Tamil Tweeter of The Year 2014 @RagavanG

gira

வருடா வருடம் சிறந்த Tamil tweeter of the year award கொடுக்கவேண்டும் என்று ஆரம்பித்து முதல் முறையாகப் போன வருடம் திரு கானாபிரபாவுக்கு (@kanapraba) Tamil Tweeter of the year 2013 விருதினைக் கொடுத்துப் பெருமை அடைந்தேன் 🙂 அதன் பதிவு இங்கே!

இந்த வருடம் அந்த விருதினைப் பெறுபவர் திரு கோ. இராகவன் @ragavanG என்னும் ஜிரா 🙂

இந்த விருதினை அவருக்குக் கொடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். போன வருடம் குறிப்பிட்டு இருந்த மாதிரி, விருதுக்கான விதிகளை திரும்ப ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்.

1. கீச்சுக்கள் யார் மனத்தையும் புண்படுத்தாமல் பொழுதுபோக்கு அம்சத்தோடு இருத்தல்.

2. கீச்சுபவர் விஷய ஞானம் உடையவராக இருத்தல்.

3. இனிமையானத் தன்மை உடையவராக இருத்தல்.

4. ட்விட்டரில் தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்பவர்.

இந்த வருடம் இந்த விருதினை பெறும் தகுதிகளை உடைய ட்வீட்டர் ஜிரா என்றே தோன்றியது. முந்தின Tamil Tweeter Of The Year விருதினைப் பெற்ற கானாபிரபாவிடம் கருத்துக் கேட்டேன். அவர் கருத்தும் அவ்வாறே இருந்தது எனக்கு இன்னும் மகிழ்ச்சியைத் தந்ததது.

ஜிரா தமிழில் நல்ல தேர்ச்சியும் ஆர்வமும் உடையவர். 2008 முதல் அவர் ட்விட்டரில் உள்ளார். இணையத்தில் நட்புடனே அனைவரிடமும் பழகுவார். பிறருக்கு உதவும் தன்மை உடையவர் என்பது அவரை பாலோ செய்கிறவர்களுக்கு நன்கு தெரியும். தமிழில் எந்த சந்தேகத்தையும் அவரிடம் கேட்கலாம், உடனே பதில் அளிப்பார். தெரியாதன ஏதாவது இருந்தால் தேடி எடுத்து நம் சந்தேகத்தைத் தீர்ப்பார்.

அவருடைய கீச்சுக்கள் படிப்பதற்கு ரொம்ப எளிதாக இருக்கும். அவருடைய வலைப்பதிவு அவர் ட்விட்டர் கணக்குடன் இணைக்கப் பட்டுள்ளது. பல வருடங்களாக ப்ளாக்கில் எழுதிவருபவர் (2005 முதல்). அதில் பிரசுரிக்கப் பட்டப் பதிவுகள் படிக்க மிகவும் சுவாரசியமாகவும் நல்ல கருத்துச் செறிவுடன் அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். gragavanblog.wordpress.com

ட்விட்டரில் நாம் இருப்பது கருத்துப் பரிமாற்றத்திற்கும் சற்றே இளைப்பாறுவதற்கும் தான். அந்த இரண்டுமே இவர் ட்விட்டரில் இருப்பதால் நமக்குக் கிடைக்கிறது. எந்தக் கருத்தையும் பிறர் மனம் நோகாமலும் அதே சமயம் தனக்கு சரி என்று பட்டதைத் தெளிவாகவும் பயமில்லாமலும் சொல்லும் திறன் படைத்தவர். ட்விட்டரில் அவர் கலந்து கொள்ளும் விவாதத்தில் ஒரு அளவுக்கு மேல் விவாதிக்க மாட்டார். சொல்ல வருவதை மென்மையாகவும் நல்ல சொற்களை பயன்படுத்தியும் சொல்வார்.

ஜிரா @mokrish @nchokkan ஆகிய மூவரும் சேர்ந்து 4 vari note என்று #365 நாள் project ஒன்றினை ஒரு வருடத்திற்கு முன் வெற்றிகரமாக செய்து முடித்தனர். அந்தப் பதிவுகள் பின்னர் புத்தகமாகவும் பிரசுரிக்கப் பட்டது. ஒரு திரை இசை பாடலின் சில வரிகளை எடுத்துத் தினமும் அழகிய விளக்கத்துடன் அவர்கள் வலைப்பதிவில் போஸ்ட் செய்தனர். அதன் மூலம் கவிஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், பாரதியார், பாரதி தாசன, கண்ணதாசன், வாலி, புதுமைபித்தன், வைரமுத்து, ந.முத்துக்குமார், கபிலன் என்று பலரின் பாடல் வரிகளை வாசகர்களாகிய நாமும் அனுபவித்து இரசிக்க முடிந்தது.

இசையில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதிலும் இசையமைப்பாளர் MSV, பாடகி P.சுசீலா இவர்களின் மிகப் பெரிய விசிறி. அதனால் ஒரு வருடமாக வாரம் ஒரு முறை சனிக் கிழமையில் MSV quiz நடத்துகிறார். அதன் லிங்க் இங்கே . இனிய பழைய பாடல்களை இன்றைய தலைமுறையினரும் ரசித்து மகிழ ஒரு விளையாட்டுப் போட்டி போல வைத்து இவர் க்விஸ் மூலம் செய்யும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது.

இதையும் தவிர ட்வீட்டர்களை வைத்து கம்பன் கவி மன்றம் என்னும் ஒரு குழுவை அமைத்து வாரம் ஒரு முறை கம்ப இராமாயண வகுப்பை நடத்த ஆரம்பித்தப் பெருமையும் இவரைச் சேரும். இந்த வகுப்பின் மூலம் இதில் பங்குபெறுபவர்களின் இலக்கிய இரசனை பெருகியுள்ளது, தோழமை உணர்வு வளர்ந்துள்ளது. He is a very good mentor too.

இணைய நட்பு என்பது இரயில் சிநேகம் மாதிரியும் இருக்கும், இரண்டாம் உலகப் போராகவும் மாறும் அல்லது ஜிராவைச் சுற்றியுள்ளது போல அமைதியும் அன்பும் நிறைந்ததாகவும் இருக்கும் 🙂

gragavan2

29 Comments (+add yours?)

 1. உமா க்ருஷ் (@umakrishh)
  Dec 24, 2014 @ 16:50:40

  அருமையான தேர்வு..அப்படியே வழிமொழிகிறேன் 🙂 விஷயம் தெரிந்திருக்கிறது என்பதைக் கூட காட்டிக் கொள்ள மாட்டார்.. கேட்டால் மட்டுமே தகவல் வரும்..பழக மென்மை .. 🙂

  Reply

 2. மீனம்மாகயல்
  Dec 24, 2014 @ 16:59:50

  வாவ்.. தகுதியான தேர்வு… எனக்கு மிகபிடித்தமானவர் இவர்

  Reply

 3. கூமுட்டை
  Dec 24, 2014 @ 17:01:02

  சூப்பர்… சூப்பர்…!! அனைத்தும் உண்மை… எனக்கு தமிழ் திரை இசையை ரசிக்க கற்றுக் கொடுத்த குரு இவர்.

  மென்மையான நல்ல மனதுக்காரர். இவர் மேனேஜராக இருந்த போது இவரிடம் வேலை செய்தால் எப்படி இருக்கும் என்று அடிக்கடி எண்ணுவதுண்டு.

  பி.கு : 2015 அவார்டை எனக்கு கொடுக்க வேண்டும் என்று எனது ட்விட்டர் ஃபாலோயர்ஸ் உங்களிடம் சொல்லச் சொன்னார்கள்.

  Reply

 4. முனைவர் நாரதன்® (@mpgiri)
  Dec 24, 2014 @ 17:20:39

  அருமையான தேர்வு அதற்க்கான தகுதிகளைச் சொன்னதும் அருமை.
  வாழ்த்துக்கள் ஜி.ரா சார்
  2016 அவார்டை ஐ எனக்குக் கொடுக்க என்ன வழிமுறை…:-))

  Reply

  • amas32
   Dec 24, 2014 @ 17:27:46

   ha ha ha இப்படி ஆளாளுக்குக் கேட்டா நான் என்ன பண்றது 🙂 🙂

   Reply

 5. kanapraba
  Dec 24, 2014 @ 20:04:06

  மிகப்பொருத்தமான தேர்வு.
  வாழ்த்துகள் அன்பின் ராகவன். அம்மாவின் வாய் முகூர்த்தம் என் 2014 எனக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்தது. உங்களுக்கு 2015 பல சிறப்பான வெற்றிகளைக் குவிக்கட்டும்.

  Reply

 6. vbss75
  Dec 25, 2014 @ 02:40:15

  நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.

  Reply

 7. UKG (@chinnapiyan)
  Dec 25, 2014 @ 03:07:26

  நல்ல தேர்வு. பல அம்சங்களை கூறி தேர்வு செய்துள்ளீர்கள்.அவருக்கு என் வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள். It seems that I had missed him a lot 😦
  நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள் 🙂

  Reply

 8. vasanthigopalan
  Dec 25, 2014 @ 03:33:34

  நல்ல தேர்வு.நான் ட்விட்டர் வந்த போது, என்னையும் மதித்து ஃபாலோ செய்தவர்.பிரபலத்திடம் மற்றவர்கள் எதிர்பார்ப்பது நியாயமான கேள்விக்கு பதிலே. ஜிரா அவர்கள் எப்பொழுதும் பதில் தருவார்.வரும் ஆண்டு அவர் மேன் மேலும் சிறக்கட்டும்.
  அடுத்த வருடம் எங்கள் KFC Hero க்குத்தான்.:)

  Reply

  • amas32
   Dec 25, 2014 @ 09:03:51

   நன்றி வசந்தி 🙂 கூமுட்டைக்கு நிறைய பிரச்சாரம் நடக்கிறதே 🙂

   Reply

 9. uma chelvan
  Dec 25, 2014 @ 04:34:53

  வாழ்த்துக்கள் ஜி ரா. சரியான / பொருத்தமான தேர்வு. 2015 அவார்ட் மிகவும் அமைதியாக இருக்கும் எனக்குள்ள கிடைக்குமுன்னு நினைச்சேன். இப்ப பாத்தா போட்டி ரொம்ப கடுமையா இருக்கும் போல இருக்குதே !! :)))))

  Reply

 10. pvramaswamy
  Dec 25, 2014 @ 08:13:08

  Excellent. I am happy to second and endorse!

  Reply

 11. psankar
  Dec 25, 2014 @ 11:02:18

  KRS, Chokkan, Elavasam and GiRa. These four are my inspirations http://psankar.blogspot.in/2012/07/2.html

  If they all get along a little better, it will be beneficial for many.

  Reply

 12. GiRa ஜிரா
  Jan 07, 2015 @ 07:04:59

  என்றோ சொல்லியிருக்க வேண்டியதை இன்று சொல்கிறேன்.

  நன்றிம்மா. உங்கள் அன்புக்கு என்னுடைய வணக்கங்கள். ரொம்ப நல்லவிதமாச் சொல்லியிருக்கிங்க. மிக்க நன்றி.

  பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும். உங்களோடு இருக்குறதாலதான் இதெல்லாம் நடக்குது. அதுனால உங்களுக்கும் இதுல பங்குண்டு 🙂

  Reply

 13. Trackback: Tamil Tweeter of The Year 2o15 – @iamVariable | amas32
 14. Trackback: Tamil Tweeter Of The Year 2016 – @savidhasasi | amas32
 15. Trackback: Tamil Tweeter of the Year 2018 @KirukkanJagu | amas32
 16. Trackback: Tamil Tweeter Of The Year 2018 @selvachidambara | amas32

Leave a Reply to GiRa ஜிரா Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: