Tamil Tweeter of The Year 2013 – @kanapraba

kanapraba

2013 முடியும் தருவாயில் கடந்த இரண்டு நாட்களாக சந்து முழுவதும் ஒரே அவார்ட் மயம் 🙂  எனக்கும் ட்விட்டர் அவார்ட் கொடுக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. இந்த வருடத்து சிறந்த தமிழ் ட்வீட்டர் என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாமே என்னும் எண்ணத்தில் யோசித்தேன். அவார்ட் என்று கொடுக்க முற்பட்டால் முதலில் தேர்வு செய்ய சில விதி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

ட்விட்டர் என்பது ஒரு சமூக வலை தளம். இங்குக் கருத்துப் பரிமாற்றங்களும் நட்புடனானப் பேச்சுக்களும் தான் முதலிடம் வகிக்கின்றன. 140 எழுத்துக்களில் கருத்துப் பரிமாற்றம் என்பதால் ட்விட்டரில் இருப்பது மூளைக்கு நல்ல வேலையைத் தருகிறது. நாம் தொடர்வோரும் நம்மைத் தொடர்பவரையும் வைத்தே நம் ட்விட்டர் வாழ்க்கை அமைகிறது 🙂

ஒரு சிறந்த ட்வீட்டராக இருப்பதற்குச் சில முக்கியமானத் தகுதிகள் தேவை. அவை:

1. கேளிக்கை/பொழுதுபோக்குத் திறன். (entertaining)

2.விஷய ஞானம். (Insightful)

3.இனிமையானத் தன்மை. (pleasant personality)

4.தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்ளுதல். (presence)

இந்தத் தகுதிகளின்படி பார்த்தால் திரு @கானாபிரபா தான் என்னுடைய இந்த வருட “தமிழ் ட்வீட்டர் ஆப் தி இயர்”! அவரைத் தேர்வு செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன் 🙂

அவர் தன் தொழிலைத் (செய்யும் வேலை) தவிர வேறு பல விஷயங்களிலும் நல்ல ஈடுபாட்டோடு செறிந்த அறிவுடன் உள்ளார். அது அவர் ட்வீட்டுக்களில் எதிரொலிக்கிறன. அதனால் அவரை தொடர்பவர்களுக்குப் பலவித விஷயங்களும் தெரிய வருகின்றன.

சொல்வதை நகைச்சுவையுடன் சொல்வதில் அவர் வெகு சமர்த்தர். மேலும் இப்பொழுது புதிதாக அவர் சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்பப் படங்களுடன் உரையாடுவது எந்த உம்மணா மூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும் 🙂

அனைவரையும் அவர் மரியாதையுடன் அணுகுகிறார். எள்ளலோ ஏளனமோ அவர் கீச்சுக்களில் கிடையாது. வலுச் சண்டைக்கும் போக மாட்டார், வந்த சண்டையில் இருந்தும் விலகி நிற்பார். இது ஒரு முதிர்ந்த ட்விட்டரிடம் மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு சிறந்த இயல்பு.

அவர் ட்விட்டருக்குள் வந்தாலே சந்து களைக் கட்டிவிடும். டைம்லைனில் உள்ளோர் அனைவரிடமும் பாரபட்சமின்றி உரையாடுவார். நமக்கும் அவரிடம் உரையாடவேண்டும் என்றுத் தோன்றும். அவர் எந்த ட்வீட்டரின் மென்ஷனுக்கும் பதில் அளிக்காமல் இருக்கிறார் என்று குற்றம் சாட்ட முடியாது என்றே நினைக்கிறேன்.

எழுத்துப் பிழைகள் இன்றி அழகிய தமிழில் அவருடைய கீச்சுக்கள் அனைத்தும் படிக்கவே ஒரு ஆனந்தத்தைத் தரும். சொல்ல வேண்டியக் கருத்துக்களைத் தன்மையுடன் எடுத்து முன் வைப்பார்.

அவர் ஒரு இசைப் பிரியர். அவருடைய பகுதி நேர வானொலி சேவையினால் அந்தத் திறன் இன்னும் மெருகேறி அவரை ஒரு இசைக் களஞ்சியமாக ஆக்கி உள்ளது.

அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவரின் பல வலை தளங்களுக்கானத் தொடர்புச் சுட்டி இங்கே: http://www.kanapraba.com/ இது ட்விட்டர் அவார்டுக்குத் தேவையான ஒரு தகுதி என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும் அவரைத் தொடர்பவர் அவர் எழுத்துக்களை இந்த வலை தளங்களில் படித்துப் பயன் பெறுகின்றனர் என்பது தான் உண்மை!kanaprabaunni

மொத்தத்தில் அவருடையக் கீச்சுக்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. அதனால் என் தேர்வை நீங்களும் வழி மொழிவீர்கள் என்று நம்புகிறேன் 🙂

13 Comments (+add yours?)

 1. kamala chandramani
  Dec 31, 2013 @ 17:43:34

  உங்கள் தேர்வை நான் வழிமொழிகிறேன்.

  Reply

 2. கானா பிரபா (@kanapraba)
  Dec 31, 2013 @ 22:49:19

  மிக்க நன்றிம்மா 🙂 உங்களைப் போன்ற பெரியவங்க அங்கீகாரம் கிடைப்பது பெரும் பேறு

  Reply

 3. UKG (@chinnapiyan)
  Jan 01, 2014 @ 02:20:14

  ஆஹா எவ்வளவு அருமையா சொல்லியிருக்கிறீர்கள். வார்த்தைக்கு வார்த்தை நிஜம். உங்களை தவிர வேற எவரும் இப்படி கூர்ந்து கவனித்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் கானா பிரபாவுக்கு இனி யாரும் சொல்ல இயலாது. வாழ்க நீங்களும் நண்பர் கானா பிரபாவும். நன்றி. (புகைப்படங்கள் கூடுதல் சிறப்பு)

  Reply

 4. Anonymous
  Jan 01, 2014 @ 03:42:27

  மனமார வழிமொழிகிறேன் அம்மா..நிச்சயம் பெரும்பாலும் பலர் உணர்ந்த ஒன்றைத் தான் சொல்லி இருக்கின்றீர்கள் :)ஒரு வார்த்தை கூட எதிர்கருத்தில்லை இதில் 🙂

  Reply

 5. Muthiah (@muthiahrm)
  Jan 01, 2014 @ 05:05:47

  சரியான தேர்வு! வாழ்த்துக்கள்! @kanapraba

  Reply

 6. R.Santhakumar
  Jan 01, 2014 @ 05:34:49

  மனமார வழிமொழிகிறேன் அம்மா.. சரியான தேர்வு!

  Reply

 7. Kannabiran Ravi Shankar (KRS)
  Jan 01, 2014 @ 16:15:58

  கா.பியோ கா.பி!
  இனிய வாழ்த்துக்கள் கா.பி:)

  அம்மா சொல்லியாச்-ன்னா, ஆண்டவனே சொன்னாப் போல:) | I dont mean that amma, but this amma:)

  சரியான-இயல்பான தேர்வு-ம்மா:)

  Reply

 8. மழை!!
  Jan 03, 2014 @ 08:28:39

  super super.. :)) he deserves it maa :))

  Reply

 9. Trackback: Tamil Tweeter of The Year 2o15 – @iamVariable | amas32
 10. Trackback: Tamil Tweeter Of The Year 2016 – @savidhasasi | amas32
 11. Trackback: Tamil Tweeter of the Year 2018 @KirukkanJagu | amas32
 12. Trackback: Tamil Tweeter Of The Year 2018 @selvachidambara | amas32
 13. Trackback: Tamil Tweeter of The Year 2019 @tskrishnan | amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: