இமய மலையில் ஐஸ் வித்துவிடுவார் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள வைப்ரன்ட் சுப்பு! எனக்கும் ஸெல்ப் help புத்தகங்களுக்கும் வெகு தூரம். என்னையே புத்தகத்தைக் கையில் எடுத்தப் பின் கடைசி பக்கம் முடித்தப் பின் தான் கீழே வைக்கும்படி செய்த அவரின் வைப்ரன்ட் எழுத்தாற்றலும் செறிவான கருத்துக் கோவையும் பாராட்டுக்குரியது.
தலைப்பே very catchy! இராமயணத்தில் ரிஷ்யஸ்ரிஞர் என்று ஒரு முனிவர். அவரின் தமிழ் பெயர் கலைக் கோட்டு முனி. கலை என்றால் மான், கோடு என்றால் கொம்பு. அந்த முனிவரின் நெற்றியில் ஒரு சிறு கொம்புப் போல இருக்கும். அவர் மகா பெரிய அறிஞர். நாம் பேச்சு வழக்கில் பலமுறை அவன் தலையில் என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று கேட்போம், அதாவது அவன் என்ன எல்லாம் தெரிந்த ஞானியா என்ற பொருளில். அதுவே இப்போ பேசும்போது அவன் என்ன பெரிய அப்பாடக்கரா என்று கேட்கும் வழக்கம் வந்துள்ளது. இரண்டு சொற்றொடருக்குமமே எப்படி அந்த சொல்வழக்கு வந்தது என்று நம்மில் பலபேருக்குத் தெரியாது ஆனால் கேட்பவருக்கு நாம் என்ன சொல்கிறோம் என்று கண்டிப்பாகப் புரிந்து விடும்.
அது மாதிரி அப்பாடக்கர் என்ற சொல்லும் பழக்கத்தில் வருவதற்கு ஒரு அழகிய காரணம் உள்ளதை இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளலாம். சென்னையில் வசிப்பவர்களுக்கு இந்த சொல் வெகு பிரபலம். ஆனால் மற்றவர்களுக்கு நடிகர் சந்தானம் சினிமாவில் பயன்படுத்தியதால் தெரிய வந்திருக்கும். அந்த வகையில் இதை பிரபலப் படுத்திய சந்தானத்துக்கு பதிப்பகத்தார் ஒரு புத்தகத்தை இலவசமாக அனுப்பிவைக்கலாம் 🙂
எவரையும் கவரும் எளிமையான எழுத்து இந்தப் புத்தகத்தின் முதல் ப்ளஸ் பாயின்ட். இரண்டாவது, சின்ன சின்ன real life உதாரணகள் மூலம் சொல்ல வந்தக் கருத்தை சுவாரசியமாக சொல்லியுள்ளார் ஆசிரியர் சுப்பு. The book has a very analytical approach. அதனால் படிப்பவர்களை சிந்திக்க வைத்து அவர் சொல்ல வந்ததை மனத்தில் ஏற்றுக் கொள்ள வைக்கிறது. There is no preaching. இப்படி செய் அப்படி செய் என்றால் படிப்பவர்கள் நீ என்ன பெரிய அப்பாடக்கரா? எனக்கு சொல்ல வந்துட்டான்னு புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அந்த மாதிரி தொனி இல்லாமல் ஆழ்ந்த கருத்துக்களையும், நாம் வாழ்க்கையில் முன்னேற எப்படி நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதையும் சாதாரணமாக சொல்லி எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பதை படிப்பவர் முடிவுக்கு விட்டு விடுகிறார். இது நல்ல உக்தி.
இந்தப் புத்தகம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வயதுள்ளோருக்கு இந்தப் புத்தகம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இதை யார் வேண்டுமானாலும் படித்துப் பயன் பெறலாம். அவர் இன்று பிரபலமாக இருக்கும் பலரின் ஆரம்ப வாழ்க்கையை சொல்லி அவர்களின் முன்னேற்றத்தை விவரிக்கும்போது நம்மாலும் முயன்றால் இந்த நிலையை அடையலாம் என்கிற எண்ணம் சட்டென்று மனத்திற்குள் வந்து அமருகிறது.
உழைப்புக்குக் குறுக்கு வழி கிடையாது என்பதையும் மாற்றி சிந்திக்கும்போது வெற்றி எளிதாகிறது என்பதையும் புரிந்துகொள்கிறோம். இலக்கு என்ன என்பதை முதலில் நிர்ணயித்துக் கொண்டால் வழி எளிதாகிறது. இல்லையென்றால் நாம் செக்கு மாட்டைப் போல ஒரே இடத்தில் உழன்று கொண்டிருப்போம், எந்த முன்னேற்றமும் இல்லாமல்.
இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த ஒரு கருத்து, “நீங்கள் எங்கே பிறந்தீர்கள்; யாருக்குப் பிறந்தீர்கள்; எந்த நிலையில் பிறந்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் சாதனையும் வெற்றியும் அமைவதில்லை. ஆகவே அடுத்தவர்களைக் குறைசொல்வதை நிறுத்துங்கள்.”
இந்தப் புத்தகத்தின் பதிப்பகத்தார் “முன்னேர் பதிப்பகம்”. தரமான ஒரு புத்தகத்தை வெளியிட்டதற்கு ஒரு பாராட்டு பொக்கே 🙂 நாலு வரி நோட் பாகம் 1,2,3 க்குப் பிறகு இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். நல்ல விற்பனை ஆகி மேலும் நல்ல புத்தகங்களை வெளியிட வாழ்த்துகள்.
ஆசிரியர் வைப்ரன்ட் சுப்புவின் பெயர் காரணம் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவுடன் புரிந்துகொண்டேன் 🙂 அவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
முன்னேர் பதிப்பகம் +91 (0)9900160925
munnerpub@gmail.com
author email: vibrantsubbu@gmail.com
விலை: Rs.75
Jun 14, 2014 @ 04:28:38
நீங்களே டக்கர்னு சொல்லிட்டதால் ஒன்னு ஆடர் பண்றேன். தங்கைகளுக்கு முதல் கிஃப்ட்
Jun 14, 2014 @ 12:54:56
good choice 🙂
Jun 14, 2014 @ 05:58:07
வணக்கம்
புத்தகம் பற்றிதங்களின் பார்வையில் மிகஅருமையாக சொல்லியுள்ளீர்கள் வாங்கி படிக்கசொல்லுகிறது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Jun 14, 2014 @ 12:55:58
நன்றி ரூபன் 🙂
Jun 14, 2014 @ 12:20:09
ரொம்ப டீப்பா அக்குவேரா ஆணிவேரா பிரிச்சி ஆராய்ச்சி பண்ணிஇருப்பீங்களோனு பயந்திருந்தேன். நல்லவேளை அப்படி ஏதுமில்லாமல் சுவாரஷ்யமா இருந்தது, புத்தகத்தின் மேல் உங்கள் கருத்துரை.
“இமய மலையில் ஐஸ் வித்துவிடுவார் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள வைப்ரன்ட் சுப்பு! எனக்கும் ஸெல்ப் help புத்தகங்களுக்கும் வெகு தூரம். என்னையே புத்தகத்தைக் கையில் எடுத்தப் பின் கடைசி பக்கம் முடித்தப் பின் தான் கீழே வைக்கும்படி ” இது ஒன்றே போதும், ஒருவர் புத்தகத்தை வாங்கி படிக்க. நன்றி. வாழ்க.
Jun 14, 2014 @ 12:57:08
நன்றி சின்னப்பையன் :-))