ஓ காதல் கண்மணி – திரை விமர்சனம்

okk

செம ஜாலி படம். அவ்வளவு மகிழ்ச்சியை ஒரு படம் பார்க்கும்போது பெற முடியும் என்று உணர்த்திய மணி ரத்தினம் அவர்களுக்கு நன்றி 🙂 துல்கர் சல்மான் top notch! அந்த ரோலுக்குப் பச்சக் என்று பொருந்துகிறார். (pun not intended 🙂 ) நித்யா மேனனும் ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறார். Both are very cute 🙂

இன்றைய இளைஞர்கள் எண்ணம், வாழ்க்கை முறையைக் காட்டும் கதை. அதுவும் முக்கியமாக மெட்ரோ நகரங்களில் நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களிடையே இவ்வாழ்க்கை முறை சகஜமாகி வருகிறது. ஆனால் பண்பாட்டுக் காவலர்கள் இதற்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. படத்தின் முடிவு நம் கலாச்சாரத்துக்கு மாறுபடாமல் இருப்பதால் எதிர்ப்பவர்களும் வலுவுடன் எதிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.

துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகிய இருவருக்கும் துடிப்பான அதே சமயம் உணர்ச்சிகளை நன்குக் காட்டக்கூடிய பாத்திரங்கள்! பழைய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வயதான கதாப்பாத்திரங்களாக பிரகாஷ் ராஜ், லீலா சேம்சன். படத்தில் உள்ள அனைவருமே மணிரத்னம் இயக்கத்தில் அற்புதமாக வாழ்ந்திருக்கிறார்கள். அல்சைமர்ஸ் என்கிற மறதி நோயை மிகச் சரியாகவும், caregiver ஆக பிரகாஷ் ராஜ்ஜின் பாங்கான பராமரிப்பையும் அழகாகக் காட்டியிருக்கும் மணி ரத்தினத்துக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டுப் பூங்கொத்து.

இசை இப்படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட். பாடல்களும் சரி, பாடல்களை ஆங்காங்கே பின்னணி இசையாகப் போட்டிருக்கும் நேர்த்தியும் சரி, மிக நன்று. ரஹ்மான் இதை இளைஞர்களுக்கானப் படம் என்று சமைத்துக் கொடுத்து விட்டார்.

P.C.ஸ்ரீராம் திரைக் கதையை ஒளி ஓவியமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

படம் ஓடும் நேரம் 2மணி 18நிமிடங்கள். விரு விரு என்று செல்கிறது. நன்றி editor சார்.மும்பையில் பிராகாஷ் ராஜின் பழமையான வீடு கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அது செட்டாகத் தான் இருக்கும். கலை – சர்மிஷ்டா ராய்.

எப்பவும் இருக்கும் மணி படங்களில் கீழ் வருவன இல்லாதது பெரு மகிழ்ச்சியைத் தந்தது 🙂

1. படம் முழுவதும் ஒரு வகை இருட்டு

2. கிசுகிசுப்பான காதிலேயே விழாத ஒலியில் அனைவரும் பேசுவது.

3. ஒரு சொல் வசனங்கள்.

இவை கூட இப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இளைஞர்களுக்கும், மனத்தால் இளைஞர்களாக இருப்பவர்களுக்கும் romantic outlook உள்ளவர்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும் 🙂

இப்படம் U/A. குழந்தைகளுடன் செல்லாதீர்கள்.

okk1

12 Comments (+add yours?)

 1. kanapraba
  Apr 17, 2015 @ 14:32:35

  நறுக் விமர்சனம் அம்மா அப்ப நான் போக முடியாதா அந்தக் குழந்தையே நாந்தான்

  Reply

 2. lotusmoonbell
  Apr 17, 2015 @ 15:02:39

  நல்லா இருக்கு.சுஹாசினிக்கு சந்தோஷமா இருக்கும். ஒரு விமர்சன காப்பி அவங்களுக்கும் அனுப்பிடுங்க.

  Reply

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  Apr 17, 2015 @ 23:52:11

  வணக்கம்
  தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Reply

 4. amas32
  Apr 18, 2015 @ 07:17:48

  Thank you Roopan 🙂

  Reply

 5. ரிஷி(@i_vr)
  Apr 19, 2015 @ 03:49:00

  படம் இன்று பார்த்தேன் என் ”கண்மணி”யுடன், அம்சமாக இருந்தது…ஒரு உறுத்தலும் சலிப்பும் இல்லாமல்…வசனம், இயக்கம், நடிப்பு, இசை எல்லாம் பட்டாசாக இருந்தது… நீண்ட நெடு வருடங்கள் கழித்து மணியின் அமர்க்களமான படம்!

  Reply

 6. amas32
  Apr 20, 2015 @ 13:04:29

  yes 🙂 🙂

  Reply

 7. GiRa ஜிரா
  Apr 23, 2015 @ 07:24:25

  கிட்டத்தட்ட நான் விமர்சனத்தில் சொன்னதைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.

  ஆனால் ஒரு சிறு மறுப்பு. குழந்தைகளுடன் போகக்கூடாதுன்னு சொல்லியிருக்கீங்க. படத்துல ஆபாசமோ வக்கிரமான காட்சிகளோ வசனங்களோ இல்லையே. பொதுவா வர்ர படங்கள்ள இருக்குறதவிடவும் குறைவாத்தானே இருக்கு. குடும்பத்தோடு பாக்க வேண்டிய படம்னு விளம்பரப்படுத்தப்பட்ட காஞ்சனா-2ல ஏகப்பட்ட ஆபாச வசனங்கள்.

  Reply

 8. UKG (@chinnapiyan)
  Apr 25, 2015 @ 13:15:12

  ரொம்ப நாள் கழிச்சு மனம் குளிர்ந்து திருப்தியுடன் ஒரு படத்தின் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். சபாஷ்.
  1. படம் முழுவதும் ஒரு வகை இருட்டு

  2. கிசுகிசுப்பான காதிலேயே விழாத ஒலியில் அனைவரும் பேசுவது.

  3. ஒரு சொல் வசனங்கள்.

  அடடே 🙂 படம் போய் பார்க்கிறேன்

  நிச்சயம் போய் தியேட்டரில் படம் பார்ப்பேன் ஏனென்றால் நீங்கதான் சொல்லிட்டீங்களே “மனத்தால் இளைஞர்களாக இருப்பவர்களுக்கும்….:)
  நன்றி வாழ்த்துகள் 🙂

  Reply

 9. UKG (@chinnapiyan)
  May 25, 2015 @ 02:45:24

  படம் பார்த்துட்டேன் 🙂
  நடிப்பு மற்றும் படம் எடுத்தவிதம் சுப்பர் மற்றபடி நீங்கள் சொல்லியபடி ஒரு சொல் வசனங்கள், கிசுகிசுப்பான குரல் எல்லாம் இல்லாமலில்லை.
  கதாநாயகிக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருந்தது. ஆனால் கதாநாயகனுக்கு ?

  கல்யாணம் வேண்டாம்னு தீர்மானிச்சிட்டா, பேசாம ஹாஸ்டல்ல போய் தங்கிடலாமே. ஒருத்தனோட தங்கி அவன்கூட படுக்கனும்னு அவசியமில்லையே. அப்போ இவன் போய்ட்டா அடுத்தவனா ?

  என்னதான் இன்றைய இளைய சமுதாயத்துடன் ஒத்துபோகனும்னு பார்த்தாக்கூட, சில விஷயங்கள் என்னால் ஜீரணிக்க முடியவில்லை 😦

  ஒருவேள நான் இன்னும் வளரனும்போல 🙂
  இது மெட்ரோபொலிடன் சிட்டிக்காரங்களுக்காக எடுத்த படம் .
  நன்றி 🙂

  Reply

  • amas32
   May 25, 2015 @ 16:02:48

   ம்ம்… மெட்ரோவில் பரவலாக நடக்க ஆரம்பித்து இருப்பதை எடுத்திருக்கார் 🙂

   Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: