“இது எப்படி இருக்கு” என்று கெட்ட வில்லனாக ரசிகர்களை ஈர்த்த அந்தக் கால ரஜினியைப போல “செஞ்சிடுவேன்” என்று விரல் action உடன் அவர் ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்கிறார் இந்தக் கால தனுஷ். ஆட்டோக்காரனாக அடிவாங்கி சுருண்டு விழுந்து, பின் வாங்கின எதையும் திருப்பிக் கொடுக்கும் குணம் கொண்ட ரஜினியைப் போல ஆட்டோக்காரன் தனுஷும் மாரியாக மாறுகிறார்! இன்னும் சொல்லப் போனால் கதையும் அதில் உள்ள ஹீரோவும் வில்லனும் செய்யும் சாகசங்களும் எம்ஜிஆர் நம்பியார் காலப் பழசு.
ஆனால் திரை அரங்கில் தனுஷ் என்டிரி ஆகும்போதும், பஞ்ச் வசனங்கள் பேசும்போதும், எதிரிகளை பஞ்ச் என்று குத்தும் போதும், விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. அதோடு ஜிகினா காகிதத் தூள்களும் திரையின் மீது வீசப்படுகின்றன. அதனால் படங்கள் இன்று நடிகர்களின் ரசிகர்களின் ஆதரவோடு மட்டும் ஓடுகின்றன, கதையோ நடிப்போ தேவையில்லை என்று தோன்றுகிறது.
இந்தப் படத்தில் விஜய் யேசுதாஸ் புதுமுகமாக நல் வரவு. அதுவும் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். மலையாளப் படங்களில் நடித்திருப்பதால் நடிப்பில் முதிர்ச்சி உள்ளது. பாராட்டுகள். காமெடிக்கு ரோபோ ஷங்கர்! தனுஷுடன் கூட இருக்கும் ஒரு அல்லக்கை பாத்திரம். படத்தில் உள்ள மற்றதைப் பொறுத்துக் கொள்ளும் திறன் நமக்கு இருக்கும் போது இவர் பங்களிப்பும் மோசமில்லை என்றே சொல்ல வேண்டும். காஜல் அகர்வால் படத்துக்குத் துளியும் ஒட்டாத ஒரு ஹீரோயின். ஒரே ஒரு நல்ல விஷயம் ஹீரோயின் பற்றி ஹீரோ கடைசியில் எடுக்கும் முடிவு! எப்பவும் போல இருக்கும் முடிவாக இருந்திருந்தால் குமட்டிக் கொண்டு வந்திருக்கும்.
அனிருத் இசை. அது என்ன செண்டிமெண்டா என்று தெரியவில்லை, தனுஷ் அனிருத்துடன் ஒரு பாட்டிலாவது குத்தாட்டம் போட்டால் படம் ஓடும் என்று நினைக்கிறார் போலும். அதனால் தனுஷுடன் சேர்ந்து நாலு ஸ்டேப்ஸ் போடுகிறார் அனிருத். பாடல்கள் படத்துக்கு ஏத்தா மாதிரி உள்ளன. பின்னணி இசை தலைவலி.
நடிகர்கள் பெரிய ஸ்டார் ஆகிவிட்டார்கள் என்று எண்ணிய பிறகு அவர்கள் சொல்வதை தான் இயக்குநர்களும் கேட்க வேண்டும் என்று விதியா அல்லது பாலாஜி மோகன் தரமே இவ்வளவுதானா என்றும் புரியவில்லை.
செட் ரொம்ப கண்ணை உறுத்தியது. இப்போ கதை இருக்கோ இல்லையோ மற்ற நகாசு வேலைகளில் தமிழ் படங்கள் முன்னேறிவிட்டன. இப்படத்தில் அவர்கள் வசிப்பதாகக் காட்டப்படும் திருவல்லிக்கேணி செட்டும் மார்கெட்டும் ரொம்ப சுமார் ரகம்.
இவ்வளவு பொறுமையா இப்படத்திற்கு நான் விமர்சனம் எழுதியதற்கு என் உள் மனம் என்னை மிகவும் பாராட்டுகிறது. தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை ரசிப்பார்கள். எனக்கும் தனுஷ் பிடிக்கும். ஆனால் ஆடுகளம், VIP இவை இரண்டுக்கும் கிட்டக் கூட இப்படம் வரவில்லை. Over build up வசூலுக்கு ஆகாது மச்சி. விரைவில் விழித்துக் கொள்ளுங்கள்.
Jul 18, 2015 @ 11:24:27
பாலாஜி மோகன் செட்டியில் இருந்ததானே அகப்பையில் வரும்.
Jul 19, 2015 @ 00:21:46
வணக்கம்
தங்களின் பார்வையில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Jul 19, 2015 @ 15:09:00
Hello, Dhanush Sir, enkaeyo poyitteenga…unga makeup, costume…appuram unga style ellaam sema comedy…oru vaarathirkul Maari saayam superaa veluthu vidum..
Jul 26, 2015 @ 08:59:02
திரைகதைக்காக இப்பொழுது திரைப்படங்கள் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. வெற்றியடைகின்றன. கதையேயில்லாமல் படங்கள் ஓடிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இதை மாமனார் முதல் மருமகன்வரை உணர்ந்தால் சரி. ( நல்ல வேளை நான் 35 ரியால் கொடுத்து பல்பு வாங்கல்ல, விமர்சனத்துக்கு நன்றி!)