தெய்வத் திருமகளின் உல்டா தங்க மீன்கள். அங்கே விக்ரமும் பேபி சாராவும் (நிலா) கதையைத் தாங்கிய இரு தூண்கள். இதில் அப்ளாஸ் வாங்குவது இயக்குனர்/நடிகர் ராமும் சாதனாவும் (செல்லம்மா).
ட்ரைலர் மட்டுமே பார்த்துக் கதை தெரியாமலும் வேறு எந்த விமர்சனமும் படிக்காமல் சென்றேன். I was truly mesmerized by the riveting performance of Ram and Sadhana! எட்டு வயதுப் பெண்ணை காதாப்பத்திரத்தின் தன்மையை உணர வைத்து நடிக்க வைத்திருப்பது இயக்குனரின் திறமையை மட்டுமே காட்டுகிறது. உணர்ச்சிக் குவியல்களை அவ்வளவு அழகாக வித்தியாசப் படுத்திக் காட்டுகிறார் அந்த இளம் பெண். எத்தனை வசனங்கள்! எவ்வளவு உழைப்பு! அவளுடன் நடிக்கும் அந்தத் தோழிப் பெண் பேபி சஞ்சனா பேசும் பேச்சுக்களும் A 1. நம்மை அறியாமல் புன்னகையை முகத்தில் வரவழைக்கும் ரகம் 🙂 மேலும் ஒண்ணாந்தரமான நடிப்பு! அப்பாவித்தனமாக அவர்கள் பரிமாறிக் கொள்ளும் உரையாடல்களின் மூலமாகவே இயக்குனர் சோகம், மகிழ்ச்சி, அடி வயிற்றில் தொடங்கும் ஒரு பயம் அனைத்தையும் பார்ப்பவர்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறார். அவள் வகுப்புத் தோழியை அவளை விட இள வயதாகக் காட்டுவது இயக்குனரின் attention to detailsக்கு ஒரு எடுத்துக் காட்டு.
ஒவ்வொரு பாத்திரமும் அசல். யாருமே கெட்டவர்கள் இல்லை. ஆனாலும் உணர்ச்சிப் போராட்டமும், எதிரும் புதிருமாக சண்டையிடுதலும், கோபமும், மனஸ்தாபமும், மிகவும் இயல்பாக உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் நியாயப் படி சரி என்பதைச் செய்கின்றனர். அது எதிராளிக்குச் சரியாக இல்லாமல் போவது தானே வாழ்க்கை, அதை நிதர்சனமாகக் காட்டுகிறது இந்தப் படம். ஹீரோவின் தாய் தந்தையராக வரும் பூ ராமுவும் ரோஹினியும் கச்சிதமாக அவர்கள் பாத்திரத்தைச் செய்கின்றனர். மனைவியாகப் புது முகம் ஷெல்லி கிஷோர். மிகவும் நன்றாக நடித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், தங்கை கதாப்பாத்திரம், கேரளாவில் வரும் காரக்டர்கள், வகுப்புப் பிள்ளைகள் அனைவருமே நன்றாகச் செய்துள்ளனர். அதிகப்படியான பாத்திரங்களும் இல்லை, மிகைப் படுத்தப் பட்ட சீன்களும் இல்லை. பத்மப்ரியாவின் ஆசிரியைப் பாத்திரம் ரொம்ப சின்னது ஆனால் நல்ல தேர்வு.
இந்த மாதிரிக் கதையைக் கையாள நிறைய திறமையும் சொல்கின்ற விஷயத்தில் ஞானமும், நம்பிக்கையும், நேர்மையும் வேண்டும். அப்பொழுது தான் படம் வெற்றிப் பெறும். அப்படிப் பார்க்கும் பொழுது ராம் ஜெயித்து விட்டார். தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசத்தை விட தந்தையைப் புரிந்த கொண்ட மகளும், மகளைப் புரிந்தக் கொண்ட தந்தையும் தான் இந்தப் படத்தின் கதை/கரு. ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம். முக்கியமாக special child உள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம்.
நாளொன்றுக்கு நகைச்சுவை படம் என்ற பெயரில் வரும் குப்பைப் படங்கள் பல்கிப் பெருகியுள்ள இந்தக் காலத்தில் இந்த மாதிரி ஒரு உருப்படியானத் திரைப்படம் வரும் போது வரவேற்க வேண்டியது நம் கடமை. நான் ரொம்ப எளிதில் அழுது விடுவேன். பிழியப் பிழிய அழ வேண்டுமோ என்று நினைத்துப் பயந்து கொண்டே போனேன். நெகிழ்ச்சியாக சில இடங்கள் இருந்ததேத் தவிர there was no melodrama.
ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம். ஆனந்த யாழை பாட்டின் ஒளிப்பதிவும் மற்றும் படம் முழுக்க வரும் கிராமத்து வயல் வெளியும், கேரளாவின் இயற்கை எழிலும் கண்ணுக்கு விருந்தாக அள்ளித் தருகிறார் அரபிந்து சாரார்.
யுவன் இசையில் என்னைக் கவர்ந்தது ஆனந்த யாழ் பாடல் மட்டுமே. மற்றப் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை காதை இம்சிக்கவில்லை. அது வரை மகிழ்ச்சியே!
சொல்ல வந்ததைக் கச்சிதமாக சொல்லியிருக்கிறார் ராம். தங்க மீன்கள் – தங்கம்!
Sep 01, 2013 @ 12:34:08
Crisp
Sep 03, 2013 @ 11:35:58
நன்றி 🙂
Sep 01, 2013 @ 13:43:59
நல்ல பகிர்வு, கதையைச் சொல்லும் மரபிலிருந்து விலகியே இருந்து சொல்லும் உங்கள் பார்வை சிறப்பானது
Sep 03, 2013 @ 11:36:39
நன்றி 🙂
Sep 01, 2013 @ 14:03:26
இன்னும் படம் பார்க்கல…. அளவுக்கு அதிகமான உனர்ச்சிக் குவியலாய் இருக்குமோனு சின்ன பயம்…. பாக்கிரேன்
Sep 01, 2013 @ 15:12:41
படம் நல்லாருக்குன்னு சொல்றிங்க. நம்பிப் பாக்கலாம்னு தோணுது. முயற்சி பண்றேன்.
உங்க சேவை எவ்வளவு உதவியா இருக்கு எங்களுக்கு 🙂
Sep 02, 2013 @ 19:49:20
GiRa, I would like to delete few words in my comment at your post “4 vari note” how can i do that? Please help on that! I greatly appreciate your help on that!
Sep 02, 2013 @ 01:33:45
I used to avoid more sentiment movies as it will disturb me…that’s why asked your review well ahead as I wanted to watch this movie but some resistance that movie may be more emotionals….thanks will watch on this weekend.
Sep 02, 2013 @ 02:02:32
தங்கமீன்கள் அழுவாச்சி படம்னு சொன்னாங்கேன்னுட்டு நேத்து தேசி ராஜா போய் பார்த்தேன் . உங்க விமர்சனம் பார்த்த பிறகு எனக்குள் ஒரு ஆர்வம் வந்துவிட்டது . நன்றி அம்மணி
Sep 02, 2013 @ 02:55:55
ஆஹா அப்போ படம் நல்லாருக்கா?:) நிறைய பேர் நல்லால்லன்னு புலம்பிட்டு இருந்தாங்களே …அப்போ பார்த்துட வேண்டியதுதான் 🙂
//ஒவ்வொரு பாத்திரமும் அசல். யாருமே கெட்டவர்கள் இல்லை. ஆனாலும் உணர்ச்சிப் போராட்டமும், எதிரும் புதிருமாக சண்டையிடுதலும், கோபமும், மனஸ்தாபமும், மிகவும் இயல்பாக உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் நியாயப் படி சரி என்பதைச் செய்கின்றனர். அது எதிராளிக்குச் சரியாக இல்லாமல் போவது தானே வாழ்க்கை, //
அவ்வ்..இப்போ வரை என் பக்கம் நிகழ்ந்து கொண்டிருப்பதுவும் இதே தான் .திரும்பத் திரும்ப படித்தேன் இந்த வரிகளை 🙂
Sep 02, 2013 @ 03:38:57
கடைசி வரை கதையை சொல்லலை. 🙂 ஆனா இந்த மாதிரி குழந்தைகள் கஷ்டப்படும் படம் என்றால் அதிலிருந்து வெளியே வர எனக்கு ரொம்பநாளாகும். அதனாலேயே அப்படிப்பட்ட படங்களைப் பாக்கவே மாட்டேன். இப்போ சமீபத்தில் வந்த ஹரிதாஸ் கூட இதே காரணத்துக்காக பாக்கலை. இதுவும் அதுபோலன்னு தோணுது
Sep 02, 2013 @ 03:40:59
இந்த கமெண்ட் என்னுடையது. கவனக்குறைவால் குவிஸ் ஐடியில்லிருந்து போட்டுவிட்டேன். மன்னிக்க
Sep 02, 2013 @ 03:51:32
இதே காரணத்தினால் நான் குட்டி படம் பார்ப்பதை தவிர்த்தேன். ராஜா இசை இருந்தால் கூட
Sep 02, 2013 @ 03:53:23
I have not seen kutti yet
Sep 02, 2013 @ 12:17:30
உங்களின இந்தப் பதிவு ராம் பாணியில் எழுதப்பட்டது போல் உள்ளது.
மிகவும் அருமை 🙂
நான் வருடத்திற்கு ஓரிரு படங்களுக்கு மேல் பார்ப்பதில்லை.
தங்க மீன்கள் பார்கணும்னு எண்ணியிருந்தேன்.
நீங்களும் ஊக்கப்படுத்திவிட்டீர்கள். நிச்சயமாக குடும்பத்துடன பார்க்கிறேன்.
நன்றி.
Sep 02, 2013 @ 14:36:46
:-))) நன்றி!
Sep 03, 2013 @ 14:36:34
இந்தப்படத்தின் இயக்குனர், மற்றும் சாதனா என்ற பெண் குழந்தை நட்சத்திரம் பற்றி வாரப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று நீங்கள் சொல்வதால் சி. டி. கிடைக்குமா என்று பார்க்கிறேன். உஙளுடைய விமர்சனம் அருமை.
Sep 03, 2013 @ 15:37:39
நன்றி, பாருங்கள் 🙂
Sep 04, 2013 @ 06:52:51
பொதுவாக நான் பார்க்க விரும்பும் படங்களுக்கு விமர்சனங்கள் படிப்பதில்லை. சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால்.ஆனால் கதையை சொல்லாத உங்கள் விமர்சனம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. முக்கிய குறையாக சொல்லப்பட்ட மெலோட்ராமா இல்லை என்றிருக்கிறீர்கள். சீக்கிரம் படம் பார்க்கணும்.
‘அவரவர் நியாயப்படி சரி,எதிராளிக்கு சரியில்லாமல் போவது வாழ்க்கை’ முற்றிலும் உண்மையான வார்த்தைகள். பல சந்தர்ப்பங்களில் நான் நினைத்துக்கொள்ளும் வார்த்தைகள். அருமை.
Sep 05, 2013 @ 12:09:36
Thanks a lot. Hope you enjoy the movie 🙂