ஜிகிர்தண்டா – திரை விமர்சனம்

jigirthanda

இந்த மாதிரி திரைக் கதையை சமீபத்தில் வந்தத் தமிழ் சினிமாவில் நான் பார்க்கவில்லை. மகாபாரதத்தில் வரும் திடுக் திருப்பங்களுக்கும் சாதுர்ய சதுரங்க நகர்த்தல்களுக்கும் ஈடாக இன்றைய மதுரை தாதாக் கதையை முற்றிலும் மாறுபட்டக் கோணத்தில் சுவாரசியமாகத் திரைக் கதையை அமைத்து இயக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவருக்குப் பாராட்டுக்கள். (ரொம்பப் புகழறேனோ?)

பாதையை  மாற்றி பயணிக்க வைக்கும் திரைக்கதை/இயக்குநர்கள் தமிழ் திரை உலகுக்கு ஒரொரு இடைவெளியில் வருவார்கள். பாரதி ராஜா, பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன், வசந்த், மணி ரத்னம், ஷங்கர், பாலா, வெற்றி மாறன் வரிசையில் சுப்பு கார்த்திக் பெயரை தைரியமாகப் பரிந்துரைக்கலாம். பீட்சாவிலேயே தன் முத்திரையைப் பதித்த இவர் இந்தப் படத்தில் அடுத்த லெவலுக்குச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ப நம் ரசனையும் மாறுகிறது. இன்றைய ரசனைக்கேற்பப் படத்தைத் தந்திருக்கிறார்

சித்தார்த் சூப்பராகப் பண்ணியிருக்கார். எப்பொழுதும் அழுத வண்ணம் இருக்கும் அவர் முகம் இந்தப் படத்தில் இந்தப் பாத்திரத்துக்கு ரொம்ப செட் ஆகியிருக்கிறது. படம் முழுக்க, முக்கியமாக முடிவில் அவர் நடிப்பு A1. அவருக்குப் பக்கத் துணையாக கருணாகரன் ரொம்ப நன்றாக நடித்துள்ளார்.

தனி காமெடி track இல்லை. ஆனால் பல கதாப் பாத்திரங்கள் பல சிச்சுவேஷன்களில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள். படமே ரொம்ப லைட்! வெட்டுக் குத்து எரிப்பு இவற்றை எல்லாமே நம் மனம் வெகு எளிதாக ஜீரணித்துக் கொள்ளும் அளவு தமிழ் சினிமாவில் வன்முறைக் காட்சிகள் பல்கிப் பெருகி விட்டதால் எந்த சீனுமே gory ஆக தெரிவது இல்லை. நம் மாறிய மன நிலைமையைக் கண்டு அஞ்சுவதா, வெதும்புவதா அல்லது இயல்பு இது தான் என்று பட்டுக் கொள்ளாமல் போவதா என்று தெரியவில்லை.

லச்சுக்குக் குட்டி ரோல் தான். உடல் ஸ்லிம்மாக இருக்கிறார். இதையே மெயின்டெய்ன் பண்ணால் நன்றாக இருக்கும். அம்பிகாவின் பாத்திரம் அவன் இவனில் வந்தப் பாத்திரத்தை நினைவூட்டுகிறது.

படத்தின் வில்லன் ப்ளஸ் பலமான கதாப்பாத்திரம் பாபி சிம்ஹா. வில்லன் பாத்திரம் செம வில்லத்தனமாக இருந்தால் தான் ஹீரோ பாத்திரம் எடுபடும்! ஆரம்பம் முதலே மிரட்டலாக நடித்துள்ளார் சிம்ஹா. சித்தார்த்தை விட அவருக்கே challenging role. நடிப்புச் சொல்லித் தரும் ஆசிரியராக வரும் சோமசுந்தரம் – கலக்கல் நடிப்பு 🙂

விவேக் ஹர்ஷனின் editing நன்றாக இருந்தாலும் சில இடங்களில் கத்திரிப் போட்டிருக்கலாம். அதை தடுத்தது இயக்குநரா என்று தெரியவில்லை. 170 நிமிடம் கொஞ்சம் அதிகமே. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ரொம்ப நன்றாக உள்ளது. பாடல்களில் சில நன்று ரகம், சில ஒகே ரகம்.

சினிமேடோக்ராபி செய்தவர் பெயர் வித்தியாசமாக இருக்கிறது Gavemic Ary. தொழில் சுத்தம்! Excellent! ரொம்ப நெருக்கமானத் தெருக்களைக் கொண்ட மதுரையில் கூட்டத்தின் நடுவேயும் இரண்டு வீடுகளில் சின்ன அறைகளிலே நடக்கும் காட்சிகளை ரொம்ப அழகாகவும் தெளிவாகவும் படம் பிடித்துக் காட்டயிருக்கார்.  அவருக்குப் படத்தின் வெற்றியில் பெரும் பங்கு உள்ளது.

ஜிகிர்தண்டா பெயருக்கேற்ப மதுரை சுவையோடு உள்ளது. என்ன, கொஞ்சம் rawவாக இருக்கு. Refine பண்ணியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும்.

8 Comments (+add yours?)

 1. Gani Mohamed
  Aug 03, 2014 @ 15:57:12

  Excellent…Madam. I have shared this in Tweeter with your kind permission. Thanks & Regards.

  Reply

 2. Vigneswari Suresh (@VignaSuresh)
  Aug 03, 2014 @ 17:09:06

  நீங்க சொன்னதும் தான், அட ஆமாம், இந்த சித்தார்த்துக்கு ’எப்ப வேண்ணாலும் அழுதுடுவேன் முகம்’ங்கறது எவ்வளவு சரின்னு தோணுது. 🙂 நல்ல அப்சர்வேஷன்

  எப்பவும் போல ஃபீல் குட் விமர்சனம்

  Reply

 3. kanapraba
  Aug 04, 2014 @ 10:01:12

  நச் விமர்சனம் 😉

  Reply

 4. உமா க்ரிஷ் (@umakrishh)
  Aug 16, 2014 @ 15:16:54

  நல்ல விமர்சனம் இப்பத் தான் படிக்கிறேன்..எனக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்த குரு நடிப்பு ரொம்பப் பிடிச்சிருந்தது..போலவே சித்தார்த்.. இசை குறித்து உங்க பார்வை தான் எனவும்..வர வர தேர்ந்த விமர்சகர் ஆகிட்டே வறீங்க ..நல்ல பகுப்பாய்வு:)

  Reply

 5. UKG (@chinnapiyan)
  Aug 21, 2014 @ 00:34:59

  படம் பார்த்தாச். நீங்கள் சொன்னது சரிதான். உங்களை மறுத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. சமீபத்தில் வந்த படங்களில் குறிப்புட்டு சொல்லும் படம் இது.

  நான் மிகவும் ரசித்த திருஷ்யம், சதுரங்க வேட்டை யை பற்றி நீங்கள் விமர்சனம் செய்தால் மிகவும் மகிழ்வேன். நன்றி வாழ்க 🙂

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: