மரகதவல்லி alias Maggie

maggie

என் அம்மாவின் வாழ்க்கை வண்ணமயமானது. வளரும் பருவத்தில் எல்லாமே பளிச் வண்ணங்கள். என் அம்மாவின் அப்பா திரு. சக்கரவர்த்தி ஐயங்கார் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக இருந்தார். அதனால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றலாகும் வேலை. என் அம்மாவிற்கு முன் நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்திருந்தார்கள். ஒரு பெண் குழந்தை இறந்தே பிறந்ததால் என் அம்மா பிறந்த போது என் பாட்டியின் தகப்பானருக்குப் பெரும் மகிழ்ச்சி, வறுத்த பயிர் முளைத்தது போல பெண் பிறந்திருக்கிறாள் என்று அவருக்கு மரகதவல்லி என்று பெயர் சூட்டினார்.

நடு ரோவில் என் அம்மாவின் தாய் தந்தை, இடது ஓரத்தில் தாய் மாமன். கீழ் வரிசையில் நாலு சகோதரர்கள், மேல் வரிசையில் டவாலியின் கையில் என் அம்மா.

நடு ரோவில் என் அம்மாவின் தாய் தந்தை, இடது ஓரத்தில் தாய் மாமன். கீழ் வரிசையில் நாலு சகோதரர்கள், மேல் வரிசையில் டவாலியின் கையில் என் அம்மா.

என் அம்மா பிறந்தது தாய் மாமன் வீட்டில், அரியலூரில். ஆனால் அந்த சமயம் என் அம்மாவின் அப்பா இருந்த ஊர் ஸ்ரீவைகுண்டம். அங்கு தான் அவர் மழலைப் பருவம் கழிந்தது. அரசாங்க வேலையில் சம்பளம் நிறைய இல்லாவிட்டாலும் அரசாங்க குவார்டர்ஸ், வேலையாட்கள் என்கிற வசதிகள் நிறைய உண்டு. அதுவும் நான்கு ஆண் குழந்தைகளுக்குப் பின் ஒரு பெண் என்பதால் எல்லாராலும் சீராட்டப் பட்டார் என்றே சொல்ல வேண்டும். அண்ணன்கள் எல்லாருமே அந்தக் கால சூழலுக்கேற்ப மரம் ஏறுதல், விளையாட்டு என்பது சண்டையில் முடிதல் என்பது போல் இருந்ததால் என் அம்மாவும் ஒரு Tomboy தான். எதற்கும் அஞ்சமாட்டார்.

இன்னும் சொல்லப் போனால் இவர் ஒரு மருத்துவர் ஆகியிருந்தால் மிகவும் நல்ல பெயர் பெற்றிருப்பார். அண்ணன்களுக்கு அடிபட்டாலும் முதல் உதவி செய்வது இவராகத் தான் இருக்கும். யாரும் வீட்டில் இல்லாத பொழுது இவர் அண்ணன் ஒருவருக்கு முதுகு முழுக்கத் தேள் பல இடங்களில் கொட்டிவிட்டது. சிறுமியாக இருந்தாலும் உடனே கொட்டிய இடத்தில் எல்லாம் சுண்ணாம்பைத் தடவி முதலுதவி செய்திருக்கிறார். இவருக்கு முன் பிறந்த அண்ணனுக்கு சிறு வயதில் போலியோ நோய் தாக்கியதால் வலது கை செயலிழந்து விட்டது. அது இன்று வரை என் அம்மாவுக்குப் பெரிய குறை. அவர் உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணராக இன்று வலம் வந்தாலும் அவரின் உடற்குறை அவரை இன்றும் மனதளவில் வேதனைக் கொள்ள வைக்கும். பள்ளிக்குப் பேருந்தில் பயணம் செல்லும்போது முதலில் அண்ணனை பத்திரமாக வண்டியில் ஏற்றிவிட்டு அதன்பின் தான் இவர் ஏறுவாராம்.அதனால் ரொம்ப நாள் வரை அந்தப் பேருந்தின் ஓட்டுநர் இவரை தமக்கை என்றும் அவர் அண்ணனை தம்பி என்றும் நினைத்திருந்தாராம்.

ஸ்ரீவைகுண்டத்திற்குப் பிறகு என் தாத்தாவிற்கு பழனிக்குப் போஸ்டிங். எங்கள் தத்தா பாட்டி ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருந்தாலும் பலமுறை பழனி மலையை வலம் வந்தவர்கள். என் அம்மாவும் ஒரு வேலையாள் இடுப்பில் உட்கார்ந்தவாறு பழனி மலையை அவர்களுடன் வலம் வந்திருக்கிறார். அதன் புண்ணியப் பலனாகத் தான் எனக்கும் முருகன் அருள் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். முருகனே என் இஷ்ட தெய்வம்.

பழனிக்குப் பின் சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கடலூர், தூத்துக்குடி என் பல ஊர்களுக்கு என் பாட்டனாருக்கு transfer ஆனதால் சில சமயம் ஒரே வகுப்பைக் கூட இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் படித்திருக்கிறாராம். நடுவில் இரண்டு வருடம் அரியலூரில் தாய் மாமா வீட்டில் இருந்தும் படித்திருக்கிறார். அங்கும் மாமாவிற்கு ஐந்து ஆண் பிள்ளைகள் ஒரு பெண். அந்தப் பெண்ணே பின்னாளில் என் அம்மாவின் இரண்டாவது அண்ணனின் மனைவியாக வந்தார்.

அம்மாவிற்குப் படிப்பில் ரொம்ப ஆர்வம் கிடையாது ஆனால் அவர் எந்த விளையாட்டுப் போட்டியில் சேர்ந்தாலும் முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வந்துவிடுவார். நன்றாகப் பாடுவார். வீட்டில் பாட்டுப் பயிற்சி தரப்பட்டது. அதனால் பாட்டுப் போட்டிகளிலும், அண்ணன்கள் trainingல் பேச்சுப் போட்டிகளிலும் எப்பவும் அம்மாவிற்கு முதல் பரிசு தான். பின்னாளில் பாட்டுப் பயிற்சியைத் தொடர்ந்திருக்கலாம். சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை என்று நினைக்கிறேன்.

என் தாத்தா எந்தெந்த ஊரில் வேலை பார்த்தாலும் அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் கோடை விடுமுறைகளில் இவர்களை அழைத்துச் சென்றதால் என் அம்மா தென் இந்தியாவில் அநேக ஊர்களையும், கோவில்களையும், அருவிகளையும், நதிகளையும் பார்த்து இருக்கிறார். இயற்கையிலேயே இவருக்கு சரித்திரத்திலும் பூகோளத்திலும் மிகுந்த ஆர்வம். எந்த இடம் சென்றாலும் அவ்விடத்தின் கதையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுவார். இன்றும் கோவில்களுக்குச் சென்றாலும் சிற்பங்களையும் அந்தக் கோவிலைக் கட்டிய அரசரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவே மிகுந்த ஆர்வமாக இருப்பார்.

ஒரு முறை மகாத்மா காந்தியின் சொற்பொழிவைக் கேட்கவும் அவரை கண்ணால் கண்டு மகிழவும் இவரின் அம்மாவும் ஒரு அண்ணனும் மதுரைக்குச் சென்ற போது இவர் சிறுமியாக இருந்ததால் இவரை அழைத்துப் போகாதது இவருக்கு மிகுந்த வருத்தம். காந்தியைப் பார்க்க முடிந்த ஒரு அரிய வாய்ப்பை அவர் தவற விட்டதை நினைத்து அளவில்லா வருத்தமே. காந்திஜி சுடப்பட்டு இறந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்டு இவர் காதில் விழுந்த பொழுது இவர் ஒரு கோவிலில் இருந்திருக்கிறார். விடாமல் கோவிலை வலம் வந்து இவர் கேட்ட செய்தி பொய்யாக இருக்க வேண்டுமே என்று இறைவனைப் பிரார்த்தித்து அழுதிருக்கிறார். இளம் வயதிலேயே அவருக்கு நிறைய தேசிய உணர்வு உண்டு. இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்று இருக்க மாட்டார். அரசியலில் நடப்பதைக் கூர்ந்து கவனிப்பார்.

பிராணிகளிடமும் நிறைய அன்பு! கால் ஒடிந்த பறவையோ, தாயில்லா பூனைக்குட்டியோ இவரின் பராமரிப்பில் நன்றாகிவிடும். இவர் இண்டர்மீடியட் இரு வருட படிப்பினை ஒரு வருடம் திருச்சியிலும், ஒரு வருடம் பாளையங்கோட்டையிலும் படித்து முடித்தார். பின்பு பட்டப் படிப்புக்கு இவரின் அண்ணன்களின் பிடிவாதத்தால் மெட்ராஸ் Queen Mary’s கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருட பட்டப் படிப்பை ஒரே ஊரில் படித்து சாதனை படைத்தார். படிப்பை விட எப்பவும் போல என் அம்மா மற்ற செயல்பாடுகளில் முன்னின்று, பல குழுக்களின் செயலாளராக பங்காற்றி Queen Mary’s கல்லூரி பிரபலமாக இருந்தார் 🙂

maggiegrad

என் அம்மா என் அப்பாவை திருமணம் புரிந்த பிறகு அவரின் கவலையற்ற வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து பொறுப்புள்ள தலைவியாக அவரை மாற்றியது. என் அப்பா மிகவும் எளிமையானக் குடும்பத்தில் மூத்த மகனாப் பிறந்து குடும்ப சுமையைத் தாங்கும் அவசியம் இருந்ததால்  என் அம்மா அவருக்கு உற்றத் துணையாக மாறி தோள் கொடுத்தார். என் தாத்தாவிற்கு என் அப்பாவை மருமகனாக்கிக் கொள்ள முக்கியக் காரணம் அவரின் நேர்மையும், கடின உழைப்பும், அன்பான அணுகுமுறையும் தான். இல்லாவிட்டால் ஒரே பெண்ணை இவ்வளவு பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாகக் கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம்.

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

 

தாஜ் மகாலில்

தாஜ் மகாலில்

மேல் படத்தில் நான் என் அம்மாவுடன், கீழ் படத்தில் என் தம்பி.

மேல் படத்தில் நான் என் அம்மாவுடன், கீழ் படத்தில் என் தம்பி.

என் நான்கு அத்தைகளுக்கும் என் அம்மாவும் அப்பாவும் தான் திருமணம் செய்து வைத்தனர். ஒரு சித்தப்பா என் பெற்றோரின் திருமணத்திற்குப் பின் பிறந்தவர். சித்தாப்பாக்களைப் படிக்க வைத்து அவர்களுக்கும் திருமணம் நடத்தி எல்லா உறவுகளையும் என் அம்மா அரவணைத்துக் கொண்டாடினார். என் தந்தை வழி தாத்தா ரொம்ப சிம்பிள்டன். எளிமையானவர் ஆனால் சாமர்த்தியம் கிடையாது. என் பாட்டி முடிந்த வரை தன் சாமர்த்தியத்தில் குடும்பத்தை நடத்தினார். ஆனாலும் அவருக்கும் எல்லா சுமையையும் என் அப்பா மீது சுமத்தி விட்டது மனதுக்கு வேதனையை அளித்தது. என் பாட்டி கேன்சர் வந்து 63 வயதிலேயே இறந்து விட்டார். என் அப்பா அவருக்கு 13 வயதில் பிறந்தவர். தாயின் மேல் மிகுந்த பாசம் உண்டு. என் தாத்தா அதற்கு பின் பல வருடங்கள் நல்ல முறையில் வாழ்ந்து தனது 93வது வயதில் தான் இயற்கை எய்தினார்.

என் தந்தை முதலில் பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் நல்ல நிலைக்கு வர ரொம்பக் கஷ்டப்பட்டதால் பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் வயது முதலே அவருக்கு இருந்தது. அதனால் அவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் செய்யும் சிறு தொழிற்சாலையை ஆரம்பித்தார். மிகவும் நல்ல முறையில் நடந்த அந்த தொழிற்சாலை, ஒரு பார்ட்னர் ஏமாற்றியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவர் தனியாகவும் இன்னொரு நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அதில் பால் பேரிங்க்ஸ் செய்ய ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்டிற்கு நிறைய முதலீடு செய்ததால் அதிலும் பல பணப் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.

என் அம்மா தான் ஆபிஸ் நிர்வாகத்தை முதலில் இருந்து கவனித்து வந்தார். அவர் திருமணத்திற்குப் பிறகு என் தந்தையின் உந்துதலின் பேரில் B.Ed படிப்பையும் முடித்திருந்தார். ஆனால் ஆசிரியர் வேலைக்குச் சென்றதில்லை. மிகச் சிறந்த நிர்வாகி. என் தந்தை மிகப் பெரிய  பொறியாளர் ஆயினும் அதிர்ஷ்டம் இல்லை. பால் பேரிங்க்ஸ் அது வரை ஜப்பானில் இருந்தும் ஜெர்மனியில் இருந்தும் தான் இம்போர்ட் செய்யப்பட்டது. முதன் முதலில் ஒரு ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரியில் இன்டிஜீனஸ் மெஷீன்களுடன் உள்நாட்டு டெக்னாலஜியுடன் பால் பேரிங்க்சை தயாரித்த முதல் இந்தியர் என் தந்தை. ஆனால் ப்ரொடக்ஷன் காஸ்ட் அதிகம். வெளிநாட்டுப் பொருளின் குறைந்த விலையோடு  போட்டிப் போட முடியவில்லை.

எத்தனையோ பணப் பிரச்சினைகளையும், வங்கிக் கடன், தனியார் கடன் இவற்றை சமாளித்து என்னையும் என் தம்பியையும் நல்ல முறையில் வளர்த்ததில் என் தாயின் பங்கு மிகப் பெரியது. அவர் தைரிய லட்சுமி. எதற்கும் கலங்காமல், அடுத்து என்ன செய்வது என்று யோசித்து செயல் புரிந்தார்.

இதன் பின் தான் உண்மையான சோதனைக் காலம் ஆரம்பித்தது. என் தந்தைக்கு பார்கின்சன்ஸ் டிசீஸ் வந்துள்ளது தெரிய வந்தது. முதலில் அவரது வலது கை ஒத்துழைக்காமல் இருந்தது. அந்த சமயம் நான் திருமணம் முடிந்து அமெரிக்கா சென்று விட்டேன். பார்கின்சன்ஸ் டிசீசுக்கு இன்று வரை நோய் தீர்க்கும் மருந்து கண்டுபிக்கப் படவில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரின் அவயங்களை செயலிழக்கச் செய்யும். அந்த நோய் இந்தியாவில் பொதுவாக யாருக்கும் வருவதும் குறைவு. அதனால் நோய் பற்றிய ஞானமும் குறைவு. ஆனால் என் அப்பா மிக மிக பாசிடிவ் பெர்சன். எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்தவர், இதைக் கண்டும் அசரவில்லை.  பார்கின்சன்ஸ் நோயுடன் இருபது வருடம் போராட்ட வாழ்வு வாழ்ந்தார். நான் அவரைப் பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். படிப்படியாக அவர் தன் நிலையை உயர்த்திக் கொண்டு மனிதன் தெய்வ நிலையை, வாழும் போதே அடைய முடியும் என்னும் பாடத்தை எங்களுக்கு உணர்த்திச் சென்றார்.

இத்தனை நாள் வியாபாரத்தில் என் அப்பாவிற்கு வலது கையாக இருந்த என் அம்மா உண்மையில் உமையொரு பாகனாக மாறினாள். எத்தனையோ வருடங்கள் அம்மா தான் முழுக்க முழுக்கப் பார்த்துக் கொள்ளும் நிலையில் என் தந்தை இருந்தார். உணவு ஊட்டுவதில் இருந்து குளிப்பாட்டி விடுவது வரை எல்லாமே என் தாய் தான். உதவிக்கு ஆள் இருந்தும் பலப் பல விஷயங்கள் என் அம்மா ஒருவரால் தான் என் தந்தைக்கு சரியாகச் செய்ய முடியும். அதை இன்முகத்துடன் செய்தார் என் தாய். காந்தாரி திருதிராஷ்டிரனுக்குப் பார்வை இல்லை என்று தானும் தன கண்ணைக் கட்டிக் கொண்டாள், ஆனால் என் தாய் ஒரு படி மேல். என் தந்தைக்குக் கண்ணாகவே இருந்தாள்.

என் தந்தைக்கு என் தாய் மேல் மிகுந்த காதல், அன்பு, பாசம். பெரிய இடத்துப் பெண் தன்னை விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டது அவருக்கு மிகப் பெரிய பெருமை. அவர்களின் திருமணத்தில் K.B.சுந்தராம்பாள் கச்சேரியும், கொத்தமங்கலம் சுப்புவின் கச்சேரியும் நடைபெற்றது. தெரு அடைத்துப் பந்தல் போட்டு பாண்டிச்சேரியில் என் பெற்றோர் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதனால் என் தந்தை என் அம்மாவை மனத்தில் ராணியைப் போல தான் வைத்திருந்தார். மரகதம் என்ற என் அம்மாவின் பெயரை திருமணத்திற்குப் பின் அவர் மேகி என்று தான் சுருக்கி ஸ்டைலிஷ் ஆக அழைப்பார். அதனால் இன்றும் எங்கள் வீட்டுக் குழந்தைகள் என் அம்மாவை மேகி பாட்டி என்று தான் அழைக்கின்றனர் 🙂

என் அம்மாவிற்கு நிறைய படிக்கப் பிடிக்கும், உலக விஷயங்கள் அனைத்திலும் ரொம்ப ஈடுபாடு, எந்த டாபிக் பற்றியும் அறிவுசார்ந்து பேச முடியும். அன்பே நிறைந்த என் அம்மாவிற்கு உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தர எல்லாம் வல்ல இறைவனையும் என் தந்தையையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

சிங்கப்பூரில்

சிங்கப்பூரில்

 

 

 

என் தந்தையின் 80வது பிறந்த நாளின் போது.

என் தந்தையின் 80வது பிறந்த நாளின் போது.

 

என் வலைதளத்தில் இது என் நூறாவது இடுகை. இதை என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன் 🙂

 

75 Comments (+add yours?)

 1. உமா க்ரிஷ் (@umakrishh)
  Jun 26, 2014 @ 17:34:32

  நிறுத்தி நிதானமாகவே படித்தேன்..ஏற்கனவே உங்க அம்மா பற்றிப் படித்திருந்தாலும் இந்த பால்ய காலம் இன்னும் ஆச்சர்யம்.. ஸ்டேடஸ் பார்த்துத் திருமணம் செய்கின்ற காலத்தில் ,அவர் விரும்பித் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணை அவரின் குணாதிசயத்தைக் காட்டுகிறது..தைரியமா வாழ்த்தலாம் உங்க அப்பா அம்மா மாதிரி ஆதர்ச தம்பதிகளா வாழுங்க என்று :)இன்னமும் என் மனதிற்கு நெருக்கமாகவும் உயர்ந்த இடத்திற்கும் செல்கிறார்..நேரில் சந்தித்து ஆசி பெற்றது நான் பெற்ற பாக்கியமாகவே கருதுகிறேன்.இந்த வயதிலும் போனை எடுத்தால் எனை நினைவு கூர்ந்து விசாரிப்பது இன்னமும் மகிழ்ச்சி ஐ லவ் மேகி பாட்டி 🙂

  Reply

  • Raji
   Jun 28, 2014 @ 13:03:03

   There cannot be anything more fitting tribute to your dear mom from a beloved daughter like you. Both of you are great in your own ways.

   Reply

 2. உமா க்ரிஷ் (@umakrishh)
  Jun 26, 2014 @ 17:35:23

  சொல்ல மறந்துட்டேனே ..அவங்க இளமைக் கால க்வீன் மேரிஸ் போட்டோ ல கண் செம ஈர்ப்பு 🙂

  Reply

  • amas32
   Jun 27, 2014 @ 03:26:03

   ஆமாம் அவங்க கண் ரொம்ப அழகு. என் மகனுக்கும் அதே கண்கள் 🙂

   Reply

 3. Kannabiran Ravi Shankar (KRS)
  Jun 26, 2014 @ 17:58:41

  cholla maRanthen..
  fotos sema sema nostalgic, esp Taj Mahal & Queen Marys:)

  u should make & archive a digital album, ma! (shareable only on request, that too selectively)

  Reply

 4. நாட்டி நாரதர்® (@mpgiri)
  Jun 26, 2014 @ 18:01:53

  என்ன சொல்வது என்றே தெரியவில்லை..நீங்கள் செய்த பூர்வ புண்ணியம் அவர்கள் மணிவயிற்றில் நீங்கள் வந்தது அவ்வளவுதான் சொல்ல முடிகிறது. அவர்களுக்கு எங்களுடைய நமஸ்காரங்கள்.

  Reply

 5. UKG (@chinnapiyan)
  Jun 26, 2014 @ 18:08:46

  படித்து முடித்தவுடன் மிகவும் நெகிழ்ந்து போனேன். கனத்த மனதோடு திரும்பவும் நீங்கள் சொல்லியதை ஒன்றுவிடாமல் அசைபோட்டு பார்க்கிறேன்.
  தாத்தாவின் சரிதத்தை சொல்லிவரும்போது வருடங்களையும் குறிப்பிட்டு இருந்தால் என் போன்றோருக்கு அவ்வருடங்களை ஒப்பிட்டு பார்த்து பால்யத்தை நினைவு கூர்ந்திருக்கலாம்.அக்காலத்தில் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த மரியாதை நான் நன்கு அறிவேன். இப்போ உள்ள இளைய தலைமுறையினர் அதிசியத்துபோவார்கள்.

  தங்களின் தகப்பனாரையும் தாயையும் பற்றி கூறியதையெல்லாம் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது. எதுவும் மிகை இல்லாமல் சொன்னது ஒரு சிறப்பு. முடிவில் தாய்க்கு சமர்ப்பணம் செய்துள்ளீர்கள். உங்கள் பாசத்திற்கும் அன்பிற்கும் முன்னால் வேறெதுவும் ஈடாகாது. மேலும் பேரக்குழந்தைகளின் அன்பும் ஆதரவும்கூட உங்கள் தாய்க்கு உண்மையான சமர்ப்பணம்.

  நன்றி. உங்கள் தாயும், உங்கள் குடும்பமும் சீரும் சிறப்புமாய் வாழ்க பல்லாண்டு பெரியவர்களின் ஆசிவாதத்தொடும் பெருமாளின் அருளோடும்.

  Reply

 6. uma chelvan
  Jun 26, 2014 @ 19:39:57

  Very nice and dedicated post for your loving “MOM” I love the name “Margathavalli” very much. Convey My “Namskaaram” to her and me my husband and kids need her blessings. !!

  Reply

 7. ஏகலைவன்
  Jun 26, 2014 @ 23:06:51

  அருமையான பதிவு அம்மா.
  உங்கள் அப்பா, மிகவும் தன்னம்பிக்கை உடையவராக இருந்திருப்பார். ஆனால் அன்புக்கு அடிமையாக திகழ்ந்திருப்பார்.

  Reply

 8. Anonymous
  Jun 27, 2014 @ 01:44:23

  செம …. பொதுவாக பிராமண குடும்பகளில் தான் பெண் அடிமை தனம் அதிகம்ன்னு சொல்லுவாங்க ஆனா அதற்க்கு முரணா ஒரு குடும்பம் அப்போதிய காலகட்டத்திலேயே /M\ ;-))) உங்க அப்பா அம்மாவுக்கு நோய் நொடி அற்ற நீண்ட ஆயுளும் & மன அமைதியும் தர பிரளய கால ருத்ரணை பிராத்திக்கிறேன்.

  Reply

  • amas32
   Jun 27, 2014 @ 02:00:58

   என் அப்பா இறைவனடி சேர்ந்து விட்டார். என் அம்மாவிற்காகப் பிரார்த்திப்பதற்கு ரொம்ப நன்றி 🙂

   Reply

 9. மீனம்மா (@meenammakayal)
  Jun 27, 2014 @ 02:38:57

  எல்லா வளங்களும் இன்னும் பெற வணங்குகிறேன்

  தாய்க்கு உங்களுக்கும் உள்ள நெருக்கத்தின் தோழமையின் வெளிப்பாடு கண்ணாடி திரையிட்ட ஜன்னலாய் எழுத்தில் தெறியுது

  Reply

 10. vasanthigopalan (@vasanthigopalan)
  Jun 27, 2014 @ 02:45:26

  ரொம்ப நல்லா இருக்கு.இவ்வளவு படித்த,எல்லா நற்குணமும் நிறைந்த அம்மா அமைந்ததால்,நீங்களும் அவர் மாதிரியே இருக்கிறீர்கள்.’மாகி பாட்டி’ நோயில்லாமல் நீண்டு வாழ அரங்கன் அநுக்ரகிக்கட்டு்ம்.

  Reply

 11. PVR (@to_pvr)
  Jun 27, 2014 @ 03:00:36

  Every time, she amazes me in the kamban class. With her keen observation, sharp memory and ever smiling nature, she happens to be one more positive reason for my not missing the weekly meet. All that @amas32 has written would have made any other person, haughty with skills acquired; but not this lady, Maggy! She brings joy, and peace wherever she is!

  And, let me add this too – slowly and steadily Ms. Sushima is shaping up as a great writer, a chronicler of people, events, places …. all in non-fiction category. Super. 🙂

  Reply

 12. shanthhi
  Jun 27, 2014 @ 03:04:12

  நெகிழ்ச்சியான பதிவுமா…இங்க எல்லாரும் சொன்னதுபோல நானும் பொறுமையா படிச்சேன்.நான் துவண்டுபோன/கலங்கிப்போன சூழ்நிலைகளைலாம் ஒப்பிட்டு பார்த்தேன், உங்க அம்மாவின் தைரியம் ,உறுதி, போன்ற குணங்களின் பிரம்மாண்டம் உணர!ரொம்பவே இன்ஸ்பயரிங்மா.நன்றி:))
  @shanthhi

  Reply

  • amas32
   Jun 27, 2014 @ 03:21:12

   ரொம்ப நன்றி ஷாந்தி. இன்னும் விரிவா சொல்ல எவ்வளவோ இருக்கு. பதிவுக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும் 🙂

   Reply

 13. amas32
  Jun 27, 2014 @ 03:26:33

  நன்றி KRS 🙂

  Reply

 14. ammuthalib
  Jun 27, 2014 @ 03:42:47

  முந்திட்டீங்களே… அம்மாவப்பத்தி ஒர் பதிவு போடலான்னு பாய்ண்ட் சேத்துட்டு இருந்தேன். நம்ம கம்பன் க்ளாஸ்ல the most knowledgeable (wisdom wud be an apt word) person அம்மாதான். ஒரு சில பாடல்களுக்கு அவங்க மற்ற இலக்கியங்கள்லருந்து தரும் ரெஃபரன்ஸ் பிரமிக்க வைக்கும். You are indeed the luckiest person to have such beautiful souls around you.

  அவங்ககிட்டருந்து அவங்களோட keen listening skill, இசையறிவு, எப்போதும் ஒட்டியிருக்கும் புன்னகை ஆகியவற்றை எப்புடியாச்சும் ஆட்டையப்போட்டுக்கணும். க்குவேன்.

  Maggieனு கூப்டுறதாலயோ என்னமோ காபியோ, ஸ்னாக்ஸோ… குடுகுடுன்னு ஓடி குவிக்கா குடுத்துட்டே இருப்பாங்க. நானும் வேதாளமும் வெக்கமே இல்லாம அவங்க தர ஸ்னாக்ஸ அணில்போல் (இல்ல, அந்த அணில் இல்ல, இது நிஜ அணில்) கொறிச்சுட்டிருப்போம்).

  Thanks for writing about a wonderful person.

  என்ன தவம் செய்தனை, சுஷீஈஈமா
  என்ன தவம் செயதனை…

  எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை…

  Reply

 15. Vibrant Subbu
  Jun 27, 2014 @ 03:50:27

  God has blessed you and your family with abundance, will pray to him to shover his blessings and grace to Maragathavalli amma, long live maggie with good health. Read your book on your father great tribute by a daughter.

  Reply

 16. lotusmoonbell
  Jun 27, 2014 @ 05:03:00

  உங்கள் அம்மாவின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.அம்மா -மகள் உறவு தனித்துவம் வாய்ந்தது. அவர்களைப் பற்றி எழதுவதில் தனி சுகம். அந்த அன்பு பாசம் நேசம் நெகிழ்ச்சி என அம்மாவைக் கொண்டாட மகளால்தான் முடியும். அம்மாவுக்கு எனது அன்பு வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்.மரகதம் என்ற பெயர் மனதை நெகிழ்விக்கும் பெயர்.

  Reply

 17. வெகுளி (@Veguli)
  Jun 27, 2014 @ 05:29:12

  What a story ! I really don’t know what to write. Felt very emotional after reading this. Ups and downs in life, what a blessed life ! Wish to meet Maggie Paatti 🙂

  Reply

 18. வெகுளி (@Veguli)
  Jun 27, 2014 @ 05:36:53

  ஏக் காவ் மே ஏக் கிஸ்ஸான் ரஹ் தா த்தா மாதிரி, எங்க தாத்தா பாட்டிலாம் சின்ன வயசுல பார்த்த நினைவு மட்டுமே நெஞ்சில் புகைப்படமாய். ஒரு சில அம்மா அப்பா புகைப்படம். அந்த வகையில் கொஞ்சம் பொறாமையா இருக்கு 🙂

  Reply

 19. வெகுளி (@Veguli)
  Jun 27, 2014 @ 05:39:26

  ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ் தா த்தா மாதிரி, எங்க தாத்தா பாட்டிலாம் சின்ன வயசுல பார்த்த நினைவு மட்டுமே நெஞ்சில் புகைப்படமாய். ஒரு சில அம்மா அப்பா சிறய வயது புகைப்படம். அப்பா அம்மாலாம வேலைக்கு நான் போனதுக்கப்புறம் எடுத்த புகைப்படங்கள். அந்த வகையில் கொஞ்சம் பொறாமையா இருக்கு 🙂

  Reply

 20. balaraman
  Jun 27, 2014 @ 05:49:04

  Sehwag மாதிரி sixer அடிச்சு century போட்டிருக்கீங்க! 🙂

  உங்கம்மாவோட துணிச்சல், பாசம், போராட்டம் எல்லாமே பாராட்டுக்குரியது. உங்களுக்கு வெளிய இருந்து உந்துதல் தேவையில்ல. உங்க வீட்டுலையே கத்துக்க வேண்டியது நிறைய இருக்கும் போல?!

  அதுல கொஞ்சத்த இப்ப நாங்களும் கத்துக்குறதுக்கு இந்தப் பதிவு உதவியா இருந்துச்சு. பகிர்ந்தத்துக்கு நன்றிம்மா! 🙂

  Reply

 21. CHITRA KRISHNAN (@janaki89)
  Jun 27, 2014 @ 06:22:29

  இப்போதுதான் படித்து முடித்தேன். மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது . எனக்கு என் தாயின் நினைவு வந்தது.மாகி அம்மாவுக்கு என் நமஸ்காரங்களை தெரிவியுங்கள்.அம்மா ஆரோக்யமாக நீண்ட நாள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி :-))

  Reply

 22. sukanya (@sukanya29039615)
  Jun 27, 2014 @ 09:59:19

  pramadam! arumai! amma virku enathu namaskarangal. En arumai thozhikku muthangalum parattukkalaum.

  Reply

 23. Suseela (@suseelaamar)
  Jun 27, 2014 @ 10:43:45

  அம்மா,மகள் உறவென்பது வரம் தான்.
  என் அம்மாவின் நினைவு வந்தது.அம்மாவிற்க்கு
  வணக்கத்தையும்…பிராத்தனையையும்
  தெரியப்படுத்துங்கள்.

  Reply

 24. Mohan (@mohankumarnmk)
  Jun 27, 2014 @ 11:00:27

  பதிவு அபாரம். உங்க அப்பாவும் , நீங்களும் கொடுத்துவைத்தவர்கள்

  Reply

 25. Anbhukkarasan
  Jun 27, 2014 @ 12:14:00

  எழுத்தாளர் ஜெயமோகன் கதை போல் நல்ல நடை, அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  Reply

  • amas32
   Jun 27, 2014 @ 14:35:33

   பெரிய சொற்களால் புகழ்ந்திருக்கிறீர்கள், நன்றி 🙂

   Reply

 26. kanapraba
  Jun 27, 2014 @ 14:06:35

  நல்லா இருக்கும்மா, உங்க அம்மாவை வீட்டில் தரிசித்தேன் இன்று தான் அவங்க பற்றி நிறைய அறிந்து கொண்டேன். நூறாவது பதிவுக்கி வாழ்த்துகள்

  Reply

 27. Anonymous
  Jun 27, 2014 @ 15:57:09

  எவ்வளவோ சோதனைகளை கடந்தும் உங்க அம்மா இவ்ளோ பாசிடிவ் ஆக இருப்பது நமக்கு எல்லாம் ஒரு பாடம் .அதை இவ்ளோ அன்பா அருமையா தொகுத்து சொல்ல ஒரு மகள் கெடைச்சிருக்குறது அவங்களோட அதிர்ஷ்டம் 🙂
  shaan_64
  shaanthi surendiran

  Reply

 28. தேவா..
  Jun 27, 2014 @ 15:57:27

  நெகிழ்ச்சியான பதிவு, நூறு என்ன பல நூறு பதிவுகள் எழுத அந்த இறைவன் அருள் புரியட்டும். உங்கள் வீட்டில் உங்கள் அம்மாவை பார்த்ததோடு சரி. உங்கள் பதிவு மூலம் உளமதை அறிந்துகொண்டேன்.

  இறைவன் அருள் தொடரட்டும்.

  Reply

 29. சந்தானம்
  Jun 28, 2014 @ 02:13:44

  நேரில் சந்தித்து பேசுவது போல மிகச் சரளமான நடையில் உள்ளது உங்கள் பதிவு. மாகி பாட்டிக்கு என்னுடைய வணக்கங்கள்!

  Reply

 30. Lakshmanan p.samy
  Jun 28, 2014 @ 02:44:01

  வழி வழியாய் வந்த அன்பும் பாசமும் பெருமையும் தழைத்து ஓங்க அன்பு வாழ்த்துக்கள்! படித்த,பிடித்த தாயைப் பெறுவதும் பாக்கியம்தான் !

  Reply

  • amas32
   Jun 29, 2014 @ 02:10:32

   உண்மை, எனக்கு பெற்றோர்கள் அமைந்தது நான் முன் ஜென்மத்தில் செய்த நற்பயனோ என்னமோ.

   Reply

 31. பாண்டித்துரை .வெ
  Jun 28, 2014 @ 03:42:08

  இளையோருக்கு பாடமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து கோண்டிருக்கும் அம்மாவின் பாதங்களில் என் வணக்கம்

  Reply

 32. இசக்கிமுத்து
  Jun 28, 2014 @ 08:38:23

  வைட்டனவர் புரந்தொழ மாந்தர்

  Reply

 33. npgeetha
  Jun 28, 2014 @ 14:39:51

  நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்மா!
  அம்மா குறித்து எழுதியது பெரும் சிறப்பு. நம் எல்லோருக்குமே பெரிய moral support நம் அம்மாக்கள்தான். அதிலும் சென்ற தலைமுறை வரை அவர்களின் பாடு கொஞ்சமல்ல. அதை மன தைரியத்துடன் அவர்கள் கடந்தவிதமே நமக்குப் பெரும் உந்துசக்தி.
  சிறு பிரச்சனைக்கும் கலங்கிவிடும் எனக்குஎன் அம்மாவின் ஒரு தொலைபேசி உரையாடல் முழு எனர்ஜி கொடுக்கும்.
  கொண்டாடப்பட வேண்டிய தேவதைகள் அவர்கள். உங்கள் பதிவு அதைச் செவ்வனே செய்திருக்கிறது.
  புகைப்படங்கள் அனைத்தும் வெகு அருமை. ஒரு காலப்பயணம் செய்யவைத்து விட்டது.
  அம்மா நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நிறைவும் கொள்ள இறைவனை வேண்டி, பாட்டியின் ஆசியை வேண்டுகிறேன் 🙂

  Reply

  • amas32
   Jun 29, 2014 @ 02:08:20

   முதல் முறை பின்னூட்டம் இட்டது பதிவில் வராமல் மறு முறையும் அசராமல் பின்னூட்டம் இட்டதற்கும், உங்கள் கனிவான சொற்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 🙂

   Reply

 34. ravi_aa
  Jun 28, 2014 @ 18:10:40

  நல்லா இருக்கும்மா, simpleton ன வெகுளினு தமிழில மாத்திடலாமே . simpleton என்னமோ கொஞ்சம் உறுத்துது .

  Reply

 35. Shiv (@shivBuddh)
  Jun 28, 2014 @ 18:21:05

  WoW!! Amazing- Both Amma’s Amma and your tribute writing about her. Two more things::: 1, Amma’s relation with & help to legendry Bharathi’s wife 2. Her Sharp Memory and knowledge on almost all subjects.

  Reply

 36. Sricalifornia
  Jun 29, 2014 @ 03:00:12

  “What you leave behind is not what is engraved in stone monuments, but what is woven into the lives of others.”
  We walked the journey with you, saw her going to school, grow up, live her life, we saw maggi patti in all her simple glory. Wonderful post ma. Keep writing, keep rocking.:-)

  Reply

 37. GiRa ஜிரா
  Jun 29, 2014 @ 14:46:04

  நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அதுவும் அம்மாவைப் பற்றிய பதிவு.

  ஒவ்வொரு ஞாயிறும் கம்பன் வகுப்பில் அவருடைய பங்களிப்பையும் வகுப்பு முடிந்தபின் கொடுக்கும் உபசரிப்பையும் பெறக் கொடுத்து வைத்திருக்கிறோமே நாங்கள்.

  பதிவும் பதிவில் உள்ள படங்களும் அழகு. தாய்மார்களைப் போல மனவுறுதி படைத்தவர்கள் இல்லை. அம்மா என்ற பட்டத்தை ஏற்கும் போதே அவர்கள் தெய்வங்களாகி விடுகிறார்கள்.

  அம்மாவுக்கு என்னுடைய வணக்கங்கள்.

  Reply

 38. amas32
  Jun 30, 2014 @ 04:08:35

  நன்றி KRS 🙂

  Reply

 39. மழை!!
  Jun 30, 2014 @ 06:56:02

  அம்மாவுக்கு சிறந்த காணிக்கை தந்திருகிறீர்கள் மா.. வாழ்த்துக்கள் 🙂

  Reply

 40. im1lymeஅமலன்
  Jun 30, 2014 @ 09:00:52

  அருமையான பதிவு

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: