Debutant வேல்ராஜின் கதை/இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் ஒரு கமர்ஷியல் படம் வேலையில்லா பட்டதாரி. நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார் தனுஷ். ரஜினிக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டாலும் பெருமையாகத் தன் மருமகன் தனுஷை தன் கலையுலக வாரிசாக அவர் அறிவிக்கலாம். சூப்பர் டயலாக் டெலிவரி, துளிக் கூட பாசாங்கில்லாத பாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பு இவரை அடுத்த லெவலுக்குக் கொண்டு போகிறது. ஒரு தேர்ந்த performer க்குத் தேவையான நடனம், சண்டை இவ்விரண்டு முக்கிய திறமைகளிலும் நன்றாக ஜொலிக்கிறார்.
வேலையில்லா பட்டதாரியாக அதே சமயம் தன் தகுதிக்கு ஏற்ற வேலைக்காகக் காத்திருந்து ஏச்சுப் பேச்சுக்களுக்கு ஆளாகும் கேரக்டராக சிறப்பாக செய்திருக்கிறார். அவருக்கு ஜோடி அமலா பால். பழுது சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நன்றாக நடித்திருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் அம்மா ரோல். முன்பெல்லாம் பண்டரிபாய் தான் எல்லா ஹீரோக்களுக்கும் அம்மாவாக வருவார். தற்போதைய பண்டரிபாய் சரண்யா பொன்வண்ணன்! அவர் நடிப்பைப் பற்றி சொல்வதற்கென்ன இருக்கு. எல்லா இளம் ஹீரோக்களுக்கும் அம்மாவாக செமையாக செட்டாகிறார். தந்தையாக சமுத்திரக் கனி. அப்பாவனது கொஞ்சம் ஷாக்கிங் ப்ரமோஷன் தான். நன்றாக நடித்திருந்தாலும் ஒரு மாதிரி சோபிக்கவில்லை. ஆனால் usual அப்பாவாக வரும் நடிகர்களுக்குப் பதில் இவரை மாற்றிப் போட்டிருப்பது நன்று.
Retail வெற்றிக்கு மூன்று முக்கியக் காரணிகள், அவை location location location என்பார்கள். அதே மாதிரி ஒரு திரைப் படத்தின் வெற்றிக்கு மூன்று முக்கியக் காரணிகள் திரைக்கதை, திரைக்கதை, திரைக்கதை. இதை இயக்குநர், தயாரிப்பாளர், முக்கியமாக ஹீரோ கொஞ்சம் கவனத்தில் வைக்க வேண்டும். உழைப்புக்கேற்ற வெற்றி அதில் தான் அடங்கியுள்ளது. முதல் பாதி ரொம்ப நன்றாகப் போகிறது. வசனங்கள் நச்! பாத்திரங்களை மெருகேற்றி தவறுகள் இன்றி பயணிக்கிறது திரைக்கதை.
இந்தப் படத்தையா ட்விட்டரில் மொக்கை என்று விமர்சனம் செய்தார்கள் என்று கோபிக்கக் கூடத் தோன்றியது. இரண்டாவது பாதியில் யதார்த்தத்தில் இருந்து பாதை மாறி usual டிரேக்கில் படம் பயணிக்க ஆரம்பித்தபோது அடேய் இவ்வளவு உழைப்பையும் ஏண்டா வெஸ்ட் பண்றீங்க என்று கத்தத் தோன்றியது.
ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி வொரக் அவுட் ஆகிறதோ இல்லையோ தனுஷுக்கும் அனிருத்தும் excellent chemistry! பாடல்கள் எல்லாமே நன்றாக உள்ளன, அதற்கு ஏற்றார் போல தனுஷும் அருமையாக நடனம் ஆடுகிறார். பின்னணி இசையும் சூப்பர்!
கோரியக்ராபர், ஸ்டன்ட் மாஸ்டர் இருவருக்கும் ஒரு பூங்கொத்து! கடைசி பைட் சீனில் தான் அணிந்திருக்கும் கோட், ஷர்ட், டை, பெல்ட் அனைத்தையும் வெப்பனாகப் பயன்படுத்தி சண்டை போடுகிறார் தனுஷ் 🙂 மேலும் அவர் 6 packகுடன் ப்ருஸ் லீ மாதிரி ஒரு சீனில் கெத்து காட்டுகிறார்! சினிமெடோக்ராபி, எடிடிங் இரண்டும் சிறப்பாக இருக்கிறது.
இந்தப் படத்தில் நம் சோஷியல் மீடியாவும் க்ளைமேக்ஸில் ஒரு முக்கிய பாத்திரம். ‘மூன்று’ படத்தின் போது YouTubeல் why this கொலைவெறி பாடல் viral ஆகப் போனதில் அவருக்குத் தோன்றிய ஐடியாவாக இது இருந்திருக்கலாம்.
காமெடிக்காக வில்லன் அமிதேஷ், விவேக் படத்தின் பின் பாதியில் வருகிறார்கள்.
புகைப் பிடிப்பதால் வரும் தீமைகளை ஒரு கதாபாத்திரமே சொல்லியும் படம் முழுக்க தனுஷ் புகைப்பது ரொம்ப நெருடுகிறது.
ஒரு நல்ல மெஸ்சேஜ் சொல்ல வருகிறார்கள், தனுஷ் performance இவை இரண்டிற்காகவும் படத்தைப் பார்க்கலாம் 🙂
Jul 19, 2014 @ 15:10:57
பழுதில்லை பார்க்கலாம் என்கிறீர்கள் . ஓகே . பார்த்திட்டா போச்சு 🙂 நன்றி 🙂
Jul 21, 2014 @ 02:23:19
🙂
Jul 19, 2014 @ 16:16:11
Liked your writing style
Jul 21, 2014 @ 02:22:57
thanks 🙂
Jul 19, 2014 @ 17:33:04
பார்த்தாலே பிடிச்சுடும்றீங்க? 🙂
Jul 21, 2014 @ 02:21:56
அதே தான் 🙂
Jul 19, 2014 @ 23:27:36
வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக எழுதியுள்ளீர்கள் சில மாதங்களின் பின்புதான் தெரியவரும் வெற்றி தோல்வி…பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Jul 21, 2014 @ 02:22:16
நன்றி ரூபன் 🙂
Jul 20, 2014 @ 12:34:13
எழுத்து நடை மாறிவிட்டது. இதுவும் நன்றாகத் தான் இருக்கு. உங்களை நம்பி படம் பார்க்கப் போகிறேன். 🙂
Jul 21, 2014 @ 02:22:35
ரொம்ப நன்றி 🙂
Jul 21, 2014 @ 06:09:52
அந்த அம்மா அம்மா பாடலை பற்றி சொல்லவே இல்லை.
Jul 21, 2014 @ 08:11:01
yes, அம்மா பாட்டு உருக்கும்!
Jul 21, 2014 @ 14:51:59
தனுஷ் படம்லாம் தியேட்டர்ல போயி பாத்ததில்லை. நீங்க சொல்றத பாத்தா இந்த படம் போயி பாக்கலாம் போலையே 🙂
Sep 18, 2014 @ 01:34:02
😉
Aug 17, 2014 @ 03:14:24
உங்கள் விமர்சன நடை அருமை
சூப்பரு..!!!!
Sep 18, 2014 @ 01:33:35
மிக்க நன்றி 🙂
Aug 21, 2014 @ 00:29:38
படம் பார்த்தாச். நீங்க சொன்னதெல்லாம் சரியாச். முன்பாதி ஓகே. பின்பாதி சொதப்பல். நன்றி வாழ்க 🙂
Sep 18, 2014 @ 01:32:50
🙂
Sep 17, 2014 @ 11:19:27
நல்லவேள அனிருத்த கலாய்க்காம விட்டுட்டாங்க.. தலைவர்டா… அனிருத்டா.. ;)))))
Sep 18, 2014 @ 01:33:05
😉