காலையில் எழுந்திருக்கும் போதே ஜன்னல் வழியா வேப்பிலை/வேப்பம் பழம் கலந்த கசப்பு வாசனை வீசியது. எப்பவும் வீசாது. விடி காலையில் கரண்ட் போனதால் ஜன்னலை திறந்து வைத்ததில் கோடை கால வெப்பமும் சேர்ந்து வாசம் வந்ததோ என்று அவளுக்குத் தோன்றியது. பிறகு காலை வேளை வேலையில் அது மறந்தும் விட்டது. மகளை ரிக்ஷாவில் பள்ளிக்கு அனுப்பும் போது வாசலுக்கு வந்த அவளுக்குத் திரும்ப லேசாகக் கசப்பு வாசனை நாசியைத் தொட்டது. வேப்ப மரத்தை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டு மத்த ஜோலியை கவனிக்கப் போய் விட்டாள். இன்னும் கரென்ட் வரவில்லை. புழுங்கித் தொலைத்தது. வாச வெராண்டாவில் வந்து அமர்ந்த அவளுக்குத் திரும்பக் கசப்பு வாசனை. காய்ந்த வேப்பம் பூக்களும் சருகுகளும் மரத்தடியை குப்பைக் கூளமாக்கி இருந்தன. ஒரு துடைப்பத்தை எடுத்து பெருக்க ஆரம்பித்தாள். உஸ்ஸ் என்று எதோ சத்தம். சட்டென்று திரும்பியவள் படம் எடுத்து நின்ற நாகப் பாம்பைப் பார்த்தாள். மூச்சே நின்று விடும் போலிருந்தது. அசையாமல் நின்றாள். இஷ்ட தெய்வம் முருகன். மனசுக்குள் “காக்கக் காக்கக் கனகவேல் காக்க” என்று ஒரே வரியைத் திரும்பத் திரும்ப சொல்ல ஆரம்பித்தாள். காலையில் இருந்து வந்தக் கசப்பு வாசனை ஏதோ ஒரு கெட்டது நடப்பதற்கான அறிகுறியோ?
அவள் கணவன் அவளை பெண் பார்க்க வந்தபோது காபி கொடுத்து விட்டு உள்ளே சமையல் அறையில் நின்று கொண்டு ஹாலில் எல்லாரும் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந்த போது அவள் நாசிக்கு விபூதியும் குளிர்ந்த செண்பக மலரும் கலந்த வாசனை எங்கிருதோ வந்தது. சமையல் அறையில் கேசரியும் பஜ்ஜியும் தான் இருந்தன. எப்படி இந்த மணம் வந்தது என்று அவளுக்குப் புரியவே இல்லை. ஆனால் சர்வ நிச்சயமாக அந்த வாசத்தை அவள் உணர்ந்தாள். அவளுக்கு சிலிர்த்து விட்டது, முருகனே அவளுக்கு இத் திருமணத்துக்கு ஒப்புதல் தருவதாக அவள் அதை அப்போது எடுத்துக் கொண்டாள். திருமணமும் எந்த வித இடையூறும் இல்லாமல் அவள் அப்பாவிற்குப் பணத்திற்கு எந்த சிரமும் வைக்காமல் எளிதாக நடந்தது.
அப்போ காலையில் இருந்து வந்தக் கசப்பு வாசம் ஒரு கெட்ட விஷயத்துக்கான அறிகுறி, அதை அவள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ? நிமிடம் யுகமாகக் கழிந்தது. வெயிலுக்கும் பயத்துக்குமாகச் சேர்ந்து வியர்வை அவள் மேனியில் ஆறாக ஓடியது. மூச்சுக் கூட சன்னமாக விட்டாள். சட்டென்று காற்று வேகமாக வீசியது. பக்கத்து வீட்டு நித்திய மல்லிச் செடியில் இருந்து வந்த மல்லியின் வாசனை அவளை உடனே ஆசுவாசப் படுத்தியது. வேப்பிலை வாசம் போய் மல்லி மணம் வருகிறதே. இனி உயிருக்குப் பயம் இல்லை என்று தோன்றியது. படபடவென்று அடித்துக் கொண்டிருந்த அவள் மார்பு இப்போ சாதாரணமாக அடிக்கத் தொடங்கியது. பாம்பு அசையாமல் அப்படியே படம் எடுத்த நிலையில் இருந்தது. ரோடில் திடீரென்று பெரிய தண்ணி லாரி வரும் சத்தம் கேட்டது. அசையாது இருந்த பாம்பு விருட்டென்று கண் மூடி திறக்கும் நேரத்தில் காணாமல் போயிருந்தது.
துடைப்பத்தைப் அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள். கதவை தாழ்போட்டு சேரில் அமர்ந்தாள். கரென்ட் வந்ததற்கு அறிகுறியாக fan லைட் எல்லாம் ஒரு சேர சுத்தவும் ஒளிவிடவும் ஆரம்பித்திருந்தன. இப்போ அவளுக்கு அவள் காலையில் வைத்த வத்தக் குழம்பு வாசம் தான் வந்தது.
photo thanks to:
http://archive.auroville.org/journals&media/avtoday/archive/2000-2003/may_2002/sangamam.htm
Mar 21, 2015 @ 06:14:29
Enakkum veppampoo vasam vanthathu pol unarthen.
:))
Mar 21, 2015 @ 13:04:17
நன்றி 🙂
Mar 21, 2015 @ 07:25:17
கசப்பு நாக்கில் தட்டுப்பட்டது.அருமை :))
Mar 21, 2015 @ 13:03:52
நன்றி 🙂
Mar 21, 2015 @ 10:39:09
எங்கள் வீட்டிலும் இரண்டு வேப்பமரங்கள் இருக்கின்றன. இன்று காலையில் தோட்டத்தில் ஒரு பாம்பு கண்ணில் பட்டது. இதற்கு முன் 3 முறை கண்ணில் பட்டிருக்கிறது. இன்று காலையில் சிறிது நேரம் கரன்ட் கட்! விபூதி வாசனை பாம்பின் வாசனை என்று கேள்விப்பட்டிருக்கிறென். மிகவும் யதார்த்தமான பதிவு. வாழ்த்துக்கள்.
Mar 21, 2015 @ 13:03:27
ரொம்ப நன்றி ராஜா சுப்பிரமணியம் 🙂
Mar 21, 2015 @ 11:14:08
உணர்வுகளை வரிகளாய் கொடுப்பதை பார்த்திருப்போம் .. வரிகளுக்கு உணர்வுகளை கொடுத்திருக்கும் சிறுகதை …
Mar 21, 2015 @ 11:18:49
உணர்வுகளை வரிகளாய் கொடுப்பதை பார்த்திருப்போம் .. வரிகளுக்கு உணர்வுகளை கொடுத்திருக்கும் சிறுகதை இது …
விமர்சிக்க , வாழ்த்த வயதில்லை அம்மா … எதார்த்தமான பதிவு .. ரொம்ப இயல்பா அழகான எழுத்து நடையில் இருக்குங்க அம்மா …
நன்றி ..என்றும் அன்புடன்
@Rjcrazygopal
Mar 21, 2015 @ 13:05:05
ரொம்ப ரொம்ப நன்றி கோபால் 🙂 ரொம்ப மகிழ்ச்சி 🙂
Mar 21, 2015 @ 11:23:32
மிகவும் யதார்த்தமான பதிவு. # இனி எப்ப வேப்பம்பூ வாசம் வந்தாலும் நாமும் உசாராகிக்கோணும்போல.
Mar 21, 2015 @ 13:05:32
🙂 🙂
Mar 21, 2015 @ 12:44:33
ஐம்புலன்கள் மூலம் மனதில் நவரசங்களை உருவாக்கலாம். அதனால் ஒரு கதை உருவாகிறது. பொதுவாக ஒரு கதையில் மற்ற நான்கு புலன்களுக்கு பரவலாகவும், நுகர்தலுக்கு மட்டும் ஒருசில இடங்கள் கொடுத்து இருப்பார்கள். ஆனால் நீங்களோ நுகர்தலுக்கு ஒரு முக்கிய இடம் கொடுத்து கதை வடித்துள்ளீர்கள். வாசனை மூலம் உள்ளுணர்வு ஒரு எச்சரிக்கை கொடுப்பதை பலரைப்போல நானும் உணர்ந்துள்ளேன். நல்ல ஒரு வித்தியாசமான சித்தனை.
கதையையும் அளவான டோஸில் நீளம் மிகையாகாமல் வடித்துள்ளீர்கள். அதனால் ஒரு நெகிழ்ச்சி மனதில் தோன்றுகிறது.
நன்றி வாழ்த்துகள்.:)
Mar 21, 2015 @ 13:06:32
ரொம்ப நன்றி சின்னப் பையன் 🙂
Mar 21, 2015 @ 13:05:45
நல்ல சிறுகதை வடிவம்,வாழ்த்துக்கள்.பாம்பிற்கும் வரும் வாசனைக்கும் என்ன சம்பந்தம் இருந்து விட முடியும்,எதையும் சம்பந்தப்படுத்திப்பார்ப்பது மனித மனதுதானே?இல்லையா,,,?
Mar 21, 2015 @ 16:04:35
பாம்புக்கும் வாசனைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் நல்ல சகுனத்திற்கும் கெட்ட சகுனத்திற்கும் மனசு முடிச்சுப் போடும். அதைத் தான் வாசனை மூலம் சொன்னேன் 🙂
Mar 21, 2015 @ 14:51:10
Nice story well presented.
Mar 21, 2015 @ 16:04:51
thank you 🙂
Mar 21, 2015 @ 21:38:24
short but nice skit.. good wishes. Me too had a similar experience at the age of 15 – saw a biggest ever seen cobra staring eye to eye at me with its lifted head . i was returning home after taking bath in our field well. I was spell bound , not able to move an inch. Suddenly it dropped its head down and moved past me swiftly. I ran for life to home told mother and promptly she did some temple prayers..I took ill for three days and later I was told some people killed and buried with last rites. Even today after reading your story, whole episode comes to my mind with chilling fear.
Mar 22, 2015 @ 13:26:22
Wow!
Mar 31, 2015 @ 09:31:36
> மகளை ரிக்ஷாவில் பள்ளிக்கு அனுப்பும் போது
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையா 😉 ?
Mar 31, 2015 @ 12:26:13
🙂 🙂