வயலின் மேதை டாக்டர் L. சுப்பிரமணியம் அவர்களுக்கு கிருஷ்ண கான சபா செயலாளர் மறைந்த திரு.யக்ஞராமன் அவர்களின் பேரில் Lifetime Living Legend Award விருதை வழங்க இசை ஞானி இளையராஜா அவர்கள் வருவதாக தி இந்துவில் ஒரு செய்தி படித்தவுடன் அந்த நிகழ்ச்சிக்கு எப்படியாவது போய் விடவேண்டும் என்று மனத்தில் ஆவல். ஆனால் எனக்கு சமயத்தில் உடல் நிலை சரியில்லாமல் போய்விடும், அதனால் பல முறை திட்டமிட்டும் பல நிகழ்ச்சிகளுக்குப் போக முடியாமல் போய்விடும். ஆனால் நேற்று அந்த நிகழ்ச்சிக்குப் போனது மட்டும் அல்லாமல் பெரும் ஆசியும் பெற்று வந்தேன் 🙂
மாலை ஐந்து மணி நிகழ்ச்சி தொடக்கம் என்று அறிந்து நான்கு மணிக்கே அரங்கத்துக்குப் போய் விட்டேன். எப்பொழுதுமே L.சுப்பிரமணியம், அவரது மகன் கச்சேரிக்கு (இலவச கச்சேரிகள்) போகும் போது எக்கச்சக்கக் கூட்டம் இருக்கும். அந்த பயத்தில் முன்னதாகவே சென்றேன். உள்ளே நுழைந்தால் நான் தான் முதல் விருந்தினர். டெக்னிஷியன்கள் சவுன்ட் சிஸ்டத்தை செக் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் ஒவ்வொரு நாற்காலியிலும் reserved என்ற காகிதத்தை முதல் ஐந்து வரிசைகளில் ஒட்டிக் கொண்டிருந்தார். நான் ஆறாவது வரிசையில் தான் உட்கார்ந்திருக்க வேண்டும் ஆனாலும் ஐந்தாவது வரிசையில் உட்கார்ந்தேன். நல்ல நடு சீட். ரொம்ப மகிழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாக நாலரை மணிக்கு மேல் மக்கள் வர ஆரம்பித்தார்கள். ஐந்தரை மணிக்கு மேல் தான் நிகழ்ச்சி தொடங்கியது. அப்பொழுது அரங்கம் நிரம்பி வழிந்து பலரும் நின்று கொண்டிருந்தனர். நானும் ஐந்தாம் வரிசையில் இருந்து மூன்றாம் வரிசைக்கு நகர்ந்து இன்னும் மேடை அருகே இடம் பிடித்துவிட்டேன்.
இந்த விழாவை நடத்தியவர்கள் திரு நல்லி குப்புசாமியும் திரு Y. பிரபு (இப்போதைய செயலாளர்) அவர்களும். திரு L. சுப்பிரமணியத்துக்கு Yagnaraman Lifetime Living Legend Awardம் இதைத் தவிர கஞ்சிரா கலைஞர் திரு புருஷோத்தமன், நாட்டியக் கலைஞர் உமா நம்பூத்ரிபாட் சத்தியநாராயணா, கர்நாடக இசைப் பாடகர் ராம், இவர்களுக்கும் Yagnaraman Award of Excellence விருதுகள் வழங்கப்பட்டன. அரங்கத்திரை தூக்கப்பட்டதும் இளையராஜா அனைவருக்கும் வணக்கம் சொன்னார். சங்கர மடத்தில் இருந்து வந்த சில வேத வல்லுநர்கள் வேதம் இசைத்து கோவில் பிராசாதங்களை மேடையில் இருந்த அனைவருக்கும் வழங்கினர். இளையராஜா பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்.
நான் இளையராஜா அவர்களை நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை. ரொம்ப எளிமையாக இருந்தார். பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டும் ஆடியன்சை பார்த்து இன்முகத்துடன் சிரித்தபடி இருந்தார். அவரை பேச அழைக்கும் முன் அவரைப் பற்றி சுருக்கமாக MC சொல்லும்போது அவர் தந்தை அவருக்கு வைத்தப் பெயர் ராசையா என்று குறிப்பிட்டார். இளையராஜா பேச ஆரம்பித்தவுடன் முதலில் அந்தத் தவறை திருத்தினார். தனக்கு பெற்றோர் வைத்தப் பெயர் ஞான தேசிகன் என்றும் பள்ளியில் அது ராசைய்யா என்று மாறியது என்றும் குறிப்பட்டார்.
சமீபத்தில் அவர் சம்பந்தப்பட்ட பொது நிகழ்ச்சிகளிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை ஆனால் L.சுப்பிரமணியம் அவர்களின் விருது கொடுக்கும் விழாவிற்கு அழைக்கப்பட்ட பொழுது தன்னால் தட்ட முடியவில்லை என்று கூறினார். அவர்கள் வீட்டில் அவரும் ஒரு குடும்ப உறுப்பினராக இருந்ததையும், எப்படி சுப்பிரமணியத்தின் தந்தை V.லட்சுமிநாராயணா, அண்ணன் L.வைத்தியநாதன் இருவரும் அவரை நெருங்கிய சொந்தமாக பாவித்ததையும் நினைவு கூர்ந்தார். அவரும் வைத்தியநாதனும் சேர்ந்து பியானோ வாசிப்பார்களாம். அவர்கள் வீட்டில் ஒருவனாக வளர்ந்த அவர் இந்த விழாவுக்கு வந்து L.சுப்பிரமணியனை கௌரவிக்க வேண்டியது வேண்டியது தன் கடமை என்று கூறினார்.
L.சுப்பிரமணியத்தின் வியத்தகு திறனை சிலாகித்துப் பேசினார். கலை இறைவன் கொடுத்த வரமாக இருப்பினும் அவரின் அசுர சாதகம், பயிற்சி, இசைக் கல்வி இவை மூலமாகத் தான் இன்று உலகம் புகழும் பெரிய கலைஞனாக அவர் இருக்கிறார் என்றார். ‘There is no success without discipline. There is no discipline without sacrifice’ என்றார். வாசிக்கும் போது போ போட்டுக்கொண்டே ப்ளக் பண்ணும் வித்தையை இவர் தான் ஆரம்பித்து வைத்தார் என்று கூறினார். Pluck பண்ணும் போது bow போட வராது ஆனால் அதை அவ்வளவு இலாகவமாக அவர் செய்வார் என்றார். அதற்குப் பெயர் pizzicato என்றார்.
‘இசை என்பது இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக கர்நாடக இசை இந்த பூமியில் பாடப்பட்டும் வாசிக்கப்பட்டும் வந்திருக்கிறது. அவை எல்லாம் காற்றில், ஆகாசத்தில் நிறைந்திருக்கிறது. நான் பாடலுக்கு tune போடும்போது அந்த அலைவரிசையில் இருந்து தேவையானதை pickup பண்ணிப் போடுகிறேன். இசை எனக்குத் தானாக வருகிறது. நான் இசையைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. இசை தான் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது’ என்றார்.
‘ஒவ்வொரு முறையும் இசைக் கருவியை எடுத்து ஒரே ராகத்தை வாசித்தாலும் ஒரு முறை வாசிப்பதைப் போல இன்னொரு முறை இருக்காது. அந்த நேரத்தில் நமக்கு என்ன வருமோ அது தான் இசை. இதை நான் மட்டும் சொல்லவில்லை, எல்லா இசைக் கலைஞர்களையும் கேட்டுப் பாருங்கள் அனைவருமே இதனை ஒப்புக் கொள்வார்கள்’ என்றார். அதை மேடையில் இருந்த கலைஞர்கள் தலை அசைத்து ஆமோத்தித்தனர்.
‘எத்தனையோ வெளிநாடுகள் போய் வந்திருக்கிறேன் ஆனால் சென்னையை நெருங்கும் போதே எனக்குள் ஒரு vibration feel ஆகும். அது நம்ம பூமிக்கே பிரத்தியேகமானது. நானே நினைப்பேன், சரஸ்வதி தேவி எங்கும் இருப்பவள் தானே அது ஏன் நம் பூமியில் மட்டும் அவளை நான் பிரத்யேகமாக உணருகிறேன் என்று. நம் பாரத பூமி புண்ணிய பூமி, அதனால் தான்’ என்றார். அருணகிரிநாதர் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி உரையை முடித்துக் கொண்டார்.
விருது பெற்ற அனைவருக்கும் மாலை , சால்வை அணிவித்து, பட்டத்தை அவரவர்களுக்கு அன்புடன் அளித்தார். புகைப்படத்திற்கு சரியாக போஸ் செய்யாதவர்களை மறுமுறை இவரே அழைத்து சரியாக படம் எடுக்கும்படி புகைப்பட கலைஞர்களிடம் சொல்லி எடுக்க வைத்தார். மூன்றாவது வரிசையில் இருந்ததால் அவர் பேசுவது ஒலி பெருக்கி இல்லாமலேயே கேட்க முடிந்தது. பெண் கலைஞர் உமாவுக்கு மாலையை கையில் கொடுத்தார், அவர் அதை கையிலேயே வைத்துக் கொள்ள அணிந்து கொள்ளுங்கள் என்று சிரித்தபடி சொன்னார். ஆடியன்ஸில் இருந்து இதற்கு சிரிப்பலைகள் கிளம்பின 🙂
L.சுப்பிரமணியன் ஆரம்பித்துள்ள சாபா என்னும் சேவை நிறுவனம் வெளியிட்ட, இசையை வீட்டிலேயே பயில உதவும் CD யை இளையராஜா அவர்கள் வெளியிட நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார். அப்பொழுது சுப்பிரமணியத்தின் மகனும் மகளும் மேடைக்கு வந்தனர்.
நன்றி உரை சொன்ன நால்வருமே இளையராஜா கையினால் இந்த விருதினைப் பெறுவது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று கூறினர். நால்வருமே தங்கள் பெற்றோர்கள் தான் தங்களின் இந்த நிலைக்குக் காரணம் என்று ஆத்மார்த்தமாக கூறினர். அதில் உமா பேசும்போதே இமோஷனல் ஆகிவிட்டார். L.சுப்பிரமணியம், வெளிநாட்டில் நம் இசை மதிக்கப் பட வேண்டும், தனி வாத்தியமாக வயலின் மேடையில் வாசிக்கப் படவேண்டும் என்று எப்படி தன் தந்தை ஆசைப்பட்டார் என்றும் அதுக்குத் தகுந்தார் போல் தன்னை உழைக்கவும் வைத்தார் என்றும் கூறினார். தன் அண்ணனுக்கும் தந்தைக்கும் தான், தான் பெரும் விருதுகள் அனைத்தும் போய் சேரவேண்டும், ஆனால் அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றார். மேலும் சுப்பிரமணியம் நன்றி நவிலும் பொழுது இளையராஜா pizzicato பற்றி இவ்வளவு கூர்ந்து கவனித்துத் தன்னைப் பாராட்டியது பற்றி தனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றும் கூறினார்.
கிருஷ்ணா கான சபா செயலாளர் நன்றி உரை ஆற்றும் பொழுது இளையராஜா இன்று வந்து இந்த விழாவினை சிறப்பித்ததால் தான் அரங்கம் நிரம்பி வழிகிறது, ஆனால் முதலில் இவ்விழாவிற்கு இவரை எப்படி அழைப்பது, அழைத்தால் வருவாரா என்றெல்லாம் கவலைப்பட்டேன். ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு தான், வந்துவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
விழா முடிந்தவுடன் கூட இளையராஜா மேடையில் அனைவரிடமும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து சுப்பிரமணியத்தின் மகனும் மகளும் L. சுப்ரமணியத்துடன் சேர்ந்து வாசிக்கும் இசை கச்சேரி தொடங்க இருந்ததால் சிலர் மட்டுமே அரங்கை விட்டு வெளியேறினர். முக்கால்வாசி பேர் கச்சேரியைக் கேட்க அமர்ந்தபடியே இருந்தனர்.
கிரீன் ரூமுக்குப் போனால் இளையராஜாவை சந்தித்து ஆசி பெற முடியுமோ என்று தோன்றியதால் நான் விரைவில் அரங்கில் இருந்து வெளிவந்து கிரீன் ரூம் பக்கம் சென்றேன். யாராவது தடுத்தால் நகர்ந்து போய்விடலாம் என்று தான் சென்றேன். அங்கு அங்கு தடுக்க யாருமே இல்லை. இன்னும் சிலருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் இளையராஜா. என்னருகில் இன்னொருவர் நின்று கொண்டிருந்தார்.
போட்டோ எடுத்த பிறகு நல்லி குப்புசாமி பின் தொடர இவர் முன்னே வந்தார். என்னுடன் நின்றவர் ராஜாவுக்கு ரொம்ப பழக்கமானவர் போலிருக்கிறது. வணக்கம் சொல்லி ஓரிரு வார்த்தை அன்புடன் பேசினார், இவ்வளவு அருகில் இருக்கிறாரே என்று அவரை ஒரு புகைப்படம் எடுத்து, பின் குனிந்து அவர் கால்களை தொட்டு வணங்கினேன். அவர் செருப்பு அணிந்திருந்ததால் செருப்பைத் தாண்டி அவர் கால்களை தொட்டு வணங்கி எழுந்து உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் என்று சொன்னேன். கொஞ்சம் கூட கோபப் படாமலும், நகர்ந்து கொள்ளாமலும் சிரித்தபடி ஆசிர்வதித்தார். எனக்கு முட்டியில் அடிப்பட்டிருப்பதால் சிரமப்பட்டே குனிந்து வணங்கினேன், பொறுமையாக இருந்தார்.
பின் அவர் வெளியே வந்தார். பலரும் ஆடோகிராப் கேட்டார்கள், கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, அதற்குப் பின் காரில் ஏறி சென்றார். என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, அவரை நம்ஸ்கரிக்கும் பேறு எனக்கு எப்படி கிடைத்தது என்று! நான் ராஜாவின் இசையை அனுபவிக்கும் அளவுக்குக் கூட ஞானம் இல்லாதவள். ஆனால் ஒருவர் இசை ஞானி என்று கண்டு கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவை இறைவன் கொடுத்திருக்கிறான். அதன் பலனாய் அவரை வணங்கி அவர் ஆசியை பெரும் பாக்கியம் பெற்றேன். இறைவனுக்கு நன்றி 🙂
Jul 07, 2014 @ 08:52:03
🙂 வாழ்வின் மிகச்சில தருணங்களை மட்டுமாவது ஃப்ரிட்ஜ் போல எதாவது ஒன்றில், வைத்து வைத்து எடுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
Jul 08, 2014 @ 12:02:20
நமக்கு மறதி வராத வரை அது சாத்தியமே 🙂 நன்றி 🙂
Jul 07, 2014 @ 08:55:15
வணக்கம்
நிகழ்வும் நன்றாக நடைபெற்றது இசை ஞானியின் ஆசிகிடைத்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Jul 08, 2014 @ 12:04:37
நன்றி ரூபன் 🙂
Jul 07, 2014 @ 08:57:40
Pretty nice writing. I am sure Raja saab on a great mood yesterday :). All the very best.
Jul 08, 2014 @ 12:05:08
நன்றி 🙂
Jul 07, 2014 @ 09:33:30
You are blessed ma….!!!
Jul 08, 2014 @ 12:02:53
நன்றி பறவை 🙂
Jul 07, 2014 @ 09:44:37
‘ஆசிபெற்றுவந்தேன்’ என்ற உங்கள் சந்தோஷத்தில் பங்கேற்கிறேன்.
Jul 08, 2014 @ 12:03:14
மிக்க நன்றி 🙂
Jul 07, 2014 @ 10:46:31
நானே நேரில் போய் அனுபவித்த மாதிரியான உணர்வினைக் கொடுத்தீர்கள்.நன்றி.நல்ல பதிவு.நேரடி ஒளிபரப்புக்கு சமம்.
Jul 08, 2014 @ 12:05:47
நன்றி வசந்தி 🙂
Jul 07, 2014 @ 12:48:47
கொடுத்து வைத்தவர் நீங்கள். இசைக்கடவுளை நேரில் தரிசிக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும். இசை ஞானியின் சந்தோசம் உங்கள் எழுத்துக்கள் மூலமாக எங்களையும் தொற்றிக்கொண்டது. நன்றிகள்
Jul 08, 2014 @ 12:03:39
ரொம்ப நன்றி 🙂
Jul 07, 2014 @ 13:17:19
Very emotional write up. Congratulations !! I wish I was there with you. :)))))
Jul 08, 2014 @ 12:07:17
நன்றி உமா 🙂 உங்களை வலை தளத்தில் பார்த்து நாளாச்சு 🙂
Jul 07, 2014 @ 14:10:49
உங்கள் அனுபவம் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. நன்றி மிக.
Jul 08, 2014 @ 12:07:42
நன்றி 🙂
Jul 07, 2014 @ 14:21:44
நீங்க ஆசீர்வாதம் வாங்கியது நான் வாங்கியது போல ஃல்உணர்வு…
Jul 08, 2014 @ 12:03:57
நன்றி தேவா 🙂
Jul 07, 2014 @ 15:45:48
What a memorable meeting with the music legend and written as if I was there with u from the start to finish…like his music his humilty is touching and heart warming..u are blessed to have met and got his blessings…surely I agree with u that divinity made this possible ..
Jul 08, 2014 @ 12:08:10
thanks Shobha 🙂
Jul 07, 2014 @ 16:41:16
So lucky ma:) உள்ளார்ந்த உணர்ச்சி, மரியாதை, அத்தனை பெரிய கலைஞனுக்கு முன் தோன்றும் மிக இயற்கையான awe. எல்லாம் உணற முடிகிறது உங்கள் பதிவில். வாழ்த்துக்கள் 🙂
Jul 08, 2014 @ 12:08:59
ரொம்ப நன்றி ஸ்ரீ 🙂
Jul 07, 2014 @ 16:53:57
ராஜாவின் கால்கள் தெரிகின்றன என்றொரு ட்வீட் பார்க்கவும் ,ஜாலியா பெரியவாள தொட்டு சேவிச்சுக்கோங்கோ ன்னு கிண்டலா போட நினைச்சேன்..அப்புறம் எதுவும் தப்பாகிடுமோ ன்னு நினைச்சு விட்டுட்டேன்..ஆனா நிஜமாகவே தொட்டு ஆசிர்வாதம் வாங்கி அதைப் பதிவாகவும் போடுவீங்க என எதிர்பார்க்கல 🙂 நான் முதன் முதலில் மிக அருகில் பார்த்தப்ப எதுவுமே பேசத் தோனல..ஆளாளுக்கு ஆட்டோக்ராப் க்காக கை நீட்டினாங்க ..நான் சப்தமும் ஒடுங்கி கண் இமையாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன்..வேறு விதத்தில் அருகில் நெருங்க முயற்சி செய்யவே இல்லை..உங்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைச்சிருக்கு.. மனம் கவர்ந்த சாதனையாளர் என்ற முறையில் என்றேனும் ஒரு நாள் இப்படி நானும் ஆசீர்வாதம் வாங்கணும் 🙂
Jul 08, 2014 @ 12:11:04
:-)) நன்றி உமா 🙂
Jul 08, 2014 @ 03:01:41
வழக்கம்போல் சுவாரஸ்யமாக இருந்தது உங்கள் பதிவு.
(@வசந்திகோபாலனின் கருத்துக்கு அடுத்து நான் என் கருத்தை சொல்லியிருந்தேன். ஆனால் அது பிரசுரமாகவில்லை. ஏன் என்று குழப்பமாக உள்ளது) 🙂 டி எம் ம் அனுப்பினேன் பதிலில்லை 😦
நன்றி வாழ்க.
Jul 08, 2014 @ 12:12:37
சில சமயம் wordpress இப்படி ஏதாவது செய்து விடும், மன்னிக்க 🙂 நன்றி, dmக்கும் பதில் அளித்துள்ளேன் 🙂
Jul 08, 2014 @ 07:16:51
நீங்க ஒரு நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்தாலே போதும். நாங்க எல்லாரும் அந்த நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்த மாதிரி தான் அது. அவ்வளவு தெளிவா அங்க நடந்தத எல்லாம் சொல்லிருக்கீங்க! 🙂
ஒரு வடிவேலு நகைச்சுவைல “இசை எங்கிருந்து வருது?”ன்னு ஒரு கேள்வி கேக்கப்படும். இளையராசாவோட பேச்சுல அவருக்கு எங்க இருந்து இசை வருதுன்னு விளக்கியிருக்கார். 🙂
இளையராசாவ நேர்ல பார்த்து கால தொட்டு வணங்குற கணம் எல்லாருக்கும் அமையாது. வாழ்த்துக்கள் மா! 🙂
Jul 08, 2014 @ 12:21:12
ரொம்ப நன்றி பாலா 🙂
Jul 08, 2014 @ 10:10:00
“என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவரை நம்ஸ்கரிக்கும் பேறு எனக்கு எப்படி கிடைத்தது என்று. நான் ராஜாவின் இசையை அனுபவிக்கும் அளவுக்குக் கூட ஞானம் இல்லாதவள். ஆனால் ஒருவர் இசை ஞானி என்று கண்டு கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவை இறைவன் கொடுத்திருக்கிறான். அதன் பலனாய் அவரை வணங்கி அவர் ஆசியை பெரும் பாக்கியம் பெற்றேன். ” அருமையான பதிவிடல்.
உங்களது மனம் நெகிழும் தருணத்தையும் – இளையராசா என்னும் மேதையை வாழ்த்தி வணங்கும் தங்களது மனமார்ந்த பாராட்டையும் வெளிப்படையாக பிரகடனப்படுத்தியுள்ளது எழுத்து. ‘பாராட்டப்பட வேண்டியவர்களை பாராட்டவேண்டும்’ எனும் கருத்துடன் உடன்பாடு உள்ளவனாக தங்களது பதிவிடலைப் பாராட்டுகிறேன். ‘வாழ்க! வளமுடன்!!’
Jul 08, 2014 @ 12:22:44
ரொம்ப நன்றி முகிலன் 🙂
Jul 08, 2014 @ 12:24:43
Appa neril partha niraivu. Very lucky. Love his music, simplicity and divinity. Great guruji.
Jul 08, 2014 @ 12:25:50
The above comment is from me.
Jul 08, 2014 @ 12:31:34
Male kurippittiruppathu un thozhi sukan
Jul 10, 2014 @ 05:29:43
thank you Sukanya 🙂
Jul 09, 2014 @ 03:47:21
இளைய ராஜாவை சந்தித்ததை பற்றி நீங்கள் எழுதியதை படித்தேன். உங்கள் பக்கத்தில் அவதானிப்பு என்ற வார்தை இருக்கிறது அது யாழ்ப்பாண தமிழர்கள் பயன் படுததும் சொல். நீங்கள் இலங்கை தமிழரா ?
Jul 10, 2014 @ 05:28:58
இல்லை 🙂
Jul 09, 2014 @ 11:36:41
இன்றுதான் உங்கள் பதிவைப் படித்தேன், நிகழ்ச்சியை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். வலைப்பதிவு என்னும் வாய்ப்பைப் பயன்படுத்தி இப்படியான நீங்கள் செல்லும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
Jul 10, 2014 @ 05:28:34
மிக்க நன்றி பிரபா 🙂
Jul 13, 2014 @ 11:08:03
Super…amma. Good naration. You are blessed.
Jul 23, 2014 @ 17:28:14
thank you 🙂
Jul 23, 2014 @ 16:53:53
Arumayana Nadai, nigazhchiyai neril partha unarvai undu panniyathu…Melum ithu ponra ungal pathivugal thudara vendum enru ….Vazhthukkal.
Jul 23, 2014 @ 17:01:18
Arumayana Nadai, nigazhchiyai neril partha unarvai undu panniyathu…Melum ithu ponra ungal pathivugal thudara vendum enru ….Vazhthukkal
Jul 23, 2014 @ 17:27:34
thank you so much 🙂