கானாபிரபாவின் எழுத்துக்கு நான் ரசிகை. அவரின் ப்ளாக் பதிவுகளை விரும்பிப் படிப்பேன். அதுவும் அவரின் பயணக் கட்டுரைகள் ரொம்பப் பிடிக்கும்.
மடத்து வாசல் பிள்ளையார் பதிப்பகத்தாரின் முதல் வெளியீடாக வந்துள்ள இப்புத்தகத்தை மிகுந்த ஆவலுடன் வாங்கிப் பார்த்தேன். புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் கண்ணைக் கவரும் வண்ணப் படங்களும், அழகிய வழவழாத் தாளில் அச்சும் பிரபாவின் taste for perfection and beautyஐக் காட்டியது.
“தன் சைக்கிளில் எனை இருத்தி உலகத்தைக் காட்டிய என் அப்பாவுக்கு” என்று அழகிய சமர்ப்பணத்துடன் எழுத்து ஆரம்பிக்கிறது. பாராவின் முன்னுரை புத்தகத்தின் மதிப்பை உடனே உயர்த்திவிடுகிறது,
பாலித் தீவு பயணப்பட செய்யும் ஏற்பாட்டில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பி வந்து சேரும் வரை நாமும் அவருடன் சேர்ந்து பயணிக்கிறோம் வெறும் 15௦ரூபாய் செலவில்.
பல வருடங்களுக்கு முன் நானும் என் கணவரும் பாலித் தீவுக்குச் சென்றிருக்கிறோம். இவர் புத்தகத்தைப் படிக்கும் போது அவர் எழுதியிருக்கும் சில இடங்களை நாங்களும் பார்த்திருந்ததால் மலரும் நினைவுகளாகவும் இருந்தது 🙂
இந்தப் புத்தகத்தின் சிறப்பு:
1. பாலிக்குச் செல்பவர்களுக்கு இது ஒரு டூர் கைடாக இருக்கும்.
2. பாலிக்குச் செல்லாதவர்களுக்கு இருந்த இடத்தில் இருந்தே அவ்வூரை பார்த்த ஆனந்தம் கிட்டும்.
3. குறிப்பாக இந்து ஆலயங்களும், தமிழ் கலாச்சாரமும் எப்படி அங்கு வந்தன என்பதை ஆய்வு செய்து தெரிவிப்பதால் சரித்திரத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இப்புத்தகம் வெகு சுவாரசியமாக இருக்கும். தமிழ் மொழியும், சம்ஸ்கிருத மொழியும் கூட அவர்கள் மொழியில் கலந்திருப்பதை அவர் காட்டுகிறார்.
4. அவ்வூரில் இருக்கும் சில வினோத பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம், முக்கியமாகக் காபி, ஸ்பெஷல் காபி தயாரிக்கும் முறையை விளக்கியுள்ள இடம் LOL.
5. ஒவ்வொரு தகவலையும் முடிந்தவரை ஆதியோடு அந்தமாக கொடுத்திருக்கிறார். அதனால் நிறையக விஷயம் கற்றுக்கொள்ள முடிகிறது.
6. புத்தகத்தின் focus பாலியின் கலை, பண்பாடு. அதனால் பதின்ம வயதினருக்கும், பெரியவர்களுக்கும் இப்புத்தகத்தைப் பரிசாகத் தரமுடியும். விரும்பிப் படிப்பர்.
7. நிச்சயமாக பள்ளி லைப்ரரிகளில் இருக்க வேண்டிய புத்தகம். ஏனெனில் பாலியை ஒரு மாய உலகம் போலக் காட்டியுள்ளார் பிரபா. அதனால் பள்ளிக் குழந்தைகள் இப்புத்தகத்தைப் படித்தால் கண்கள் விரியக் கனவு காண ஆரம்பித்து விடுவது மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்குப் போய் பலதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டாகும்.
8. சிட்னி நூல் வெளியீட்டு விழாவில் இப்புத்தக விற்பனையின் மூலம் வரும் இலாபத்தை ஒரு நல்ல காரியத்துக்குப் பயன் படுத்துகிறார். அதைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் http://www.madathuvaasal.com/2011/07/blog-post.html
ஆதலால் புத்தகத்தை உடனே வாங்குவீர்! பயனடைவீர்! 🙂
சென்னையில் Discovery Book Storeலும் இணையத்தில் http://www.flipkart.com/bali-theevu-inthu-thonmangalai-nokki/p/itme6sr45f7mcjhn?pid=RBKE6SR4HHMTJVFM வாங்கலாம்.
Apr 25, 2015 @ 15:49:06
அருமையான பதிவு. பிளிப்கார்ட்டில் out of stock என்று சொல்கிறது. டிஸ்கவரி புக் ஹவுசில் பார்க்க வேண்டும்.
Apr 26, 2015 @ 01:33:14
நன்றி மேம். கண்டிப்பா வாங்கி படிப்பேன். அதை நண்பர் @SeSenthilkumar ன் பப்ளிக் நூலகத்துக்கு பரிசாக அளிப்பேன்.
அருமையாக விவரித்து எழுதியுள்ளீர்கள்.
வாழ்த்துகள் 🙂
Apr 26, 2015 @ 01:45:19
நன்றி ஜிரா, சினப்பையன். எங்கள் வீட்டருகில் தான் டிஸ்கவரி புக் ஹவுஸ் உள்ளது. நான் வாங்கித் தருகிறேன் ஜிரா 🙂