இன்றைய இளைஞர்களை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. மௌன ராகமும் அந்த ஏழு நாட்களும் பார்க்காத இளைஞர்களை வசப்படுத்த இயக்குனர் அட்லீ குமார் எடுத்திருக்கும் படம் ராஜா ராணி. பெயர் காரணம் இறுதி வரை தெரியவில்லை.
நல்ல நடிகர் கூட்டம். ஆர்யா, நயன்தாரா, சத்யராஜ், ஜெய், சந்தானம், நஸ்ரியா. அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். சென்னை எக்ச்ப்ரெஸ், வருத்தப் படாத வாலிபர் சங்கம் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சத்யராஜ் பாத்திரம் அப்பாடா என்று சொல்லவைக்கிறது. அவருக்கேற்ற ரோல், நன்றாக செய்திருக்கிறார். ஜெய் டைப் காஸ்ட். அதே பயந்த சுபாவம், வெகுளி, பெண் அவரை காதலித்து வழி நடத்தும் காரெக்டர். அவருக்கு அது அல்வா சாப்பிடுகிற மாதிரி! இந்தப் படத்தில் நடிப்பில் அசத்தியிருப்பது நயன்தாரா. ரொம்ப நன்றாக செய்துள்ளார். கொஞ்சம் மேக்கப்பைக் கம்மி பண்ணியிருக்கலாம், அடுத்த சரோஜாதேவியாகிவிடுவாரோ என்று அஞ்சுகிறேன். நஸ்ரியாவை திரையில் இப்பொழுது தான் முதன் முறையாகப் பார்க்கிறேன். சரவெடிப் பட்டாசாக இருக்கிறார். இளமைத் துள்ளுகிறது. அழகு தான் 🙂 ஆர்யாவும் சந்தானமும் நல்லக் கூட்டணி. நல்ல வேளை இருவரும் சேர்ந்து இருந்தாலும், சேர்ந்தே சரக்கடித்தாலும் படத்தில் மொட்டை ராஜேந்திரனும் இருந்தாலும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை நினைவூட்டாமல் இருப்பதற்கு இயக்குனருக்கு நன்றி. இவர்களைத் தவிர மனோபாலாவும் சத்யனும் இருக்கிறார்கள்.
ஜி வி ப்ராகாஷின் பாடல்கள் நன்றாக உள்ளது. பளிச் சினிமடொக்ராபி பை ஜார்ஜ் வில்லியம்ஸ். நிரவ் ஷாவின் சிஷ்யர். குருவின் பெயரைக் காப்பாற்றியுள்ளார். எடிட்டிங்கும் கச்சிதமாக உள்ளது – ஆந்தனி ரூபன். உடையலங்காரம் யார் என்று தெரியவில்லை, வெகு நேர்த்தி! பழைய காலத்து வாணிஸ்ரீ ஸ்டைலில் மேல் தலையில் பன் வைத்த முடியலங்காரம் மட்டும் நயனுக்குப் பொருந்தவில்லை என்பதே என் எண்ணம்.
பழைய கதையே ஆனாலும் ட்ரீட்மென்ட் நன்றாக உள்ளது. நடிகர்கள் படத்துக்கு உயிர் சேர்க்கிறார்கள். முடிந்த காதலுக்குப் பின்னும் நல்ல வாழ்க்கை அமையும் என்று சொல்லும் அளவில் படம் பாசிடிவ் ஆக உள்ளது. படத்தைப் பார்த்து தானே மக்கள் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்!
முருகதாஸ் தயாரிப்பு. படம் வசூலைத் தரும். அதனால் தான் இந்த மாதிரிப் படங்களே வருகின்றன. எதற்கு வரவேற்பு இருக்கிறதோ அதில் தானே தயாரிப்பாளர்களும் பணத்தைப் போடுவார்கள்!
படத்திற்கு ஏண்டா போனோம் என்று தோன்றவில்லை. சில இடங்களில் என்னை படம் நெகிழ்த்தியது. முன் பாதியில் இருந்த சுவாரசியம் பின் பாதியில் இல்லாதது ஒரு குறை. சந்தானம் எரிச்சல் ஊட்டாதது இன்னொரு ப்ளஸ்!
வாசகர்கள் வேண்டுகோளுக்கிணங்க இன்னுமொரு போஸ்டர் :-))
Sep 28, 2013 @ 08:22:36
தானைத்தலைவி நஸ்ரியா படம் போடாததற்கு அகில உலக நஸ்ரியா பேரவை சார்பாக கடும் கண்டனங்கள்..
Sep 28, 2013 @ 09:23:35
Padam parthatjhupol ulladhu
Sep 28, 2013 @ 10:46:59
நீங்க, படம் பார்க்கும் போதே விமர்சனம் ஏழுதுவீங்ளா? Just someone said that they saw you at kamala theatre 🙂 as usual review without story is good
Sep 28, 2013 @ 10:56:04
கமலாவில் தான் பார்த்தேன் 🙂 பார்த்தவுடன் எழுதிவிட்டேன்.
Sep 29, 2013 @ 11:18:08
படம் பாத்துட்டுதான் உங்களோட விமர்சனம் படிக்கனும்னு ஒரு முடிவோட இருந்தேன். சிட்டிக்குள்ள டிக்கெட் கெடைக்காம பெரம்பூர்ல ஒரு பிரண்டு கிட்ட சொல்லி எஸ்2 ல பாத்துட்டேன்.
நாங்க என்னெல்லாம் பேசுனோமோ… அதெல்லாம் நீங்க அப்படியே சொல்லியிருக்கிங்க.
வாணிஸ்ரீ கொண்டை, அதிக மேக்கப் (குறிப்பா ஐ லேஷஸ்), அடக்கி வாசித்த சந்தானம், ஓளிப்பதிவு, இசை, சற்றே நீளமாக முடிவு.
அந்த 7 நாட்கள் + மௌனராகம் சாயல் இல்லாம காதல் படங்கள் எடுக்குறது ரொம்பவே கஷ்டம்மா.. அதெல்லாம் கிளாசிக் மூவிஸ் + கிளாசிக் சாங்ஸ்
படம் எனக்குப் பிடிச்சிருந்தது. கிட்டத்தட்ட இதே பாணியில் நான் ஒரு நாவல் நினைச்சு வெச்சிருந்தேன். From 2002. ஆனா கதை இதுவல்ல. காதலில் தோல்வியடைந்த இரண்டு பெண்களை வைத்து.. Fire அல்ல. ஆனா அப்போ அந்த சப்ஜெக்ட் ஹெவி. இப்போ கண்டிப்பா எழுதலாம்னு தோணுது.
Sep 29, 2013 @ 12:07:55
தமிழர்களின் தாகம் தீர்க்க வந்த சேத்தன் பகத்தே வருக… சீக்கிரம் எழுதுங்கண்ணே…
Sep 29, 2013 @ 12:21:56
Please do write 🙂 Let me be the first reader too 🙂
Oct 02, 2013 @ 05:12:20
ரசித்துப் படித்தேன். நல்ல, அளவான விமர்சனம்.
“அடுத்த சரோஜா தேவியாகிவிடுவாரோ என்று அஞ்சுகிறேன்” – வி. வி. சி. கமெண்ட். படத்தின் பட்ஜெட்டில் பாதி நயன் தாராவின் மேக் அப்பிற்கு என்பது என் கருத்தும் கூட.
படம் எந்த விதத்திலும் என்னைக் கவரவில்லை. இந்த “கண்டதும் காதல் காட்சிகள்” இன்னும் எத்தனை எத்தனை படங்களில் சகித்துக் கொள்ள வேண்டியிருக்குமோ.
நஸ்ரியா நசீம் … ம்ம்ம்… அடுத்து வரும் படங்களில் பார்ப்போம், முக பாவங்கள் எக்குத்தப்பாய் விழுகின்றன.
சத்யராஜ் & ஜெய் இருவரின் நடிப்பு மட்டுமே ஒரு ஆறுதல் !
Oct 02, 2013 @ 05:15:34
thank you 🙂 I did not want to be too critical, as these are the kind of
movies which run and the response in the theater was so high!
Oct 25, 2013 @ 20:35:35
kuppai padam. kara kara kurali jai pesuvathu rompa mosam. roooooooompa slow. pakuravanuku thugam than varum. nan thunkiten.