ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – திரை விமர்சனம்.

Onayum-Aatukuttiyum-Theatre-List

மிஷ்கினின் புதிய படைப்பு ஓநாயும் ஆட்டுக்குட்டியும். நிச்சயமாக புதிய முயற்சி. வழக்கு எண் 18/9 படத்தின் நாயகன் ஸ்ரீ தான் இந்தப் படத்திலும் நாயகன். ஆனால் இணை நாயகன் என்றே சொல்லவேண்டும். மிஷ்கின்னுடன் சேர்ந்து கலக்கியிருக்கிறார். மருத்துவ மாணவன் பாத்திரம் ஸ்ரீக்குப் பாந்தமாகப் பொருந்துகிறது. innocence, naivety, ஒரு நல்ல மனமுடைய இளைஞனின் துடிப்பு, கடைசியில் உண்மை தெரியும் போது வரும் பக்குவம், அனைத்தையும் சிறப்பாக வெளிக்காட்டுகிறார். மிஷ்கின்னுக்கும் அவர் செய்யும் பாத்திரம் மிகச் சரியான tailor made role for him. கடைசியில் ஓநாய் நரி கதை சொல்லும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

மிஷ்கின்னின் ட்ரேட் மார்க் – இரவில் பயணிக்கிறது கதை. நடப்பவைகளுக்கு என்ன சம்பந்தம் என்று படத்தின் இறுதியில் தான் தெரிந்தாலும் கதையுடன் ஒன்றிப் பார்க்க முடிகிறது. விறுவிறுப்பாக இருக்கிறது. போலிஸ் கதை. நிறைய கொலைகள். ஒரே இரவில் நடப்பதால் விறுவிறுப்புக் கூடுகிறது. பாடல்கள் இன்றியும், அசட்டுப் பிசட்டு நகைச்சுவை காட்சிகளும் இல்லாமலும், ஆங்கில படத்தின் தரத்தில் எடுத்திருக்கிறார்.

சின்னஞ்சிறு பாத்திரத்தில் விலைமகளாக நடிப்பவர், ஏமாற்றமும் கோபமும் கலந்து கடைசியில் ஸ்ரீயைப் பார்க்கும் ஒரு பார்வையில் மனத்தை அள்ளுகிறார். எல்லாரிடமும் நல்ல நடிப்பை கறந்திருக்கிறார் மிஷ்கின்.

இந்தப் படத்தை உயர்ந்த தரத்துக்கு இட்டுச் செல்வது பின்னியெடுக்கும் இசை ஞானி இளையராஜாவின் பின்னணி இசை தான். பாடல்களே இல்லாத ஒரு படம். படத்தில் வசனங்கள் வெகுக் குறைவு. Visuals and music make the movie! எங்கு நிசப்தம் தேவையோ அங்கே silence எங்கே symphony தேவையோ அங்கே இசை மழை! வசனம் சொல்லாததை இசையின் மூலம் சொல்லிவிடுகிறார் ராஜா.

ஒளிப்பதிவு – பாலாஜி ரங்கா. இருட்டிலேயே நடந்தாலும் மணி ரத்னம் படம் மாதிரி இருளோ என்று இல்லை.

ஆனால் கதையில் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருக்க வேண்டும். இயக்குனர்கள் மக்களின் ரசனையை/அறிவைக் குறைத்து எடைபோடக் கூடாது. ஒரே ஒரு குடும்பத்திற்காக இத்தனை பேர்கள் சாக வேண்டுமா? How does he justify the death of so many people for undoing the mistake he committed? And to begin with his action is the cause for the gang boss targeting him. ஆரம்பத்தில் மருத்துவ மாணவன் 108 ஆம்புலன்சை ஏன் கூப்பிடவில்லை என்பது சின்ன ஓட்டை என்றால், மேற்கூறிய இந்த பாயிண்ட் பெரிய ஓட்டை.

படத்தில் பல இடங்களிலும் முடிந்த பிறகும் நிறைய கைத்தட்டல்கள் அரங்கத்தில் ஒலித்தது. That is quite heartening!

p.s. இங்கே பின்னூட்டத்தில் @vijayathithan) get2karthik கூறியிருக்கும் விளக்கம் ஏற்கும்படி உள்ளது. மிஷ்கின் கொலை செய்வது கெட்டவர்களை மட்டும்.

9 Comments (+add yours?)

 1. ammuthalib
  Sep 29, 2013 @ 15:46:03

  இருட்டிலேயே நடந்தாலும் மணி ரத்னம் படம் மாதிரி இருளோ என்று இல்லை. //ROFL ma

  காந்தி பொறந்த நாளைக்கு அவருக்கு பிடிச்சா ஆட்டுப்பாலுக்கு நன்றி செய்யும் விதமா ஓ.ஆட்டுக்குட்டி பாத்துடுறேன்

  Reply

 2. get2karthik
  Sep 29, 2013 @ 15:59:28

  ****SPOLIERS AHEAD COMMENT

  படத்தின் ஆரம்பத்தில் இருந்து மிஷ்கின் கொலை செய்வது இல்லை.போலீஸில் கறுப்பு ஆடாக இருக்கும் ஒருவன் வில்லனிடம் சொல்ல ரயிலில் வரும் மிஷ்கின் இரு அடியாட்களை சுடுகிறார்.அந்த ரயில் ஒட்டுனரை கட்டி போடுகிறார்.காரில் இருக்கும் இருவரை கட்டி போடுகிறார்.பின் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை காலில் சுடுகிறார்.இன்னொருவரை முதுகில்.கார் சேஸில் துப்பாக்கியில் சுடுபவரை கொள்கிறார்.பின்பு அந்த பெண்ணை சுடும் ஆதி.இறுதி காட்சியில் அந்த தாயை கொன்ற இருவர் என எனக்கு எல்லாம் justified மாதிரி தான் தெரிந்தது 🙂

  Reply

 3. ஆதித்தன் (@vijayathithan)
  Sep 29, 2013 @ 16:34:23

  இந்த படத்தில் மிஸ்கின் செய்வது மொத்தம் 4 கொலைகள் அதுவும்..வில்லனின் ஆட்களை மட்டுமே அன்றி அப்பாவி மக்களையோ போலிஸ்காரர்களையோ அல்ல…

  எனக்கு படம் உருவாக்கிய விதத்தில் மிகவும் கவர்ந்துவிட்டது…

  Reply

 4. கானா பிரபா (@kanapraba)
  Sep 30, 2013 @ 10:36:31

  காலையில் இருந்து பின்னூட்டம் போட்டும் சேராம போராட்டம், அப்பாடா இப்போதான் எனக்கு வழி கிட்டியிருக்கு 😉

  உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை இரட்டிப்பாக்கியிருக்கு. ஆனா இங்கே தியேட்டரில் ஓடல, டிவிடி வரை காத்திருக்கணும்.

  Reply

  • amas32
   Sep 30, 2013 @ 11:13:23

   ஓ, அமெரிக்காவில் பல மாநிலங்களில் ரிலீஸ் ஆகியிருக்கு.

   Reply

 5. GiRa ஜிரா
  Oct 02, 2013 @ 05:54:23

  மிஷ்கின் படம் இதுவரைக்கும் எதுவும் பார்த்ததில்ல. வரிசையா பாக்குறதுக்கு படங்கள் திட்டமிடப்பட்டிருப்பதால இப்போதைக்கு இந்தப் படத்தைப் பாக்க முடியுமான்னு தெரியல. டிவிடி வரட்டும்.

  இளையராஜாவின் பின்னணி இசையமைப்பைப் பத்திச் சொல்லித்தான் தெரியனுமா? சூரியன் வெளிச்சமாத்தான் இருக்கும் 🙂

  Reply

 6. UKG (@chinnapiyan)
  Dec 25, 2013 @ 16:32:26

  பல வேலைகளுக்கிடையே இன்றுதான் பார்க்க சந்தர்பம் கிடைத்தது. உடனே உங்களின் விமர்சனத்தை தேடித்தான் ஓடினேன். அருமையாக விமர்சித்துள்ளீர்கள். நன்றி. ஸ்ரீ வீட்டிலிருந்து தப்பிய மிஸ்கின் ஏன் மறுபடியும் காண்டாக்ட் பண்ணனும்? கிடைத்த சந்தர்பங்களில் ஸ்ரியிடம் ஆரம்பத்திலேயே தன் கதையை சொல்லியிருக்கலாமே ! (ஒருவேளை சுவாரஸ்யம் கெட்டுபோயிருக்குமோ). அப்புறம் அந்த வில்லனை கடைசி சந்தர்பத்தில் ஏன் கொள்ளவில்லை? அல்லது அவனாகவே செத்துவிட்டானா? அல்லது எனக்குத்தான் புரியவில்லையா?

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: