படம் ஆரம்பிக்கும் முன் வந்த செர்டிபிகேடில் படம் ஓடும் நேரம் 2 மணி 40 நிமிடம் என்றிருந்தது. அதற்குள் ட்விட்டரில் ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்திருந்ததால், ஐயோ இரண்டே முக்கால் மணி நேரமா என்று நினைத்தேன். உண்மையில் நேரம் போனதே தெரியவில்லை 🙂 இரண்டு உலகக் கதைகள். துளிக் கூட confusionஏ இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை. The existence of a Parallel Universe is the premise to this story. கதை அம்சத்தோடு கூடிய Fantasy. Hats off to you Selva! புத்திசாலித்தனமாக எடுத்திருக்கிறார் செல்வராகவன். எனக்கு அவரின் படைப்புகள் மேல் தனி ஈர்ப்புக் கிடையாது. 7G ரெயின்போ காலனியோ, ஆயிரத்தில் ஒருவனோ எனக்குப் பிடித்தமானப் படங்கள் இல்லை. ஆனால் இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது. எல்லா இயக்குநர்களும் படம் ஆரம்பிக்கும்போது புதுவிதமானக் கதை என்று தான் விளம்பரப் படுத்துவார்கள், ஆனால் உண்மையிலேயே இதுப் புதுப் பணியாரம் தான்!
ஆர்யாவும் அனுஷ்காவும் பாத்திரங்களை நன்குணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆர்யாவுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள். இலகுவாகச் செய்திருக்கிறார். 6 pack வைத்துள்ளார். அனுஷ்கா படம் முழுக்க அழகாக வருகிறார். நடிப்புக்கும் குறைவில்லை. Computer Graphics படத்தோடு இணைந்திருக்கிறது. சமீபத்தில் வந்தப் படங்களில் குளிர்ச்சியான CGஐ இந்தப் படத்தில் தான் பார்த்தேன். இரண்டாம் உலகில் இயற்கை எழிலோடு CGயும் சேர்ந்து ஒரு மாய உலகத் தோற்றத்தைத் தருகிறது. பிரேசிலிலும் ஜியார்ஜியாவிலும் (வெஸ்டேர்ன் ஏசியா) கடுங்குளிரில் படமாக்கியிருக்கிறார்கள். அற்புதமாக உள்ளது. Cinematography (Ramji) உலகத் தரத்தில் உள்ளது!
இரண்டு ஆர்யா இரண்டு அனுஷ்கா, சில similarities மட்டும் வைத்து கதையை லாவகமாக கையாண்டுள்ளார். Not easy. கதையில் தொய்வே இல்லை. குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். விரசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ, கடுப்படிக்கும் சந்தான நகைச்சுவைக் காட்சிகளோ இல்லை. செல்வா நிறைய research செய்திருக்கிறார், முக்கியமாக இந்த உலகத்தில் வாழும் ஆர்யாவின் தந்தை ஸ்கூட்டரில் வரும் காட்சியும், நாய் வரும் காட்சியும் உள்ளர்த்தம் வாய்ந்தவை.
இரண்டாம் உலகம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரண்டு இசையமைப்பாளர்கள். பின்னணி இசையும் இரண்டு பாடல்களும் அனிருத், மற்ற பாடல்கள் ஹாரிஸ். பாடல்கள் நன்றாக உள்ளன. ஆனால் பின்னணி இசை தான் படத்தை நல்ல உயரத்துக்கு இட்டுச் செல்கிறது. எனக்கு மேற்கத்திய இசைப் பற்றிய ஞானம் கிடையாது. அதனால் அனிருத் இங்கிருந்து மெட்டெடுத்தார், அங்கிருந்து மெட்டெடுத்தார் என்று இசை அறிஞர்கள் குறை கூறலாம். ஆனால் திரையில் வரும் காட்சிகளுக்குப் பின்னணி இசை பிரமாதமாக உயிரூட்டுகிறது. அவர் வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். Symphony இசை காதுக்கும் இனிமை!
செல்வா படத்தில் லக்குகாக தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதுவும் ஒரு சூப் சாங் தான், நன்றாக உள்ளது 🙂 படத்தில் வரும் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
இது ஒரு காதல் கதையல்ல, இரு காதல் கதைகள். I am a sucker for love stories and when it is well told how can I not but appreciate and enjoy it! படத்தில் காதல் அரும்பும் போது என் கண்களிலும் சிறு துளி நீர் அரும்பியது. அது செல்வாவுக்குக் கிடைத்த வெற்றி 🙂