத் துணுக்கு முடிவில் கூட வரும். ரொம்பப் பொறுமை வேண்டும். என் கணவருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். இரவு டிபனை அவசரமாகக் கையில் கொடுத்து மோரை ஒரு டம்ப்ளரில் ஊற்றி பக்கத்தில் வைத்துவிடுவேன். சில சமயம் புதிரைக் கண்டுபிடிக்க இரவு பன்னிரெண்டு மணியாகும். திரு @vrsaran ஐத் தான் பதில் சரியா என்றுக் கேட்பேன். அவர் என் ஆர்வத்தைப் பார்த்து எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தார். விட்டுவிடலாம் என்று நினைக்கும் தருவாயில் என்னை ஊக்குவித்து இரண்டாம் சீசனில் 100 மார்க் வாங்கும்படி செய்தார். என்னைப் பொறுத்த வரை இது ஒரு இமாலயச் சாதனை. என் குழந்தைகள் தொலைபேசியில் கூப்பிடும் பொழுது, இரு இதை சால்வ் பண்ணிட்டு உன்னிடம் பேசுகிறேன் என்று கூறியுள்ளேன். இரவு கண்டுப்பிடிக்க முடியாவிட்டால் அடுத்த நாளும் தொடரும்.

சில சமயம் கண்டுப் பிடிக்க வேண்டும் என்ற வெறி, க்ளூவில் உள்ள அந்த பாடலாசிரியரையோ பாடகரையோ நேரிலோ தொலைபேசியிலோ தொடர்புக் கொண்டு கேட்டுவிடலாமோ என்று தோன்றும் அளவுக்கு இருந்திருக்கு. ஒரு முறை படத்தின் பெயரைக் கண்டுப்பிடித்துவிட்டேன், ஆனால் வீட்டில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. அதனால் பாடலை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே பக்கத்தில் இருக்கும் CD கடைக்குச் சென்று 80’s ராஜா பாடல்கள் வேண்டும் என்று கேட்டேன், படத்தின் பெயரையும் சொன்னேன். அவர் கைக்காட்டிய இடத்தில் குப்பையாக CDக்கள் கிடந்தன. அதில் அந்தப் படத்தைத் தேடிக் கண்டுப்பிடித்து காரில் உள்ள சிஸ்டத்தில் போட்டுப் பாடலைக் கண்டுகொண்டேன் 🙂 இதை @vrsaran இடம் சொன்னபோது நான் மாஃபியா கும்பலின் உறுப்பினர் ஆயாச்சு என்று கூறினார் 🙂

நான் பல சமயங்களில் வயிற்று வலியினால் அவதிப்படுவேன். (Irritable Bowel Syndrome) அந்த சமயங்களில் என்னால் பாடல் தேடுவது முடியாத காரியம். ஆனால் என் கணவர் நான் இந்த புதிர் போட்டியில் பங்கேற்கத் துவங்கியபின் என் வலி வரும் நேரம் குறைந்துள்ளதாக நினைக்கிறார். அது உண்மை என்றால் அந்தப் புகழ் ராஜாவுக்கும் ரெக்சுக்குமே உரியது!

தேடித் தேடிக் கண்டுபிடித்ததால் இதுவரை நான் கேட்காத பலப் பலப் பாடல்களை கேட்கும் பாக்கியம் கிட்டியது. மேலும் நான் தேடும் பாடல் அதுவல்ல என்று தெரிந்தும் அந்தப் பாடலை முழுமையாகக் கேட்டு முடிப்பேன், அவ்வளவு அருமையாக இருக்கும் பாடல்கள். இதனால் நேரம் அதிகமானாலும் இசையை அறிந்துக் கொண்டேன். ஒன்றுமே தெரியாமல் புதிருக்குள் நுழைந்த நான், இசையைக் கேட்டவுடன் இது 80’s பாடல், இது 90’s பாடல் என்று differentiate பண்ணும் அளவுக்கு வளர்ந்தேன். முடிவை நெருங்கும் வேளையில் சீக்கிரம் identify பண்ணக் கற்றுக் கொண்டேன். இதில் சிகரம் 359/365! Rex won his Oscars that day! Just listened to the music bit he had uploaded and I identified the song. Did not read the text, did not look at the LL clue! This is what I wrote in the comment section.

“எனக்கு இன்று இருக்கும் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை :-) )))))
இசை துணுக்கைக் கேட்டவுடன் பாடலைக் கண்டுபிடித்துவிட்டேன். இங்கு க்விசில் பங்குபெறும் அனைவருக்கும் இது தினப்படி நிகழ்ச்சியாக இருக்கலாம். எனக்கு இது மாபெரும் மகிழ்ச்சித் தருணம். நன்றி ரெக்ஸ்!

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா படத்தில் இருந்து :-)

இதைவிட எனக்கு வேறு பரிசு வேண்டாம் 🙂

நான் இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்டவைகளை bulletin points ஆக பின்னூட்டத்தில் போட்டதை இங்கேயும் பதிவு செய்கிறேன் 🙂

Thank you @rexarul @irexarul The impact this #365RajaQuiz has created in me is tremendous.

1.Awareness of music in general and in particular of the nuances and intricate variations created by each musical instrument.

2.The fact that music can increase the emotional expression within me.

3.The urge to learn more in a systematic manner. I have probably memorized the Raja Films in an alphabetical order like Alabama, Alaska, Arizona, Arkansas… .

4.Self fulfillment is more important than a material prize.

5.There is a place for everyone in this society if you will to establish yourself.

6. There are lots of good people. You just have to look for them.

7.Inspiration is contagious.

8.Perseverance pays.

9.Tolerance.
If Isai gnyaani can tolerate the gross scenes in the innumerable movies where he was the music director and give such great back ground scores, why can’t we develop patience towards each other?

10. God lives in music.

Thank you very much Rex.
Sushima
(amas32)

நிகழ்ச்சி நிறைவு விழா பற்றிச் சொல்லாமல் இப் பதிவு நிறைவு பெறாது. 28.7.2013 அன்று ஒரு மினி கல்யாணம் தான். அன்று முஹூர்த்த நாளா என்று பார்க்க வேண்டும் 🙂 கோவை, பெங்களூர், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் க்விசில் பங்கேற்றவர்களும் ஆர்வமுள்ளவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். Technology is improved so much I say என்ற கிரேசி மோகனின் டயலாக் படி மாஸ்டர் ரெக்சும் இன்னும் பலரும் இணையத்தின் மூலம் (அவர்களுக்கு இரவு நேரம்) கலந்து கொண்டனர். அந்த இரவு, துளி தூக்கம் இல்லை அவர்களுக்கு. சிவராத்திரி தூக்கம் ஏது என்று மெட்டமைத்தவருக்கு நன்றி சொல்லும் வகையில் ராஜ ராத்திரியாக அவர்கள் இரவுப் பொழுது கழிந்தது. வந்தவர்களில் பலர் குடும்பத்துடன் வந்து குழந்தைகள் குறுக்கும் நெடுக்கும் ஓடியது தனி மகிழ்ச்சி. முதலில் ஜனனி ஜனனி என்ற பாடலுடன் நிகழ்ச்சித் தொடங்கியது. பெங்களூரில் இருந்து திரு ஸ்ரீதர் இந்த நிகழ்ச்சிக்கு வயலின் வாசிக்கவே ஸ்பெஷலாக வந்திருந்து அனைத்துப் பாடல்களுக்கும் வாசித்து சிறப்பூட்டினார். அடுத்து ரெக்ஸ் பேசினார். அவர் எப்படி ஒரு வருடம் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார், அதன் சவால்கள், ஒரு 30 வினாடி இசைத் துணுக்கை துல்யமான ஒலியாக நமக்குக் கொண்டுச் சேர்க்க அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். #thachimammu alias Srivatsan, @tcsprassan alias Prasanna ஆகியவர்கள் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள். ஸ்ரீவத்சன் க்விசில் வந்த அனைத்துப் பாடல்களையும் ஒரு தனி CD யில் போட்டு அனைவருக்கும் பரிசாக வழங்கினார். அதை தயார் செய்து கோவையில் இருந்து ஹக்கீம் பாய் எடுத்து வந்தார். அவர் அங்கு இசை CD கடை வைத்து நடத்துபவர்.  திரு @nchokkan திருவாசகமும் ராஜாவும் என்ற தலைப்பில் அருமையாகப் பேசினார். அதன் தொகுப்பை இங்கே படிக்கலாம். http://nchokkan.wordpress.com/2013/07/28/tvskmrja/ வந்திருந்த பலரும் ராஜாவின் இசை பற்றியும் இந்த புதிர் போட்டியின் தாக்கம் பற்றியும் பகிர்ந்துக் கொண்டனர்.

இசை வெள்ளத்தை அனுபவிக்க உணவும் தேவையாயிற்றே! உணவு வகைகளும் நிறைய இருந்தன. மதிய உணவிற்கு சப்பாத்தி, சன்னா, சாம்பார் சாதம், சிறு உருளைக்கிழங்கு கரி, வறுவல், அக்காரவடிசல், தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய். கோக், பெப்சி, மிரிண்டா, செவன்அப், ஜூஸ், தண்ணீர் இவையெல்லாம் தாகத்திற்கு. பின் 3மணிக்குக் காபி, டி. 4 மணிக்கு போண்டா சட்னி, காராசேவு, முறுக்கு, மைசூர்பா, குட்டி லட்டு. TCS Prasanna & R.Prasaanna sang most of the songs. ஆனால் பலரும் அவர்களோடு சேர்ந்து பாடினர். நிகழ்ச்சி நிறைவு பெற மாலை 6 மணி ஆகியது. நிறைவுப் பாடல்கள் ராஜா கைய வெச்சா, போட்டு வைத்த காதல் திட்டம்… திரு ரெக்ஸ் நடுவில் rapid fire quiz ம் வைத்தார். அதில் 6/6 வாங்கினவர் ஹக்கீம் பாய். சிலர் இந்த நிகழ்ச்சி நடப்பதுத் தெரிந்து அவர்களே ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.

Three cheers to Rex and all the participants who made this year long event a grand success!

Here is the link of the collage of photos taken on #365RQFinale http://www.youtube.com/watch?v=NKBToLz36eA&feature=youtu.be thanks @seevin alias Vinodh 🙂

 

28 Comments (+add yours?)

 1. Lakshman
  Jul 30, 2013 @ 09:22:16

  Superb write up! A big round of applause to your incredible efforts. Inspiring stuff!

  Reply

 2. Anonymous
  Jul 30, 2013 @ 09:35:13

  awesome..ஒரு குழந்தையின் குதூகலம் தெரியுதும்மா பதிவு முழுவதும்…ஒரு சினிமா போல கொஞ்சம் கொஞ்சமாக உள்நுழைந்ததை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்…!

  இசையும் மருந்துதான்…!
  தமிழ்ப்பறவை

  Reply

 3. tcsprasan
  Jul 30, 2013 @ 09:54:15

  Madam, I have never seen such a great hosts anywhere like yourself and Shekar Sir. Without your help this finale function would not have been possible at all. Thanks a lot for giving us space and food. Thanks a lot for bearing with all our (Ok Ok – read as “My”) atrocities. Take a Bow Madam

  Reply

 4. Prasanna Venkatesan (@prasannaR_)
  Jul 30, 2013 @ 10:46:30

  அருமையான inspiring ஆன பதிவு. முதலில் உங்கள் விடாமுயற்சிக்கும் ஆர்வத்துக்கும் பெரிய சல்யூட். 🙂

  உங்களுக்குத்தான் நாங்கள் பெரும் கடமைப்பட்டுள்ளோம்.
  #365RajaQuiz நிறைவு நாளை இப்படி விமரிசையாகக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தவுடன் முதலில் நானும், ஸ்ரீவத்சனும், TCSபிரசன்னாவும் இவ்வளவு பேர் கூடுவதற்கான இடத்தை எப்படித் தேர்வு செய்வது என்றுதான் யோசித்தோம்.
  நீங்களே ஆர்வத்துடன் முன்வந்து உங்கள் இல்லத்திலேயே இதை நடத்தலாம், நடத்த வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் உணவு உபசரிப்பு முதற்கொண்டு அனைத்தையும் நீங்களே ஏற்றுக் கொண்டீர்கள். எங்களை ஒரு பேப்பர் கப் கூட வாங்க விடாமல் செய்து விட்டீர்கள் என்று இதைப் பற்றித்தான் சொல்லிச் சொல்லி நெகிழ்ந்தோம். உங்களுக்கு மிகுந்த சிரமம் கொடுக்கிறோமோ என்று கூடத் தோன்றியது. ஆனால் வாயே திறக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லி விட்டதாக TCS சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

  இத்துணை பேர் கூடுவதற்கு இடத்தைத் தயார் செய்ததோடு இல்லாமல் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று உபசரித்து, உணவு படைத்து, நாங்கள் ஏற்படுத்தும் decibel levelsஐயும் இன்ன பிற தொல்லைகளையும் ஒரு சிறு முக சுளிப்பு கூட இல்லாமல் பொருத்துக் கொண்டு எங்களையும் உற்சாகப்படுத்தி மிகச் சிறந்த முறையில் நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தீர்கள். நிச்சயமாக இது போன்ற உயர்ந்த மனம் அனைவருக்கும் வராது. உங்களுக்கும் சேகர் சாருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராது!
  இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்றால் அதற்கு major credit உங்களைத்தான் சாரும் அம்மா. 🙂

  Reply

  • amas32
   Jul 30, 2013 @ 11:06:11

   Really touched by your words Prasanna. Thank you 🙂 Everything is always a
   joint effort. So th ecredit also getts shared equally! Your singing made
   the event extra enjoyable 🙂 நீங்க பாட ஆரம்பிச்சதும் தான் களை கட்டியது! 🙂

   Reply

 5. Kaarthik Arul
  Jul 30, 2013 @ 12:29:28

  Wonderful. Kudos to ur perseverance in solving the quiz and for hosting the Event. I missed to be a part of the event and regret for that very much.

  Reply

 6. @thachimammu
  Jul 30, 2013 @ 13:08:26

  அட, நீங்க எப்படி எங்க ஆஃபிஸ் வந்து இதெல்லாம் என் கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க.!!!
  🙂
  உங்களுக்கு வாய்த்த ஒரு அழகான அனுபவத்தை என்னுடையது போல் பாவிக்க வைத்து. விட்டீர்கள். மிக்க நன்றி.

  // அவர் கொடுக்கும் க்ளூக்கள் தான் துணை! So it was a laborious process. I have spent nearly 8 hours on certain clues. // – இது சரியான ஆரம்பம் !

  // அவர் கைக்காட்டிய இடத்தில் குப்பையாக CDக்கள் கிடந்தன. அதில் அந்தப் படத்தைத் தேடிக் கண்டுப்பிடித்து காரில் உள்ள சிஸ்டத்தில் போட்டுப் பாடலைக் கண்டுகொண்டேன் 🙂  இதை @vrsaran இடம் சொன்னபோது நான் மாஃபியா கும்பலின் உறுப்பினர் ஆயாச்சு என்று கூறினார் // – அதான் சரணே சொல்லிட்டாரே !!

  // இதில் சிகரம் 359/365! Rex won his Oscars that day! Just listened to the music bit he had uploaded and I identified the song. Did not read the text, did not look at the LL clue!, // – சட்டுனு சீனியர் மாஃபியா ஆகிட்டீங்களே !!!

  and about your perfect 10… Excellent way to share your take away from this experience, specially he 9th one,
  // 9.Tolerance.If Isai gnyaani can tolerate the gross scenes in the innumerable movies where he was the music director and give such great back ground scores, why can’t we develop patience towards each other? //

  அனைத்துக்கும் மேலாக…
  365RQFinale jammin session நடத்த இடம் மற்றும் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்த உஙகளுக்கும் சேகர் சாருக்கும் நன்றிகள் பல :-))

  ஸ்ரீவத்சன்

  Reply

 7. ரசனைக்காரன் (@Rasanai)
  Jul 30, 2013 @ 13:45:24

  This is mind blowing..Extremely well written…Am so envious about missing out the event 🙂

  Reply

 8. Aishwarya Govindarajan
  Jul 30, 2013 @ 14:22:32

  Kudos and claps to you.
  I missed participating in the final day event 😦
  but journeying through your awesome write up fills my mind now,though the dose of regret has increased mildly.

  Reply

 9. Arun Rajendran
  Jul 30, 2013 @ 17:40:19

  Very nice write up. First of all hats off for the grandiose hosting of #365RajaQuiz final at your home. That is a great gesture. Your enthusiasm in participating the quiz and amazing comradeship you have shown deserves a special applause.
  Great and interesting to know all the hard work you have to put to solve Master’s puzzle. Wish and hope your journey with Maestro’s music continues ever. And a salute to Shekar sir for encouraging your participation and being a great host.

  Reply

 10. Indran
  Jul 31, 2013 @ 01:37:34

  இந்த டேக்ல ஒரு க்விஸ் கூட கலந்துகிட்டது இல்ல….. கலந்திட்டு இருந்திருக்கணும் 🙂

  Reply

 11. Vijay
  Jul 31, 2013 @ 03:22:05

  Excellent and heart-felt write-up!. I believe you wrote everyone’s mind here. Hats off! I too started slowly, but once into it, as you said, it was like an examination to find the song. I too skipped many calls, many engagements. I too spent several hours for some songs, but the experience was unique as you pointed out, mainly because the way Rex conducted the quiz with grace. Glad to see you all (I was online) on 365th day.Can’t be a better celebration for all music fans and thanks a lot for hosting such a memorable event which will stay longer and longer in our hearts.

  – @maestrosworld (Vijay)

  Reply

 12. Rex Arul
  Aug 01, 2013 @ 04:07:53

  Kudos ma. I typed a lengthy reply in Tamil font on my Win 8. It mucked around, just about when I pressed the “Post comment”. So, let me disable my Tamil keyboard and type it in English.

  I want to applaud you for your inspiring post. What you have done here is to clearly assert that his was way more than a quiz. This was way more than many things. It helped you identify that you can pursue anything, if you put your heart and mind and soul into it.

  Many a time, folks may lose the journey by pondering on what they don’t have, in lieu of trying to tap into what they already have.

  You didn’t allow yourself to be in that first category.

  Despite all the odds and not having familiarized with Maestro’s huge repertoire of songs, you fathomed it. You persisted. You prevailed.

  Tenacity made you a teenager 🙂

  Despite your personal pangs, you seem to relish the experience. So, this was much more than identifying a quiz post. It was more about identifying yourself. It was more about, knowing yourself. It was more about, asserting to yourself a fundamental premise that தேடுங்கள் கண்டடைவீர்கள் — Seek and you shall find — is very applicable to even earthly things.

  In this race, you also saw the benevolence of a huge community that was ready to cheer you from the sidelines. Without you realizing it, you were initiated into this community that welcomed you with open arms.

  I always wanted to make this a people’s project. Which is also why, I heavily tweet and comment on all of the feedback, by highlighting the ordinary fans, who became extraordinary due to their passion, zeal, and commitment.

  At the end of the day, everybody knows the ingenuity of Isaignani Ilaiyaraaja. His music speaks for itself. But, what did we do with that? That is the question that is always before us. And stories like yours, clearly tell us what we DID do with that. We just started to see ourselves better.

  And #365RajaQuiz helped serve that cause and goal, tirelessly and without a break for 365 days.

  It made it an exciting journey for toppers like @ezharai with an invincible score of 355 out of 365 as well as neophytes alike.

  I am so moved and touched by all of your personal anecdotes and inspiring stories of resilience and tenacity. Please continue to keep doing that.

  Thanks for hosting the conclusive day’s festivities at your home. You and @N_Shekar deserve all the plaudits for your kindness and hospitality.

  God bless you. Thank you for sharing your story. I need these stories to be told and documented for posterity. You never know, how it might help those who need such stories of perseverance.

  That is all one needs at professional, personal, and spiritual lives of theirs.

  In the end, how many books one reads or music one listens counts for less until what was read and what was listened in someway helps them levitate to higher purposes.

  These stories show, why every minute spent on #365RajaQuiz was worth it. Thank you.

  Reply

  • amas32
   Aug 01, 2013 @ 06:36:36

   All that you have mentioned in your reply is 100% true. Knowing oneself is the purpose of our birth in this earth and this quest of finding Raja songs has made so many people realize so many important aspects about themselves. Today I have received a personal joy in the form of validation from my husband in this forum. I am extremely grateful Rex.

   Reply

 13. Sholavandan (@Naanillai)
  Aug 01, 2013 @ 04:22:53

  இதை படித்தவுடன் எல்லா தாயும் அம்மா தான் என்ற உணரவே மனதில் பட்டது. நன்றி. ராஜாவின் பாட்டுக்களில் தாய்மை இருப்பது போல்.

  Reply

 14. n_shekar
  Aug 01, 2013 @ 05:28:28

  இத்தனை பின்னுட்டங்களை படித்த பின்னும் நான் எழுதாமல் இருப்பது நன்றாக இருக்காது என்பதால்…..

  திருமணம் ஆகி 29 வருடங்களாகிய பிறகும் என் மனைவியின் மேலும் இன்னொரு பரிமாணத்தை புரிந்து கொள்ள இது எனக்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. அவரின் விடாமுயற்சி – தன்னுடைய குறைந்த இசை அறிவையும் ஒரு தடங்கலாக கருதாமல், தன் உடல்நல பாதிப்புகளை மீறிய செய்கையும், என்னுடைய கோபதாபங்களுக்கு ஈடு கொடுத்து, என இவை எல்லாவற்றையும் தாண்டி – வெற்றி பெற செய்ய வைத்து இருக்கிறது. அதற்கு ஒரு பெரிய அங்கிகாரம் உங்கள் அனைவருடைய உந்துதலும், வாழ்த்துக்களும்தான்.

  அவருடைய இந்த ஈடுபட்டால் எனக்கும் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள், என் வயதையும் தாண்டி என்னுடன் சரிசமமாக உரையாட, கிண்டல் கேலி செய்யும் நண்பர்கள் – என்னை இளமையாக இருக்க உதவுகிறார்கள். அதற்கு கடவுளுக்கும், ராஜாவுக்கும் முக்கியமாக ரெக்ஸ் அவர்களுக்கும் மிக்க நன்றி. இந்த நட்புகள் எப்போதும் நிலைத்து இருக்க அந்த இறைவனை வேண்டுகிறேன்.

  உங்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் மேன் மேலும் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்.

  Reply

  • amas32
   Aug 01, 2013 @ 06:30:27

   Thank you. It is a great validation from you and it has touched me immensely. I should really be thankful for Raja Quiz for making you say this. Really touched!

   Reply

 15. tcsprasan
  Aug 01, 2013 @ 06:16:39

  //என்னுடைய கோபதாபங்களுக்கு // சார் உங்களுக்கு கோபம் கூட வருமா?????

  Reply

 16. Uma Chelvan
  Aug 01, 2013 @ 17:52:51

  I am sorry to here that you have IBS. take care! your points are so valid and should be noted by every one for future reference.

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: