உன்னை அறிந்து கொள்!

ganeshawithmoonjoor

மகா வாக்கியங்களில் ஒன்று தத்வமசி. தத்வ என்பது பிரம்மன அல்லது matter. த்வம் என்பது நீ. அசி என்பது ஆகிறாய் are. அதன் எளிய பொருள் நீயே அதுவாகிறாய்.

நாம் வேறொன்றாக ஆவதற்கு முதலில் அதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். தெரியாததை அடைய முடியாது. புரியாதது கண்ணுக்குப் புலப்படாது.

“அது” என்பது தான் தெரியாத ஒன்று – X factor! அது என்பது பிரம்மன்/கடவுள்/தெரியாத ஒன்று. அந்த ஒன்றாக நாம் எப்படி ஆகிறோம்? அதைப் புரிந்து கொள்ள தெரிந்த ஒன்றை வைத்து ஆரம்பிப்போம். “நீ” அதாவது நான், என்னை முதலில் அறிந்து கொள்ளலாம். அது எளிது. ஏனென்றால் நகமும் சதையுமாக மூச்சுக் காற்றை சுவாசித்துக் கொண்டு உணர்வுகளோடும் உயிரோடும் நான் இருக்கிறேன். என்னைப் பற்றி ஆராய்வது எளிது. சைவ சித்தாந்தத்தின் பால பாடம் உன்னை அறிந்து கொள் என்பது தான். உன்னை அறிந்து கொண்டால் மட்டுமே இறைவனை அறிந்து கொள்ள முடியும்.

“உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில்  போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்” – ஒரே வரியில் உயரிய தத்துவத்தைச் சொல்லிவிட்டார் கவியரசர் கண்ணதாசன்!

எப்படி நம்மை அறிந்து கொள்வது? ஒரு பிண்டமாகத் தான் பிறக்கிறோம். பிறந்த சில மாதங்களுக்கு நமக்கு ஒன்றும் தெரியாது. பிறகு அம்மா, அப்பா, தாத்தா பாட்டி, அத்தை மாமா என்ற உறவுகளை அறிகிறோம். அப்பொழுதும் நாம் யார் என்று நமக்குத் தெரியாது. இன்னும் சிறிது காலம் போனால் நம் பொருள் எது என்று அறிந்து கொள்கிறோம். நம் விளையாட்டுப் பொருளை எடுத்தால் அடுத்தக் குழந்தையுடன் சண்டைக்குப் போகவோ அழவோ தெரிகிறது. பள்ளி செல்லும் பருவத்தில் நம் பெயர், இன்னாரின் பிள்ளை ஆகிய விஷயங்கள் தெரிய வருகிறது. அதன் பின் மெது மெதுவாக அகந்தை உருவாகிறது. நான் அடுத்தவனை விட வெளுப்பு, அவனை விட உயரம், அவனை விட பணக்காரன், அவனை விட அறிவாளி ஆகியவை நம் மூளையில் பதிகிறது. இப்படியே வளரும் நாம் பல வருட வாழ்க்கைக்குப் பிறகு ஆன்மிகத் தேடலின் துவக்கத்தில் நீ யார் சொல், உன்னை நீ முதலில் அறிந்து கொள் என்று யாரவது சொல்லும் போது திடீரென்று விழித்துக் கொள்கிறோம். A sudden awakening!

அர்ஜுனன் கீதையின் முதல் அத்தியாயத்தில் காண்டீபத்தைக் கீழேப் போட்டுவிட்டுக் கிருஷ்ணபரமாத்மவைப் பார்த்துக் கேட்கிறான். நான் எப்படி என் சகோதரர்களையும், உறவினர்களையும், ஆச்சார்யர்களையும் கொல்வேன். எனக்கு இந்த ராஜ்ஜியமே வேண்டாம். நான் போர் புரியப் போவதில்லை என்கிறான். அவனுக்கு அப்பொழுது ஏற்பட்டது ஒரு மயக்கம். அவன் தான் யார் என்றே அறியாமல் சொன்ன வார்த்தைகள் அவை. அதனால் கண்ணனின் முதல் வேலையே அவன் யார் என்று அவனுக்கு அறிவுறுத்துவது தான்.

krishna&arjuna

அவன் ஒரு வீரன், அரசகுமாரன். அவனுடைய தர்மம் போர் புரிந்து வெற்றிப் பெறுவது அல்லது போர்க்களத்தில் வீர மரணம் அடைவது மட்டுமே. போர் செய்வது என்று வந்த பிறகு எதிரில் இருப்பது மாமனோ மச்சானோ அவன் அதைப் பார்க்க முடியாது. செய்ய வேண்டியக் கடமையை செய்ய வேண்டும். இதே தான் நம் அனைவருக்கும். பெண்ணோ ஆணோ நம் அனைவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்தக் கடமைகள் பலவகை. உறவினால் வருவது, நாம் இருக்கும் பதவியினால் வருவது அல்லது சூழ்நிலையினால் வருவது. எதுவாயினும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. கடமைகளை செவ்வனே செய்வதே நம்மை நாம் அறிந்து கொள்வதில் எடுக்கும் முதல் பயிற்சி.

இந்த ஆத்மா பல பிறவிகளை எடுக்கிறது. போன பிறவியில் எதுவாக இருந்தோம் என்று நமக்குத் தெரியாது. அடுத்தப் பிறவியில் எதுவாக இருப்போம் என்றும் தெரியாது. ஆனால் பிறவிகள் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள். நம்மை செம்மைப் படுத்திக் கொள்ள, நம் தவறுகளைத் திருத்திக் கொள்ள தரப்படும் வாய்ப்புகள்.

நம் கடமைகளைச் செய்யத் தவறி வாழும் வாழ்க்கை வீண். அதைத் தான் அர்ஜுனனுக்கு எடுத்துச் சொல்கிறார் கண்ணன். அவன் சண்டை போடாமல் திரும்பிப் போனால் அவனை கோழை என்று உலகம் எள்ளி நகையாடும். அவனை நம்பிய அவன் குடும்பத்தினரும் ஏமாற்றப் படுவார்கள். நாடிழந்து திரும்ப வனவாசம் செல்ல வேண்டும். அங்கே இரண்டு நாள் அவனால் உண்ணாமல் இருக்க முடியும், மூன்றாம் நாள் வேட்டைக்குச் செல்லத் தானே வேண்டும். அங்கே அவன் தடுக்கப் பட்டால் அவன் உணவுக்காகவாவது சண்டைப் போட்டாக வேண்டும் இல்லையா? அதை அப்போழுதே அங்கேயே கௌரவமாகப் செய்தால் அவன் சுய தர்மத்தைத் தான் செய்கிறான் என்று மெச்சப்படுவான். மேலும் போர்க்களத்தில் அவன் செய்வது கொலையும் அல்ல.

திரையில் கதாநாயகன் வில்லனைக் கொல்கிறான். அது வெறும் நிழற்படம் தான். உண்மையில் கதாநாயகனும் உயிருடன் இருக்கிறான், வில்லனும். அதே போல நம் ஆத்மாவிற்கு அழிவு கிடையாது அது அமரத் தன்மையை உடையது. இந்த ஆத்மா கத்தியாலும் வெட்டப்பட முடியாதது, நீராலும் மூழ்கடிக்கப்பட முடியாதது, நெருப்பாலும் அழிக்க முடியாததாக இருப்பதால் விமானத்தில் உள்ள Black Boxக்கு இணையாக உள்ளது. அதில் நம் பிறவிகளின் அனுபவப் பாடங்கள் வாசனைகளாக படர்ந்து அடுத்தடத்தப் பிறவிகளுக்கும் வாழ்க்கைப் பாடங்களைக் கொண்டு செல்கிறது.

அடுத்து அவன் கண்ணனின் உபதேசத்தால் புரிந்து கொண்டது அவன் வெறும் கருவி மட்டுமே என்பதை. சூத்திரதாரி வேறு யாரோ. இந்த உலகம் ஒரு நாடக மேடை நாமெல்லாம் நடிகர்கள். நமக்குக் கொடுத்தப் பாத்திரத்தைச் சரியாக செய்தால் அப்ளாஸ், சொதப்பினால் அழுகின முட்டையடி. இயக்குநர் இங்கே கடவுள்/பிரம்மன். அவன் சொல் படி வேலை செய்தால் நம் கடமை முடிந்தது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அரசாங்க அதிகாரி கொலை குற்றம் செய்யவில்லை. கொடுக்கப் பட்டப் பணியை நிறைவேற்றுகிறார். இது தான் உண்மை என்று அறியும் அந்த நொடியில் நான் என்ற அகந்தை மறைந்து நாம் வெறும் ஒரு கடல் நீரில் இருக்கும் ஒரு துளி நீர், நமக்கென்று ஒரு தனித்தன்மைக் கிடையாது என்று புரிய வரும்.

நான் யார் என்று நினைக்கும் பொழுது சிலருக்கு நம் பெயர் நினைவுக்கு வரலாம், அல்லது நான் MD என்ற பதவி நினைவுக்கு வரலாம், அல்லது நான் தாய் என்று உறவு கண் முன் நிற்கலாம். ஆனால் நாம் இதில் எதுவுமே இல்லை. நாம் ஒரு ஆத்மா. இன்று சுரிதார் போட்டுக் கொண்டிருக்கும் அனுஷா நாளை அந்த உடையைத் துறந்து ஜீன்ஸில் நிற்கும் Andrew ஆக மாறலாம். ஆம், நம் பிறவிகள் மாறுவது பழைய உடையைக் களைந்துப் புதிய உடைக்குள் போவது போலத் தான். சுரிதாரின் மேல் அதித ஒட்டுதல் வைத்துக் கொண்டால் உடை மாற்றும் போது ரொம்ப சிரமமாக இருக்கும்.

நம் மனம் விழித்திருக்கும் பொழுதெல்லாம் அலை பாய்கிறது. ஓரிடத்திலும் நிலையாய் நிற்பது இல்லை. பழைய நினைவுகளும் நாளைய நிகழ்சிகள் பற்றியக் கற்பனைகாலும் திரைப்படம் போல மனத்திரையில் ஓடிக் கொண்டே இருக்கிறது. நம் வாழ்க்கை முழுவதும் இப்படியே இருந்து விட்டால் நான் யார் என்ற தேடல் இந்தத் திரைப்படத்திற்குள் மறைந்து விடும். அது தான் மாயை! சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் நாம் உள்நோக்கி தியானிக்க வேண்டும். அப்பொழுது தான் பனி மறைந்து சூரியன் ஒளிவிடுவது போல நம் ஆத்ம நிலை நம் கண்ணுக்குப் புலப்படும். நாம் வேறு இந்த உடல் வேறு என்று தெரியவரும். உடலின்  மீதும், உடலினால் வரும் உறவுகள் மீதும் பற்றுப் படிப்படியாகக் குறையும்.

meditating

கீதை மனிதனின் வாழ்வியல் தர்மத்தையும் சமூகக் கடமையும் சுட்டிக்காட்டி அவ்வுலக வாழ்க்கையை அடைவதற்கும் வழிகாட்டியாக அமைகிறது. ஆனால் வெறும் புத்தக அறிவு ஒரு முன்னேற்றத்துக்கும் உதவாது. அனுபவப் பாடமே அருமருந்து. அதனால் சுயமாக சிந்தித்து செயல் படுவதே நம்மை நாம் அறிவதற்கு முதல் படி.

நிலத்தை உழுதால் தான் பயிரிட முடியும். நாமும் செயல் பட செயல் படத்தான் தெளிவு பிறக்கும். மேலும் நம் ஆசைகள் நிறைவேறும் வரை நாம் பிறவிகள் எடுத்துக் கொண்டே இருப்போம். இதை வேறு மாதிரியாகவும் சொல்லலாம். தியானத்தின் மூலம் ஆசைகளை விட்டொழித்தால் பிறவா நிலையை நாம் அடைவோம்.

கீதையின் சாரத்தையே கண்ணதாசன் இன்னொரு பாடலில் சொல்கிறார். “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே. தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!” நாம் நம் கடமையைத் தவறாமல் செய்து வந்தால் அதற்கான பலன் கிடைக்கும். பலனை எதிர்ப்பார்த்து செய்வது ஏமாற்றத்தில் முடியும்.

இந்தப் பாடலின் மற்ற வரிகளும் அற்புதம். “பின்னாலே தெரிவது அடிச்சுவடு, முன்னாலே இருப்பது அவன் வீடு, நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தேப் போராடு!” – நாம் வந்த பாதை நம் அனுபவம். அந்த அனுபவம் தான் நமக்கு வேதமாக அமைகிறது. வேதம் என்பது வடமொழியில் உள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் ஆல்ல. நாம் நம் வாழ்வில் கற்றுக் கொண்ட பாடங்கள் தான் வேதம். அவையே நம் நாளைய வாழ்க்கைக்கும் வழிக்காட்டியாகிறது. நமக்கு வீடு பேற்றை அடையும் வழியையும் காட்டுகிறது. நேற்று நடந்ததில் தெரிந்துக் கொண்டதை நாளை பயன்படுத்துக்கிறோம். மேலும் இந்தப் பிறவியில் கற்றதை நாம் அடுத்தப் பிறவியில் பயன் படுத்துகிறோம்.

தொடர்ந்து வரும் வரிகள், “மனதுக்கு மட்டும் பயந்துவிடு, மானத்தை உடலில் கலந்துவிடு, இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு, இரண்டினில் ஒன்று பார்த்துவிடு!” இதன் பொருள், நீ நீயாக இரு என்பதே! உனக்கே எது சரி என்று படுகிறதோ அதை செய். இது தான் நம் வாழ்வின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இப்பிறவியில் முடிந்த வரை மனதுக்கு சரி என்று பட்டதை செய்து பிறருக்கு எந்த விதத்திலும் தீமை புரியாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்வு. நல்லவனாகவும் இருக்க வேண்டும் ஆனால் அதே சமயத்தில் வல்லவனாகவும் இருத்தல் அவசியம். இவையெல்லாம் எளிமையான உண்மைகள். அந்தப் பாடலின் சுட்டி: http://www.youtube.com/watch?v=7i2AvTOZfCc

நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. ஆனால் ஆத்மா அதற்கும் அப்பாற் பட்டது. ஏனென்றால் உடல் அழிந்துவிடும். ஆத்மா என்றும் அழியாதது. இந்த பிரபஞ்சத்தில் ஒரு அணுவாக வியாபித்துக் கொண்டே இருக்கும். ஆத்மா மனசாட்சியா என்றால், யோசித்துப் பார்த்தால் அதுவும் இல்லை என்ற தெளிவு பிறக்கும். உள்நோக்கி உள்நோக்கிப் பார்த்தால் முதலில் எங்கெங்கோ எண்ணம் போனாலும் தினம் இந்த மாதிரி சில நிமிட ஆராய்ச்சி முடிவில் நான் யார் என்பதை உணரவைக்கும். நம் தேடல் கடைசியில் தேடும் கடவுளே நாம் தான் என்று புரியவைக்கும். அன்பே சிவம் திரைப்படத்தில் கமலுக்கும் மாதவனுக்கும் வரும் உரையாடல் தான் நம் உண்மை நிலை. இன்னொரு ஆத்மாவுக்காகக் கண்ணீர் விடும் மாதவனைப் பார்த்துக் கமல் நீ தான் கடவுள் என்பார், அதே சமயம் தன்னையும் கடவுள் என்பார். நீயும் கடவுள் நானும் கடவுள். நாம் தேடும் கடவுள் நாமே தாம்.

sivam-and-aras

“X factor”ஐப் பற்றித் தெரிந்துக் கொள்ள ஆரம்பிக்கும் முயற்சியின் முடிவு அந்த “அது”வாகவே நாம் ஆகிவிடுவது தான். அது தான் இந்த வாழ்வின் சூட்ச்சமம். THE GOD you are searching for is you. You yourself are GOD. God is no where but in you. Tatva is matter, twam is you, asi is are ! You are the matter means you are the sole force of life on earth or in the universe!

You are THAT!
பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை ஆறு ஆறாகப் பிரித்தால் முதல் ஆறு தத் பற்றி, இரண்டாம் ஆறு த்வம் பற்றியும் கடைசி ஆறு அசி பற்றியும் சொல்கிறது. இந்த ஒரு வரிக்கான விளக்கத்தை பகவான் 18 அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார். உன்னை அறிந்து கொள்வது அதனினும் எளிய வழி!

30 Comments (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  Oct 21, 2013 @ 03:21:49

  நல்லது… நன்றி…

  Reply

 2. Gokul V (@rgokul)
  Oct 21, 2013 @ 04:34:10

  Wowl But, why?

  Reply

 3. தெனாலி (@Thena1i)
  Oct 21, 2013 @ 05:41:18

  “நம் பிறவிகளின் அனுபவப் பாடங்கள் வாசனைகளாக படர்ந்து அடுத்தடத்தப் பிறவிகளுக்கும் வாழ்க்கைப் பாடங்களைக் கொண்டுசெல்கிறது” மிக உண்மையான வரிகள் இதுபோன்ற நல்ல விசயங்களை நீங்கள் தொடர்ந்து சொன்னால் அது நிறையபேரை சென்றடையும் நன்றாக இருக்கிறது #வாழ்த்துக்கள் Madam :)))))))))))

  Reply

 4. Sakthivel
  Oct 21, 2013 @ 07:03:43

  பதிவு அருமை… கண்ணதாசனை வேற அழகா கோர்த்து இருக்கீங்க… :-)) எழுத்துப் பிழை,ஒற்றுப் பிழை மட்டும் கொஞ்சம் குறைக்கலாமே.. :-))

  Reply

  • amas32
   Oct 21, 2013 @ 16:33:21

   முயற்சி செய்கிறேன், இன்னும் perfect ஆகவில்லை, மன்னிக்க 🙂

   Reply

 5. LKG (@chinnapiyan)
  Oct 21, 2013 @ 07:58:09

  தங்கத்தகடும் ஒன்றே செப்புத்தகடும் ஒன்றே, என்று பற்றற்ற நிலை வருகிறதோ அன்றே ஒருவன் தன்னை அறிந்தவனாகிறான். தன் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க வற்புரித்திய போது பகவான் ஸ்ரீ இரமணமகிரிஷி இந்த உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவுக்கில்லை.உடல் அழியவேண்டியது. அதை அதன்போக்கில் விட்டுவிடுங்கள் என்றாராம். நன்றி உங்கள் பதிவுக்கு. வாழ்த்துக்கள்.

  Reply

 6. sukanya (@sukanya29039615)
  Oct 21, 2013 @ 12:18:45

  Romba pramadam. Dyanam seiya pazhagavendum.

  Reply

  • amas32
   Oct 21, 2013 @ 16:31:52

   உன்னை படிக்க சொல்லணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், நீயே படித்துவிட்டாய் 🙂

   Reply

 7. @thachimammu
  Oct 21, 2013 @ 15:06:24

  ஆழமான கருத்தை இலகுவான நடையில் –
  கண்ணன் அறிவுரை,
  கண்ணதாசன் பாடல்,
  கமல்ஹாசன் வசனம்,
  ஆங்கில வார்த்தைகள்
  என்று பல ரூபத்தில் அழகாக சொல்லிட்டீங்க.

  நல்ல பதிவு,
  ஸ்ரீவத்ஸன்

  Reply

 8. GiRa ஜிரா
  Oct 21, 2013 @ 15:12:27

  தத்துவ விசாரணைன்னு வடமொழியில் சொல்வாங்க. அப்படியிருக்கு உங்க பதிவு.

  அர்ஜுனனுக்கு கீதையின் உபதேசம் தேவைப்பட்டிருக்கு. ஆனா கர்ணன் கும்பகர்ணன் போன்றவர்களுக்கு ஒரு உபதேசமும் தேவைப்படல. கடமைய மட்டும் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்கவேயில்லை. அதுனாலதானோ என்னவோ கதைப்படி ரெண்டு பேருக்கும் ஒடனே முக்தி கிடைச்சது. போரெல்லாம் முடிஞ்ச பிறகும் உபதேசம் எல்லாம் கேட்ட அர்ஜுனன் படாத பாடு பட்டான்.

  வாழ்க்கைல பல நேரங்களில் நம்மால் ஒரு முடிவுக்கு கூட வர முடியாத சூழல் உருவாகும். நம்ம என்ன செய்யனும்னு நாமே முடிவெடுக்க முடியாத சூழல் கொடுமையானது. அப்பல்லாம் வாழ்க்கைல நடந்த ஒரு சாதாரண நிகழ்ச்சியை நினைச்சுக்குவேன்.

  பெங்களூர் போன புதுசுல அத்த வீட்ல இருந்த டிவிஎஸ் சேம்ப்ல ஊர் சுத்துவேன். கே.சி.தாஸ்னு ஒரு இனிப்புக் கடை. ரசகுல்லா நல்லாருக்கும். அப்ப மண்பானைல போட்டுக் குடுப்பாங்க. ஒரு ஆர்வத்துல வாங்கிட்டேன். அதை வீட்டுக்குக் கொண்டு போகனும். ஒரே வழி மொபெட்ல முன்னாடி தொங்க விட்டுக் கொண்டு போறது. ஆனா பானையோ மண்பானை. லேசா டொக்குன்னு தட்டுச்சுன்னாலே ஒடஞ்சிரும். மொதல்ல பாத்துப் பாத்து உருட்டி உருட்டி ஓட்டினேன். முடியல. சட்டி கிடுகிடுன்னு ஆடுது. “முருகா.. வண்டிய உருட்ட முடியல. நான் நார்மலாப் போறேன். பானையப் பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு”ன்னு சொல்லிட்டு வண்டிய வீட்டுக்கு நேரா விட்டேன். சின்ன கீறல் கூட இல்லாம பானை வீடு வந்து சேந்துருச்சு.

  இந்த நிகழ்ச்சியில் செஞ்சதத்தான் இப்பவும் செஞ்சுக்கிட்டிருக்கேன். எல்லாம் முருகன் செயல்.

  Reply

  • amas32
   Oct 21, 2013 @ 16:29:48

   என்னை என் குரு கீதையை ஒரு வரியில் சொல் என்றார், இதே பதிலைத் தான் நானும் தந்தேன். எல்லாம் அவன் செயல்! நன்றி ஜிரா 🙂

   Reply

 9. தேவா..
  Oct 21, 2013 @ 17:40:02

  கடவுள் பெயரின் பொருளும் இதே…பல கோணங்களில் X factor ஐ யோசிச்சிருக்கீங்க….வாழ்கையிலே நல்லது நடப்பதற்கு நாமும், பிரச்சனைகளுக்கு நம்மை தவிர எல்லோரும்னு யோசிக்க பழகிட்டோம். ஒரு கருவியா கடமைகளை செஞ்சா, நிலா இருக்கும்

  It’s easy to write this but very difficult to think this when you are in trouble and will get it by gods grace.

  என்ன விஷயம் இதை யோசிக்கவும், எழுதவும் தூண்டியது?

  Reply

  • amas32
   Oct 22, 2013 @ 02:14:08

   Thank you 🙂 I have been asked to speak in a class which has just finished
   learning Bhagavad Gita, hence 🙂 பாயிண்ட பிடிச்சுக் கேக்கறீங்க! 🙂

   Reply

 10. தேவா..
  Oct 21, 2013 @ 17:41:08

  Not நிலா…it’s நல்லா

  Reply

 11. Anonymous
  Oct 21, 2013 @ 18:47:55

  excellent post….though I don’t believe in reincarantion……I agree with you on many things. Once I read ’தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை’ என்பார் திருமூலர்……only came in my mind, but already Mr. Chokken mention in his Tweet. Kudos.

  Reply

 12. Ultialagar
  Oct 22, 2013 @ 03:18:05

  உன்னையே நீ அறிந்து கொள்!! அழிவு உடலுக்கு தான் ஆன்மாவிற்கு தான்!! அற்புதமான வரிகள்! நன்றி!!

  Reply

 13. pvramaswamy
  Oct 22, 2013 @ 04:37:19

  Good flow, easy readability. Carefully chosen words and using cinema for ‘that’ connect.

  Just 2 thoughts:

  1) /பல வருட வாழ்க்கைக்குப் பிறகு ஆன்மிகத் தேடலின் துவக்கத்தில் நீ யார் சொல், உன்னை நீ முதலில் அறிந்து கொள் என்று யாரவது சொல்லும் போது திடீரென்று விழித்துக் கொள்கிறோம். A rude awakening!/ Rude…? I may say it is a sudden awakening, a timely realisation, and a welcome one at that !! அந்த வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கிறது, அல்லது கிடைத்தாலும், கிடைக்கப் பெற்றவர் உணருவதற்கு முன்னேயே, உருண்டோடிப் போய்விடுகிறது… “நல்லதோர் வீணைசெய்தே, அதை நலங்கெட புழுதியில்…”

  2) /அந்த அனுபவம் தான் நமக்கு வேதமாக அமைகிறது. வேதம் என்பது வடமொழியில் உள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் ஆல்ல. நாம் நம் வாழ்வில் கற்றுக் கொண்ட பாடங்கள் தான் வேதம். அவையே நம் நாளைய வாழ்க்கைக்கும் வழிக்காட்டியாகிறது./ இதில் இரண்டாவது வாக்கியம் அப்ப்டியிருக்க வேண்டுமா என்று சின்ன நெருடல். அந்த வாக்கியம் இல்லாவிட்டாலும், நீங்கள் சொல்லுவது சரியாகவே, தெளிவாகவே புரிகிறது. 🙂

  As I said, you have articulated very well. Continue on many more fronts !

  Reply

 14. Temet Nosce (@Rasanai)
  Oct 27, 2013 @ 21:02:03

  மிக பொறுமையாக படித்தேன். என்னால் comprehend செய்யமுடியாத அளவு பல பத்திகள் மிக கனமாய், ஆழமாய்.

  இப்பதிவுக்கு உங்களை வணங்குகிறேன்.

  Reply

 15. Trackback: தத் – ஈஸ்வர தத்துவம் பகவத் கீதை பகுதி-2 | amas32
 16. vgnesh89
  Sep 11, 2014 @ 17:17:13

  Reblogged this on vignesh in venba!.

  Reply

 17. Trackback: தத் – ஈஸ்வர தத்துவம் / பகவத் கீதை பகுதி-2 | amas32
 18. Siva
  Sep 12, 2014 @ 06:32:27

  தங்களுடைய இன்றைய பதிவு படிக்கும் பொது தான் தங்களின் முதல் பதிவான இதை படிக்க முடிந்தது. மிகவும் அருமையாக, எளிமையாக எல்லோருக்கும் புரியும்படியாக அற்புதமாக எழுதி உள்ளீர்கள். நன்றி

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: