ஆரம்பம் – திரை விமர்சனம்

ajith-arrambam-posters21379486882

ஒரு ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது. நல்ல வேகமான திரைக்கதை. நான் கமலாவில் பார்த்தேன், திரையரங்கில் பயங்கர டை ஹார்ட் அஜித் fans. அஜித் திரையில் வந்தவுடனே கரகோஷம். உண்மையிலேயே அஜித் ரொம்ப ஸ்டைலிஷாகத் தான் இருக்கிறார். He carries himself very well. விஜய்க்கு எப்படி நடனம் மிகப் பெரிய ப்ளஸ்ஸோ அதே மாதிரி அஜித்துக்கு அவரின் ஸ்டைல் அவரின் பலம்.

ஒரே மாதிரி கதை இந்தப் படத்தின் பலவீனம். பில்லாவா, மங்காத்தாவா, ஆரம்பமா என்று பார்க்கும்போதே ஒரே கன்பீஷன்! அதே கெட்ட கம் நல்ல கேரக்டர் அஜித்துக்கு. ஆனால் கொடுத்தப் பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார். ஸ்டன்ட் காட்சிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம், அசத்தல்! நயன்தாராவும் தூள் கிளப்பியுள்ளார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி. அனாயாசமாகச் செய்துள்ளார். தாப்சி இளைத்திருக்கிறார், அதனாலோ என்னவோ ஆடுகளத்தில் இருந்த சார்ம் இதில் இல்லை. மேலும் as usual ஜெனிலியா மாதிரி ஒரு லூசு கேரக்டரில் வருகிறார். தமிழ் படங்களுக்கே உள்ள கேடு போலும் அது. இந்தமாதிரி பெண் பாத்திரம் வைத்தால் தான் படங்களில் எடுபடும் என்று இயக்குநர்கள் நினைப்பது ஒரு சாபமே. ஆரியாவுக்கும் ஒரு செகண்டரி ரோல். அவர் பேச்சும் செய்கையும் படத்துக்குப் படம் ஒரே மாதிரி உள்ளது. மிர்ச்சி சிவாவை ஒரே மாதிரி நடிக்கிறார் என்று சொல்லுகிறோம், ஆர்யாவும் அதே கேட்டகிரி தான். அனால் அஜித்துடன் சேர்ந்து நடிப்பதில் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் and good chemistry between the two.

லொகேஷன்கள் மும்பை, துபாய், லே, லடாக், என்று இருப்பதால் ஒளிப்பதிவில் ஓம் பிரகாஷ் பின்னுகிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது. விஷ்ணுவர்த்தனும் சுபாவும் வசனம். சில இடங்களில் பளிச். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் ஷார்ப்! படத்தின் விறுவிறுப்பு எடிடிங்கினால் தான். கலை லால்குடி இளையராஜா. செட்ஸ் நன்றாக உள்ளது. ஆர்யா வீடு, மற்றும் பல பங்களாக்கள் கனஜோர்! உடைகள் அனு வர்தன். பில்லா அளவு எனக்கு இதில் இம்ப்ரெஸ் ஆகவில்லை.

எப்பவும் போல ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். ஒரு பெரிய வெளிநாட்டு வங்கியின் செர்வர் ரூமுக்கு ஒரு கடைக்குள் நுழைந்து வெளியே வருவது போல சுளுவாக நுழைந்து வெளிவருகிறார்கள். இது போலப் பல. ஆனால் பல ஆங்கிலப் படங்களிலும் இது போலத்தான் உள்ளது. அதனால் அதிகம் கேள்விக் கேட்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

ஆனால் ஆர்மி ஆபிசர்களும் போலிஸ் அதிகாரிகளும் செய்யும் சேவைகளும் அவர்களின் பாதுகாப்புப் பற்றியது தான் இந்தக் கதையின் கரு என்று பார்க்கும் போது போற்றத் தக்கக் கதை தான்.

அஜித் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும், மற்றவர்களுக்கு சுமாராகப் பிடிக்கும் 🙂

11 Comments (+add yours?)

 1. LKG (@chinnapiyan)
  Nov 01, 2013 @ 23:52:37

  ரொம்ப கச்சிதமான விமர்சனம். “அஜித் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும், மற்றவர்களுக்கு சுமாராகப் பிடிக்கும் “. 🙂 நன்றி.

  Reply

 2. tcsprasan
  Nov 02, 2013 @ 02:41:20

  நயன்தாரா முகம் போலவே நடிப்பும் முதிர்ச்சியடைந்திக்கும் போல

  Reply

 3. கட்டதொர ™ (@kattathora)
  Nov 02, 2013 @ 14:17:09

  சுருக்கமான நச் விமர்சனம்.! :))

  Reply

 4. Pethusamy V
  Nov 02, 2013 @ 14:31:23

  ஷார்ட் அண்ட் ஸ்வீட் விமர்சனம். 🙂

  Reply

 5. Anonymous
  Nov 03, 2013 @ 09:27:47

  Nice vimarsanam

  Reply

 6. GiRa ஜிரா
  Nov 05, 2013 @ 15:49:03

  சுமாராத்தான் எனக்குப் பிடிக்குமா. அப்ப பேசாம கிராவிட்டி பாக்க வேண்டியதுதான். வீட்ல விடுவாங்களான்னுதான் தெரியல 🙂

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: