சைவம் திரைப்படத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்கள் சாரா அர்ஜுன், நாசர், நிரவ் ஷா, G.V.பிரகாஷ் குமார். ரொம்ப லைட்டான கதை. இயக்குநர் விஜய், செட்டியார் ஆனதால் அவர் சமூகத்துக் கதையை எளிதாகக் கையாண்டிருக்கிறார். செட்டிநாட்டு வீடும் பாத்திரத் தேர்வுகளும் authentic ஆக இருப்பத்து படத்தின் பலம்.
சிறுமி சாரா மனத்தைக் கொள்ளைக் கொள்கிறாள். நாசருக்கு இந்த மாதிரி பாத்திரம் அல்வா சாப்பிடுவது மாதிரி. அனாயாசமாக செய்து இருக்கிறார். நிறைய கதாப் பத்திரங்கள் வருவது முதலில் நம்மைக் கொஞ்சம் தடுமாற வைக்கிறது. இவ்வளவு நல்ல இயக்குநர் விஜய் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகத் தந்திருக்கலாம். படம் இன்னும் நல்ல உயரத்துக்குப் போயிருக்கும். குழந்தைக்கு சேவல் மேல் உள்ள பாசத்தை வைத்து ஒரு feel good movie. சின்ன சின்ன சம்பவங்களின் மூலம் கதாப்பாத்திரங்களின் தன்மையை வெளிக் கொண்டு வரும்போது விஜய் மிளிர்கிறார்.
gv பிரகாஷின் இசை நன்றாக உள்ளது, முக்கியமாக பின்னணி இசை நல்ல பலம். உத்திரா உன்னிகிருஷ்ணன் பாடிய அழகே அழகு இனிமை. இந்தப் படத்தில் நிரவ் ஷா சம்பளம் வாங்காமல் cinematography செய்திருக்கிறார். அவரின் பங்களிப்பு படத்தின் தயாரிப்புத் தரத்தை உயர்த்துகிறது. Editing ஆன்டனி, படம் நன்றாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது.
நாசர் மகன் இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். முதல் படத்துக்கு நன்றாக செய்திருக்கிறார். இன்னாரின் மகன் என்றாலே இன்னும் கூடுதல் எதிர்ப்பார்ப்பு வந்துவிடுகிறது.
முடிவு என் மனத்துக்குப் பிடித்தமான ஒரு முடிவு, அதனாலேயே அரங்கை விட்டு வரும்போது மகிழ்ச்சியோடு வெளிவர முடிந்தது. மேலும் இது இயக்குநர் விஜயின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்றறியும் பொழுது இன்னும் மகிழ்ச்சி 🙂
டைட்டிலில் நிறைய பேருக்கு நன்றி சொல்கிறார் இயக்குநர். அமலா பாலுக்கும் நன்றி என்று ஒரு டைட்டில் மின்னி மறைகிறது. எதற்கு என்று தெரியவில்லை. may be இவரைத் திருமணம் புரிந்ததற்காக இருக்கலாம்.
நல்ல படம். தனி காமெடி track இல்லை. அதுவே பெரிய நிம்மதி. ஹீரோயிச சண்டை காட்சிகளும் கிடையாது. அதை விட பெரிய நிம்மதி. குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். வேற்று மொழி படத்தின் காபியாக இருக்கவும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் படம் ரொம்ப சுவாரசியமாக இல்லாதது ஒரு குறை தான்.
Jun 28, 2014 @ 11:38:06
Arumaiyana vimarsanam. Padam parkka thunfugirathu.
Jun 28, 2014 @ 15:40:10
:-))
Jun 28, 2014 @ 12:00:35
/அமலா பாலுக்கும் நன்றி என்று ஒரு டைட்டில் மின்னி மறைகிறது. எதற்கு என்று தெரியவில்லை. may be இவரைத் திருமணம் புரிந்ததற்காக இருக்கலாம்.// – சூப்பரோசூப்பர்
Jun 28, 2014 @ 15:40:30
:-))
Jun 28, 2014 @ 15:46:37
feel good விமர்சனம்
Jun 29, 2014 @ 02:26:15
:-)))))))
Jun 28, 2014 @ 17:11:54
//ஆனால் படம் ரொம்ப சுவாரசியமாக இல்லாதது ஒரு குறை தான்.//
இவ்வளவு பிளஸ் பாய்ன்ட் சொல்லிட்டு இப்படி சொன்னா எப்படிங்கிறனமா ?
Jun 29, 2014 @ 02:25:37
something is lacking 🙂
Jun 28, 2014 @ 17:23:38
வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக எழுதியுள்ளீர்கள் படத்தை பார்க்கசொல்லுகிறது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Jun 29, 2014 @ 02:25:55
நன்றி ரூபன் 🙂
Jun 29, 2014 @ 03:04:26
வலிக்காமல் அடிப்பதும் ஒரு கலைதான்
Jun 29, 2014 @ 12:53:42
ha ha ha
Jun 29, 2014 @ 15:03:48
நாங்களும் விமர்சனம் எழுதீட்டோம்ல 🙂
http://gragavanblog.wordpress.com/2014/06/29/3in1/
படம் சுமார்தான். சில காட்சிகள் நன்றாக உள்ளன.