கிருத்திகா உதயநிதி எழுத்து இயக்கத்தில், கணவர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வணக்கம் சென்னை! முதல் படத்திற்கு ஏற்ற நல்ல தலைப்பை வைத்துள்ளார் கிருத்திகா. ஆனால் திரும்பி நாமும் பதில் வணக்கம் வைக்கணும், அப்படி வெச்சா தான் அவர் தொடர்ந்து படம் எடுக்க முடியும். வடிவேலு பொட்டுக் கடலையை சாப்பிடுகிறா மாதிரி தான் நாம் அரைகுறையா பதில் வணக்கம் வைக்க முடியும், அந்த அளவிலே தான் உள்ளது படம்.
முதலில் புது முகம் படம் எடுக்கிறார் என்பது முதல் சிலக் காத்சிகளிலேஎத் தெரிந்துவிடுகிறது. (சூடு பிடிக்கவில்லை என்று சொல்ல வருகிறேன்) பிறகு சில நல்ல சீன்கள், அப்புறம் தொய்வு, பிறகு சிறிது பார்க்கும்படியான காட்சிகள். இப்படி மாற்றி மாற்றி வந்துக் கொண்டே இருக்கிறது. தமிழர்களுக்குப் பொறுமை பற்றி என்ன, தனிப் பாடமா எடுக்கவேண்டும்? அது தான் நம் இரத்தத்திலேயே ஊறியிருக்கிறதே! அதை நம்பிப் படமும் தயாரித்து விடுகிறார்கள்.
இந்தப் படத்தில் நன்றாக உள்ளது என்று பாராட்டப்பட வேண்டும் என்றால் அது இசை மட்டுமே. பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக உள்ளது. இசை அனிருத், படம் முடிந்ததும் ஒரு பாடலுக்குத் தனி நடனம் ஆடுகிறார். அது கொஞ்சம் காமெடியாகத் தான் உள்ளது. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் சுமார் ரகம்.
சின்ன பட்ஜெட்டில் தயாரித்துவிட்டார் தயாரிப்பாளர். எல்லாக் கதையும் ஒரு வீட்டுக்குள்ளேயே, அதுவும் செட் என்று பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.வெளிநாட்டுக்கு ஹீரோ ஹீரோயினியை எல்லாம் டூயட் பாட அழைத்துச் செல்லவில்லை. கிருத்திகாவும் நல்ல மனைவி. கணவனுக்கு ரொம்ப செலவு வைக்காமல் ஏர்போர்ட்டை மட்டுமேக் காட்டி உண்மையிலேயே பில்ம் காட்டிவிடுகிறார்.
ஊர்வசி, நாசர், நிழல்கள் ரவி போன்ற பெரிய நடிகர்களை துணை நடிகர்கள் அளவுக்குப் பயன்படுத்தியிருப்பது சோகமே! ரேணுகா, மனோபாலா சின்ன பாத்திரமானாலும் பழுதில்லாமல் செய்திருக்கிறார்கள். மிர்ச்சி சிவா ஹீரோ, நன்றாக செய்திருக்கிறார். என்ன, நடனம் தான் சுட்டுப் போட்டாலும் வராது போலிருக்கிறது. ப்ரியா ஆனந்த் கதாநாயகி. அவரும் நன்றாகச் செய்திருக்கிறார். கதை எழுதியவருக்குத் தான் பாவம் கதாநாயகிப் பாத்திரத்தின் குணச்சித்திரமே என்ன என்று தெரியவில்லை. அதனால் குழம்பி நடிக்கும் ப்ரியா ஆனந்தை அதற்குக் குறை சொல்லக் கூடாது.
இந்தப் படத்தில் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். அவர் தான் பாடகி சினமயியின் fiance. கார்த்திக் குமாருக்கு replacement ஆக இனி ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளை, தனக்குப் பார்த்தப் பெண்ணைக் கதாநாயகனுக்கு விட்டுக் கொடுக்கும் பாத்திரம். நடிப்பில் இன்னும் மெருகேற வேண்டும்.
பல படங்களுக்கு ஆணிவேராக (அல்லது ஆணியாக) இருக்கும் சந்தானம் தான் படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்திகிறார். அவருக்கேற்ற டகால்டி பாத்திரம். முழுப் படமும் காமெடி தான், சிவாவும் சந்தானமும் நல்லக் கூட்டணி. டாஸ்மாக் காட்சிகளும் பத்தாதற்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் குடிக்கும் காட்சிகளும் இந்தப் படத்திலும் தப்பாமல் உள்ளன.
பெண் இயக்குனர், ஆதலால் இரட்டை அர்த்த வசனம், விரசமானக் காட்சிகள் இல்லை. படம் clean entertainer. இன்னும் கொஞ்சம் கதையில் மெனக்கெட்டிருந்தால் நல்ல படமாக அமைந்திருக்கும்.
Oct 13, 2013 @ 10:25:44
சரி. அப்ப படத்த பாக்க வேண்டியதில்ல. புரிஞ்சது. அந்தக் குடும்பத்துல இருந்து இனிமே யாரும் எதுவும் செய்றேன்னு வராம கொள்ளையடிச்ச துட்ட குந்தித் தின்னிக்கிட்டிருந்தாலே போதும்.
Oct 13, 2013 @ 12:27:50
exactly!
Oct 13, 2013 @ 16:01:15
இதை தங்கமணிக்கு படித்து காண்பிக்க வேண்டும் – she will not believe me if i say the movie is ok
Oct 13, 2013 @ 16:05:18
:-)))
Nov 04, 2013 @ 15:19:52
யாரும் படத்த பார்திடாதீங்க. என்ன ஒரு கள்ள காதல் கதை. இயக்குனர் பெண் என்பது மேலும் கேவலமா இருக்கு.
நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்கு தயாராக இருக்கும் ஒரு பெண்ணின் கள்ள காதல் தான் கதை. கடைசியில் அந்த கள்ள காதல் வெற்றி பெறுகிறது. என்ன கொடுமை சார்.