உன் சமையல் அறையில் – திரை விமர்சனம்

 

Un Samayal Arayil Movie First Look Posters (3)

பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் சினேகா-பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்துள்ளப் படம் உன் சமையல் அறையில். ஒரு முதிர் கன்னிகைக்கும் ஒரு முதிர் காளைக்கும் வரும் காதல் தான் கதை. பிரகாஷ் ராஜும் சினேகாவும் அனாயாசமாக நடித்திருக்கிறார்கள். நாயகி டப்பிங் ஆர்டிஸ்ட், நாயகன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர், முக்கியமாக ஒரு foodie 🙂 இதெல்லாம் கதைக்கு ஒரு சுவாரசியத்தைக் கொடுக்கிறது. அவர்கள் முதலில் தொடர்புகொள்ளும் சூழலும், பின் காதல் அரும்புவதும் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலுக்கு வரும் வில்லங்கமும் வித்தியாசமான கோணத்தில் உருவாகிறது. அதற்குப்பின் முடிவை நோக்கி நகரும் கதை ஆமை வேகத்தில் செல்வதும் வயது வந்து காதலிப்பவர்களுக்குத் தேவையான முதிர்ச்சி காதலனுக்கும் காதலிக்கும் இல்லாததும் படத்தின் சறுக்கல்கள்.

படத்தில் ஆதிவாசிகள் பற்றிய ஒரு பகுதி கதைக்கு சிறிதும் ஒட்டாமல் உட்கார்ந்திருக்கிறது. அதை கதையில் கொண்டு வருவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் பிரகாஷ்ராஜ் என்று புரியவில்லை. அது பிரகாஷ் ராஜின் கதாப் பாத்திரத்தையும் வலுவிழக்கச் செய்கிறது.

கதை எந்த நகரத்தில் நடக்கிறது என்பதையும் மையமாக நம் ஊகத்துக்கே விட்டிருக்கிறார் இயக்குநர். நடப்பது சென்னையில் இல்லை என்று சென்னைவாசிகளுக்கு நன்றாகத் தெரிந்து விடும். ஹைதிராபாத்தில் படமாக்கப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். பிரசாத் லேப் என்று அவர்கள் காட்டுவது கூட பிரசாத் லேப் அல்ல, மியுசியமும் நம்ம எழும்பூர் மியுசியம் அல்ல. அது ஒரு மாதிரி நெருடுகிறது.

புது முகம் தேஜஸ் நன்றாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியான சம்யுக்தாவும் நன்றாகச் செய்துள்ளார். ஊர்வசி, தம்பி ராமையா, மேலும் இவர் படங்களில் எப்பொழுதும் வரும் ஐஸ்வர்யா, இளங்கோ குமாரவேல் இப்படத்தின் மற்ற நடிகர்கள். வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.

படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று யோசிக்க இது பெரிய கம்ப சூத்திரம் அல்ல. நாம் எதிர்ப்பார்க்கும் முடிவு தான். அதனால் திரைக்கதையில் விறுவிறுப்பை ஏற்படுத்தியோ அல்லது ரோமான்சை இன்னும் அழகுற சொல்லியோ படத்தைக் காப்பாற்றி இருக்கலாம். ஜவ்வு மாதிரி இழுத்துவிட்டார்கள். இதே மாதிரி கதை அம்சம் உள்ள இந்திப் படம் சீனி கம்மில் இருந்த சுவாரசியம் இந்தப் படத்தில் காணவில்லை.

என்னை பொறுத்தவரை இன்னுமொரு எரிச்சல், ஒரு பெண்ணுக்கு 3௦ வயது தாண்டியும் திருமணம் ஆகாமல் இருப்பது ஒரு பெரிய குறையாக பாத்திரங்கள் உணர்த்துவது சமூகத்துக்கு தவறான செய்தியைத் இருபத்தியோராம் நூற்றாண்டில் தருகிறது.

இசை, இசைஞானி இளையராஜா. படத்தின் பலம் அவர் இசை. பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி மனத்தில் ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனால் அந்த அளவு படத்தில் அழகாகப் படமாக்கப் படவில்லை என்பது என் கருத்து. கைலாஷ் கேர் பாடியுள்ள “இந்த பொறப்பு தான்” படத்தில் இரு முறை வருகிறது. ரொம்ப நல்ல பாடல், தெலுங்கில் அவர் பாடியது ரொம்பப் பிடித்தது. ஆனால் தமிழில் உச்சரிப்பு ரொம்ப மோசம்.

உன் சமையல் அறையில் – உப்பும் இல்லாமல் சர்க்கரையும் இல்லாமல் ஒரு bland உணவு!

unsamayalaraiyil

9 Comments (+add yours?)

 1. Altappu
  Jun 07, 2014 @ 15:11:50

  கடைசி வரி நச் விமர்சனம் :-))

  Reply

 2. karthik
  Jun 07, 2014 @ 15:19:41

  முடிவு எப்படி இருக்கும்னு எல்லாம் யோசிக்கல .எப்ப இருக்கும் என்று தான் யோசித்து அமரந்திருந்தேன் அரங்கில்

  Reply

 3. Anonymous
  Jun 07, 2014 @ 15:23:57

  malayalam salt and pepper remake? pity it has not lived up to the expectations 😟

  Reply

 4. ரிஷி(@i_vr)
  Jun 07, 2014 @ 15:53:12

  நேற்றுதான் மீண்டுமொருமுறை ” salt n pepper”பார்த்தேன், எத்தனையாவது முறை என்று நினைவில்லை…ஆனாலும் சுவாரசியம் சிறிதும் குறையாத திரைக்கதை & காட்சிகள். உ.ச.அ ட்ரைலர் பார்க்கையிலேயே பிரகாஷ் சொதப்பியிருப்பார் என்றுதான் தோன்றியது. ஸ்வேதாவின் (இப்பட நடிப்புக்கு மாநில விருது கிடைத்தது) தோற்றத்திற்கு ஏற்ற முதிர்கன்னி பாத்திரத்தில் ஸ்னேகாவை பொருத்திப் பார்க்க முடியவில்லை, அதுவும் பிரகாஷ்க்கு ஜோடியாக..மலையாளத்தில் பின்னணியிசையில் பிஜிபால் பின்னி பெடலெடுத்திருப்பார்….ராசாவிற்காக உ.ச.அ பார்க்கனும்….

  Reply

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  Jun 07, 2014 @ 16:51:23

  வணக்கம்
  தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று படத்தை பார்க்க தூண்டுகிறது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Reply

 6. தேவா..
  Jun 07, 2014 @ 17:42:19

  Liked the last punch line….super

  Reply

 7. UKG (@chinnapiyan)
  Jun 07, 2014 @ 22:48:40

  நன்றி மேம். அருமையா இருந்தது உங்க சமையல். மனதில் தோன்றியதை எந்த விதமான காம்பிரமைஸ் இல்லாம உள்ளத உள்ளபடி சமைத்து பரிமாரியுள்ளீர்கள். கட்டாயம் சாப்பிடுங்கள் என்று சொல்லவில்லை, சாப்பிட வேண்டாம்னும் சொல்லல.

  “உப்பும் இல்லாமல் சர்க்கரையும் இல்லாமல் ஒரு bland உணவு!” சூப்பர். ஆனா பசியோடுயிருப்பவன் சாப்பிட்டுதானே ஆகனும்.:)

  மீண்டும் நன்றி. வாழ்க 🙂

  Reply

 8. sukanya (@sukanya29039615)
  Jun 08, 2014 @ 12:00:22

  Padam parpathaivida un vimarsan pidithirukku. Athai miss seiyanatten.

  Reply

 9. GiRa ஜிரா
  Jun 09, 2014 @ 04:38:15

  மலையாள சால்ட் அண்ட்டு பெப்பர் நல்லாருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஒரு நல்ல படத்தை நல்லா எடுக்காம இப்படி சொதப்பீட்டாங்களே. அதுவும் பிரகாஷ்ராஜ் மேற்பார்வைல. ம்ம்ம்.

  தெலுங்கை விட பாட்டு கன்னடத்துல நல்லாருக்கு. கேட்டுப்பாருங்க.

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: