மூடர் கூடம் – திரை விமர்சனம்

Moodar-Koodam-Movie-Poster-01

அறிமுக இயக்குனர்/ படத்தின் கதாநாயகன் நவீனுக்கு ஒரு பாராட்டுப் பூங்கொத்து! எல்லாப் பட விளம்பரங்களிலும் இது ஒரு வித்தியாசமான கதை என்று நடிகரும் இயக்குனரும் வந்து  சொல்வார்கள். ஆனால் 90% சதவிகிதப் படங்கள் அரைத்த மாவையே தான் அரைத்து மே பீ வேறு வடிவில் பணியாரத்தைச் சுடுகிறார்கள். எதோ ஒன்றிரெண்டு படங்கள் தான் உண்மையாகவே புதுமையான திரைக்கதையுடன் வருகிறது. அதில் ஒன்று மூடர் கூடம் 🙂 நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், பீட்சா, தங்க மீன்கள் இவை என்னைப் பொறுத்த வரையில் சமீபத்தில் வந்த புது முயற்சிகள்.

இந்தப் படமும் இன்றைய காலத்து வேலை வெட்டி இல்லாத நான்கு பேரின் அனுபவம் தான். ஆனால் காதல் இல்லை, குத்துப் பாட்டு இல்லை, வெளிநாட்டில் போய் டூயட்டோ சண்டைக் காட்சிகளோ இல்லை. ஆனால் நுட்பமான காமெடி படம் முழுவதும். தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொஞ்சம் ரசித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆக்கினால் ஜெமோ மலையாளிகள் தான் நுட்ப காமெடியை ரசிக்கும் தன்மையுடையவர்கள் என்று சொல்லியக் கூற்றை தவறென்று நிருபித்து விடலாம். ஆனால் இன்று காலை ஆட்டத்தில் பாதி அரங்கம் தான் நிரம்பி இருந்தது.

ரொம்ப செலவில்லாதத் தயாரிப்பு. அதனால் படத் தயாரிப்பாளர் பாண்டி ராஜ் பணம் பார்த்து விடுவார் என்று நம்புகிறேன். ஜெயப்ரகாஷுக்கு அம்சமாகப் பொருந்துகிறது ரோல். அதையும் கச்சிதமாக செய்திருக்கிறார். மற்ற அனைத்துக் கதாப் பாத்திரங்களும் சரியான காஸ்டிங், சரியான நடிப்பு. இந்தப் படத்தில் வரும் அடியாட்கள்/தாதாக்கள் இவர்களைப் பார்த்தால் நார்த் மெட்ராஸ் செல்லவே பயம் வந்துவிடும் என்று நினைக்கிறேன். நிறையப் பாத்திரங்கள் ஆனால் இயக்குனர் பார்ப்பவர்களைக் கன்பியுஸ் ஆக விடாமல் கதையை நகர்த்தியிருப்பது அவரின் திறமைக்கு ஒரு சான்று.

அதில் வரும் ஒரு குழந்தையின் கதாப்பாத்திரம் பேசும் வசனமும் அதன் நடிப்பும், சிரித்து சிரித்து மனம் லேசாகிவிட்டது 🙂 தனியா அந்த களிப்பிங்  youtubeல் சக்கைப் போடு போடும் என்று நினைக்கிறேன். ஆனால் கதையோடு அந்தப் பகுதி ரொம்ப நகைச்சுவைத் தன்மைக் கொண்டதாக உள்ளது.

இயக்குனர் புதிய யுக்திகளைக் கதைச் சொல்லும் விதத்தில் கையாள்வது மிக நேர்த்தியாக உள்ளது. கதையிலிருந்து விலகாமல் அதே சமயம் பல பாத்திரங்கள் கதைக்குள் வந்து சேருவது நல்ல சுவாரசியத்தைக் கொடுக்கிறது.

இசை நடராசன் சங்கரன் – பிரமாதம். ரொம்ப நாள் கழித்து படத்தின் தரத்தை பின்னணி இசை உயர்த்திக் காட்டுகிறது. ஒரு ஹாலிவுட் படத்தின் தரத்தில் உள்ளது படத்தின் இசை. பாரதியின் பாடலும் உள்ளது, நிலா நிலாவும் உள்ளது, ரஷிய (நினைக்கிறேன்) பாடலிசையும் உள்ளது, பொருத்தமான இடத்தில் 🙂

இந்தப் படத்திலும் கதாப் பாத்திரங்கள் புகைப் பிடித்தல் படம் முழுக்க வருகிறது! என்ன பண்ணுவது வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருப்பவர்களைச் சித்தரிக்கும் பொழுது புகைப் பிடிப்பவர்களாகக் காண்பிப்பது தான் அவர்கள் இயல்பை பிரதிபலிக்க உதவுகிறது என்று கதாசிரியர்/இயக்குனர் சொல்லுவாரரோ? குடியும் புகைப்பிடித்தலும் இல்லாத படங்கள் இன்றைக்கு இல்லை என்பது சமூகத்தின் அவல நிலையைக் காட்டுகிறதா, அல்லது கதாசிரியர்கள் இயக்குனர்களின் கற்பனை வறுமையைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை.

ஒளிப்பதிவு, எடிடிங் இரண்டும் தரமாக உள்ளன.

நகைச்சுவைப் படம். நிச்சயம் பார்க்கலாம் 🙂

11 Comments (+add yours?)

 1. Chari Iqbal Emendis (@Rasanai)
  Sep 15, 2013 @ 15:00:43

  நைஸ்..ஃபுல்லாவே பாசிடிவ்வா சொல்லியிருக்கீங்க 🙂

  Reply

 2. @RavikumarMGR
  Sep 16, 2013 @ 14:44:54

  //குடியும் புகைப்பிடித்தலும் இல்லாத படங்கள் இன்றைக்கு இல்லை என்பது சமூகத்தின் அவல நிலையைக் காட்டுகிறதா, அல்லது கதாசிரியர்கள் இயக்குனர்களின் கற்பனை வறுமையைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை//இன்றைக்குப் பெரும்பாலானோர் புகை பிடிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது!:)

  Reply

  • amas32
   Sep 16, 2013 @ 14:50:03

   உண்மைதான், அதைத் தான் என் அம்மாவும் சொன்னார்கள் 🙂

   Reply

 3. Anonymous
  Sep 16, 2013 @ 14:55:38

  Added to the list to watch it.thanks

  Reply

 4. Anonymous
  Sep 18, 2013 @ 14:38:11

  sure i’ll gonna watch

  Reply

 5. yuvarekha
  Sep 18, 2013 @ 14:41:38

  Oru nalla padam pakkanumnu nenachitu irunden. Itha pakkalam pola.

  Reply

 6. Ananthan
  Oct 08, 2013 @ 02:30:04

  Story line from korean film “Attack the Gas station” …

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: