Translation of Life’s All About Drama, an interview of Madhuri Shekar by Anusha Parthasarathy in The Hindu MetroPlus Jan 2 2014 edition!
இந்த வருடம் மாதுரி சேகரின் இரண்டு நாடகங்கள் அமெரிக்காவில் அரங்கேறுகின்றன. ஒரு பெரிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் வேலையை விட்டுவிட்டு எப்படி ஒரு நாடக ஆசிரியராக மாறினார் என்பதை இந்த சென்னைப் பெண் அனுஷா பார்த்தசாரதியிடம் பகிர்கிறார்!
முதலில் நாடக மேடையின் மேல் இருந்த ஈடுபாட்டை ஒரு பொழுதுபோக்காக எண்ணியதால் அமெரிக்காவில் தகவல் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவுடன் நல்ல ஒரு மார்கெடிங்க் வேலையில் அமர்ந்தார். ஆனால் அவருள் இருந்த கதாசரியை அவரை நிம்மதியாக அந்த வேலையில் இருக்க விடவில்லை. நல்ல ஊதியம் தரும் வேலையை விட்டுவிட்டு MFA (Masters in Fine Arts, The University of Southern California, Los Angeles, California) முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பயிற்சி! ஜூன் 2013ல் பட்டம் பெற்றார். தற்போது அவரின் இரண்டு நாடகங்கள் “In Love And Warcraft” ம் “A Nice Indian Boy” பெரிய நாடகக் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் அரங்கேற உள்ளன.
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சரித்திர பாடத்தில் இளங்கலை பட்டப் படிப்புப் பெற்றார். சிறு வயது முதலே கதை சொல்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரி நாடகங்கள் பலவற்றில் பங்கேற்றாலும் நாடகத் துறையை தன் தொழிலாகக் கொள்ள அப்பொழுது அவர் நினைக்கவில்லை. ஆனால் அவர் தன் முதல் முதுகலைப் பட்டம் பெற்ற கல்லூரியில் நாடகத் துறை இருந்ததால் தன்னுள்ளிருந்த ஆர்வம் வெளிப்பட அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.
“எப்பொழுதுமே என் ஆழ்மனத்தில் அந்த எண்ணம் இருந்ததால் ஒரு வாய்ப்புக் கிடைத்தவுடன் வெளி வந்துவிட்டது.” என்கிறார். நாடகத்துடனான அவர் காதல்அவர் தந்தை Bay Area (USA)வில் கிரேசி மோகனின் நாடகங்களை அரங்கேற்றும் சமயத்திற்கு, பல வருடங்கள் பின்னோக்கிப் போகிறது! “நான் அவர் ஒத்திகை செய்து நடிப்பதைப் பார்த்து வளர்ந்தேன், என் ஆர்வம் அங்கு ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்கிறார்.
கண்மூடிக் குதித்தல்!
2010ல் MFA பட்டப்படிப்பில் சேர்ந்தார். மூன்று வருட படிப்பில் நாடகத் திரைக்கதை -வசனம், தொலைக்காட்சித் திரைக்கதை- வசனம், சினிமா திரைக்கதை -வசனம், ஆகியவற்றில் தேர்ந்து 6 நாடகங்களும், 2 சினிமாக் கதைகளும் எழுதி முடித்திருக்கிறார். “இந்தப் படிப்பின் பயிற்சி ஒருவரை பன்முக எழுத்தாளராக மாற்றுகிறது. என் நல்ல வேலையை விட்டுவிட்டு இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்த என் முடிவில் நிறைய அபாயம் இருந்தும் நான் இந்த முடிவில் தீர்மானமாக இருந்து செயல்பட்டேன். இதை நான் செய்யாவிட்டால் பின்னாளில் வருந்துவேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.” மேலும் சொல்கிறார், “என்னை எது மகிழ்விக்கிறதோ அந்தத் துறையில் முழுமையான ஈடுபாட்டோடு அந்த 3 வருடங்கள் பயிற்சிப் பெற்றது எனக்கு ஒரு மிக அற்புதமான அனுபவம். இதை நான் பகுதி நேர பயிற்சியாகவோ அல்லது பயிற்சியே இல்லாமல் இந்தத் துறைக்கு வந்திருந்தாலோ இந்த அளவு தேர்ச்சி எனக்கு வந்திருக்காது”.
தயாரிப்பில் இருக்கும் இரண்டு நாடகங்களுமே அவர் படிக்கும் பொழுது எழுதியவை. “மூன்றாம் வருடப் படிப்பில் இருக்கும்போது அந்த வருடம் பட்டம் பெறுபவர்களும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு நாடகப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். அதில் வெற்றிப் பெறுபவரின் படைப்பை The Alliance Group in Atlanta தயாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும்” என்கிறார் மாதுரி. இவருடைய நாடகம், “In Love And Warcraft”மற்ற மிகப் பெரிய கல்லூரிகளான Colombia University, NYU, Julliard School, ஆகியக் கல்லூரிகளில் படித்தவர்கள் சமர்ப்பித்த நாடகங்களுள் மிகச் சிறந்ததாகத் தேர்வாகி “Kendeda Play Writing Contest” ல் முதல் பரிசை வென்றது. இந்த நாடகம் இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தயாராகி மேடை ஏறும். “2013 ஆம் வருடம் மிக அற்புதமான வருடமாக எனக்கு இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்ற சூட்டோடு என்னுடைய thesis நாடகமான A Nice Indian Boyஐ East West Players என்கிற மிகப் பழமையும் பாரம்பரியமும் மிக்க ஆசிய அமெரிக்க நாடகக் கம்பெனியினால் தயாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்கிறார். இந்த நாடகம் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தயாராகி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அரங்கேறும். மேலும் இந்த நாடகம் சான் டியாகோ என்னும் ஊரில் உள்ள The Old Globe Theater லும் படிக்கப்பட்டது.
“In Love And Warcraft” நாடகம் ஒரு ரோமான்டிக் காமெடி. இந்த நாடகத்தின் நாயகி வார்கிராப்ட் என்ற கணினி விளையாட்டின் தீவிர விசிறி/விளையாட்டு வெறியர். அவளை நிஜ வாழ்வில் ஒரு பையன் விரும்பும் போது என்னாகும் என்பதே கதை. “A Nice Indian Boy” வேறு மாதிரியானக் கதை. “அமெரிக்கா வாழ் ஓரினச் சேர்க்கையாள இந்தியப் பையன் ஒரு இந்துத் திருமண முறையில் தனக்குப் பிடித்தத் தன் காதலனை மணக்க விரும்புகிறான். அவன் விரும்புவதோ ஒரு அமெரிக்க ஆணை! பெற்றோர்களோ அப்பொழுது தான் தங்கள் மகன் இப்படிப்பட்டவன் என்கிற உண்மையை உணர்ந்து மனத்தைத் தேத்திக் கொண்டிருக்கும் தருவாய. அப்பொழுது அவன் தன காதலனை வீட்டுக்கு அழைத்து வந்து அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் கோரிக்கையை முன் வைக்கிறான். அதே சமயம் பெரியோர்களால் நிச்சயித்த அவர்கள் மகளின் திருமணம் ஆட்டம் கண்டு அவள் தன் கணவனை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்ற முடிவோடு தாய் வீடு திரும்புகிறாள். இந்த நாடகம் திருமண பந்தத்தை இந்தியர்களுடைய பார்வையில் அலசுகிறது” என்கிறார் மாதுரி.
சிகண்டி பற்றியும், அரவான் பற்றியும் இந்த நாடகத்தில் ஒரு சீனில் கதாநாயகன் மேற்கோள் காட்டுவதாக வருகிறது.” இந்த நாடகம் முழுக்க விநாயகர் பற்றிய குறியீடுகளும் வந்து கொண்டே இருக்கும். இந்து மதப்படி அவர் திருமணம் ஆகாதவர் ஆயினும் மற்றவர் திருமணங்களுக்கு உதவுபவர். இந்த விஷயங்களை எல்லாம் இந்திய அமெரிக்க வாழ்வியலோடுப் பின்னிப் பிணைக்க ஆசைப்பட்டேன். அமெரிக்காவில் வளர்க்கப்பட்டாலும் இந்து மதத்தோடு ஒரு தொடர்பை அழுத்தமாக ஏற்படுத்திக் கொள்ள நினைக்கும் ஒரு இந்திய வம்சாவளியின் கதை இது. மேலும் arranged திருமணம் புரிந்த சகோதரி, தன பெற்றோருக்கு அது சரிப்பட்டாலும் அவளுக்கு அது சரியாக அமையாமல் இருப்பது பற்றியும் இதில் பேசுகிறேன்” என்கிறார் மாதுரி.
லாச் என்ஜலசில் நடக்கும் ஒரு நாடக ஆசிரியர்கள் பயிற்சி கூட்டத்திற்கும் மாதுரி அழைக்கப் பட்டுள்ளார். (L.A’s Center Theater Group) “ஒரு வருடத்திற்கு 7 கதாசிரியர்களுக்கு மட்டுமே அவர்கள் அழைப்பு விடுப்பார்கள். அவர்களுக்காக ஒரு நாடகம் எழுத நான் அழைக்கப் பட்டிருக்கிறேன். இந்த நாடகத்தின் கதைக் களம் ஒரு கெமிஸ்ட்ரி லேப். என் அறைத் தோழியின் முதுகலைப் படிப்பு வாழ்க்கையில் இருந்து வந்த ஒரு கதைக் கரு இது”.
University of Southern California வில் உதவி ஆசிரியராகத் தற்போது பணியாற்றி வருகிறார். ” என்னை அமெரிக்காவில் உள்ளோர்கள் ஒரு இந்திய எழுத்தாளராக பார்க்கக் கூடாது என்பதற்காக என் முதல் நாடகம் முழுக்க முழுக்க அமெரிக்காவைப் பற்றியதாக எழுதினேன். நடிப்பவர்களும் எல்லா தேசத்தவராகவும் இருக்கின்றனர். நான் பல்கலைக் கழகத்தில், என் உபரி வருமானத்திற்காக உலக நாடகத்தின் சரித்திரம் பற்றி பாடம் எடுக்கிறேன்”.
Jan 02, 2014 @ 13:42:30
ப்பா ..மலைப்பாக இருக்கிறது ..உங்க முந்தைய அமெரிக்கப் பதிவின் இறுதியாகச் சொன்ன வரிகளுக்குத் தகுதியாக நடந்து கொண்டுவிட்டார் உங்கள் மகள் :)இந்தத் திறமைக்கு நிச்சயம் அதற்குத் தக்க வெகுமதி கிடைக்கும்.இது ஓர் இனிய ஆரம்பமே..இனி அனைத்தும் நலமாகட்டும்..ஈன்ற பெரிதினும் பெரிதுவக்க இனி விஷயங்கள் உங்களுக்கு நிறைய கிடைக்கும் என்று அவதானிக்கிறேன்:)வாழ்த்துகள்
Jan 02, 2014 @ 13:51:39
மிக்க நன்றி உமா, எல்லாமே அவன் செயல் தான் 🙂
Jan 02, 2014 @ 14:18:43
அதீத மகிழ்ச்சி,wish the next time i try for for an autograph
Jan 02, 2014 @ 15:56:46
நன்றி 🙂
Jan 02, 2014 @ 14:31:27
அவரது பாடத்தேர்வு உங்களுக்குச் சற்று அதிர்ச்சி அளிதிருக்கக் கூடும். ஆனால்,. விரும்பிய வேலை அமைவது வரம்; அதை அவர் அடைந்ததும், நீங்கள் ஏற்றுக் கொண்டதும் சிறப்பு. பிரியமான வேலை ஒரு பொழுது போக்கு போல. இந்தியரில் ஒரு சிலரே மேற்கொள்ளும் இம்முயற்சியில் அவர் வென்று சிறக்க, இதயப் பூர்வமான வாழ்த்துக்கள் !
Jan 02, 2014 @ 15:59:22
மிக்க நன்றி 🙂
Jan 02, 2014 @ 16:20:32
அட.. ஆச்சரியம்!!! இவரின் ஒரு stand up comedy பார்த்திருக்கிறேன். செம கலாய் அது.. வாழ்த்துகள்
Jan 03, 2014 @ 04:04:23
பெருமைக்குரிய செயல்பாடு. வாழ்த்துகள்.
அமெரிக்க வாழ் இளைஞர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டி..
பெட்னா (FeTNA) பேரவை விழாவில் ஒருதடவை நமது இளைஞர்களுக்கு ஒரு நாடக பயிற்சிப் பட்டறை நடத்தி தர இயலுமா?
Jan 03, 2014 @ 05:50:37
நிச்சயமாக முடியும். அவளுடைய கனவே இங்கே ஒரு பள்ளி/கல்லூரி ஆரம்பிக்க வேண்டும்
என்பதே 🙂 அவளிடம் சொல்கிறேன்.
Jan 03, 2014 @ 06:01:27
மிக்க நன்றி
2014 பெட்னா விழா செயின்ட் லூயிஸ் நகரில் நடக்கவுள்ளது. (தோல் பாவைக் கூத்து) கூத்துப்பட்டறைக்கு ஏற்பாடாகிருக்கிறது.
2015 பெட்னா விழா Bay Area-ல் நடக்கவுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் நடைப்பெறும். உங்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.
http://www.fetna.org
Jan 04, 2014 @ 03:06:26
இந்தியாவில் முன்னேற அவர்களின் மத,சாதி விழுமியங்களை உயர்த்திப் பிடித்து கலை படைக்க வேண்டும்;அதே பேர்வழிகள் அமெரிக்கா வந்தால்,அதே மத,சாதி விழுமியங்களை எள்ளி நகையாடி கலை படைக்க வேண்டும்.
வாழ்க்கையே ஒரு நாடகம் தானே! பேஸ்….பேஸ்!
Jan 04, 2014 @ 14:25:56
Nalla thamizhakkam. En petrorukkum padithu kattinen. Mika Nandi
Jan 04, 2014 @ 14:26:52
Anonymous is sukanya
Jan 08, 2014 @ 12:56:19
“என் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும்” இதுலயே மாதுரி என்னை கவர்ந்தவர்ம்மா, இந்த அளவுக்கு அவர் செழிப்படைய காரணம் முழுக்க முழுக்க பெற்றோர்கள் ஆகிய நீங்கள் மட்டும் தான். அந்த பதிவிலேயே என்னுள் ஒரு தாக்கம் ஏற்ப்பட்டது இது போல ஒரு வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லையென்று என் தாத்தா, பாட்டி என் பெற்றோர்களை படிக்க வைத்திருந்தால் ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிட்டிருக்கலாம்!
************************************
தயாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் நிறுவனம் //“Kendeda Play Writing Contest” ல் முதல் பரிசை வென்றது // லாஸ் என்ஜலசில் நடக்கும் ஒரு நாடக ஆசிரியர்கள் பயிற்சி கூட்டத்திற்கும் மாதுரி அழைக்கப் பட்டுள்ளார், “ஒரு வருடத்திற்கு 7 கதாசிரியர்களுக்கு மட்டுமே அவர்கள் அழைப்பு விடுப்பார்கள் போன்றவை என்னை “” மலைக்க “” வைக்கிறது **************
” மொத்தத்தில் மாதுரி ஈர்ப்பு ..:-) ”
************************************
குறிப்பு 1: நாடகத்துடனான அவர் காதல்அவர் தந்தை கிரேசி மோகனின் நாடகங்களை Bay Area (USA)வில் அரங்கேற்றும் சமயத்திற்கு, பல வருடங்கள் பின்னோக்கிப் போகிறது! “நான் அவர் ஒத்திகை செய்து நடிப்பதைப் பார்த்து வளர்ந்தேன், என் ஆர்வம் அங்கு ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்கிறார்.
இது எனக்கு புரியலாமா??? கிரேசி மோகன் ????
குறிப்பு 2: எப்படி இந்த இன்டர்வியு வாய்ப்பு கிடைத்தது?
குறிப்பு 3: என்னுடைய பின்னுட்டத்தை மாதுரியிடம் கூறவும்.
குறிப்பு 4: மற்றவை அலைபேசியில் ஈஈஈஈஈ :-)))))))))))
By @HarryGowtham
Jan 08, 2014 @ 13:25:53
மிக்க நன்றி, விரிவானப் பின்னூட்டத்திற்கு 🙂 என் கணவரின் அத்தை மகன் கிரேசி
மோகன்.அவரிடம் இருந்து நாடக ஸ்க்ரிப்ட் வாங்கி நாங்கள் இருந்த ஊரில்
வருடத்திற்கு இரண்டு நாடகங்களை அரங்கேற்றுவோம். எல்லோரும் அமெச்சூர்
நடிகர்கள். ஆர்வம் இருப்பவர்கள் சேர்ந்து அங்குள்ள தமிழ் சங்கம்
ஸ்பான்சர்ஷிப்பில் அரங்கேற்றுவோம். அதைத் தான் அவள் குறிப்பிடுகிறாள் 🙂
அவளுக்கு இந்த இன்டர்வியு கிடைத்ததே ஒரு காமெடி தான் 🙂 அவள் காலை நடை
பயிற்சி சென்றபோது இங்கே அருகில் ஒரு வீட்டு வாசலில் angry birds ஐ கோலமாக
வரைந்திருந்தார்கள். அதை அவள் படம் பிடித்து ட்விட்டரில் போட்டிருந்தாள். அது
RT ஆகி இந்துவின் ஒரு எடிட்டர் கண்ணில் பட்டிருக்கிறது. அவர் அவளைப் பற்றி
google செய்து அவர் நிறுவனத்தின் அனுஷா பார்த்தசாரதி என்ற reporter இடம்
இன்டர்வியு செய்யச் சொல்லியிருக்கிறார். அவரும் இவளை ட்விட்டர் மூலம் தொடர்பு
கொண்டு பின் நேரில் சந்தித்து இன்டர்வியு செய்தார். மாதுரி சென்னையில்
லீவுக்கு வந்ததே பத்து நாட்கள் தான் 🙂 அதற்குள் இது நடந்தது இறைவன் அருளே 🙂
amas32