Chennai Express – Film Review!

chennaiexp

இந்த வார இறுதியில் தலைவா பார்க்கலாம் என்றிருந்தோம். அந்தப் படம் வெளிவராததால் சென்னை எக்ஸ்பிரஸ் போனோம். அதுவும் போவதாக இல்லை. அந்தளவு துணிச்சல் இல்லை. ஆனால் கானாப்ராபா  படம் ரொம்ப என்டர்டைனிங் ஆக இருந்தது என்று ட்விட்டரில் நற்சான்றிதழ் வழங்கியதால் போக தைரியம் வந்தது. Do not regret the decision though 🙂

தீபிகா படுகோன், ஷாருக் கான், நாயகி, நாயகன். ரோஹித் ஷர்ம இயக்குனர். பாம்பே டு கோவா என்று முன்பு அமிதாப் நடித்து வெற்றிகரமாக வந்த படம் போல இது மும்பை டு ராமேஸ்வரம். ஹீரோத் தனம் இல்லாமல் ஒரு சாதா ஆளாக ஷாருக் கான் வருவது தான் படத்தின் பலம். மேலும் மொழி தெரியாமல் தடுமாறுவது காமெடிக்கு வழி வகுக்கிறது. ரொம்ப இலகுவான படம். ஒரு துளி லாஜிக் கிடையாது. தமிழை பல இடத்தில் கொலை செய்கிறார்கள். ஷாருக் கொலை செய்வதைப் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் தமிழ் பாத்திரங்கள் கொலை செய்வது எப்படி பொருந்தும்?

கேள்வியே கேட்க முடியாது. ஆனால் ஜாலியாக நகருகிறது கதை. அதற்கு முக்கியக் காரணம் ஷாருக் கானின் கதையமைப்பைப் புரிந்துக் கொண்டு தந்திருக்கும் நல்ல நடிப்பு. தீபிகா நன்றாக செய்திருந்தாலும் அவர் ஆங்காங்கே தமிழை சரியாக (டப்பிங் கொடுத்தவர் தான்) உச்சரிக்காமல் இருப்பது எரிச்சலைத் தருகிறது. ஏனென்றால் அவர் கதைப்படி தமிழ் பெண். இதில் பயங்கர காமெடி வில்லனாக வருபவர் தான். ஏன் ஒரு ஆஜானுபாகுவான தமிழ் வில்லன் நடிகர் கிடைக்கவில்லையா? அப்படியே கிடைக்கவில்லை என்றாலும் அவர் பேசும் தமிழை சரியாக டப்பிங் செய்தவர் பேசியிருக்கலாமே?

பாவம் சத்யராஜ். அவர் தான் பெண்ணுக்கு அப்பா, டான் வேறு! படம் முடிந்த பிறகு அவர் முதல் முறை படத்தைப் பார்த்த பொழுது அவருக்குக் கட்டாயம் அழுகை வந்திருக்கும். அப்படி ஒரு டம்மி பீசாக்க்கியிருக்கிரார்கள் அவரை!

திருப்பாணாழ்வாரின் கடைசி பாசுரத்தோடு ஆரம்பிக்கும் ஒரு பாடல் நன்றாக உள்ளது. தொடர்ந்து ஹிந்தியில் வரும் பாடலைப் பாடியிருப்பவர் சின்மயி. பாடல்கள் ஒகே ரகம். இசை விஷால் – சேகர்.

இந்தப் படத்தில் ஷாருக் கானின் மந்த்ரா Don’t under estimate the power of the common man! அதை சொல்லியே படத்தை நகர்த்திவிடுகிறார். It is a romantic movie and I am a sucker for such movies. அதனால் படத்தில் டைடானிக் கப்பலே முழுகும் அளவுக்கு ஓட்டைகள் இருந்தும் படம் முடிந்ததும் திட்டத் தோன்றவில்லை. இந்தப் படத்தின் ட்ரைலர் பார்த்தப் பொழுது ரொம்ப கோபம் வந்தது. ஆனால் திரையில் படத்தைப் பார்க்கும் பொழுது அப்படி வரவில்லை.

ஆனால் செட்கள் மகா கேவலம். இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்துக்கு இப்படியா நமபமுடியாத கொஞ்சம் கூட கதைக் களத்துக்கு ஒட்டாத செட் போட்டுப் படம் எடுப்பார்கள்! தேவுடா!

ப்ரியாமணியின் ஐட்டம் நடனத்தைப் பற்றி சொல்ல விட்டுவிட்டேனே! நன்றாகவே உள்ளது 🙂 ப்ரியாமணி அழகாகவும் காட்சித் தருகிறார். ஷாருக்கும் அவரும் இணைந்து நல்ல வேக கதியோடு ஆடும் குழு நடனத்தை இயக்கிய நடன இயக்குனருக்கு ஒரு ஷொட்டு!

என்னவோ, நானும் படத்தைப் பார்த்து என் ரெண்டணாவை எழுதிவிட்டேன் 🙂 கொசுறு தகவல், படம் சூப்பர் ஹிட்டாம்!

9 Comments (+add yours?)

 1. tcsprasan
  Aug 10, 2013 @ 17:59:45

  ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம்தான்

  Reply

 2. GiRa ஜிரா
  Aug 10, 2013 @ 18:01:13

  இவ்வளவு சொன்னா போதாதா… படத்தைப் பாக்காம இருப்போமா! பாத்திருவோம் 🙂

  Reply

 3. penathal suresh (@penathal)
  Aug 11, 2013 @ 02:35:59

  I will be going today and you are held responsible.

  Reply

 4. Kana Praba
  Aug 11, 2013 @ 03:37:04

  காலையிலேயே படிச்சாச்சு பல கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன் 🙂

  Reply

 5. Vijayashankar
  Aug 11, 2013 @ 12:12:42

  🙂 I am Waiting to See. Its a Do or a Die!

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: