வெள்ளி நட்சத்திரங்களும் தங்கக் காசுகளுமாக சல்லென்று கண்ணருகில் வந்துக் கொட்டி ஜொலிக்க SuperStar Rajni என்று டைட்டிலில் ரஜினி பெயர் 3Dயில் வர சத்யம் தியேட்டரில் விசில்களும் ஆரவாரங்களும் பொம்மை படமாக வந்தாலும் ரஜினியின் ரீச்சும் மாஸும் எப்படிப்பட்டது என்று காட்டிவிடுகிறது 🙂
முதலில் எந்த நடிகர் எந்தப் பாத்திரத்தில் வருகிறார் என்று புரிந்துகொள்ள கொஞ்ச நேரம் எடுக்கிறது, அதற்குப் பின் அது புரிந்தால் என்ன புரியாவிட்டால் என்ன படத்தில் கவனம் செலுத்துவோம் என்று அதைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு விடுகிறோம். ரஜினியை முதலில் animated characterஆகப் பார்க்கும் பொழுது அதை அவ்வளவாக ஜீரணிக்க முடியவில்லை, ஆனால் சிறிது நேரத்தில் அதுவும் பழகிவிடுகிறது. பார்த்தவுடன் இவர்கள் தாம் என்று நன்றாகப் புரிவது நாசர், தீபிகா, ஷோபனா & நாகேஷ். சரத்குமார் சரத்பாபு போல உள்ளார். ஜாக்கி ஷராபும் ஓரளவு அவர் தான் என்று தெரிகிறது. ஆதி உருவம் தான் அவரின் உண்மை உருவத்துக்கு perfect match!
இசை இந்தப் படத்துக்குப் பெரிய பலம். அ.ர.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்துகிறது. பாடல்கள் படத்தின் கதையோடு நன்றாக இணைந்துள்ளது. உடை அலங்காரமும் நகைகளும் மிகவும் அழகாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் உள்ளன, முக்கியமாக பாடல் காட்சிகளில் பெண் நடிகர்களின் காஸ்டியும் அருமை. அனிமேஷன் என்பதால் வித விதமான நிறங்களில் உடைகள் கண்ணைக் கவருகின்றன. இயற்கை காட்சிகளும் நன்கு வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. எழில் கொஞ்சும் அருவிகளும் மலைகளும் மலர்களும் கண்ணுக்கு மிகவும் ரம்மியமாக உள்ளன.
சிவ தாண்டவ நடனம் அருமை. ரஜினிக்காக ஆடிய நடனக் கலைஞர் யுவராஜூக்குப் பாராட்டுக்கள். சண்டைக் காட்சிகளும் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் பிரமாண்டமாக உள்ளன. Animation படம் ஆனதால் சாகசங்களை ஹீரோவால் எளிதாகப் பண்ண முடிகிறது. நாமும் குதிரையின் மேல் ராணா அமர்ந்து ஐயாயிரம் அடிகள் தண்டுவதையும் நன்றாக ஜீரணித்துக் கொள்ள முடிகிறது 🙂
தீபிகாவுக்கும் முகமூடி வீரனுக்கும் நடக்கும் சண்டைக் காட்சியின் முடிவு very romantic 😉 கதைக்குள் கதைக்குள் கதை! ஆனால் தலை சுத்தாமல் சொல்லியிருப்பது K.S.ரவிகுமாரின் அனுபவத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு. திரைக்கதை மட்டும் சொதப்பியிருந்தால் ஒரு குழந்தை கூட திரை அரங்கிற்குச் சென்றிருக்காது. ராணா என்று பெயர் வைத்திருந்தால் படம் ஓடியிருக்காது என்று கோச்சடையான் என்று படத்துக்குப் பெயர் சூட்டியவர் வாழ்க! படம் முழுக்க வருவது ராணா தான். ஆனால் கோச்சைடையான் என்று ஒரு பாத்திரத்தை உருவாக்கி கதையில் சுவாரசியத்தை ஏற்படுத்திய புண்ணியவானுக்கு சௌந்தர்யா நன்றி சொல்ல வேண்டும்.
ஆங்காங்கே இயக்குநரின் திறமை கீற்றாக ஒளிவிடுகிறது. ஆனால் சௌந்தர்யாவின் உழைப்பைக் குறை சொல்லவே முடியாது. தன்னால் இயன்ற வரை ஒரு நல்ல படைப்பை கொடுக்க முயன்றிருக்கிறார். புதிய முயற்சிக்கு மனமார்ந்தப் பாராட்டுகள். ஆனால் இந்தப் படம் ரஜினி நடிக்காமல் வேறு யார் நடிந்திருந்தாலும் வெள்ளித்திரையைப் பார்த்திருக்காது. ரஜினியின் குரல் பாத்திரத்துக்கு முழு உயிர் கொடுத்துவிடுகிறது.குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஒரு படமாக உள்ளது. ஆனால் ராஜாவின் சூழ்ச்சிகளை, கிளைக் கதைகளைக் குழந்தைகள் புரிந்து கொள்ளுமா என்று தெரியவில்லை. அதனால் இதைப் பெரியவர்களுக்கான ஒரு சிறுவர் கதை என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்!
எல்லாம் பார்த்து முடித்து கடைசிக் காட்சியில் சேனா என்று ராணாவின் சகோதரன் என்ட்ரி கொடுத்துத் தொடரும் என்று டைட்டில் கார்ட் போடும்போது தான் திக்கென்றாகிவிடுகிறது! மறுபடியும் முதல்லேந்தா??? 😉
May 25, 2014 @ 12:33:42
சூப்பர் -SuperStar Rajni என்று டைட்டிலில் ரஜினி பெயர் 3Dயில் வர சத்யம் தியேட்டரில் விசில்களும் ஆரவாரங்களும் பொம்மை படமாக வந்தாலும் ரஜினியின் ரீச்சும் மாஸும் எப்படிப்பட்டது என்று காட்டிவிடுகிறது-செம:-))
May 25, 2014 @ 12:51:57
🙂
May 25, 2014 @ 12:52:36
// பெரியவர்களுக்கான ஒரு சிறுவர் கதை // தஸ்ஸால்
அதுசரி கமலாவை கைவிட்டு ஏன் சத்யம் போயிட்டீன்ங்க
May 25, 2014 @ 13:37:52
சூப்பர் விமர்சனம் 🙂
May 25, 2014 @ 13:42:01
நன்றி 🙂
May 25, 2014 @ 13:40:37
கமலாவில் படத்தைப் போடலையே… :-))
May 25, 2014 @ 13:56:34
பார்க்கலாமா.. வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.. ஆனால் உங்கள் நடுநிலையான விமர்சனம் கண்டு, படத்தை ஒரு முறை பார்த்துவிடலாம் என நினைக்கிறேன். நல்ல விமர்சனம்.
May 26, 2014 @ 06:33:46
thank you 🙂
May 25, 2014 @ 14:06:14
எல்லாம் பார்த்து முடித்து கடைசிக் காட்சியில் சேனா என்று ராணாவின் சகோதரன் என்ட்ரி கொடுத்துத் தொடரும் என்று டைட்டில் கார்ட் போடும்போது தான் திக்கென்றாகிவிடுகிறது! மறுபடியும் முதல்லேந்தா??? ???????? paaart 2 coming>>>>
May 26, 2014 @ 06:33:12
yes, be prepared 🙂
May 25, 2014 @ 15:25:03
நன்றி. அருமை. எனக்கென்னமோ, பாதி மனத்தோடு விமர்சனம் எழுதினமாதிரி தோன்றது. கடைசிவரை கதை என்ன என்று சொல்லவேயில்லையே. விமர்சனத்தில் அதுவும் ஒரு அங்கமல்லவா.
உங்களைப்போலவே நானும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். இப்படம் ஒரு புது முயற்சி.
கடைசி பாராவில் நீங்கள் நகைச்சுவையாகமுடித்திருந்தாலும் அதன் பின்னே படம் பார்த்த உங்களின் அயர்வு எனக்கு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை :))
இருந்தாலும் படம் பார்க்க விரும்பும் நண்பர்களின் ஆசையைய் முடக்கி போடாமல் இருக்கிறது உங்கள் விமர்சனம்.
இனி பார்ட் 2 , 3 என்று பார்ட் பார்ட்டாக எத்தனை வந்தாலும், உங்கள் விமர்சனத்தை சீர்தூக்கி பாராட்ட நாங்கள் இருக்கிறோம் :))
நன்றி வாழ்க
May 26, 2014 @ 06:32:15
உங்க பின்னூட்டம் தான் எனக்கு டானிக், நன்றி 🙂
May 25, 2014 @ 17:58:02
உங்களுடைய விமர்சனத்திற்குதான் காத்திருந்தேன். படம் சுமார்தான் எனத் தெரிகிறது.” என்றாலும் படம் பார்க்க விரும்பும் நண்பர்களின் ஆசையை முடக்கிப் போடாமல் இருக்கிறது உங்கள் விமர்சனம்”
May 26, 2014 @ 06:31:01
நன்றி 🙂
May 26, 2014 @ 01:58:47
அனிமேஷனாக இல்லாமல் நேரடிப்படமாய் இருந்தால் இது ஒரு மாஸ் படமாக அமைந்திருக்கும்.
கற்ற டெக்னாலஜியை டெஸ்ட் பண்ண ரஜினி சாரையே Guinea Pigஆக்க மகளால் தான் முடியும். தட் மகளைப்பெற்ற அப்பாஸ் மொமண்ட்ஸ்… திருட்டுவிசிடில பாக்கலான்னு இருந்தேன்.
பூச்சிபூச்சியா 3டில பறக்குறது நல்லாருக்குன்னு நீங்களே சொல்லிட்டதால தேட்டருக்கு போறேன்
பி.கு: தீபிகா முகம் படுகேவலமாய் இருந்தது எனக்கேள்விப்பட்டேன். அதைக்குறியீடு மூலம் ஒரே போட்டோவில் உணர்த்திய உங்கள் நுட்பத்துக்கு முன் ஜெமோவெல்லாம் #சாரிஜெமோ 😉
May 26, 2014 @ 06:30:41
:-))))))
May 26, 2014 @ 07:02:09
//தொடரும் என்று டைட்டில் கார்ட் போடும்போது தான் திக்கென்றாகிவிடுகிறது! மறுபடியும் முதல்லேந்தா???/// ரசிச்சு சிரித்தேன் :))
May 26, 2014 @ 16:21:27
:-))
May 26, 2014 @ 07:59:35
படம் பப்படமா நொறுங்காமத் தப்பிச்சிருச்சுன்னு உங்க விமர்சனத்துல இருந்து தெரியுது. ஒரு படம் எடுக்குறதுன்னா லேசா என்ன? கொஞ்சமும் அனுபவம் இல்லாம மக வந்து சொல்லும் போதே யோசிச்சிருக்கனும். என்ன செய்றது? மழலை சொல் கேளாதவர்னு கெட்ட பேர் வரக்கூடாதுன்னு நெனச்சிருப்பாரு. அதுவுமில்லாம.. இதெல்லாம் அவருக்கு ஒரு பணமா!
இப்போதைக்குப் படம் பாக்க முடியுமான்னு தெரியல. டிவி(டி)யில் வரட்டும் பாத்துக்கலாம்.
May 26, 2014 @ 16:21:06
correct. 🙂
May 27, 2014 @ 16:10:55
நல்லா இருக்கும்மா கதை சொல்லாம விமர்சனம் பன்னின ஸ்டைல் 🙂
May 28, 2014 @ 03:30:37
நன்றி 🙂