அமர காவியம் – திரை விமர்சனம்

Amara-Kaaviyam-Movie-Wallpapers

தம்பி உடையான் படைக்கு அஞ்சான், அண்ணன் உடையான் திரைக்கு வர அஞ்சான்! எல்லாப் புகழும் ஆர்யாவுக்கே. நல்ல தயாரிப்பில் தம்பியை மிளிர வைத்துவிட்டார். ஜீவா ஷங்கரின் பங்களிப்பையும் சேர்த்தால் சத்யாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது மிகப் பெரிய யோகமே! அனால் அதைப் பிரமாதமாகப் பயன் படுத்திக் கொண்டது சத்யாவின் திறமைக்கு ஒரு சான்று.

சத்யா முன்பு படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படம் தான் அவரின் உண்மையான விசிடிங் கார்ட். நாயகி மியா ஜார்ஜும் சத்யாவும் கார்த்திகாவாகவும் ஜீவாவாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். ரோமியோ ஜூலியட் மேற்கத்தியப் பண்பாட்டுக் கதை, லைலா மஜ்னுவும், அம்பிகாபதிபதி அமராவதியும் என்றோ நடந்த கதை. ஆனால் அந்தக் காதல்களின் அழுத்தத்தையும் ஆழத்தையும் இந்தப் படத்தில் கொண்டுவந்திருப்பாது ஜீவா ஷங்கரின் வெற்றி.

இவ்வளவு இயல்பான பாத்திரப் படைப்புகளை சமீபத்தில் வந்தத் திரைப்படங்களில் நான் பார்க்கவில்லை. அப்பா, அம்மா, அக்கா, நண்பன், மருத்துவர், போலீஸ் என ஒவ்வொரு பாத்திரம்மும் நூறு சதவிகிதம் யதார்த்த வாழ்க்கையில் எப்படி இருப்பார்களோ அப்படியே படத்தில் இருக்கிறார்கள். இது உண்மை கதையா என்று தெரியாது, ஆனாலும் பல உண்மைக் கதைகளை சொதப்பியத் திரைப்படங்களை நாம் பார்த்திருப்பதால் இந்தப் படம் தெளிவாக எடுக்கப்பட்டிருப்பது உண்மையில் ஒரு welcome change.

இயக்குநர் ஜீவாவின் assistant ஷங்கர், ஜீவாவின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டதும் அல்லாமல் தன் கதையின் பாத்திரத்துக்கும் அந்தப் பெயரையே சூட்டி தன் குருவுக்கு மரியாதை செய்துள்ளார். அவரே ஒளிப்பதிவாளரும்! எண்பதுகளின் ஊட்டியை கண் முன்னே வண்ண ஓவியமாக நிறுத்துகிறார். கதை, திரைக் கதை, வசனம், ஒளிப்பதிவு அனைத்தும் ஒருவரே. ஒருப் பொறுப்பில் கூட சோடை போகவில்லை என்பது பாராட்டுக்குரிய விஷயம். Editing செய்திருப்பவர் சூர்யா. Slick!

படத்துக்கு இசை என்று ஜிப்ரான் பெயர் மட்டும் வருகிறது, கூடவே இளையராஜா என்றும் இருக்கணும். எண்பதுகளில் நடக்கிற கதை என்பதை ஆங்காங்கே ஒரு வரி ராஜாப் பாடலை ஒலிக்க வைத்து உணர்த்தி விடும் இயக்குநர், இசைஞானியின் பெயரையும் creditsல் சேர்த்திருக்க வேண்டும்.

சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மாறும் போது ஒவ்வொருவரும் மாறும் இயல்பை அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்/கதாசிரியர் ஜீவா ஷங்கர். வசனங்களும் கச்சிதம். சிறந்த திரைக் கதையே திரைப் படத்தின் வெற்றிக்கு வழி என்று இந்தப் படம் நிருபித்து உள்ளது.

கொஞ்சம் கூட மெலோட்ராமா இல்லாமல், படம் முடிந்ததும் கனத்த இதயத்தோடு வெளியே வராமல் அதே சமயம் காதலர்களின் உணர்ச்சிகளை பார்ப்பவர்கள் முழுவதும் உள்வாங்கி கொள்ள வைத்து வெளியே அனுப்புகிறார்கள் Team Amara Kaviyam!

amarakaviyam

24 Comments (+add yours?)

  1. UKG (@chinnapiyan)
    Sep 05, 2014 @ 13:29:01

    நன்றி. மெல்ல மெல்ல இப்பல்லாம் படங்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டேன் உங்களருளால் .

    நன்றி. படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லியுள்ளீர்கள். தங்களின் விமர்சனம் எழுதும் பாங்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால தவற விட மாட்டேன். படம் பார்த்துட்டு மீண்டும் கருத்து சொல்றேன். வாழ்க வளர்க 🙂

    Reply

  2. தேவா..
    Sep 05, 2014 @ 15:04:04

    இந்த பெயரில் படம் வந்திருப்பது இந்த விமர்சனத்தை பார்க்கும் போதுதான் தெரிந்தது.

    Reply

    • amas32
      Sep 05, 2014 @ 16:02:41

      ha ha ha டெல்லி வாழ் தமிழர் நீங்க 🙂

      Reply

      • தேவா..
        Sep 05, 2014 @ 16:18:36

        நல்ல படமெல்லாம் வரமாட்டேங்குது..எங்க எல்லை ஜில்லா, வீரம், அஞ்சான்னு முடிஞ்சுது. 😦

  3. GiRa ஜிரா
    Sep 05, 2014 @ 15:27:26

    அம்மா படம் நல்லாருக்குன்னு சொல்லியிருக்கிங்க. Damp Squibனு ஒரு விமர்சனம் சொல்லுது.

    ரெண்டையும் வெச்சுப் பாக்குறப்போ படம் feel good movie போல. வெற்றி பெறுவது கடினம்னு தோணுது. மக்கள் தீர்ப்பு என்னன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.

    Reply

  4. வெகுளி (@Veguli)
    Sep 05, 2014 @ 15:31:49

    From what you said, it looks like kind of malayalam movie.

    Reply

  5. vasanthigopalan
    Sep 05, 2014 @ 16:16:59

    இங்க தமிழ் படமெல்லாம் வராது.இருந்தாலும் உங்க விமர்சனத்தால் அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுப்பேன்.நன்றி.பேசாம முழுநேர விமர்சகரா வார இதழ்களுக்கு எழுதலாம்.

    Reply

  6. uma chelvan
    Sep 05, 2014 @ 19:05:49

    இந்த பெயரில் படம் வந்திருப்பது இந்த விமர்சனத்தை பார்க்கும் போதுதான் தெரிந்தது……..I concurred with Mr. Deva. :))))))

    Reply

  7. Trackback: அமர காவியம் - திரை விமர்சனம் | Tinseltown Times
  8. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    Sep 06, 2014 @ 00:05:28

    வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Reply

  9. ரிஷி(@i_vr)
    Sep 06, 2014 @ 04:11:01

    //படத்துக்கு இசை என்று ஜிப்ரான் பெயர் மட்டும் வருகிறது, கூடவே இளையராஜா என்றும் இருக்கணும். எண்பதுகளில் நடக்கிற கதை என்பதை ஆங்காங்கே ஒரு வரி ராஜாப் பாடலை ஒலிக்க வைத்து உணர்த்தி விடும் இயக்குநர், இசைஞானியின் பெயரையும் creditsல் சேர்த்திருக்க வேண்டும்//

    பார்… நன்றாக பார்…முழுதாக மஃபியாவாக மாறியிருக்கும் அம்மாவை பார்!! 🙂

    Reply

  10. Lekha (@yalisaisl)
    Sep 07, 2014 @ 10:55:27

    நல்லா எழுதியிருக்கிங்க அம்மா..அமரகாவியம் குறித்து வாசிக்கும் முதல் விமர்சனம்..Very Positive

    Reply

  11. amas32
    Sep 08, 2014 @ 03:31:20

    🙂

    Reply

  12. ஆனந்தன்
    Sep 10, 2014 @ 15:47:36

    உங்கள் விமர்சனத்தை வாசித்துப் அமரகாவியம் பார்த்தேன். நீங்கள் சொன்னதுபோல் மிக நல்ல படம். சத்யாவின் நடிப்பு அபாரம்.
    கதையில் சில கேள்விகள் எழுந்தன; எழும்போதே அவற்றிற்குப் பதில் தந்துகொண்டிருந்தார் டைரக்டர்!

    ஆனால், ஜிகிர்தண்டாவும் பார்த்தேன். அவ்வளவு விசேஷமாக இருக்கவில்லை.
    உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி!
    உங்களைத் தினம் ஒரு பாவில் சந்தித்துள்ளேன்!!

    Reply

    • amas32
      Sep 10, 2014 @ 15:51:50

      நன்றி 🙂 திரும்ப சந்திப்பதில் மகிழ்ச்சி. என் ப்ளாகையும் பாலோ பண்ணுங்கள் 🙂

      Reply

Leave a reply to ஆனந்தன் Cancel reply