நாங்க 1993ல் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது ரொம்ப மலைப்பா இருந்தது. புறநகர் பகுதியில் என் கணவர் திருமணத்துக்கு முன்பே ஒரு முக்கால் கிரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டிருந்தார். அதை வித்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்கு முன் பணமா கட்டி ஒரு flat வாங்கியிருக்கலாம். ஆனால் ஏனோ தனி வீடு ஆசையில் ஆரம்பித்துவிட்டோம். நான் பள்ளி ஆசிரியை ஆனதால் கோடை விடுமுறையில் மனை பூஜை போட்டு வீடு கட்ட ஆரம்பித்தோம். லீவில் தினம் சைட்டிலேயே பழியாய் கிடப்பேன்.
என் வீட்டில் இருந்து கிளம்பி இரண்டு பஸ் பிடித்துக் கொஞ்ச தூரம் நடந்த பின்னே தான் சைட்டை அடைய முடியும். வேர்க்க விறுவிறுக்க ஒரு நாள் நான் வந்த போது சித்தாட்கள் எல்லாரும் ஒரு மரத்தடியில் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், பெரியாட்கள் எல்லாரும் மணல் மேட்டில் உட்கார்ந்து பீடி வலித்துக் கொண்டிருந்தனர். மேஸ்திரியைக் காணோம், வரேன் என்று சொல்லியிருந்த இஞ்சிநியரையும் காணோம். ‘ஏன் வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கீங்க’ என்றேன். ‘மேஸ்திரி வந்தாரு மா, இஞ்சினியரு வந்து எதோ சொல்லணுமாம், அதுக்கப்புறம் தான் வேலை ஆரம்பிக்கணும்னு சொன்னாரு’ என்றான் ஒருவன்.
கொஞ்ச தூரத்தில் ஒரு பொட்டிக் கடை. அங்கே போன் இருந்தால் இஞ்சினியருக்கு ஒரு போன் போடலாம் என்று போனேன். அந்தக் கடையில் இல்லை. அந்தக் கடைக்காரர் எதிர் பக்கம் இருந்த ஒரு வீட்டைக் காண்பித்து, ‘அங்கே போய் கேளுங்கம்மா. அவங்க வீட்டில போன் உண்டு.’ என்றார்.
மிக உயரமான காம்பவுண்ட் சுவர். சுவரின் உயரமே பத்தடி இருக்கும். சுவரின் மேலே உடைந்த கண்ணாடி துண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. ரெண்டு கேட்டு. காருக்கு ஒண்ணு, மனிதர்களுக்கு ஒண்ணு. நாங்க கட்டும் வீட்டுக்கு வேலி கூட போடணுமான்னு யோசித்துக் கொண்டிருந்தோம், பட்ஜெட் பிரச்சினை. இவங்க காம்பவுண்ட் சுவரைப் பார்த்து இதைக் கட்டவே எங்கள் வீட்டின் பாதி பட்ஜெட் ஆகியிருக்கும்னு தோன்றியது. ரெண்டு கிரவுண்டு நிலத்தில் வீடு கட்டியிருந்தார்கள். ஆனால் வீட்டை வெளியில் இருந்து பார்க்க முடியவில்லை. மாடியில்லாமல் ஒரு தளம் தான். வாச கேட் உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. காலிங் பெல் எதுவும் இல்லை.
கேட்டை தட்டி ஆண்டி ஆண்டி என்றேன். என் குரல் எனக்கேக் கேட்கவில்லை. நல்ல காலம் அந்த சமயம் அயர்ன் பெண் துணி கொடுக்க அந்த வீட்டுக்கு வந்தாள். கேட்டை வேகமாகத் தட்டி ‘அம்மா அயர்ன் மா’ என்று சத்தமாகக் கத்தினாள். கேட்டின் சிறு இடுக்கு வழியாக நல்ல தாட்டியாக சிவந்த நிறத்தில் ஒரு ஐம்பது வயது மதிக்கத் தக்க அம்மா ஒருவர் வாசல் கதவைத் திறந்து நிதானமாக நடந்து கேட்டருகே வருவது தெரிந்தது. வந்து, பூட்டினை சாவிக் கொண்டு திறந்தார். அயர்ன் பெண் வேகமாக உள்ளே சென்றாள். என்னைப் பார்த்த அந்த அம்மணி கண்ணாலேயே என்ன வேண்டும் என்று வினவினார். ‘நாங்க அங்க வீடு கட்டுக்கிறோம்’ சொல்லிக் கொண்டே எதிர் பக்கம் கையைக் காண்பித்தேன். அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை. நான் தொடர்ந்து, ‘இன்ஜினியர் வரலை, வேலை நிக்குது. உங்க போன் use பண்ணிக்கலாமா? அந்தப் பொட்டிக் கடைல உங்க கிட்ட போன் இருக்குன்னு சொன்னாங்க.’ என்றேன். அதற்குள் அயர்ன் பெண் ‘அம்மா அயர்ன் காசு நுப்பத்தஞ்சி ரூபாம்மா என்றாள்.’ இந்தம்மா அவளைப் பார்த்து ‘இவங்க இங்க வீடு காட்டறாங்களா?’ என்றார். ‘ஆமாம்மா அந்த எதிர் சைட்ல கட்றாங்க, தினம் வருவாங்க’ என்றாள். மறுபடியும் கண்ணாலேயே உள்ளே வா என்றழைத்து அவர் முதலில் உள்ளே சென்றார். நாங்கள் கேட்டை தட்டியதில் இருந்து அவர்கள் வீட்டில் விடாமல் ஒரு நாய் கத்திக் கொண்டிருந்தது. நல்ல வேளை அதை சைடில் ஒரு மரத்தில் கட்டியிருந்தார்கள்.
உள்ளே போய் ஹாலில் இருந்த போனில் இஞ்சிநியரைக் கூப்பிட்டேன். போனை எடுத்த அவர் மனைவி, ‘உங்க சைட்டுக்கு தாம்மா வந்துக்கிட்டு இருக்கார். கிளம்பும்போது யாரோ வந்துட்டாங்க,’ என்று சால்ஜாப்பு சொன்னார். போனை வைத்து விட்டு பர்சில் இருந்து ஒரு ரூபாய் காயினை தேடி எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டார். ‘ரொம்ப தாகமா இருக்கு, கொஞ்சம் குடிக்கத் தண்ணிக் கொடுக்கறீங்களா?’ என்று கேட்டேன். உள்ளே திரும்பி, ‘விமலா தண்ணி கொண்டு வா’ என்றார். குடித்து விட்டு, நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அந்தம்மா நான் இருந்தவரைக்கும் ஒரு தடவை கூட புன்னகைக்கவில்லை.
வீடு கட்டி கிரகப் பிரவேசம் வைக்கும் போது அக்கம் பக்கத்து (தூர தூர இருந்தாலும்) வீடுகளில் இருப்பவர்களையும் கூப்பிட வேண்டும் என்று ஆசை. முக்கியமா அந்த பெரிய வீட்டம்மாவை பிரென்ட் பிடிக்க வேணும் என்று ஏனோ ஆசை. திரும்ப அதே பட்ஜெட் ப்ராப்ளம் தான். உறவினர்களிலேயே எல்லாரையும் கூப்பிட முடியாமல் ரொம்ப நெருங்கிய சொந்தத்தை மட்டும் கூப்பிட்டு சுருக்கமாக முடித்து விட்டோம்.
வீட்டுக்குக் குடி வந்த பிறகு வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் பஸ்ஸை பிடிக்க அந்தப் பெரிய வீட்டைத் தாண்டி தான் போக வேண்டும். வீட்டைப் பார்த்துக் கொண்டே போவேன். எப்பவும் மூடியே தான் இருக்கும். பக்கத்தில் ஒரு கோவில். அதில் ஆடி வெள்ளி, தை வெள்ளிகளில் விளக்குப் பூஜை நடைபெறும். அந்த ஏரியா பெண்கள் பலரும் கலந்து கொள்வார்கள். அறிமுகமில்லாதவர்களை அறிமுகப் படுத்திக் கொள்ள நல்ல ஒரு சந்தர்ப்பம். அதற்கும் இந்தம்மா வரமாட்டாங்க.
நானும் அப்படி இப்படி விசாரித்ததில் தெரிந்து கொண்டது என்னன்னா, அவங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு தான். அதையும் ஏதோ வெளியூரில் கட்டிக் கொடுத்திருக்காங்க. வருஷத்துக்கு ஒரு முறை அந்தப் பெண் வந்து போகுமாம். இவங்க கணவரோடு காரில் வெளியே போய் வருவாங்க, மத்தப்படி வெளியே யாரோடும் பழக மாட்டாங்க. வீட்டோடு ரொம்ப வருஷமா ஒரு பொண்ணை வேலைக்கு வெச்சிருக்காங்களாம். சொந்த ஊரில் இருந்து வந்த பொண்ணாம். அது தான் தண்ணிக் கொடுத்த விமலாவும் இருக்கும்னு நினைத்துக் கொண்டேன். டிரைவர் தோட்டகாரன்னு வெளி வேலைக்கு ஆட்கள் வெச்சிக்கிட்டு இருந்தாங்க.
வீட்டுக்குக் குடி வந்து ஒரு அஞ்சு வருஷம் ஆகியிருக்கும். ஒரு நாள் வாசலில் வந்த காய்கறி வண்டியில் காய் வாங்கிக் கொண்டிருந்தேன். நல்ல வெள்ளை நிற உடுப்பில் ஒருவர் எங்களைத் தாண்டி போனார். காய்கறிக்காரர், ‘ஐயா வணக்கம்’ என்றார் அவரிடம். அவரும் தலையை ஆட்டிக் கொண்டே போய்விட்டார். அவர் கொஞ்சம் நகர்ந்ததும், அடிக் குரலில் காய்கறிக் காரரிடம் ‘யார் அவர்’ என்றேன். ‘அவர் தாம்மா அந்த பெரிய வீட்டுக்காரர்’ என்றார். இந்த இடத்துக்குக் குடி வந்து அஞ்சு வருஷம் கழிச்சு தான் அந்த வீட்டுக் காரரையே பார்த்தேன்.
திடீரென்று ஒரு நாள் காலை அவர்கள் வீட்டு வாசலில் ஒரே கூட்டம். போலீஸ் கார், மோப்ப நாய், ஆம்புலன்ஸ் என்று வந்திருந்தது. பொட்டிக் கடைக்காரர் அயர்ன் காரப் பெண் எல்லாரும் அவங்க வீட்டு வாசல்ல. நானும் வேகமாப் போனேன். என்னைப் பார்த்து அயர்ன் பெண் ‘அம்மா, அம்மாவை யாரோ கொன்னுட்டாங்கம்மா, காலையில் டிரைவர் வந்து தான் தெரிஞ்சிருக்கு. அவங்க வீட்டில வேலை செய்யற பொண்ணையும் ஐயாவையும் கட்டிப் போட்டிருந்தாங்களாம்மா ஐயா மண்டைல அடிச்சு பொழைக்கறது கஷ்டமாம் மா. ஆசுபத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்கம்மா.’ என்றாள்.
இரவில் யாரோ கதவை தட்டியிருக்கிறார்கள், அந்த வேலைக்காரப் பெண் தான் கதவை திறந்திருக்கிறாள். வந்தவர்கள் முகமூடி அணிந்திருந்தார்களாம். அந்த வேலைக்காரப் பெண்ணையும் அவரையும் கட்டிப் போட்டு அந்தம்மாவிடம் பீரோ சாவியும் நகைகளையும் கொடுக்க சொன்னார்களாம். அந்தம்மா மறுத்ததால் அவரை கத்தியால் வெட்டியிருக்கிறார்கள். அவரையும் மண்டையில் ஓங்கி அடித்திருக்கிறார்கள்.
நம்பவே முடியலை. எங்க ஏரியாவில் இப்படி ஒரு சம்பவமா? புற நகர் பகுதி என்றாலும் நாங்கள் குடிவந்த இந்த அஞ்சு வருஷத்தில் நிறைய வீடுகள் வந்துவிட்டன. நல்ல ஜன நடமாட்டமுள்ள இடமாகத் தான் மாறியிருந்தது. ஆனால் இந்தக் கொலை இரவு வேளையில் நடந்திருக்கு. ஆனால் ஒன்று மட்டும் நெருடியது. அந்தம்மா பகலிலேயே அவ்வளவு உஷாராக இருப்பாங்களே எப்படி இரவில் கதவை திறக்க அனுமதித்து இருப்பார்கள் என்று தோன்றியது.
அதற்குள் அவர்கள் உறவினர்கள் போல சிலர் வந்து உரக்க அழ ஆரம்பித்திருந்தனர். கூடவே அந்த வேலைக்காரப் பெண்ணும் உரக்க அழுது கொண்டிருந்தது. போலிஸ் காரர்கள் அங்கிருந்தவர்களை எல்லாம் விசாரிக்க ஆரம்பித்தனர். அதற்குள் அந்த ஐயாவும் இறந்து விட்டார் என்ற செய்தி வந்து அங்கு கூடியிருந்த அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
மகள் பாவம் குடும்பத்தோடு அடுத்த நாள் காலை தான் வந்தாள். கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் இந்த மாதிரி கொடுமையான முறையில் இறந்தது எங்கள் காலனியையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அத்துடன், துணிச்சலாக யார் இப்படி ஒரு கொலையை செய்திருக்க முடியும் என்று பலவித ஊகங்கள் எங்களிடயே. இரவில் நாய் வேறு அவிழ்த்து விடப்பட்டிருக்குமாம்.
ரொம்ப சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல், அன்று மாலையே டிரைவரும் வீட்டில் பல வருடங்களாகப் பணி புரிந்த பெண்ணும் கைது செய்யப்பட்டனர். வேறு ஒரு லாக்கருக்கு நகைகளை மாற்ற அந்தம்மா நூறு பவுன் நகைகளை வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். கொஞ்ச நாளாகவே வேலைக்காரப் பெண்ணுக்கும் டிரைவருக்கும் காதலாம். அவன் பிளான் படி வெளியாட்களை வைத்து கொலை செய்யாமல் திருடத் தான் திட்டமிட்டார்களாம். ஆனால் இந்த வேலைக்காரப் பெண் இவர்கள் அனுமதி இல்லாமல் கதவைத் திறந்ததை அந்தம்மா கவனித்து ஏன் இப்படி செய்தாய் என்று சந்தேகத்துடன் கேட்டிருக்கிறார்கள். அதனால் வந்த ஆட்கள் இவர்கள் இருவரும் உயிருடன் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று இருவரையும் தாக்கியிருக்கிறார்கள். அதில் அந்தம்மா உடனே இறந்து விட்டார். வீட்டுக்காரரும் இறந்ததாக எண்ணிய அவர்கள் நகைகளையும் இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணையும் கட்டிப் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டனர். காலை வரை அவருக்கு உயிர் இருந்தது அவர்களின் துரதிர்ஷ்டம்.
அந்தப் பெரியவர் சாகும் முன் மருத்துவமனையில் விமலா விமலா என்று அந்தப் பெண்ணின் பெயரை சொல்லியிருக்கார். அதை வைத்து போலிஸ் மேலும் விசாரணை செய்ததில் உண்மை வெளி வந்திருக்கிறது.
அந்த வேலைக்காரப் பெண்ணுக்கு இவர்களே செலவழித்துத் திருமணம் செய்து வைப்பதாக இருந்ததாம். பேராசை பெருநஷ்டமாகியது அந்தப் பெண்ணுக்கு. ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்த ஒரு பெண்மணியை பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் இன்னும் என் மனசில்.
photo credit: http://www.leannegraeff.com/labels/tutorial.html
http://sketchindia.wordpress.com/
http://www.thehindu.com/features/homes-and-gardens/building-walls-around-us/article4657318.ece
Oct 19, 2014 @ 16:32:45
Too short a story. Israel it about house, or construction or mysterious neighbor?
Made me think of ராஜத்தின் manOradham.
Oct 19, 2014 @ 16:33:48
Is it about**
Oct 19, 2014 @ 16:44:11
இந்த கதைக்கு இதுதான் (அந்தம்மா பகலிலேயே அவ்வளவு உஷாராக இருப்பாங்களே எப்படி இரவில் கதவை திறக்க அனுமதித்து இருப்பார்கள் என்று தோன்றியது.)வலு..!!!
Oct 19, 2014 @ 17:01:12
அரும் குறுங்கதை… நடையில் குழப்பம்.. இன்னும் நிறய எழுதுங்கள்.. 🙂
Oct 19, 2014 @ 17:06:45
நன்றி PVR, கோபி, கணேஷ் 🙂
Oct 19, 2014 @ 17:08:24
அடையாளம் தெரிந்த திருடர்களால் ஆபத்து உண்டு….
Oct 19, 2014 @ 17:09:52
ம்ம்..
Oct 19, 2014 @ 19:06:28
தலைப்பில் சிறுகதை என்றிருக்கிறது. ஆனால் முதல் பாராவே “நாங்க 1993ல் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது” என்று ஆரம்பிக்கிறது. அதிலிருந்து கதை முடியும்வரை ஒரு உண்மை சம்பவம்போல் விவரித்துள்ளீர்கள். அதாவது உங்கள் வரலாற்றில் இது ஒரு சம்பவம் என்பதுபோல் ஆகிவிடுகிறது.செய்தி தாள்களில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களை படிக்க நேர்ந்ததால் உங்களின் இந்த பதிவில் சுவாரஸ்யம் குறைகிறது.
கதைஎன்றால் ஒரு திருப்பம் வேண்டும். இதில் திருப்பம் என்றால் அந்த பெண் விமலாதான், பிறகு அவளின் காதல், காதலன் டிரைவர். அதை இன்னும் கொஞ்சம் சஸ்பென்சாக கையாண்டு கடைசியில் முத்தாய்ப்பா சொல்லி வாசகரை திடுக்கிட வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.
16 ஆவது பாராவிலேயே சஸ்பென்சை உடைத்துவிட்டீர்கள் “ரொம்ப சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல், ” என்று.
அதே பாராவில் ஓர் இடத்தில் “அவன் பிளான் படி வெளியாட்களை வைத்து கொலை செய்யாமல் ” – என்றால் விமலாவும் டிரைவரும் மட்டும்தான் என்றாகிறது.
அதே பாராவில் “அதனால் வந்த ஆட்கள் இவர்கள் இருவரும் உயிருடன் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று இருவரையும் தாக்கியிருக்கிறார்கள்.”. – அப்படியானால் வேறு வெளியாட்க்களும் வந்தனரா என்ற குழப்பம் எழுகிறது.
உங்களை டிஸ்கறேஜ் பண்றேன்னு எண்ண வேண்டாம். என் மனதுக்கு தோன்றியதை சொன்னேன். அதனால் சீரியஸா இதை பொருட்படுத்த வேண்டாம்.
மற்றபடி வழக்கம்போல் உங்கள் நடை சுவாரஷ்யமாகத்தானிருக்கிறது. இன்னும்நீங்கள் எவ்வளவோ எழுதலாம். வாழ்த்துக்கள் நன்றி 🙂
Oct 23, 2014 @ 08:52:46
நான் என்ன சொல்ல வந்தேனோ அதை எல்லாம் சின்னப்பையனே சொல்லிவிட்டார். நன்றி 🙂
இன்னும் நிறைய எழுதுங்கள். சுசாதா சொன்ன ஒரு சேதி “சிறுகதைக்கு முத்தாய்ப்பே முடிவில் வரும் Twist தான்”. இந்த கதையில் அது இல்லை.
உங்களின் நடையில் முன்பெல்லாம் நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கும். இப்போதெல்லாம் இல்லை. பாராட்டுக்கள்.
எனக்கும் இதைப்போல ஒன்றிரண்டு கதைக் கருக்கள் உள்ளன. ஆனால் இந்த திருப்பம் (Twist) எப்படி கொண்டு வருவது என்று தெரியாததால் அவை என் மண்டைக்குள்ளேயே உறங்கிக் கொண்டிருக்கின்றன.
Oct 25, 2014 @ 16:40:14
ரொம்ப நன்றி ஷங்கர் 🙂
Oct 25, 2014 @ 16:49:13
நான் சங்கர் 🙂
Oct 20, 2014 @ 03:21:24
ரொம்ப நன்றி சின்னப்பையன். இப்படி ஒரு வழிகாட்டுதல் தேவை. நானே எழுத்து ஆர்வத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்கிறேன். உங்கள் feedback மாதிரி தான் இன்னும் சிலரும் சொல்லியிருக்கிறார்கள் 🙂
Oct 20, 2014 @ 04:28:09
@சின்னப்பையனை வழி மொழிகிறேன்..உங்க ஆர்வத்துக்கு வாழ்த்துகள்..எழுத எழுதவே எழுத்து வசப்படும்..:)
Oct 20, 2014 @ 04:42:59
சூப்பர்மா 🙂
Oct 20, 2014 @ 04:53:57
நன்றி உமா, நந்தினி 🙂
Oct 20, 2014 @ 04:56:46
நல்லாருக்குமா.
கதையா நடந்த நிகழ்வான்னு ஒரு சிறு குழப்பம் வந்தது. தன்மை ஒருமைக் கதைகள்ள இந்தக் குழப்பம் வரும் வாய்ப்புண்டு. அதாவது ஒரு பாத்திரமே கதை சொல்வது போல வரும் கதைகள்.
Oct 20, 2014 @ 08:39:53
அதுவும் ஒரு பிரச்சினை தான் 🙂
Oct 20, 2014 @ 09:49:45
Kadhai pol theriyavillai. Neril sambhavathai sollvhupol romba nandrakairukku. Romba nallairukku
Oct 20, 2014 @ 10:17:47
thanks Sukan 🙂
Oct 20, 2014 @ 12:19:30
நல்ல கதை.. கதை போல் இல்லாமல், நடந்தது போல் சொல்லி இருகிறீர்கள்.
சஸ்பென்ஸ் எல்லாம் அப்ப அப்பவே … .
தொடர வாழ்த்துக்கள்.
Oct 21, 2014 @ 12:15:07
நன்றி 🙂
Oct 22, 2014 @ 07:14:17
சூப்பர்
Oct 22, 2014 @ 07:41:00
thanks 🙂
Oct 25, 2014 @ 09:10:34
With your narration I could picturize the whole story. Moral of the story is we must not rely on servants fully always be alert . Great Sushi looking forward for more stories.
Oct 25, 2014 @ 16:39:32
thanks 🙂
Oct 28, 2014 @ 15:13:37
Very nice.thanks.