Rock paper scissors என்று ஒரு குழந்தைகள் ஆட்டம் உண்டு. (ஷாட் பூட் த்ரீ மாதிரி ஒரு விளையாட்டு) அதன்படி சிசர்ஸ், பேப்பரை பீட் பண்ணும். பேப்பர், ராக்கை பீட் பண்ணும். ராக், சிசர்சை பீட் பண்ணும். சில குழந்தைகள் புதுசாக fire ஐயும் சேர்த்து ஆடும். அதாவது இவை யாவற்றையும் நெருப்பு பீட் பண்ணி விடும்.
அஞ்சான் படத்தில் இருந்து தெரிந்து கொள்வது யாதெனில் கைச் சண்டையை கத்தி பீட் பண்ணும், கத்தியை துப்பாக்கி பீட் பண்ணும், துப்பாக்கியை துரோகம் பீட் பண்ணும், இவை எல்லாவற்றையும் சூர்யா பீட் பண்ணுவார்.
எல்லா படங்களும் ஒரு மெஸ்சேஜ் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள், மாரல் சைன்ஸ் வகுப்பு எடுக்க வரவில்லை என்று தெரியும். ஆனால் நம் நேரத்தை விரயமாக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து சூர்யா தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால், லிங்குசாமி நல்ல படத்தை இயக்கினால் அவர்கள் திரும்ப என் நற்புத்தகத்தில் இடம் பெறுவார்கள். அது வரை இனி மறந்தும் இவர்கள் படம் பார்க்க மாட்டேன்.
படத்தில் ஸ்டன்ட மாஸ்டர் செய்திருக்கும் சாகசம் அதி அற்புதம். ஸ்டன்ட் சில்வா சும்மா பூந்து விளையாடியிருக்கார். என்ன பிளானிங் இருந்திருக்கணும், ஒவ்வொரு அடி உதையையும் கோரியோக்ராப் பண்ண! சூர்யாவும் ரொம்ப நன்றாக சண்டை போடுகிறார்.
படம் முழுக்க ஒரு சண்டை அதன் பிறகு நடனம் என்று மாற்றி மாற்றி வருவதால் இந்தப் படத்தில் நடன இயக்குனருக்கும் ஸ்டன்ட மாஸ்டருக்கும் தான் வேலை. நடன அசைவுகளும் ரொம்ப நன்றாக இருந்தன. சூர்யா ஒரு தேர்ந்த நடனமாடுபவராக மாறியிருக்கிறார். விஜய்க்கே tough கொடுப்பார் போல!
அடுத்த பலம் சந்தோஷ் சிவனின் பிரமாதமான ஒளிப்பதிவு. இந்தப் படத்துக்கு இப்படி உயிரைக் கொடுத்து செய்திருக்கும் அவர் விசுவாசத்திற்கு ஒரு பூங்கொத்து. தளபதியை ஒளிப்பதிவு செய்த அதே கரங்கள்/கண்கள் இப்படத்தின் ஒளிப்பதிவின் போது என்ன பாடுபட்டன என்று அவரை யாராவது சந்தித்தால் தவறாமல் கேட்கவும். Editing by Anthony, நல்ல fast paceக்கு சிறப்பான editing.
நான் என்னடா செஞ்சேன் உன்ன மாதிரி ஒரு நண்பன் கிடைக்கறதுக்கு, நட்புன்னா என்னன்னு தெரியுமாடா, என் தளபதியை பாருங்கடா போன்ற வசனங்கள் நம் மனத்தில் பசுமரத்தாணி போல பதிந்து விட்ட வசனங்கள். தாதா உலகம் என்றாலும் அதில் உள்ள வலி, வேதனை, உயிர் தியாகம், ஏழைகளுக்கு நீதி கேட்டுப் போகுமிடம் இன்றி துன்பப்படுவதைப் பார்த்து அவர்களுக்கு உதவுவதற்காக உருவாகும் தாதாக்கள் என்று தளபதி, நாயகன் போன்ற படங்களில் கதை அம்சத்தோடு பார்த்துவிட்டு, ஒரு பின் கதையும் இல்லாமல் நன்பேண்டா என்று சூர்யா வெறும் வாய் வார்த்தையினால் சொன்னால் அதன் தாக்கம் பூஜ்யம்.
காதலுக்கும் ஒரு கதையில்லை. அது இப்போ எல்லா படங்களிலும் அப்படித் தான் என்று விட்டு விட வேண்டியது தான். ஏனென்றால் காதலி கதைக்காகப் படத்தில் இல்லையே சதைக்காகத் தானே! அதிலும் சமந்தா இந்தப் படத்தில் சமத்தா எல்லாத்தையும் துறந்து மோன நிலையில் இருப்பது ஆண் ரசிகர்களுக்கு விருந்து. சமந்தா ஒரே ஒரு சீனில் பிகினியில் வருகிறார், very pretty! ஏக் தோ தீன் பாடலில் ஒரே ஒரு பட்டன் போட்ட உடையில் வருகிறார். அந்த ஒரு பட்டன் அதே பொசிஷனில் இருப்பதற்கு அந்த காஸ்டியும் டிசைனருக்கு ஒரு விருது தர வேண்டும்.
எம்ஜிஆர் காலத்துப் படங்களில் இரு வேடத்தில் வரும்போது மரு தான் வித்தியாசத்தைக் காட்டும். இப்போ டெக்னாலஜி ரொம்ப முன்னேறிவிட்டதால் ஊன்றுகோல் வித்தியாசத்தைக் காட்டுகிறது. பேஷ் பேஷ் லிங்குசாமி! எல்லா பாம்பே தாதாக்களும் சரளமாக தமிழ் பேசுகிறார்கள். தாதா வாழ்க்கை பற்றி என்ன சொல்ல வருகிறார் லிங்குசாமி என்றே தெரியவில்லை. இதில் சூர்யாவிற்கு பன்ச் டயலாக் வேற! “எதிரிக்கும் துரோகி இருக்கக் கூடாதுடா” கொடுமைடா சாமி!
பாட்டுக்கள் ரொம்ப ரொம்ப சுமார் ரகம் தான். கொடுத்த ஹைப்புக்கு பின்னணி இசையும் flat. யுவன் ஷங்கர் ராஜா எழுந்திருங்கள்!
இன்று படத்துக்கு கமலா திரை அரங்கில் ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்ததால் ட்விட்டரில் அறிவித்தேன். அதற்கு ஒருவர் நீங்கள் பாதி கமலா தியேட்டரை என் பேரில் எழுதி வைத்தாலும் டிக்கெட் வேண்டாம் என்றார். அறிவாளி! ரசிகர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை சூர்யாவும் லிங்குசாமியும் உணரவேண்டும்.
Aug 16, 2014 @ 15:04:31
சூர்யாவோட மாஸ் நல்ல கதைதான். அதுதான் அவருக்கான கூட்டத்தைக் கூட்டுது. அவரும் விஜய் அஜித் மாதிரி கதையில்லாத மாஸ் படத்துல ரொம்ப நடிச்சா இப்படித்தான் ஆகும்.
Aug 16, 2014 @ 15:55:38
thanks ஜிரா :-)))
Aug 16, 2014 @ 15:16:34
செம சூடு
Aug 16, 2014 @ 15:56:13
இக்கட சூடு 🙂
Aug 16, 2014 @ 15:25:14
ஹா ஹா ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கொடுகொடுன்னு விட்டு விளாசி இருக்கீங்க 🙂 சூர்யாவும் ஜிரா சொல்ற மாதிரி மாஸ் ஹீரோ ஆக இந்த முயற்சி எடுத்திருக்கிறார் போலும்..அஜித் விஜய் மாஸ் ஹீரோ ஆனதையே தாங்க முடியல..ஒரே மாதிரி கதாபாத்திரங்களாகச் செய்து போரடிக்கிறாங்க..இதுல இவர் வேற..முதல் முயற்சியே தோல்வியுற்றது நமக்கு ஆறுதல்..பழைய சூர்யாவாக இனி நல்ல கதை அம்சம் உள்ள பக்கம் கவனம் திசை திருப்புவாராக ஆமென் 🙂 btw வரிக்கு வரி உங்க எழுத்து நடை ரசிச்சேன்:)
Aug 16, 2014 @ 15:57:12
thank you உமா 🙂
Aug 16, 2014 @ 15:40:53
“பளார்….பளார்….பளார்…பளார்…பளார்”- ரசிகர்கள் நாங்க எல்லாம் கரையேரிட்டோம்…அப்போ நீங்கனு சூர்யா, சமந்தா,லிங்குசாமி கோஷ்டிகளிடம் கேட்பது போன்ற சுளீர் விமர்சனம்!
Aug 16, 2014 @ 15:57:54
நன்றி ரிஷி 🙂
Aug 16, 2014 @ 15:49:43
உங்கள் விமர்சனத்தை விட தாங்கள் ஆரம்பித்த குழந்தைகள் விளையாட்டுடே கவர்ந்தது காரணம் இன்றுதான் என் மகனும், மகளும் எனக்கு இந்த விளையாட்டை அறிமுக படுத்தினர்.
நான் கதை,திரைக்கதை, வசனம் பார்க்க முடிவு செய்துவிட்டேன்
Aug 16, 2014 @ 15:58:19
நன்றி தேவா 🙂
Aug 16, 2014 @ 16:32:45
அழகான விமர்சனம் வலிகாமல் நாசுகாக பலருக்கு அடி நல்ல விமர்சனம்.
அப்படியே அடியேனின் விமர்சனத்தை பார்க்கவும்.
wordpress ல்
Aug 17, 2014 @ 08:07:57
நன்றி 🙂
Aug 16, 2014 @ 16:32:59
#அஞ்சான் விமர்சனம் ஆந்தையின் பார்வையில் 2.25/5
#Read
#RT
#comments
http://t.co/uCIw00DGLQ
Aug 16, 2014 @ 19:47:09
ஆனந்த விகடன், ஆந்தை விகடன், குங்குமம், கும் கும் கும், என்று சகல பதிப்பக விமர்சகர்களும் கவனிக்க:
ரவுண்டு கட்டி எல்லாரையும் விமர்சனத்தில் பீட் பண்ண Rock, Paper, Scissors என்று Rock செய்ய வந்துவிட்டார் @AMAS32.
Sense of humor, நையாண்டி என்று படு சீரியஸாக அவர் segue ஆகும் இந்த ஒரு தருணம் போதுமே: ”ஆனால் நம் நேரத்தை விரயமாக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
பின்னி படல் எடுக்கிறார் ”அம்மா.” அய்யோ, நான் “அமாஸ்”ஐ சொன்னேன் அப்பு.
கலக்குங்க…. கலங்கி படிக்கத் தான் நாங்க இருக்கோமே :)))))))
Great review, ngma.
நடிகை சிவரஞ்சனி, ரூபிணி, மாதவினு ஒரு படையையே cameo rolesல இறக்கினாலும் (???) படம் பப்படம் தான் போலிருக்கு.
என்ன சொல்றது! விதி ”வலி”யது ;))
Aug 17, 2014 @ 03:48:29
ஹா ஹா ஹா Thanks Rex, you made my day 🙂
Aug 17, 2014 @ 00:30:13
வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது படம் பார்த்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Aug 17, 2014 @ 03:49:54
நன்றி 🙂
Aug 17, 2014 @ 02:50:04
SUPER REVIEW
Aug 17, 2014 @ 03:49:28
நன்றி 🙂
Aug 17, 2014 @ 03:41:41
ஸ்டன்ட் – சாகசம்/அற்புதம்.
நடனம் – நன்று.
ஒளிப்பதிவு – பலம்/பூங்கொத்து தரம்.
எடிட்டிங் – சிறப்பு.
காஸ்ட்யூம் – விருதுத் தரம்.
சூர்யா – டான்ஸில் விஜய்க்கே டஃப்,
சண்டைக் காட்சிகளில் டாப்.
சமந்தா – சமத்து/பிரெட்டி.
…
அப்புறம் என்ன ஆச்சு?!
திரைக்கதை – திக்கிக்கிச்சு!
#தட் “ஆபரேஷன் சக்ஸஸ்.. பட், பேஷண்ட் அவுட்” மொமண்ட்!
N.B: This comment is inspired by @amas32’s review.. I’m not seen this film Yet.
Aug 17, 2014 @ 03:49:08
செம!! நன்றி 🙂
Aug 17, 2014 @ 04:15:47
Nice Review
Aug 17, 2014 @ 08:13:17
thanks 🙂
Aug 17, 2014 @ 06:01:11
விஜய்க்கே tough கொடுப்பார் போல ella varaiyum vida ithiu than bes t comedy ponga madam sunday la siripu muttikittu
Aug 17, 2014 @ 08:10:46
:-)) விஜய்க்கு tough கொடுக்க முடியுமா? சும்மா ஒரு பேச்சுக்கு :-)) ஆனால் நடனத்தில் நிச்சயமாக முன்னேறியிருக்கார் 🙂
Aug 17, 2014 @ 06:32:40
Thumbs for the review! (No, I did not go the movie, escape! 🙂
Aug 17, 2014 @ 08:12:29
:-))
Aug 17, 2014 @ 06:53:57
அழகாக நிதானமாக உங்கள் எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன! தியேட்டரைவிட்டு வெளியேறும் கூட்டத்தின் வேகம் சொல்லும் படத்தின் தன்மையை!!
Aug 17, 2014 @ 08:12:47
ha ha ha
Aug 17, 2014 @ 08:37:51
விமரிசனம் அருமை
Aug 18, 2014 @ 04:11:28
நன்றி :-))
Aug 17, 2014 @ 13:19:59
சூப்பர்மா 🙂
Aug 18, 2014 @ 04:10:31
நன்றி 🙂
Aug 18, 2014 @ 03:42:33
படத்தின் தாக்கம் உங்கள் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. ஆரம்பமேகுழந்தைகளின் விளையாட்டை வைத்து என்னமா சிலம்பமாடியுள்ளீர்கள்.
நகைச்சுவையுடன் எள்ளி நகையாடியுள்ளீர்கள்.
ஒரு வாழை பழத்தில் எத்தனை ஊசிகள் :))
“ஆனால் நம் நேரத்தை விரயமாக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை நான் தாழ்மையுடன்…” அபாரம் 🙂
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அந்த எண்ணத்தை நீங்கள் தீர்த்து வைத்துவிட்டீர்கள். நன்றி வாழ்க
Aug 18, 2014 @ 04:11:02
நன்றி சின்னப்பையன் 🙂