கல்யாண சமையல் சாதம் – திரை விமர்சனம்

KSS

நான் ரொம்ப அபூர்வமாகத் தான் FDFS போவது. இன்று KSS க்கு மிகுந்த எதிர்ப்பார்ப்போடு சென்றேன் 🙂 இது எந்த மாஸ் ஹீரோ படமோ, மாஸ் டைரக்டர் படமாகவோ இல்லாததால் டைட்டில் கார்ட் போடும்போது எந்த ஆரவாரமும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது அரங்கம். ஆனால் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திற்கெல்லாம் சிரிப்பு அலைகள் வந்தவண்ணம் இருந்தன. முக்கியமாக கதாநாயகனுக்கு “அந்த” பிரச்சினை ஆரம்பித்து அவர் நண்பர்களும் அவருக்குப் பல்வேறு வகையில் உதவ ஆரம்பித்தவுடன் சிரிப்புக்குப் பஞ்சமில்லை 🙂

லேகா வாஷிங்க்டன் ஹீரோயின், நடிகர் பிரசன்னா ஹீரோ. இருவருமே ரொம்ப நன்றாக நடித்துள்ளனர். லேகா வாஷிங்க்டன் செம அழகாக உள்ளார். யார் காஸ்டியும் இஞ்சார்ஜோ அவர்களுக்கு ஒரு பூங்கொத்து, நல்ல ரசனை. லேகாவின் நடிப்பு இந்தப் படத்திற்கு நல்ல பலம். மேலும் பிரசன்னாவும் இந்த ரோலை நன்றாகக் கையாண்டுள்ளார்.

படத்தின் ஆரம்பித்திலேயே @kryes ஐ நினைக்க வைத்துவிட்டார் இயக்குனர். (KRSஐப் பற்றி தெரியாதவர்களுக்கு, அவர் சிலுக்கின் பக்தர்) இயக்குனரும் சிலுக்கின் பக்தரோ என்று எண்ணுகிறேன் 🙂

எழுத்து/இயக்கம் R.S.பிரசன்னா. அவருக்கு இது முதல் படம். பாலு மகேந்திராவின் மாணவர். ஆண்களுக்கு வரும் ஒரு பிரச்சினையை முதல் படத்திலேயே நகைச்சுவையோடு கையாண்டு பௌண்டரி அடித்துள்ளார். திரைக்கதையில் ஆங்காங்கே தடுமாற்றம் உள்ளது. ஆனாலும் கப்பென்று கடிவாளத்தைக் கையில் பிடித்து track குக்குள் குதிரையை கொண்டு வந்து விடுகிறார். பிரசன்னா கவலைப்படுவதாகக் காட்டும் சில repetitive சீன்களைத் தவிர்த்திருக்கலாம். இன்றைய இளைஞர்கள் பலருக்கு stressசினால் உண்டாகும் சிக்கலைத் தொடுகிறது படம். பாராட்டுக்குரிய முயற்சி!

வளர்ந்த பெண்ணுக்குத்  தந்தையாக டெல்லி கனேஷ் சரியாக இருக்கிறார், அதுவே முதலில் சின்னக் குழந்தையின் தகப்பனாகவும் வரும்போது ரொம்ப இடிக்கிறது. உமா பத்மாநாபன் பெண்ணுக்குத் தாயாக கனகச்சிதம். ரொம்ப நாள் கழித்து ராகவ்வை திரையில் பார்க்கிறோம். பிரசன்னாவின் நண்பனாக நன்றாக செய்துள்ளார். ஸ்ரீலேகா பார்த்தசாரதி, Dr ஷர்மிலா சின்ன பாத்திரங்களில் வருகிறார்கள். அவர்களின் பாத்திரப் படைப்புத் தான் கொஞ்சம் கடுப்படிக்கின்றது. கிரேசி மோகன் சின்ன ரோலில் டாக்டராக வந்து அனாயாசமாக நடித்து விடுகிறார் 🙂

முழுக்க முழுக்க பிராமண குடும்பத்துக் கதை. பெண் வளர்வது, பெண் பார்ப்பது, திருமணம் நிச்சயிப்பது, மற்ற சடங்குகள் எல்லாமே அக்மார்க் பிராமண வீட்டில் நடப்பவைகளையே காட்டியுள்ளார்கள். திருமண வீட்டில் பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் நடக்கும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், அது எப்படி மணமகனையும் மணமகளையும் பாதிக்கும் ஆகியவையைக் கதையை நடத்திச் செல்ல பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் கதை சொல்லும் திறமைக்கு ஒரு சான்று.

லோ பட்ஜெட் படம் என்று நன்றாகத் தெரிகிறது. ஆனால் புதுமுக இயக்குனருக்கு ஒரு ப்ரேக் கிடைப்பதே பெரிய விஷயம். அதனால் அதைக் குறையாகச் சொல்லக் கூடாது. லோ பட்ஜெட் படத்தையும் ரிச்சாகக் காட்டியிருக்கும் செட் டிசைனருக்கும் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்துக்கும் பாராட்டுகள்.

பாடல்கள் வெகு இனிமை. பின்னணி இசையும் நன்றாகவே உள்ளது. இந்து திருமணம் பற்றிய கதையாதலால் பின்னணியில் வரும் பாடல்கள் பல நாம் மாலை மாற்றும் சடங்கு முதலிய சமயங்களில் அடிக்கடி கேட்கும் traditional பாடல்கள். ஆதலால் ஒரு familiarity உள்ளது. மெல்ல சிரித்தாள், காதல் மறந்தாயடா ஆகிய இரு பாடல்களும் ஆல்ரெடி நல்ல ஹிட்.

சிறிதும் விரசமில்லாமல் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் படைப்பு என்றும் தெரிகிறது. ஒரு ஜாலி படம் 🙂 வாழ்த்துகள்!

20 Comments (+add yours?)

 1. தெனாலி (@i_thenali)
  Dec 06, 2013 @ 13:23:55

  நீங்கள் நடித்ததை பற்றி ஒரு வார்த்தை சேர்க்கலாம் madam

  Reply

 2. tcsprasan
  Dec 07, 2013 @ 02:44:35

  எங்கள் சினிமா பேமஸ் நட்சத்திர தம்பதியர் சேகர் சார் மற்றும் சுஷிமாம்மாவின் அற்புதமான நடிப்பைப் பற்றி குறிப்பிடாதது ஏன்? ஆஸ்கார் வாங்குமளவுக்கான சிறந்த நடிப்பை வழங்கியிருக்கும் அவர்களை பற்றி சொல்லாததால், இந்த விமர்சனம் முழுமையானதாக இல்லை.

  Reply

 3. Indran
  Dec 07, 2013 @ 03:21:13

  இளைஞர்களுக்கு வர்ற பிரச்சனையா என்னக அது?? அவ்வ்வ்வ்வ் இப்போ இளைஞர்களுக்கு இருக்குற ஒரே பிரச்சன தத்தம் அப்பாதான் அவர்தான் ட்ரபிள் தர்றாரா?? 🙂

  Reply

  • amas32
   Dec 07, 2013 @ 04:32:54

   போய் பாருங்க, தெரியும் :-)) அப்பாலாம் ஒரு பிரச்சினையே இல்லை!

   Reply

 4. Giri Ramasubramanian (@rsGiri)
  Dec 07, 2013 @ 19:01:30

  நட்சத்திர தம்பதியருக்கு வாழ்த்துகள் :)))))))))))))))))

  Reply

 5. Giri Ramasubramanian (@rsGiri)
  Dec 07, 2013 @ 19:02:03

  படம் பாக்கணும்…

  Reply

 6. Pandian
  Dec 08, 2013 @ 07:03:27

  இவ்வளவு சொல்றீங்க. பார்த்திட்டா போச்சு

  Reply

 7. யமுனா (@yamunaS_)
  Dec 08, 2013 @ 22:49:49

  Will watch the movie for you. Good review, ma. 🙂

  Reply

 8. Kannabiran Ravi Shankar (KRS)
  Dec 10, 2013 @ 07:10:28

  வணக்கம்-ம்மா!
  காதல் மறந்தாயடா -பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிது:)

  பிராமணக் குடும்பக் கதையா இருந்தா என்ன? எதா இருந்தா என்ன?
  கதை சொல்லும் நேர்த்தியும், “மனித உணர்ச்சி”யும் தான் முக்கியம்!

  ஆனா, பிரசன்னா, ரொம்ப “over do” செய்துவிட்டதாகச் சில நண்பர்கள் சொன்னார்கள்; நான் பார்க்கவில்லை ஆதலால் தெரியாது;
  Lekha Washington always attracts:)
  கிரேசி மோகன், இதில் ரொம்ப இல்லையாமே?
  —–

  பொதுவா, திருமணச் சடங்குகள் நான் கூர்ந்து கவனிப்பேன்
  இதில் நீங்கள் சொன்ன பிராமண வீட்டுச் சடங்குகளுக்காகவே பார்க்கலாம் போல இருக்கே!:)

  மாலை மாற்றினாள் = எல்லா வீட்டுக்கும் பொது தான்!
  ஆனா ஊஞ்சல், அப்பா மடியில் பெண், லஜ்ஜா ஹோமம், தோளில் வைத்து ஆடுவது, கிருகப் பிரவேசம், சீர் வரிசையில் Conicalஆ ஒன்னு இருக்குமே அது..

  ஒரு ஐயம் கூட, உங்க கிட்ட கேக்கணும்; தப்பா எடுத்துக்க மாட்டீங்க-ன்னு நினைக்கிறேன்:)
  அந்தந்தச் சமூக வழக்கத்தைக் கவனிப்பதில் உள்ள ஆர்வத்தால் கேக்குறேன்..

  பிராமண இல்லத் திருமணங்களில்/ வீடுகளில் கூட = கோலம் ஏன் புள்ளி வைத்துப் போடுவதில்லை?
  பலவும் வரிக்கோலமாவே பாத்துருக்கேன்;

  எங்கூரு/கிராமத்தில் இருந்த வந்த எனக்கு, இது ரொம்ப வியப்பு; புள்ளி வைத்த கோலங்களில் ஒரு கலை அழகு தெரியும்!
  ஆனா, இந்தப் பட்டைப் பட்டையா இருக்கும் வரிக் கோலம் = may be they have a reason!

  படத்தில், அதெல்லாம் காட்சிப்படுத்தியிருந்தால் நன்று!
  —–

  சிலுக்கைப் பற்றிச் சொன்னமைக்கு நன்றி; “வேல்”விழியாள அவள் ஆசி உங்களுக்கு உண்டு:)

  எல்லாம் சொன்ன நீங்க.. தம்பதி சமேதரான ஒங்க நடிப்பைப் பத்தி ஒன்னும் சொல்லலையே?:)
  MGR-ஜானகி கூடச் சேர்ந்து நடிச்சாங்களாம்; அது போல நீங்களா?:)

  Reply

  • amas32
   Dec 10, 2013 @ 13:27:18

   Crazy Mohan came for one scene and it was quite contrived. A real doctor
   should have done that and really made a strong message to the audience.
   That is wher the director made one of his mistakes. Lost an opportunity to
   make a mark. Yes, we do put kolams without puLLi on festivals. There is a
   difference in the kolams of Iyers and iyengars. Iyers will be straight
   lines after straight lines, the final result will look like a thEru.
   Iyengar kolams will be more curvy with lot of suzhis. Both types signify
   the various Chakrams installed in the temple karpagraham.

   The conical stuff is called a paruppu thengaay. A must in all Brahmin
   weddings. What sweet is inside that cone also varies according to family
   tradition and the boy’s mother has the right to demand their traditional
   sweet 🙂 Most times it will be laddu, manokaram or katalai/mundhiri burfi.

   It was a nice experience to do one scene with Shekar, really enjoyed it. It
   was fun 🙂

   Reply

 9. VenkateswaranGanesan (@_Drunkenmunk)
  Dec 12, 2013 @ 16:08:41

  Hello. I saw the film and was able to boast that I knew you when you came on screen to my friends (one of them knows you by following @madplays 🙂 ) Also, Lekha’s friend, the girl who Prasanna thinks is Lekha and asks her out to end up as the butt of her joke as she chases him to marry her was my college senior, Tanuja 😛 Also, Balaji Patturaj, the RJ who gave the voiceover for the trailer is from her same batch in my college.

  All this superfluous boasting aside, film was fun for most part and had us cackling and more so at one instant where Prasanna discovered he couldn’t “get it up” and another friend went “இதுக்கு தான் எதுவா இருந்தாலும் மொதல்ல கல்யாணத்த பண்றது safe.” I loved that he could glide it ahead without stooping to vulgarity though I wouldn’t be able to take my conservative family and be able to enjoy this as gleefully for some of the jokes that came off adult rated as I did with my friends. தனியா நண்பர்களோட பாக்கறச்ச முகம் சுளிக்கல. A couple of things I felt came across beautifully to me was the fight between the 2 as she calls him a wussu and the final wedding. The fight and its aftermath with Raghav in the room and the subsequent patch up was lovely and that’s where I had some of the problems too. The cliches were contrived. As the family breaks up their fight, the entire scene was artificial. One can claim it’s a film and a bit of dramatization is fine. But in a film where most of the execution is fairly realistic, these cinematic dramatizations hurt it for me. Like Dr Sharmila and Srilekha Parthasarathy and their yapping in the name of humor.A terrible couple of scenes with them.

  The other thing I liked a lot was the final wedding. I was beginning to think the dream travel to a small island bursting firecrackers and the night out was too good to be realistic again and felt too glossy and out-of-place and bollywood-chick flick-ish here. But the final going around the fire sold it for me. We have a couple who are from a traditional family but trying to break away (the attempt at pre-marital sex, the final kalyANa veetta vuttu Odi pOradhu are all things totally out of tradition and the latter very cinematic but by treating it lightly, they are laughing at the cliche). So this couple are married by the family in a traditional way. But what they did by breaking out in the name of modernity and going around the fire was even older. They basically had themselves to nature. Beach land, sea water, air, space and fire. That way, they took the clock all the way back to the stone age when all that mattered was a couple. The ensuing wedding in a supposedly traditional TamBrahm setting and all its sadangu was lost before this (and this from me who sucks up to the traditions and sadangu).

  Reply

 10. VenkateswaranGanesan (@_Drunkenmunk)
  Dec 12, 2013 @ 16:10:38

  Should read family breaks them up as they cuddle each other and Neelu sings “Kannathil MuthamittAl”

  Reply

  • amas32
   Dec 12, 2013 @ 16:18:18

   yes, my gripe is also that it was more like a Tamil drama in many places and lost the celluloid touch. That could have been avoided. Most of the screen play problem was in the first half of the second half 🙂

   Thanks for your comment 🙂

   Reply

 11. ரிஷி(@i_vr)
  Dec 15, 2013 @ 22:18:23

  நல்ல விமர்சனம் அம்மா…சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் கதையை… 🙂

  Trailor & Teaser எல்லாம் பார்த்தவுடன் இது ஒரு “crazy”த்தனமான “கலட்டா கல்யாணம்” படம் போல் இருக்கும் என்ற mindsetல் தான் பார்க்கப் போனேன். படம் தொடங்கி subtle comedyயுடன் romanticகாகவே போய் கொண்டிருந்தது அந்த முக்கிய திருப்புமுனை காட்சியில் உள்ளே இழுக்க ஆரம்பித்து முடிவு வரை அதே feel good moodடுடனே பயணித்தது.

  பிரசன்னா கண்களிரண்டாலேயே படம் முழுக்க பல காட்சிகளில் பல வகைப்பட்ட உணர்ச்சிகளை வாரி வழங்கி நடித்து தள்ளி விட்டார்…. செம அழகு! முக்கியமாக coffee house, மணப்பெண்ணின் dressing room, மொட்டை மாடி காட்சிகளில்… “அஞ்சாதே” படத்தில் கிட்டத்தட்ட பாதி படம் வரை முகத்தை முடி கொண்டு மூடி நடித்து கிலியை கிளப்பியவர், இதில் கண்கள் மிளிர கட்டி இழுத்து விட்டார்…chance less!! ”தைரியமான” நடிகர்!!!

  லேகா அவ்வளவாக கவரவில்லை…முன்பே கீச்சியது போல் ரம்யா நம்பீசன் இந்த பாத்திரத்தில் பட்டையை கிளப்பியிருப்பார்.

  டெல்லி கணேஷ், உமா, ராகவ் எல்லாம் அளவாக அழகாக செய்திருக்கிறார்கள். அப்பாவையும் உங்களையும் சட்டென திரையில் கண்டதும் இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒரிரு வசனங்கள் பேச வைத்திருக்கலாம் 🙂

  R S பிரசன்னாவின் புத்திசாலித்தனமான வசனங்களும், முதற்பாதியில் பின்னி பிணைந்து வரும் பல காட்சிகளும் வெகுவாக ரசிக்க வைத்தது (கிழிந்த செக்,receptionistடம் கொடுத்த invitation,பிரசன்னாவின் குழந்தை/நாய் aversion, நண்பர்களின் உதவி வடிவில் வரும் அட்டூஷியங்கள் :-)). படத்தின் முடிவு கூட Simpleஆக ஆனால் நம்பத்தகுந்த practical தீர்வாக இருந்தது. அந்த surprise காட்சி கூட so sweet….!!

  மொத்தத்தில் தரமான பொழுதுபோக்கு சித்திரம். இன்றைய இளைஞர்களுக்கு வெகுவாக பிடிக்கும்… ஜாக்கிரதையாகவும் இருப்பார்கள் இனி 🙂

  Reply

 12. lotusmoonbell
  May 01, 2014 @ 15:00:56

  அடடா, நீங்களும் இந்தப் படத்தில் வந்திருக்கிறீர்களா? மிக்க மகிழ்ச்சி. கோடுக் கோலங்கள் எட்டு திசைகளையும், ஶ்ரீசக்ரத்தையும் பின்னணியாகக் கொண்டது. பாதுகாப்பு!

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: