எதுவுமே ஒருவருக்கு இயல்பா வருவதை முன்னிறுத்திச் செய்யப்படுவது வெற்றிப் பெறும். அஜித்துக்கு 7 வயது பெண்ணின் அப்பாவாக இருப்பது வெகு இயல்பாக வருகிறது. Action ஹீரோவாக நடிப்பதோ அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி! இரண்டும் சேர்ந்த கலவை தான் “என்னை அறிந்தால்” சத்யதேவ். அதனால் பாத்திரப் படைப்பிலேயே கௌதம் மேனன் ஸ்கோர் செய்து விடுகிறார். வெறும் ஆக்ஷன் மட்டும் இல்லாமல் அன்பு, பாசம், கொஞ்சம் தத்துவம் என்று நல்ல விகிதத்தில் கலந்து அளித்திருப்பதால் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் நல்லதொரு விருந்து.
அஜித் பளிச்சென்று இருக்கிறார். He is definitely handsome 🙂 த்ரிஷாவுடனான சீன்களில் இருவரின் ஜோடிப் பொருத்தமும் ரொம்ப அழகாக உள்ளது. படம் முழுக்க அவர் ஆளுமை தான். நடிப்பு மிக நன்று! அனுஷ்கா லிங்காவில் இருந்ததை விட ரொம்ப better. விவேக்கும் கெக்கபிக்கே காமெடி இல்லாமல் அவருக்கு அளிக்கப்பட்டப் பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார். சிறுமியாக நடித்த அனிகாவை அவர் வயதுக்குத் தகுந்தாற்போல நடிக்க வைத்திருப்பதால் நம்மை மிகவும் ஈர்க்கிறார். அருண் விஜய்க்கு வில்லன் பாத்திரம். அஜித்தின் வெற்றிக்கு ஒரு காரணம் அருண் விஜய் நன்கு நடித்திருப்பதால் தான்! ஒரு பலமான வில்லனை எதிர்க்கும்போது தான் ஹீரோ உயர்கிறார்.
மற்றப்படி அதே கெட்டவனை எதிர்க்கும் நல்லதொரு போலீஸ்காரன் கதை தான். கெட்டவன் வீழ்கிறான், நல்லவன் வாழ்கிறான், அட்லீஸ்ட் அடுத்தப் படம் வரை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் நன்றாக உள்ளது. அந்தப் பாடல் வரிகள் (தாமரை) மிகவும் பொருள் செறிவுடன் இருக்கு. மற்றவை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பின்னணி இசை நன்று. படம் விறுவிறுப்பாகப் போகிறது. 176 நிமிடங்கள். ஆனால் திரைக் கதையில் வேகத் தடை இல்லை.
கதையின் ஓட்டம் சமூகப் பார்வையில் எனக்குப் மிகவும் பிடித்திருந்தது.
பெண்ணின் உடம்பை உரித்துக் காட்டும் ஐடம் டேன்ஸ் இல்லை.
இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் டூயட் இல்லை.
விவாகரத்து ஆனப் பெண்ணை ஹீரோ காதலிக்கிறார். அதுவும் அப்பெண் கைபடாத ரோஜா இல்லை. அப்பெண்ணிற்கு ஒரு குழந்தை உள்ளது.
உடல் உறுப்புக்களின் திருட்டைப் பற்றிய விழிப்புணர்வு வரவேற்க்கத்தக்கது.
வெவ்வேறு இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வது நம்மை அறிந்துகொள்ள உதவும் என்று ஒரு சிறு எண்ணத்தை இந்தப் படம் மூலம் பார்ப்பவர்கள் மத்தியில் விதைத்துள்ளார் இயக்குநர்
குடும்பத்துடன் பார்க்கலாம். அஜித் ரசிகர்கள் இப்படத்தை மிகவும் கொண்டாடுவார்கள்.
Feb 06, 2015 @ 10:57:26
ஹாரிஸ் சமீபத்துல வந்த படங்கள்ல இந்த படத்துலதான் நல்லா BGM போட்ருக்கார். அதுவும் அருண் விஜய்க்கு போட்ருக்கதுலாம் வேற லெவல்.
Feb 06, 2015 @ 11:10:37
Padam partha thrupthi….mail vanthavudan padikkavendum endra aarvam.
Feb 06, 2015 @ 11:35:50
template method-hero,acting, story,music,villan(2 lines about everything)….. no depth in your review.. no honest opinions … need to improve a lot .. however the first line was good.
Feb 06, 2015 @ 12:21:08
thank you Suresh, Sukanya, Jagan for your feedback.
Jagan, I like to give a short summary of the movie and to not reveal the story in any manner. I don’t do an in depth analysis.
Feb 06, 2015 @ 13:51:26
அப்போ…. படம் நல்லாருக்குன்னு சொல்றீங்க.
இன்னைக்கு வெளிய போயிருந்தப்போ ரெண்டு பேர் பேசிக்கிட்டிருந்தாங்க.
வடிவேலு காமெடில கிட்னி திருடுவாங்களே அதையே சீரியசா எடுத்திருக்காங்க.
என்ன படமாயிருக்கும்னு டிவிட்டர்ல கேட்டப்போ இந்தப் படம்னு தெரிஞ்சது. விமர்சனம் பாத்ததும் புரிஞ்சது.
Feb 06, 2015 @ 13:53:02
🙂 உங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன். சண்டை தான் அதிகம் 🙂
Feb 06, 2015 @ 13:55:36
உங்கள் விமர்சனத்துக்காக காத்துக்கொண்டிருந்து, பின் ரசிக்கும் நூற்றுக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். படிக்கும்போது கரசுமுரடா இல்லாமல் ரொம்ப சுமூத்தா இருக்கிறது.
ஆரம்பத்தில் நான் எதிர்பார்த்தேன் ஏன் ஒருவரிகதைகூட சொல்ல மாட்டேன்கிறார்னு. ஆனால் போக போக புரிந்துகொண்டு ரசிக்க ஆரம்பித்தேன். இதுவும் ஒரு வகைஎன்று. அக்குவேறு ஆணிவேறா பிரித்து மேய்வதற்க்குத்தான் பலர் இருக்கின்றனரே. ரோஜா இதழை முகர்ந்து பார்த்தால் நறுமணம் கமழும். பிய்த்து தின்றால் கசக்கும். உங்கள் பாணி ரோஜா இதழை யாருக்கும் தொந்திரவு இல்லாமல் முகர்ந்து இன்புறும் வகை.
படம் பார்க்க தூண்டும் வகையில் விமர்சிதுள்ளீர்கள். நன்றி வாழ்த்துகள்.
Feb 06, 2015 @ 16:50:36
ரொம்ப நன்றி சின்னப் பையன் 🙂
Feb 06, 2015 @ 16:15:21
அம்மா…, படம் 176 நிமிடங்கள்! நீங்க 10 நிமிடம் இடைவேளையும் சேர்த்து போட்டுடிங்க போல :-)))))))))))))))))
Feb 06, 2015 @ 16:49:41
:-)) sorry 🙂 இப்போ மாத்திடறேன் 🙂
Feb 07, 2015 @ 03:57:53
இந்த படத்தை பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம். நன்றாக விமர்சித்துள்ளீர்கள். கரடு முரடான விமர்சனத்துக்கு மத்தியில் உங்கள் விமர்சனம் அருமை.
Feb 07, 2015 @ 13:17:46
Thank you 🙂
Feb 07, 2015 @ 15:23:52
அழகான விமர்சனம் !
Feb 07, 2015 @ 17:27:23
எதுவுமே ஒருவருக்கு இயல்பா வருவதை முன்னிறுத்திச் செய்யப்படுவது வெற்றிப் பெறும். Very nice point and good review !:))
Feb 10, 2015 @ 16:50:12
கண்ணாடி… அழகான அருமையான பிரதிபளிப்பு
Mar 14, 2015 @ 08:25:35
இன்னைக்குதாமா மெயில் ஓப்பன் பண்ணே.. அவ்வ்வ்.. செமையா ரசிச்சு எழுதிருக்கிங்க.. க்ளாப்ஸ் ஸ்மைலி.. :))))
Mar 14, 2015 @ 11:37:13
நன்றி ஜீரோ, ரஷ்ய மணி, உமா செல்வன், திருநாவு 🙂 🙂