வீரம் – திரை விமர்சனம்

veeram

அடிதடி சண்டையோடு கூடிய குடும்பச் சித்திரம் வீரம். அஜித்துக்குரிய charisma வுடன் திரையில் தோன்றுகிறார். வந்து நின்றாலே ஒரு கம்பீரம். இவருக்குத் தான் நரையுடன் திரையில் தோன்ற நிறைய தில்லு உள்ளது! முழுப் படமும் இவரால் மட்டுமே நகருகிறது.

சந்தானம் காமெடி பலப் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சிரித்து ரசிக்கும்படி உள்ளது. அஜித்தின் நான்கு தம்பிகளில் ஒரு தம்பியான விதார்த் நன்றாகச் செய்துள்ளார். தமன்னா படம் முழுக்க அழகாக வருகிறார். அவர் செய்ய வேண்டிய பாத்திரத்தைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். தமன்னா மேல் அஜீத்துக்குக் காதல் வருவதை இன்னும் கொஞ்சம் பலமானக் காரணங்கள் மூலம் சித்தரித்து இருக்கலாம். திருமணமே வேண்டாம் என்று இருப்பவர் அவ்வளவு எளிதாக காதல் வயப்படுவது நம்பும்படியாக இல்லை. மேலும் கதையில் சுவாரசியம் அதிகம் இல்லை. பெரிய ஹீரோ வைத்துப் படம் எடுத்தால் கதையைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று இயக்குநர்களுக்கு யாரோ பாடம் எடுத்திருக்கிறார்கள் போல! மாஸ் ஹீரோ படங்களில் கதையை சல்லடைப் போட்டுத் தேட வேண்டியிருக்கிறது. எந்தப் படத்தின் தரத்துக்கும் கதை தான் மூலதனம். அதை உணரும் இயக்குனரே வெற்றி பெற முடியும் என்பது என் தாழ்மையானக் கருத்து.

DSP இசை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பாடல்களும் மனதில் நிற்கவில்லை, பின்னணி இசையும் பிராமாதம் என்று சொல்லமுடியாது. சில இடங்களில் மட்டும் நன்றாக இருந்தது. பெரிய blessing படம் 2 மணி 40 நிமிடங்கள் தான்.

இந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் trainஇல் நடக்கும் சண்டைக்காட்சி நன்றாகப் படமாக்கப் பட்டுள்ளது. Editingம் சிறப்பாக உள்ளது. மற்றப்படி படம் முழுக்க வரும் சண்டைக் காட்சிகள் பார்த்துப் பார்த்து சலித்த சண்டைகளே. இதில் நேற்று நான் பார்த்த ஜில்லாவில் நடித்த அதே ஸ்டன்ட் பார்ட்டிகள் இதிலும் நடித்து ஆயாசப் படுத்தினார்கள். இதற்காகவே அஜித்தும் விஜயும் ஒரு ரெண்டு மாத இடைவெளியில் அவர்கள் படங்களை ரிலீஸ் பண்ணினால் நன்று!

அஜித் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். Confusion இல்லாமல் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. சில இடங்களில் வசனங்கள் நன்றாகவே உள்ளன. ஆனால் அஜித் சார் நீங்களும் நல்ல கதையைத் தேர்ந்தெடுங்களேன்.

8 Comments (+add yours?)

 1. GiRa ஜிரா
  Jan 12, 2014 @ 15:15:19

  தீபாவளி பந்தயத்துல ஜில்லாவ வீரம் முந்தீருச்சு போல. ஆனாலும் அஜித் நல்ல படங்களா எடுத்து நடிக்கனும். இப்போதைக்கு இந்த ரெண்டு படங்களையும் பாக்குற ஐடியா இல்ல. டிவியில் வரும் போது பாத்துக்கலாம்.

  Reply

 2. ஆ ன ந் த ம் (@anandhame)
  Jan 12, 2014 @ 15:25:31

  சமீபத்திய படங்களைப் பார்க்கும் போது கதை திரைக்கதையை விட்டு விட்டு நல்ல மேக்கிங் மட்டுமே வைத்து நல்ல படம் கொடுக்க முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது போல தெரிகிறது. அஜீத் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் அதிலிருந்து வெளியே வந்து நல்ல படங்கள் கொடுக்க வேண்டும். இவர்கள் இருவரும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் நடிக்கும் படத்துக்காக காத்திருக்கின்றேன் 🙂

  Reply

 3. ஆ ன ந் த ம் (@anandhame)
  Jan 12, 2014 @ 15:34:28

  This font is little hard to read in my laptop… Please consider change the font style… #request

  Reply

 4. ammuthalib
  Jan 14, 2014 @ 06:33:25

  ” பெரிய blessing படம் 2 மணி 40 நிமிடங்கள் தான்.”

  Ha ha ha.. Agree!

  இந்தக்கண்டனத்தை இரண்டாம் முறையாக பதிவு செய்கிறேன். தமன்னா போட்டோ இல்லாம எங்களை மோசம் செய்யாதீர்?

  Reply

  • amas32
   Jan 14, 2014 @ 09:09:38

   தமன்னா போட்டோ போட்டா ஏன் நீங்க சிபியார் மாதிரி ஹீரோயின் போட்டோ போடறீங்கன்னு
   கேக்கறாங்க? நான் என்ன தான் செய்யறது 🙂

   Reply

 5. UKG (@chinnapiyan)
  Jan 27, 2014 @ 12:35:39

  வழக்கம்போல் ஒரு நேர்த்தியான விமர்சனம். நன்றி 🙂

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: